என் மலர்
ஆரோக்கியம்
தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேதத்தில், மோர் சாத்விக உணவாக கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிட்டோ, கார உணவை சாப்பிட்டோ அசிடிட்டி பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு டம்ளர் மோர் பருகலாம். வயிற்றுக்கு நன்மை பயக்கும். கூந்தல் மற்றும் சருமத்திற்கும் ஆரோக்கியம் சேர்க்கும். மோரின் ஐந்து ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
எடை இழப்பு: உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த பானமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும், நொதிகளும் நிறைந்திருக்கின்றன. கலோரிகள் மிகவும் குறைவு. கொழுப்பு அறவே இல்லை. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். மோரில் கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள் உள்ளிட்ட பல தாதுக்களும் உள்ளன. பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த பானமாகவும் இது விளங்குகிறது.
நீரிழப்பு: உடலில் இருந்து அதிகப்படியான திரவம் வெளியேறும் போது, உடல் ஒட்டுமொத்த ஆற்றலையும் இழக்கக்கூடும். சிலருக்கு மயக்கமும் உண்டாகும். நீரிழப்புதான் அதற்கு காரணமாகும். வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை நீரிழப்புக்கான பொதுவான அறிகுறிகள். கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க உப்பு, சீரகம், கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து மோர் தயாரித்து பருகலாம். இவற்றில் இருக்கும் அதிகப் படியான எலக்ட்ரோலைட்டுகள் நீரிழப்பை ஈடு செய்ய உதவும்.
வலுவான எலும்புகள்: தினமும் உடலுக்கு 1000 மி.கி கால்சியம் தேவை. ஒரு கப் மோர் சுமார் 284 மில்லி கிராம் கால்சியத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் அன்றாட கால்சியம் தேவைகளில் 28 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடலாம். வயதாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறையும். கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
ரத்த அழுத்தம்: மருத்துவ வழிகாட்டுதல் களின்படி, 130/80 என்ற அளவீட்டில் ரத்த அழுத்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோரில் பயோ ஆக்டிவ் புரதம் ஏராளமாக காணப்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். தினமும் மோர் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இதயம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படாது.
மலச்சிக்கல்: வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குவதற்கு பண்டைய காலங்களில் இருந்து மோர் பயன்படுத்தப்படுகிறது. குடல் பிரச்சினைகளை சரிசெய்து மலச்சிக்கலை நீக்கிவிடும். மேலும் செரிமான அமைப்பை சரிசெய்யவும் மோர் உதவும்.

குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுக்கும். அவர்களுக்கு இப்படி கோதுமை மாவில் காய்கறிகளை சேர்த்து தோசை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
முட்டை கோஸ் - 50 கிராம்
கோதுமை மாவு - 1 கப்
சீரகம் - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - கால் கப்
கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு,
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 ,
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவில் அரிசி மாவை கலந்து, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
அதில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சீரகம், உப்பு போன்றவைகளை சேர்த்து, தோசைமாவு பக்குவத்திற்கு கலக்கிக்கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தையின் முகத்தில் சிறு சிறு கீறல்களை பார்க்கிறீர்களா... நிச்சயம்... நீங்கள் குழந்தையின் நகங்களைப் பராமரித்தே ஆக வேண்டும் என்பதன் அறிகுறி அது.
குழந்தை குளித்த பிறகு, நகங்கள் சாஃப்டாக இருக்கும் என்பதால் அப்போது டிரிம்மரை வைத்து நகத்தைத் தேய்க்கலாம். குழந்தை தூங்கும்போது, நகம் வெட்டலாம் அல்லது ட்ரிமரால் தேய்க்கலாம். குழந்தை தூங்கவில்லை என்றால், குழந்தையின் கவனத்தை விளையாட்டு பொருளில் திருப்பிய பின்னர் நகத்தை வெட்டலாம்; சுத்தம் செய்யலாம்.
