என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கோழி இறைச்சி மசாலாக்களுடன் நன்றாக சேர்வதற்காக 20 நிமிடங்கள் வேகவைத்து விடுகிறோம். அவ்வளவு நேரம் வேகும்போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் செயலிழந்து போகிறது.
    கோழி இறைச்சியையும், மீனையும் நாம் பயப்படாமல் சாப்பிடலாம். ஏனெனில் அதற்கு காரணம், நமது சமையல் முறை. பல வகை மசாலாக்களை அதில் பயன்படுத்துகிறோம். அவை அனைத்தும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. மேலும் கோழி இறைச்சி அந்த மசாலாக்களுடன் நன்றாக சேர்வதற்காக 20 நிமிடங்கள் வேகவைத்து விடுகிறோம். அவ்வளவு நேரம் வேகும்போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் செயலிழந்து போகிறது. ஆனால் அந்த அளவுக்கு வேகவைக்காமல் சாப்பிடுவதே ருசியானது என்ற கருத்து மேலை நாடுகளில் நிலவிக்கொண்டிருக்கிறது. அது ஆரோக்கியமானதல்ல.

    இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளில் ஹார்மோன்களும், ஆன்டிபயாடிக்குகளும் இருக்கிறது என்று பல வருடங்களாக சொல்லப்பட்டுவருகிறது. ஆனால் இறைச்சிக்கோழி பண்ணைகளில் ஆன்டிபயாடிக்குகள் பயன்படுத்துவது புதிய விஷயமல்ல. 1949-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்டோக் ஸ்டார்டர்ட், ஜுக்ஸ் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள், ‘கோழி தீவனங்களில் குறைந்த அளவில் ஆன்டிபயாடிக்குகளை கலந்து வழங்கினால், அது கோழியின் வளர்ச்சியை துரிதப்படுத்தும்’ என்று கண்டறிந்தார்கள். அன்று முதல் கோழிகளின் தீவனத்தில் ஆன்டிபயாடிக்குகள் சேர்ப்பது உலகம் முழுவதும் வழக்கத்திற்கு வந்துவிட்டது.

    இதை பயன்படுத்தினால் 15 சதவீதம் வரை கோழியின் எடை அதிகரிக்கும் என்று தெரியவருகிறது. அதோடு கோழிகள் நோய் வாய்ப்படும் தன்மையும் குறைகிறது. தொற்று வியாதிகள் கோழி களுக்கு ஏற்படுவதையும் அவை ஓரளவு தடுக்கிறது. கோழிகளுக்கு ஏற்படும் சாதாரண நோய்களை தீர்க்கும் மருந்து போலவும் ஆன்டிபயாடிக்குகள் செயல்படுகிறது. கோழிகளுக்கு நன்மை பயக்கும் அதே ஆன்டிபயாடிக்குகள் அந்த இறைச்சியை சாப்பிடுவது மூலம் மனிதனுக்குள் செல்லும்.

    அது பல்வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கும் என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதனால் கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ‘சிகிச்சைக்காக மட்டுமே கோழிகளுக்கு ஆன்டிபயாடிக்குகள் வழங்கவேண்டும்’ என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆன்டி பயாடிக் பயன்பாடு பற்றி உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
    குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். இன்று சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருடகள் :

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோ
    மிளகுத்தூள்  - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    சாட் மசாலாத்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    செய்முறை:


    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, சாட் மசாலா தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் மீது தூவி பரிமாறலாம்.

    சூப்பரான சத்தான சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களுக்கு எதிரான தவறுகள் ஒருபுறம் நடந்தாலும், அந்த தவறு வேண்டுமென்றே நடந்ததா? தற்செயலாக நடந்ததா? என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
    பாலியல் தொந்தரவுகள் தரும் ஆண்களை சட்டம் தண்டிக்கிறது. வம்புக்கிழுக்கும் ஆண்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். அதே வேளையில் அப்பாவியான ஆண்கள் பலிகடா ஆவது தவிர்க்கப்பட வேண்டும்.

    அலுவலகத்தில் வேலைசெய்யும் பணியாளர்கள் மத்தியில் வேடிக்கையாக பேசிக்கொண்டிருந்த ஆண் ஒருவரை, அங்கிருந்த பெண் ஒருவர் சட்டையை பிடித்து இழுத்து அடித்துவிட்டார்.