நகத்தை வெட்டுகிறேன் என்று குழந்தையின் சதைப் பகுதியை காயப்படுத்தி விடாதீர்கள். கொஞ்சம் இடைவெளி விட்டு நகத்தை வெட்டுவது சரி. நகம் வெட்டினால் அந்த இடம் கூர்மையாக இருக்கும். ஆடையின் நூலில் குழந்தையின் சின்ன சிறு விரல் நகம் சிக்கலாம். எனவே, நைல் ஃபைலரால் மென்மையாகத் தேய்த்துவிடுங்கள். சில குழந்தைகள் அதீத சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.
அவர்களுக்கு நகம் கட் செய்யும் போது, உதவிக்கு ஒரு நபரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் குழந்தையின் கவனத்தைத் திருப்ப, இன்னொருவர் குழந்தையின் நகங்களை சுத்தம் செய்யலாம். நகம் கட் செய்யும்போது, தவறுதலாக, தெரியாமல் குழந்தையின் சருமத்தில் ஏதேனும் கீறலோ ரத்தமோ வந்தால் உடனடியாக பஞ்சை வைத்து அதை அப்படியே அழுத்திப் பிடியுங்கள். மிதமாக அழுத்திப் பிடிக்கவும்.
சில அம்மாக்கள் குழந்தையின் நகங்களை தன் வாயால் கட் செய்வார்கள். இது தவறு. அப்படி செய்ய கூடாது. இதனால் உங்களுக்கும் குழந்தைக்கும் கிருமி பாதிப்புகள் வரும்.

கொரோனா பீதியால் பெண்கள் மாஸ்க், கையுறை போன்றவைகளை அணிவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பெண்கள் கையுறைகளை அணியத் தொடங்கிவிட்டால் உங்கள் கைகளின் 50 சதவீத பாதுகாப்புக்கும், அழகுக்கும் உத்தரவாதமாகிவிடும்.
கொரோனா பீதியால் பெண்கள் மாஸ்க், கையுறை போன்றவைகளை அணிவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். கொரோனா நெருக்கடி முடிந்ததும் அவர்கள் ‘மாஸ்க்’ அணிவதை தவிர்த்தாலும், தொடர்ந்து அவர்கள் வீட்டு வேலைகளை பார்க்கும்போது கையுறைகளை அணிவது நல்லது. அதனை அவர்கள் சமையல் அறையில் வைத்துக்கொண்டு சமையல் வேலைகள் செய்யும்போதும், வீட்டு வேலைகள் செய்யும்போதும் அதை அணிந்துகொள்ள வேண்டும். டிடர்ஜென்ட், வாஷிங்பவுடர், லோஷன்கள் பயன்படுத்தும்போதும், கார்டனிங் செய்யும்போதும் அந்த கையுறைகளை அணிவது அவசியம். கையுறைகளை நீங்கள் அணியத் தொடங்கிவிட்டால் உங்கள் கைகளின் 50 சதவீத பாதுகாப்புக்கும், அழகுக்கும் உத்தரவாத மாகிவிடும்.
நகங்கள்தான் கைகளுக்கு அதிக அழகைத் தரும். அதனால் அழுக்கு சேராத அளவுக்கு சுத்தமாக்கி, நகங்களை நன்றாக பராமரியுங்கள். நகங்கள் குறைபாட்டுடனோ, அழகின்றி யோ காணப்பட்டால் அதை நினைத்து வருந்தவேண்டியதில்லை. அழகு சிகிச்சை நிபுணர்கள் குறை தெரியாத அளவுக்கு அதனை மேம்படுத்தி அழகாக்கிவிடுவார்கள்.