    பெண்களை பற்றி அவதூறாக சித்தரித்து பேசிவிட்டார் என்பது அந்த பெண்ணின் ஆதங்கம். பலர் முன்பு அந்த நபர் அடிவாங்கி அவமானப்பட்டது மட்டுமின்றி, அந்த பெண் குறிப்பிட்டு சொன்னதைப் போன்ற தவறான அர்த்தத்தில் தான் பேசவில்லை என்று கூறி, அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலையும் உருவானது.

    ஆனாலும் அந்த பிரச்சினை அதோடு முடியவில்லை. அவர் தன்னை திட்டமிட்டு அவதூறாக பேசிவிட்டதாக நினைத்த அந்த பெண், மேலதிகாரியிடம் புகார் கொடுத்துவிட்டார். ஒழுக்கமில்லாத ஆட்களுக்கு இங்கே இடமில்லை என்று கூறி அந்த நபரை வேலையை விட்டே நீக்கிவிட்டார்கள்.

    இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் சில நேரங்களில் ஆண்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும்.

    ஒரு பெண்ணின் எதிர்காலம் போலவே ஒரு ஆணின் எதிர்காலமும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    வெளியில் செல்லும் பெண்களின் உடலும், உடைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மிக அவசியம்தான். இப்போது எங்கு பார்த்தாலும் கூட்டம். நடைபாதைகளிலோ, பஸ்களிலோ தவறுதலாக பெண்களை, ஆண்கள் உரசிவிடும் சூழ்நிலை ஏற் படுகிறது. பாதிக்கப்படுவதாக உணரும் பெண் களுக்கு அந்த நேஇரத்தில் கோபம் வருவது இயற்கைதான். ஆனால் சற்று நிதானித்து வேண்டுமென்றே தவறு செய்தாரா என்பதையும், கூட்ட நெரிசல் சூழலையும் கருத்தில் கொண்டே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவேசமாக குற்றம் சுமத்தக்கூடாது.

    பெண் சொல்வதைதான் எல்லோரும் நம்புவார்கள் என்ற சமூக பலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அப்பாவி ஆண்களை அவமதித்து குற்றவாளிகளாக்கி விடக்கூடாது. இதுபற்றி மனோதத்துவ நிபுணர் ஒருவர் விளக்குகிறார்:

    “பெண்களின் ஆழ்மனதில் பொதுவாக எப்போதுமே ஒருவித பாதுகாப்பற்ற தன்மை இருந்துகொண்டே இருக்கும். அதை தவிர பெண்களுக்கு எதிராக நாட்டில் நடக்கும் பல்வேறு விதமான பாலியல் வன்முறைகளும் அவர்கள் மனதில் பதிந்து, அவர்களது மூளையின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து எச்சரிக்கை சிக்னல் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

    ஆண்டாண்டு காலமாக வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் இப்போது வெளியில் சுதந்திரமாக வலம் வருகிறார்கள். அவர்கள் சிரித்துக்கொண்டே வலம் வந்தாலும், உள்ளே ஒருவித பய உணர்வு ஓடிக்கொண்டேதான் இருக்கும். தனக்கு பாதுகாப்பு இல்லாதது போலவும், தன்னை யாரோ பின்தொடர்வது போலவும் அவர்களது உள்ளுணர்வு சொல்லும். அதனால்தான் ஒரு சின்ன உரசல்கூட அவர்களை சந்தேகப் பார்வை பார்க்க வைத்துவிடுகிறது. அந்த நேஇரத்தில் ஏதோ ஒரு அசவுகரியத்தை உணர்கிறார்கள். அதனால் ஏற்படும் ஆவேசம்தான், அத்தகைய ஆண்களுக்கு எதிராக பெண்களை செயல்பட தூண்டுகிறது” என்கிறார்.

    பெண்களுக்கு எதிரான தவறுகள் ஒருபுறம் நடந்தாலும், அந்த தவறு வேண்டுமென்றே நடந்ததா? தற்செயலாக நடந்ததா? என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

    வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்களுக்கு நல்லவர்களையும், கெட்டவர்களையும், நல்லவர்கள் என்ற போர்வையில் இருக்கும் கெட்டவர்களையும், கெட்டவர்கள் போன்று தோற்றத்தில் தெரியக்கூடிய நல்லவர்களையும் அடையாளம் காண தெரிந் திருக்கவேண்டும்.
    பச்சிளம் குழந்தையின் ஒவ்வொரு உறுப்பையும் சுத்தம் செய்வது அவசியம். அந்த வகையில் பச்சிளம் குழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் கொடுத்தப் பின்னரும் ஈரத்துணியால் வாய், ஈறு, நாக்கு ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். பற்கள் ஒன்று, இரண்டு முளைத்த குழந்தைகள் என்றால், மிகவும் சாஃப்டான பிரஷ் வாங்கி மிதமாக பற்களை சுத்தம் செய்யவும். சர்குலர் மோஷனாக குழந்தையின் பல்லை சுத்தம் செய்யுங்கள். பழுப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் ஏதேனும் வாயில் வந்தால் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்கவும்.

    வாய் துர்நாற்றம், பற்சொத்தை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் காண்பிக்கவும். 0-1 வயது வரை குழந்தைக்கு இனிப்பு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டாம். 1-3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை சாக்லேட், கேண்டி போன்றவற்றைக் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெல்லம், பனங்கற்கண்டு, பனை சர்க்கரை தரலாம். பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, டீத்திங் பொம்மைகள் வாங்கித் தரலாம். ஃபிங்கர் ஃபுட்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள்.

    குழந்தைகளுக்கு எப்போதுமே பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதிக அளவு பேஸ்ட் தேவையில்லை. பல் தேய்த்த பிறகு வாயை நன்றாகத் தண்ணீரால் கழுவி, கொப்பளித்துத் துப்ப வேண்டும் என அறிவுறுத்துங்கள். காலை, இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க கற்றுக் கொடுக்கவும். ஒவ்வொரு முறை எந்த உணவு சாப்பிட்ட பின்பும், வாய் கொப்பளித்து துப்பும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

    இதையும் படிக்க: 3 மற்றும் 4 மாத குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும்? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
    உணவு ருசியாக இல்லை என்றால் அவரது நாக்கு ருசியின் தன்மையை அறிய முடியாமல் மரத்துப்போயிருக்கலாம். அப்படி மரத்துப்போவது சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
    ஐம்பது வயதைக் கடந்த கணவர் அவ்வப்போது, மனைவி சமைக்கும் உணவு ருசியாக இல்லை என்று கூறினால், அவர் மீது கோபம் கொள்ள வேண்டியதில்லை. ஏன்என்றால் அவரது நாக்கு ருசியின் தன்மையை அறிய முடியாமல் மரத்துப்போயிருக்கலாம். அப்படி மரத்துப்போவது சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

    ருசியை உணர முடியாத நிலை ஏற்படும்போது அவர்கள் சாப்பிடும் உணவின் அளவு குறைந்துகொண்டிருக்கும். அதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் எடையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உடல் ஆரோக்கியம் குறைவது போன்று அவர்களது மன ஆரோக்கியமும் குறையும். மனந்தளர்ந்து போவார்கள். இதுபற்றிய உலகளாவிய ஆய்வு ஒன்று, ‘ருசியின்மையால் அவதிப்படுகிறவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே, அதற்குரிய சிகிச்சையை பெற்றுக்கொள்வதாக’ கூறுகிறது.

    நாக்கில் ருசியை உணர்த்துகின்ற திசுக்கள் ஏராளமாக உள்ளன. அவை சுவை அரும்புகள் என்று சொல்லப்படும் ‘டேஸ்ட் பட்ஸ்’களில் காணப்படுகின்றன. அந்த அரும்புகள், நாக்கில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதை நம்மால் காணமுடியும். வயதாகும்போது சுவை அரும்புகளின் எண்ணிக்கை குறையும்.

    நாம் நாக்கு மூலம் உணவின் ருசியை நன்றாக உணரவேண்டுமானால் அதற்கு மூக்கின் ஆரோக்கியமும் அவசியமாக இருக்கிறது. ஜலதோஷம், தும்மலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது சாக்லேட் சாப்பிட்டால் நாக்கிற்கு அதன் இனிப்பு சுவை மட்டுமே தெரியும். மூக்கு ஆரோக்கியமாக இல்லாததால் சாக்லேட்டின் மணம் தெரியாது. மணமும், சுவையும் ஒன்றானால்தான் முழுமையான ருசியை அனுபவிக்க முடியும். அதனால்தான் ஜலதோஷம் இருக்கும்போதும் உணவின் முழு ருசியை அனுபவிக்க முடியாமல் தவிப்போம்.