நகத்தின் வெளியே பூசக்கூடிய பலவிதமான ‘கோட்டிங்’குகள் உள்ளன. பேஸ் கோட், டாப் கோட், எனாமல் ஆகிய மூன்று விதங்கள் அதில் உள்ளன. நகத்தின் முனைப்பகுதியை மினு மினுக்கச் செய்வது பேஸ் கோட். அதிக தொந்தரவு தராத ஜெலட்டின் வகையை சார்ந்தது அது. செல்லுலோஸ் நைட்ரேட் என்ற அழகு ரசாயனப் பொருளில் பிக்மென்ட்டுகள் சேர்த்து நெயில் எனாமல் தயாராகிறது. பேஸ் கோட், நெயில் எனாமல் பயன்படுத்தும்போது பளிச்சென்ற அழகை மெருகூட்டித் தருவதற்காக டாப் கோட் பயன்படுத்தப் படுகிறது. இது நிறமற்றது. சூரிய ஒளிபட்டு நகத்தின் நிறம் மாறாமல் இருக்க சன்ஸ்கிரீனும் பயன்படுத்த லாம்.
பாலீஷை நீக்கம்செய்யும்போது கவனியுங்கள். அதிகமாக ரிமூவரை பயன்படுத்தும்போது நகத்தின் இயற்கைத்தன்மை மாறி, நகம் பலகீனமாகிவிடும். அதனால் ரிமூவரை தேவைக்கு மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்துங்கள். பெரும்பாலான நேரம் கைகளை நீரில் நனைத்து வேலைபார்ப்பவர்களுக்கு நகங்களின் ஓரம் சிவந்து, வீங்கி வலி தோன்றலாம். கவனிக்காமலே விட்டு விட்டால் சீழ்பிடித்துவிடும். அதனால் தண்ணீரில் கைகளை நனைத்து வேலைபார்ப் பவர்கள் கைவிரல்கள் மீது அதிக கவனத்தைக் காட்டவேண்டும்.
நகங்களின் ஆரோக்கியத்திற்கு ‘பயோட்டின்’ என்ற சத்து அவசியம். இது பப்பாளி, கேரட், வாழைப்பழம் போன்றவைகளில் இருக்கிறது.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கைகளில் கருப்பு புள்ளிகள், நிறமாற் றம், சுருக்கம் போன்றவை தோன்றும். அவர்கள் இளம் சுடுநீரில் உப்பு போட்டு அதில் கைகளை சிறிது நேரம் முக்கிவைக்கவேண் டும். பின்பு கைகளை நன்றாக துடைத்துக் கொண்டு பப்பாளி சாறு அல்லது தக்காளி சாறு பூசி மசாஜ் செய்யவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். சருமத்தின் வறட்சியை போக்க, பழச்சாற்றை சருமத்தில் பூசவேண்டும்.
பெண்கள் 45 வயதுக்கு பிறகு கை பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கைகளால் அதிக வேலை களை செய்வதால், கை எலும்புகள் பலம்பெறும் விதத்தில் கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்ணவேண் டும். கைகளுக்கு தொடர்ச்சியாக அதிக நேரம் வேலைகொடுக்கக்கூடாது. எழுதும் போதும், கீபோர்டில் வேலை செய்யும்போதும் இடைஇடையே கை களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட இவைகளை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இல்லற வாழ்வில் இணையும் ஆண், பெண் இருவரும் தன் அன்பை, காதலை, புரிதலை வெளிபடுத்த உதவும் ஒரு கருவியாக அமைவது தாம்பத்தியம் தான். மன அழுத்தத்தை குறைக்கவும் தாம்பத்தியம் பெரிதும் உதவுகிறது. தாம்பத்தியம் திருப்திகரமாக அமைய சில விஷயங்களை நாம் கட்டாயம் சில விஷயங்களை செய்ய வேண்டும்.
தாம்பத்தியம் சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று தாம்பத்தியத்திற்கு முன்னர் சாப்பிடும் உணவு. தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் சில பழ வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட சில பழங்களை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* தாம்பத்தியத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஸ்டாபெர்ரி பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் உண்டாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* ஐஸ்க்ரீம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் தன் துணையுடன் ஒன்றாக சாப்பிடுவது என்றால் கேட்கவா வேண்டும். தாம்பத்திய உறவை துவங்குவதற்கு முன்னதாக ஐஸ்கீரிம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால் இருவருக்கும் இடையேயான நெருக்கமானது அதிகரிக்கும்.
* தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பது திராட்சை பழம் தான். திராட்சை பழம் சாப்பிட்டால் தாம்பத்திய நேரம் அதிகரிக்குமாம்.
* தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சுரக்கும் ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்க சாக்லேட் அதிகளவு உதவி செய்கிறது. தாம்பத்தியத்திற்கு முன்னதாக தம்பதிகள் சாக்லெட்டை சாப்பிட்டு துவங்கினால் தாம்பத்திய ஆர்வம் அதிகளவு தூண்டப்படும்.
* தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். வாழைப்பழத்தில் தாம்பத்திய ஹார்மோன்களை அதிகரிக்க செய்யும் ஊட்டசத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதன் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலானது உடனடியாக வழங்கப்பட்டு உடலை சோர்வடையாமல் இருக்க வழிவகுக்கும்.
மேற்கண்ட பழ வகைகளை தாம்பத்தியத்தின் போது உட்கொண்டால் உங்களின் தாம்பத்திய வாழ்க்கையானது இனிமையானதாக அமையும்.

காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்சனை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம்.
குழந்தைகளின் காதுகள் மிகவும் சென்சிடிவ்வான உறுப்பு. காது வலி வந்தால்தான் தெரியும். அந்த வலி மிகவும் கொடுமையானது என்று. காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்சனை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம்.
காதுகளை சுத்தம் செய்ய டிப்ஸ்…
முதலாவதாக, தெரிந்து கொள்ளுங்கள். பட்ஸ், ஹேர் பின், கொண்டை பின் என எதுவும் குழந்தைக்கு பயன்படுத்தவே கூடாது. இதெல்லாம் குழந்தையின் சின்ன காதுகளைப் பாதிக்கும். எந்தவித கூர்மையான பொருட்களையும் குழந்தையின் காது அருகில் தயவு செய்து கொண்டு செல்லாதீர்கள். டவல் (துண்டு), ஒரு முனையை எடுத்துக்கொண்டு அதை மெல்லியதாக உருட்டி, குழந்தையின் காதில் விட்டு ஈரத்தை எடுக்கலாம்.
குழந்தை குளித்த பின் செய்ய வேண்டிய முறை இது. குழந்தையின் காது அழுக்காக இருந்தால், துணியை ஈரம் செய்துவிட்டு காதை லேசாகத் தொட்டு துடைத்து எடுக்கவும். சோப் பயன்படுத்தவே கூடாது. காதுகளின் உள் மடலையும் வெளி காதையும் மென்மையான, ஈரமான துணியால் துடைத்து எடுக்கவும். ஒவ்வொரு முறை குழந்தை குளித்த பின்னும் துண்டால் காதின் ஈரத்தை ஒத்தி ஒத்தி எடுக்கலாம்.
குழந்தை காதில் ஏதோ அசௌகரியமான உணர்வு உணர்ந்தாலோ, காதில் வலி இருப்பது போல அழுதாலோ மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். காதை சுத்தம் செய்யும்போது, குழந்தை கதகதப்பான உணர்வை உணர வேண்டும். ஆதலால், அடர்த்தியான, துணியால் குழந்தையை போர்த்திக்கொள்ளுங்கள். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே அதிகமாக வாக்ஸ் காதில் உருவாகும். அவர்களை கட்டாயமாக காது மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பிக்கவும்.