    ருசியின்மை வேறுசில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கிறது. காது, வாய், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகளும், புற்றுநோயும் ருசியின்மையை உருவாக்கும். இந்த உறுப்புகளில் ஏற்படும் நோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளித்தாலும் ருசியின்மை தோன்றும். தலையில் ஏற்படும் பலத்த காயங்கள், சிலவகை மருந்துகளின் பயன்பாடு, காது-மூக்கு-தொண்டையில் ஏற்படும் நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள் போன்றவைகளும் ருசியின்மைக்கு காரணம். பற்களில் ஏற்படும் பாதிப்புகள், ஈறு நோய்கள், வாய் சுத்தமின்மை போன்றவற்றாலும் ருசியின்மை அதிகரிக்கும்.

    ருசியின்மையின் காரணத்தை அறிய காது-மூக்கு-தொண்டை நிபுணர், பற்சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர் ஆகியோரின் ஆலோசனை தேவைப்படும்.
    உதடுகள் வேகமாக வறட்சி அடைவதை தவிர்க்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். அதனை வீட்டிலேயே தயார் செய்வது பற்றி பார்ப்போம்.
    அலுவலகத்திலோ, வீட்டிலோ குளிர்சாதன வசதி கொண்ட அறையில் அமர்ந்திருந்தாலும் கூட உதடுகளில் வறட்சி நிலவக்கூடும். ஏனெனில் குளிர்சாதன பெட்டிகளில் இருந்து வெளியேறும் காற்றில் குளிர்ச்சி நிலவினாலும் அது சருமத்தை உலரும் தன்மைக்குத்தான் மாற்றக்கூடும். உதடுகள் வேகமாக வறட்சி அடைவதை உணரமுடியும். அதை தவிர்க்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். அதனை வீட்டிலேயே தயார் செய்வது பற்றி பார்ப்போம்.

    ஒரு டேபிள்ஸ்பூன் வாஸ்லைனை மைக்ரோ ஓவனில் வைத்து உருகவைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதனை குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.

    தேங்காய் எண்ணெயுடன் கற்றாழையை சேர்த்தும் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் தேன் மெழுகு கலந்து கொள்ளவும். அதனை மைக்ரோ ஓவனில் வைத்து நன்றாக உருகவிடவும். பின்னர் அதனை சிறிய பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.

    வாணலியில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறவும். அவை அனைத்தும் உருகி ஒன்றாக கலந்ததும் இறக்கி பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டுக்கு பயன்படுத்தலாம்.

    ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகை வாணலியில் உருக்கி அதனுடன் அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவையில் லாவண்டர் எண்ணெய் 10 சொட்டுகள் ஊற்றி நன்றாக கலக்கவும். அதனை பாட்டிலில் ஊற்றி குளிரவைத்தும் உதட்டுக்கு உபயோகிக்கலாம்.

    பெண்களின் வயதையும்-தாய்மையையும் ஒப்பீடு செய்துஎபார்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்கள் தான் தாய்மை அடைவதற்கு பிரச்சனையாக இருக்கின்றன.
    உலகளாவிய பல்வேறு ஆய்வுகள் மூலம், பெண்கள் தாய்மையடைவதற்கு 20 முதல் 30 வயதே மிகச் சரியானது என்று கண்டறிந்திருக்கிறார்கள். பெண்களின் வயதையும்-தாய்மையையும் ஒப்பீடு செய்துபார்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் இதர உறுப்புகளைவிட வேகமாக முதிர்ச்சி அடைந்துவிடுவதுதான் அதற்கு முக்கிய காரணம். இனப்பெருக்க உறுப்புகளின் முதிர்ச்சி, அவர்களது தாய்மைக்கு மிகப்பெரிய தடையாகிவிடுகிறது. அதனால்தான் இனப்பெருக்க உறுப்புகள் முழு செயல்பாட்டில் இருக்கும் 20 முதல் 30 வயது, தாய்மைக்கு ஏற்ற வயதாக கூறப்படுகிறது.

    முப்பது வயதுக்குப் பிறகு கருப்பை முதிர்ச்சியடைந்து கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. நாற்பது வயதுக்கு மேல் மாதவிலக்கு நிற்கும் சூழல் தொடங்குவதால் கருத்தரிக்கும் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடக்கூடும். இளம் வயதில் பெண்களின் சினைமுட்டைகள் தரமானதாக இருக்கும். 30 வயதுக்கு மேல் முட்டையின் தரம் குறையும் சூழலும், முதிர்ந்து வெடித்து வெளியே வருவதில் தாமதமும் ஏற்படலாம். இன்னொரு விஷயம் ஆண்கள் நாற்பது வயதை தொடும்போது அவர்களது உயிரணு எண்ணிக்கை, ஆற்றல் ஆகியவை குறைந்து போவதால் அதுவும் கருத்தரிப்பில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