வெற்றி பெற்ற ஆண்களுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்ற உண்மையை இந்திய பெண்கள் ஏற்கனவே மெய்ப்பித்து காட்டியிருந்தாலும், இப்போதுதான் அந்த உண்மை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
திருமண வயதை எட்டிய மகனிடம் தாயார், பெண்களின் போட்டோக்களை காட்டி ‘இவர்களில் எந்த பெண்ணை உனக்கு பிடிக்கிறது என்று சொல். அந்த பெண்ணின் பெற்றோரிடம் பேசி உனக்கு திருமணம் செய்துவைக்கிறேன்’ என்பார். சிலர் தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பெண்ணை தேர்வு செய்வதில் முனைப்பு காட்டத் தொடங்கிவிடுவார்கள். பலர், ‘இப்போது என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நான் திருமணம் செய்துகொண்டால் எனக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது?’ என்று எதிர் கேள்வி கேட்பார்கள்.
இப்படி எதிர் கேள்வி கேட்கும் இளைஞர்களுக்காகவே ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு, அதில் ‘ஆண்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதை தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையும் பிரகாசமாகும்’ என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
வெற்றி பெற்ற ஆண்களுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்ற உண்மையை இந்திய பெண்கள் ஏற்கனவே மெய்ப்பித்து காட்டியிருந்தாலும், இப்போதுதான் அந்த உண்மை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
எப்போதுமே பெண்கள் மனோதிடம், துணிச்சல், ஆன்மபலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனப்பூர்வமான ஜோடியாக அவள், கணவரோடு இணையும்போது அவளது சக்தியும், ஆலோசனை யும் கணவருக்கு கிடைக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் ஆண்கள் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். இந்த உண்மையை இளைஞர்களிடம் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. புரிந்துகொண் டால், அவர்கள் திருமணம் செய்துகொண்டு, மண வாழ்க்கையை வெற்றிகர மாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றியை நோக்கி நகரத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால் மணவாழ்க்கையில் நிறைய பிரச்சினை களும் இருக்கத்தானே செய்யும்?
உண்மைதான்! பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் வாழ்க்கை என்பது பிரச்சினை களை கடந்துவந்து வெற்றிகாண்பதுதான். பிரச்சினைகளை கடந்து வெற்றிபெறும்போதுதான் ஒவ்வொருவரிடமும் இருக்கும் முழு பலமும் தெரியும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் ஆக முடியும். அதே நேரத்தில் இன்னொரு முக்கிய உண்மை என்னவென்றால் பிரச்சினை என்பது எப்போதும் இருக்கும். திருமணமானாலும் இருக் கும். திருமணமாகாவிட்டாலும் இருக்கும். திருமணத்திற்கு பின்னால் வரும் பிரச்சினைகளை மனைவி உதவியோடு முறியடிக்கலாம் என்பது தான் புதிய செய்தி.
திருமணத்திற்கு பின்னால் பலர் சாதனையாளர் களாக உருவெடுத்திருக்கிறார்கள். புகழ்பெற்ற தொழிலதிபர் திருபாய் அம்பானி தன்னுடைய வாழ்க்கை சரித்திரத்தில், தன் மனைவி கோகிலா தனக்கு கொடுத்த ஊக்கத்தையும், உற்சாகத்தை யும் பற்றி எழுதியிருக்கிறார். ஒவ்வொரு தோல்வி யிலும் தன்னை தூக்கி நிறுத்திய கோகிலாதான் பின்பு தனக்கு கிடைத்த வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திருமணத்திற்கு பின்பு கணவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மனைவிக்கு பெரும் பங்கு உள்ளது. அமிதாப்பச்சன், ஜெயபாதுரியை திருமணம் செய்த பின்பு வெற்றி சிகரத்தை தொட்டார். திருமணத்திற்கு பிறகுதான் ஷாருக் கான் படங்கள் சூப்பர் ஹிட் ஆயின.