    இரண்டாவது குழந்தை உடனே தேவையில்லை என்று கருதும் தாய்மார்கள், முதல் குழந்தை பிறந்த உடன் கருத்தடை சாதனமான காப்பர்-டி பொருத்திக்கொள்கிறார்கள். முதல் குழந்தை ஓரளவு வளர்ந்த பின்பு இரண்டாவதாக தாய்மையடைய விரும்பும்போது காப்பர்-டியை அகற்றிக்கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள் அகற்றிய அடுத்த ஒருசில மாதங்களிலே உடனடியாக தாங்கள் தாய்மையடைந்துவிடுவோம் என்று எதிர்பார்க்கிறார்கள். எல்லோருக்கும் அவ்வாறு அமைந்துவிடுவதில்லை. ஆனால் காப்பர்-டியை அகற்றி ஒரு வருடம் ஆகியும் தாய்மையடையாவிட்டால் மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

    மதுப்பழக்கம் சில பெண்களிடம் இருக்கிறது. ஒருசில பெண்கள் கொஞ்சமாக, எப்போதாவது குடிப்பதாக சொல்கிறார்கள். மதுவில் எதை குடித்தாலும், எந்த அளவில் குடித்தாலும் அது அவர்கள் தாய்மையடையும்போது கருவின் வளர்ச்சியில் குறைபாட்டை ஏற்படுத்தும். கர்ப்பிணியாக இருக்கும்போது குடித்தால் மதுவில் இருக்கும் கெடுதியான ரசாயனங்கள் தாயின் ரத்தத்தின் வழியாக, வயிற்றில் இருக்கும் குழந்தையின் ரத்த ஓட்டத்தில் கலந்து அதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் மதுப்பழக்கத்தால் ஆண்களைவிட அதிக பாதிப்பு பெண்களுக்கு ஏற்படும். அதனால் பெண்கள் மதுப்பழக்கத்தில் இருந்துவிடுபடவேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம். மது அருந்தும் தம்பதியினர் தாய், தந்தையாகும் வாய்ப்பும் குறைந்துவிடும். அவர்களால் இல்லற இன்பத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியாது.
    இந்த இஞ்சி கசாயம் இரவில் அருந்தி படுத்தால், நிம்மதியாக தூங்கலாம். மூக்கடைப்பு, இருமல், தொண்டைப்புண், ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
    பெரும்பாலானவர்கள் இப்போது அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் உடல் வலி தோன்றும். அந்த உடல் வலி மட்டுமின்றி இருமல், தும்மல், மூச்சு அடைப்பு போன்றவைகளை குணப்படுத்தும் ஆற்றல் இஞ்சிக்கு இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனை மேம்படுத்தும் சக்தியும் இஞ்சிக்கு உண்டு.

    இஞ்சியை கஷாயம் வைத்து பருகுவது நல்லது. ஒரு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக தோலை சீவிவிட்டு அம்மியில் வைத்து நசுக்குங்கள். அதை அப்படியே தண்ணீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்த பின்பு இதமான சூட்டில் சிறிதளவு பனைவெல்லம் அதில் கலந்து பருகுங்கள்.

    இங்கே எனது குழந்தைகளுக்கு சளி பிடித்துள்ளது . இந்த வானிலை மாற்றம் எளிதாக சளி பிடிக்க வைத்து விடுகிறது . இந்த இஞ்சி கசாயம் இரவில் அருந்தி படுத்தால் ,நிம்மதியாக தூங்கலாம் . மூக்கடைப்பு ,இருமல்,தொண்டைப்புண் ,ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது .முயற்சி செய்து பாருங்கள் ...நிச்சயம் பலன் அளிக்கும் .

    தேவையான பொருட்கள் :

    இஞ்சி - 1 துண்டு
    மிளகு -1 மற்றும் 1/2 ஸ்பூன்
    மல்லி -1 மற்றும் 1/2 ஸ்பூன்
    வெல்லம் - 2 ஸ்பூன்
    தண்ணீர் - 1 மற்றும் 1/2 கப்

    செய்முறை :

    இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

    இஞ்சி, மிளகு, மல்லி இவற்றை கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்

    இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, வடிகட்டி பரிமாறவும்.