இந்தியாவில் இப்படி ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்க, அமெரிக்காவிலும் நிலை அதுதான். பில்கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது உலகமே அவரை வியந்து பார்த்தது. பின்பு அவர் தனது உதவியாளர் மோனிகா லெவின்ஸ்கி யுடன் தகாத உறவு வைத்ததும், உலகத்தின் முன்னால் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. மிகுந்த உயரத்திலிருந்து விழுபவர்கள் உயிர்பிழைப்பது கடினம். அதுபோன்றுதான் பில்கிளிண்டனின் மனநிலையும் ஆனது. உலகமே அவரது அந்தரங்கங்களை வெளிப்படுத்தி, அவரை சொல்லமுடியாத வேதனைக்கு உள்ளாக்கி யது. விரக்தியின் விளிம்பில் நின்ற அவரை மனைவி ஹிலாரி கிளிண்டன் ஆறுதல்படுத்தினார். அமைதிப்படுத்தினார். தன்னம்பிக்கை கொடுத்தார். அவரை அந்த நிலையில் இருந்து மீண்டெடுத்து, இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். ‘அது என் கணவரின் புகழை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அதில் சிறிதும் உண்மையில்லை’ என்று வாதாடினார்.
மனைவியின் இந்த பேச்சு கிளிண்டனுக்கு ஆறுதலை கொடுத்தது. அடுத்து கணவருக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதத்தில் பேசினார். ‘ஒருவேளை அந்த குற்றச்சாட்டு உண்மையாகவே இருந்தாலும் நான் என் கணவரை விட்டு விலகிப் போகமாட்டேன். இது உறுதி..’ என்றார். மனைவி கொடுத்த பலத்தில் கிளிண்டன் எழுந்து நின்றார். பேச்சோடு நில்லாமல், கணவரோடு தோள் கொடுத்து நின்றார். அந்த பலத்தில் கிளிண்டன் விரைவாக இயல்பு நிலைக்கு வந்து, மீண்டும் அதிகாரத்தோடு உலாவரத் தொடங்கினார். இப்போது மனைவி சொல்லே மந்திரம் என்று அவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றுதான், இந்த தன்னம்பிக்கை ஆய்வை மேற்கொண்டுள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் திருமணமான இளைஞர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பல்வேறு கட்டங்களாக, பல நாட்களாக அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ‘திருமணமாகாதவர்களைவிட திருமணமான ஆண்கள் மிகுந்த தன்னம்பிக்கை யோடு வாழ்கிறார்கள். மனோபலத்துடன் இருக் கிறார்கள்’ என்று கண்டறிந்திருக்கிறார்கள். ‘திருமணமானவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். அர்த்தத்தோடு பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள்’ என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் நடந்த இன்னொரு ஆய்வில் ‘திருமணமானவர்கள் பலவித வியாதிகளிலிருந்து விரைவில் மீண்டுவிடுகிறார்கள்’ என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இது செரிமானத்தை எளிதாக்கும். இன்று இதனை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு - சிறிய துண்டு,
தேங்காய் - 1 பத்தை,
தனியா - கால் டீஸ்பூன்,
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - இரண்டு,
பூண்டு - நாலு பல்,
புளி - நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - சிறிதளவு,
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.
செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து பின் தனியாவை, போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு வதக்கவும். தண்டு பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.
பின் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து துவையலில் கொட்டி பரிமாறவும்.

சூப்பரான வாழைத்தண்டு துவையல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொரோனா வைரஸ் நுரையீரலைதான் நேரடியாக தாக்கும் என்பதால் அதன் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் நுரையீரலைதான் நேரடியாக தாக்கும் என்பதால் அதன் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் செய்ய வேண்டிய வழிமுறைகளை தேடிப்பிடித்தும் பின்பற்றுகிறார்கள். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நாள் பட்ட சளி, சி.ஓ.பி.டி. எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி வர வேண்டும்.
தொடர்ந்து சளி பிரச்சினையால் அவதிப்பட்டு வருபவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வரலாம். தினமும் இரண்டு முறை பருகி வந்தால் சளி இளகி வெளியேறும். பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகள் பெருகுவதற்கு சளிதான் வழிவகுக்கிறது.
அதனை வெளியேற்றுவதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். பிராணயாமா போன்ற ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்வது சளியை வெளியேற்ற உதவும். உடற்பயிற்சியும் கைகொடுக்கும்.
சுவாசத்தை அதிகரிக்க செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சளி இளகி வெளியேறும். ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து மிதமான சூட்டில் வாய் கொப்பளித்து வருவதும் நல்லது. நீராவி பிடிப்பதும் சளியை விரட்டும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் மூலிகைகளையோ, ஆவி பிடிக்கும் மாத்திரையையோ போட்டு தலையை துணியால் மூடி நீராவியை முகத்தில் பிடிக்கலாம். நீராவியில் இருந்து வெளிப்படும் சூடான காற்றை சுவாசிக்கும்போது சளி இளகி வெளியேற தொடங்கும்.

தூக்கமின்மை முதல் சரும சுருக்கங்கள் வரை பல்வேறு விதமான உடல்நல கோளாறுகளை குணப்படுத்துவதற்கு ‘ஒளி தெரபி’ எனப்படும் சிகிச்சை முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.
தூக்கமின்மை முதல் சரும சுருக்கங்கள் வரை பல்வேறு விதமான உடல்நல கோளாறுகளை குணப்படுத்துவதற்கு பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றன. ‘ஒளி தெரபி’ எனப்படும் சிகிச்சை முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது. வெள்ளை, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்கள் ஒளி சிகிச்சை யில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மன நிலையை மேம்படுத்த வெள்ளை ஒளி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் ஒளி கதிர்களை வெளியிடும் விளக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விளக்கின் அருகில் காலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பது மனநிலையை மேம்படுத்தும். வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை நிலையாக வைத்திருக்கவும் உதவும். குளிர்காலத்தில் ஐந்தில் ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படும். அப்போது இந்த ஒளியின் பிரகாசத்தில் அமர்ந்திருப்பது அரு மருந் தாக அமையும் என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.
நீல ஒளி சிகிச்சை தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. நீல நிற வெளிச்சத்தை உமிழும் பல்புகளில் பகல் பொழுதில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடும்போது இரவில் நல்ல தூக்கம் வரும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதுதொடர்பாக தீவிர ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிவப்பு ஒளி சிகிச்சை சரும சுருக்கத்தை குறைக்க உதவும் என்பது 2013-ம் ஆண்டு நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிவப்பு ஒளி தோல் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது. கொலோஜன் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. சருமத்தின் அமைப்பை மேம்படுத்த வும் துணைபுரிகிறது. இத்தகைய ஒளி சிகிச்சையை டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்வது பலன் தரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தம்பதியர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அரவணைப்பதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தம்பதியர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அரவணைப்பதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டிப்பிடிப்பது மன அழுத்தத்தை போக்க வழிவகை செய்யும் என்பதும் தெரியவந்துள்ளது. வாழ்க்கை துணையுடன் செலவிடும் நேரம் மகிழ்ச்சிக்குரியதாகவும், அந்த மகிழ்ச்சி பின் தொடர்வதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் விதமாகவும் ‘கட்டிப்பிடித்தல்’ பழக்கம் அமைந்திருக்கிறது. கட்டிப்பிடிப்பதால் மேலும் சில நன்மைகளும் இருக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அரவணைப்புக்கு இருக்கிறது. ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்கும்போது ஆக்ஸிடோஸின் ஹார்மோன் அதிக அளவு வெளிப்படும். நோய் தொற்றை எதிர்த்து போராட உதவும் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
கட்டிப்பிடிப்பது நிம்மதியான தூக்கத்துக்கும் வழிவகுக்கும். ஒருவருக்கொருவர் நேசத்துடன் அரவணைக்கும்போது மூளையின் செயல்பாடுகளில் சுறுசுறுப்பு மிகும். மூளை செல் களுக்கு பாதுகாப்பான சூழலும் உண்டாகும். 10 நிமிடங்கள் கட்டிப்பிடிப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும். நன்றாக தூக்கத்தையும் வரவழைக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு கட்டிப்பிடித்தல் பலன் கொடுக்கும். நிம்மதியாக தூங்கி எழ வழிவகுக்கும்.