    இதனுடன் பால் கலந்தும் குடிக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொரோனா நோய்த்தொற்றுவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு செலுத்தும் கவனத்தை நிமோனியா மீதும் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் நிமோனியா பாதிப்புக்குள்ளாகி இறக்கிறார்கள்.
    கொரோனா நோய்த்தொற்றுவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு செலுத்தும் கவனத்தை நிமோனியா மீதும் செலுத்த வேண்டும். இதுவும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பருவகால நோய் தொற்று வகையை சார்ந்தது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கைபடி, ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் நிமோனியா பாதிப்புக்குள்ளாகி இறக்கிறார்கள். நிமோனியா பல்வேறு வழிகளில் பரவக்கூடும். குறிப்பாக குழந்தைகளின் மூக்கு, தொண்டையில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஊடுருவி மூச்சை உள் இழுக்கும்போது அவை நுரையீரலுக்குள் நுழைந்துவிடும். பின்னர் இருமல், தும்மல் போன்ற பாதிப்பை உண்டாக்கும்.

    உடலில் குளிர்ச்சித்தன்மை, காய்ச்சல், மார்பு வலி, சளி, இருமல், சுவாசிப்பதற்கு சிரமம் அல்லது வேகமாக சுவாசிக்கும் நிலை, வழக்கத்தைவிட கடும் சோர்வு, வெறித்தனமான நடத்தை போன்றவை நிமோனியாவுக்கான பொதுவான அறிகுறிகளாகும். அவற்றை கவனத்தில் கொள்ளாவிட்டால் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

    குழந்தைகளை தாக்கும் நிமோனியா மூன்று வகைப்படும். அவற்றுள் லேபார் நிமோனியா, நுரையீரலின் ஒரு பகுதியை பாதிக்கக்கூடும். மூச்சுக்குழாய் நிமோனியா எனும் இரண்டாவது வகை பாதிப்பு நேரும்போது குழந்தைகளின் இரு நுரையீரல்களிலும் தடிப்புகள் தோன்றும். ‘வால்கிங் நிமோனியா’ எனப்படும் மூன்றாவது வகை நிமோனியா குழந்தைகளுக்கு மந்தமான உணர்வை தோற்றுவிக்கும். தனி நபர் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிமோனியாவை தடுத்து நிறுத்திவிடலாம். குழந்தைகளை மற்ற நோய்களில் இருந்தும் காப்பாற்றிவிடலாம்.

    குழந்தைகள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. கழிப்பறையை பயன்படுத்திய பின்பும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை கழுவுவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். எங்கு சென்றாலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதற்கு பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆனதும் நிமோனியாவை தடுக்கும் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக போட வேண்டும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக தடுப்பூசி போடலாம்.

    இதுபற்றி டாக்டர் வயோம் அகர்வால் கூறுகையில், “குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து வகையான தடுப்பூசிகளையும் போட்டுவிட வேண்டும். அடிக்கடி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும். நிமோனியாவுக்கும் வழிவகுத்துவிடும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும். வைட்டமின் ஏ, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. கேரட், பால் மற்றும் காய்கறிகளை உணவில் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

    நுரையீரலில் தொற்று, மூச்சுத்திணறல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுடன் நிமோனியா பாதிப்பு உண்டாகும். நிலைமை மோசமடையாமல் ஆரம்ப நிலையிலேயே தடுத்துவிடுவதுதான் புத்திசாலித்தனம். புகைபிடிக்கும் நபர்களிடமிருந்து குழந்தைகளை விலக்கிவைக்க வேண்டும்.

    நிமோனியாவின் அறிகுறிகளை கொண்டவர்களுடன் குழந்தைகளை நெருங்கி பழக அனுமதிக்காதீர்கள். வீட்டின் தரைதளம் உள்பட அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். அல்லது கிருமிநாசினியால் துடைத்தெடுக்க வேண்டும். குழந்தைகளின் நகங்கள் நிறம் மாறுதல், உதடுகள் நீல நிறத்துக்கு மாறுதல், சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், வாந்தி, 100 டிகிரிக்கும் அதிகமாக காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
    மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நிகழ்காலத்தை அனுபவித்து வாழ்வார்கள்.ஆனால் மகிழ்ச்சி அற்றவர்கள் நடந்து முடிந்ததை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.
    மகிழ்ச்சி நிரந்தரமானது அல்ல. ஆனால் அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலர் மகிழ்ச்சியான நபராக தங்களை வெளிக்காட்டிக்கொள்வார்கள். ஆனால் மனதுக்குள் நிம்மதி இன்றி தவிப்பார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் ஒருசில அறிகுறிகளை கொண்டே அவர்கள் மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

    மகிழ்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு. உள் மனம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் எந்த விஷயத்தையும் ரசித்து, அனுபவித்து செய்ய முடியாது. வாழ்க்கையில் நிம்மதி நிலைத்திருக்காது. முகத்தில் எவ்வளவு புன்னகையை வெளிப்படுத்தினாலும் உண்மையிலே மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் துக்கம்தான் பின் தொடர்ந்து கொண்டிருக்கும். போலி புன்னகையால் மகிழ்ச்சியை ஒருபோதும் நிரந்தரமாக்க முடியாது.

    மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பவர்கள், வாழ்க்கை எப்போதுமே கடினமானது அல்ல என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மகிழ்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் கடுமையானதாகவே தோன்றும். எந்தவொரு காரியத்தையும் வெற்றிகரமாக முடிப்பதற்கு கடுமையாக முயற்சிக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். எவ்வளவு முயற்சி செய்தாலும் இறுதியில் சோகமும், ஏமாற்றமும்தான் நேரும் என்று தாங்களாகவே முடிவு செய்துவிடுவார்கள்.

    மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருப்பவர்கள் யார் மீதும் எளிதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் நம்பிக்கையின்மை தலைதூக்கும். மற்றவர்களை நம்புவதற்கு பயப்படுவார்கள். அதிலும் புதிய நபர்களிடம் அதீத பயம் கொள்வார்கள். ஆனால் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தங்களை சந்திக்கும் நண்பர்களுடன் உறவை வளர்த்துக்கொள்வார்கள்.

    மகிழ்ச்சியற்று இருப்பவர்கள் தங்களை சுற்றி நடக்கும் எதிர்மறையான விஷயங்கள் மீதுதான் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உலகில் நடந்த மோசமான நிகழ்வுகள், எதிர்மறையான விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். அவர்களிடம் நேர்மறையான விஷயங்களை பற்றி பேசினால் ஆர்வமாக கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். அவை பற்றி பகிர்ந்துகொள்வதற்கு எந்த விஷயமும் அவர்களிடம் இருக்காது. மகிழ்ச்சியான மக்கள் உலகளாவிய பிரச்சினைகளில் நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் இரண்டையும் தெரிந்துவைத்திருப்பார்கள்.

    மகிழ்ச்சி அற்றவர்கள், மற்றவர்களின் வெற்றியை பார்த்து மகிழ்ச்சி கொள்ளமாட்டார்கள். மற்றவர்களை தங்களுடன் ஒப்பிட்டு பார்த்து பொறாமை கொள்வார்கள். ஒரே நபருக்கு அதிர்ஷ்டமும், சூழ்நிலையும் மீண்டும் மீண்டும் சாதகமாக இருக்காது என்பதை மகிழ்ச்சியான மக்கள் புரிந்துகொள்வார்கள். தங்களின் அடையாளத்தையும், தனித்துவத்தையும் ரசித்து அனுபவிப்பார்கள். தோல்வியை சந்தித்தாலும் மற்றவர்களின் வெற்றியை மோசமாக விமர்சிக்க மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சியற்ற நபர்கள் தங்களை விட சிறந்துவிளங்குபவர்கள், சாதிப்பவர்கள் மீது வெறுப்பு கொள்வார்கள்.

    மகிழ்ச்சியற்றவர்கள், எதிர்காலம் பற்றிய சிந்தனையை எதிர்மறையான எண்ணங்களால் நிரப்பி இருப்பார்கள். எதன் மீதும் நம்பிக்கை வைக்காததால் எந்தவொரு முடிவையும் அறிந்துகொள்வதற்கு பொறுமை இருக்காது. தாங்கள் விரும்பியபடி நடக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். எப்போதும் அவர்களிடம் ஒருவித கவலை சூழ்ந்திருக்கும்.

    மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நிகழ்காலத்தை அனுபவித்து வாழ்வார்கள். சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்ப்பார்கள். அவர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் நேர்மறையான அதிர்வுகளையே வெளிப்படுத்தும். ஆனால் மகிழ்ச்சி அற்றவர்கள் நடந்து முடிந்ததை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.
    பீர்க்கங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கும் ஏற்ற காய்கறியாகும். இதில் நார்ச்சத்தும் மாவுச்சத்தும் இருப்பதால் எளிதில் இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடியது.
    பீர்க்கங்காய் வெள்ளரி இனத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும். பிஞ்சு பீர்க்கங்காயை விட முற்றிய பீர்க்கங்காயே சமையலுக்கு சிறந்தது. பிஞ்சு பீர்க்கங்காயை சமைத்து உண்டால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம், சளி பிரச்சனைகள் போன்றவை தோன்றும்.