கட்டிப்பிடிக்கும்போது துணையுடனான நெருக்கமும், பாசமும் அதிகரிக்கும். அதற்கு ஆக்ஸிடோஸின் ஹார்மோன் வழிவகை செய்யும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் உணர்வையும், இணக்கமான போக்கை கடைப்பிடிக்கும் தன்மையையும் உண்டாக்கும்.
ஆக்ஸிடோஸின் ஹார்மோன் நாள்பட்ட வலியை குறைக்கவும் உதவும். பொதுவாக ஆக்ஸிேடா ஸின் ஹார்மோன் குறைவாக உள்ளவர்கள் நாள்பட்ட வலியால் அவதிப்படுவார்கள். கட்டிப்பிடிப்பதன் மூலம் ஆக்ஸிடோஸின் ஹார்மோன் அதிகரிப்பதால் உடல் நலனும் மேம்படும்.

சூரிய கதிர்வீச்சில் சருமத்திற்கு பாதிப்பு நேராமலும், பளபளப்பு தன்மை குறையாமலும் இருப்பதற்கு சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
காலை வேளையில் வெளிப்படும் சூரிய கதிர்வீச்சுக்கள்தான் உடலுக்கு நல்லது. சூரிய கதிர்வீச்சில் சருமத்திற்கு பாதிப்பு நேராமலும், பளபளப்பு தன்மை குறையாமலும் இருப்பதற்கு சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் தோல் மருத்துவரை அணுகி சரும பொருட்களை பயன்படுத்துவது நல்லது. அதுபோல் புதிய பொருட்களை பயன்படுத்த முயற்சிப்பவர்களும் உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்புடைய பொருட்களை தேர்வு செய்து உபயோகிப்பதுதான் சிறந்தது. ஒப்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒப்பனை அதிகமாக இருந்தால் அவை சரும துளைகளை அடைத்துவிடும். அதிக வெப்பமும், ஈரப்பதமும் சருமத்தின் சுவாச திறனை பாதிக்கும். சரும செல்களில் இருந்து வெளியாகும் இயற்கையான ஆக்ஸிஜனேற்றியான குளுட்டாதையோன் போன்றவை சருமத்தின் நிறமிக்கு உதவும்.
“குளுட்டாதையோன் நம் உடலில் மெலனின் செயல்பாட்டை சீர்படுத்தும். அதனால் சருமம் கருமை நிறத்திற்கு மாறுவது தடுக்கப்படும். மேலும் குளுட்டாதையோன் சருமத்தில் கருமையான புள்ளிகள் தோன்றாமலும் தடுக்கும். சருமத்தில் அல்ட்ரா வயலெட் கதிர்களால் உருவாகும் நச்சுகளை அகற்றவும் உதவும்” என்கிறார் தோல் மருத்துவர் சுஷாந்த் ரோரேன்.
சூரிய கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் லோஷனை தவறாமல் உபயோகிக்க வேண்டும். சன்ஸ்கிரீன் கண்ணாடி அணிவதும் நல்லது. ஒப்பனையை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக வண்ணமயமான மாய்ச்சரைசர், லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத தன்மை கொண்டதா? என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டியதும் அவசியம். அது சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவும்.
கதிர்வீச்சுக்களில் இருந்தும் பாதுகாப்பு தரும். உடலில் உள்ள நச்சுக்களையும் அவ்வப்போது வெளியேற்றிவிடும். கோடை காலத்தில் இறந்த செல்களை சுத்தப்படுத்தும் விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். ஏனெனில் வெப்பம் காரணமாக வறட்சி, தூசி சருமத்தில் படிந்திருக்கும். சுத்தப்படுத்தும்போது அவை நீங்கிவிடும். பச்சைக்காய்கறிகள், ப்ளூபெர்ரி, முலாம் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது கொலொஜன் வளர்ச்சியை தூண்டும். அவை சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும்.