    100 கிராம் பீர்க்கங்காயில் புரதம் 0.5%, கால்சியம் 40 மி.கி, பாஸ்பரஸ் 40 மி. கி, இரும்புச் சத்து 1.6 மி.கி, வைட்டமின் ‘ஏ’ 56%, ரிஃபோபிளவின் 0.01 மி.கி, தயாமின் 0.07 மி. கி, நிகோடின் அமிலம் 0.2 மி.கி, வைட்டமின் 5 மி.கி உள்ளது.

    பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’, மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காயைச் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.

    பீர்க்கங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கும் ஏற்ற காய்கறியாகும். இதில் நார்ச்சத்தும் மாவுச்சத்தும் இருப்பதால் எளிதில் இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடியது. பீர்க்கங்காயை அளவோடு எடுத்து கொண்டால் நல்லது. அளவு அதிகமானால் பித்தம், சீதளம் போன்றவை ஏற்படும்.

    பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்

    1. பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
    2. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
    3. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில் இதை உணவில்  சேர்த்துக்கொள்ளலாம்.
    4. பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.
    5. சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலைச் சாற்றைத் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
    6. பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்கு மேல் பூச்சு எண்ணெயாகத் பயன்படுகிறது.
    7. கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    8. தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் தோல் நோய்களில் இருந்து விரைந்து குணம் கிடைக்கும்.
    9. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, வயிற்றில் புண்கள் வராமல் காக்கும், மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
    தற்போது பகலில் வெயில் அடித்த போதிலும், இரவில் குளிரான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது மழைத்தூறலும் விழுகிறது. மாறி வரும் சீதோஷ்ண நிலையால் குழந்தைகள், பெரியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
    மழைக்காலத்தில் வரும் பல்வேறு நோய்களால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.எனவே குழந்தைகளை எப்போதுமே கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.அதுவும் மழைக் காலம் என்றால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் போன்ற அனைத்தும் வர ஆரம்பித்துவிடும்.  நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருப்பது குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான்.  இதற்குக் காரணம்.ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளாகும்.

    ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி  மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி  வரலாம்.

    தற்போது பகலில் வெயில் அடித்த போதிலும், இரவில் குளிரான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது மழைத்தூறலும் விழுகிறது. மாறி வரும் சீதோஷ்ண நிலையால் குழந்தைகள், பெரியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    மழைக்காலத்தில் தேங்கும் நீரால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, மார்புச் சளி, ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய்கள் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். 102 டிகிரி காய்ச்சல் இருக்கும். வைரஸ் காய்ச்சலாக இருந்தால் உடல் வலி அதிகமாக இருக்கும்.

    ஆர்.எஸ்.வீ எனும் வைரஸ் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும்போது ப்ராங்கியோலைட்டீஸ் எனும் நுரையீரல் நோயை ஏற்படுத்தி மூச்சுத் திணறலை வர வைக்கிறது. இந்த நோய் அதிகரித்து வீசிங் ப்ராங்கைட்டீஸ் என்று சொல்லும் இளப்பு நோயாக மாறும். ஏற்கெனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படும். மழைக் காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பூஞ்சை நோய்களும் வருகின்றன. அக்குள், தொடை இடுக்குகளில் பூஞ்சைக் காளான் கிருமி தாக்குவதால் படர்தாமரை நோய் வரும். இந்த படர் தாமரை உடலில் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி சிகப்பு நிறத்தில் தோலில் தழும்பு ஏற்பட்டு உடலில் நமைச்சல் ஏற்படும்.

    மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் முட்டையிடுவதால், அதன் மூலம் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. இதனால் அனை வரும் ஆங்காங்ககே தேங்கும் நீரை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும். தினமும் காய்ச்சிய நீரையே பருக வேண்டும். சளி, காயச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி குணமடைந்த பின்னர் அனுப்ப வேண்டும்.

    வீடு, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டு்ம். பாத்திரங்களில் தண் ணீர் தேங்கவிடாமல் துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூடான உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். அதிகமாக மழை பெய்யும்போது ஸ்வெட்டர், குளிர் தடுக்கும் சாதனங்களை பயன்படுத்தலாம். கொசுக்கடியைத் தடுக்க உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×