என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    நன்றி என்பது வீட்டிற்குள் அதிகமாக புழங்கப்பட வேண்டிய வார்த்தை! சொல்லிலும், செயலிலும் நன்றி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி நிறையும்.
    ஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே எடுத்துக்காட்டாக கருதப்படுவார்கள். வெளிஇடங்களில் அவர்களுடைய பழக்கவழக்கம் அந்த அளவுக்கு பாராட்டத்தக்கதாக இருக்கும். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்குத்தான் அவரது உண்மையான முகம் தெரியும். வீட்டில் அவ்வளவு கடுமையாக நடந்துகொள்வார்கள். எப்போதுமே நமது நல்லபழக்கவழக்கங்கள் அனைத்தும் நமது வீட்டில் இருந்தே தொடங்கப்படவேண்டும். வெளியேயும் அது தொடரவேண்டும்.

    நன்றி என்கிற விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்வீர்கள். நீங்கள் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டியிருந்தால், உங்கள் நண்பர் அவரது வாகனத்தில் உங்களை அழைத்துச் செல்வார். அவருக்கு நீங்கள் நன்றி சொல்வீர்கள். உங்களுக்கு உடல் நிலை சரியில்லாதபோது உங்களோடு மருத்துவமனை வரை வந்தவருக்கும் நன்றி சொல்வீர்கள். அடை மழை. வெளியே சென்று உணவருந்த முடியாத சூழ்நிலை ஏற்படும்போது வீடு தேடிவந்து ஒரே ஒரு முறை உணவளித்தவருக்கும் நன்றி தெரிவிப்பீர்கள்.

    நிச்சயமாக இவை அனைத்துமே நன்றி தெரிவிக்கவேண்டிய நல்ல விஷயங்கள்தான். வீட்டுக்கு வெளியே இப்படி உதவியவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லும் நீங்கள், வீட்டிற்குள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். வீட்டிற்குள், உங்களுடனே இருக்கும் உங்கள் வாழ்க்கைத்துணை காலம் முழுக்க உங்களுக்கு எத்தனையோ உதவிகளை செய்துகொண்டே இருக்கிறார். ஒரு நாளாவது அவருக்கு நன்றி தெரிவித்திருப்பீர்களா?

    இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கும்போது, ‘கணவன்- மனைவிக்குள் அப்படி நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை!’ என்று நீங்கள் பதில்சொன்னால், அது தவறு. ஏன்என்றால் ஒவ்வொரு இரவும் உங்களுக்கு பின்னால் அவர் தூங்குகிறார். ஆனால்உங்களுக்கு முன்னாலே காலையில் எழுந்து சமைக்கிறார். உங்களுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்து உங்களை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறார். இப்படிப்பட்ட மனைவிக்கு நன்றி சொல்வதுதானே கணவருக்கு அழகு! நன்றியை கணவரிடம் கேட்டு வாங்கும் மன நிலையில் மனைவி இல்லாவிட்டாலும், அவரும் நன்றியை எதிர்பார்ப்பார் என்ற நிஜத்தை புரிந்துகொள்ளுங்கள்.

    அதுபோல் மனைவியும் கணவருக்கு நன்றி சொல்லலாம்! நன்றி என்பது வீட்டிற்குள் அதிகமாக புழங்கப்பட வேண்டிய வார்த்தை! சொல்லிலும், செயலிலும் நன்றி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி நிறையும். அம்மாவும், அப்பாவும் ஒருவருக்கொருவர் நன்றி பாராட்டினால், அதை கேட்டு வளரும் அவர்களது குழந்தைகளிடமும் நன்றி பாராட்டும் எண்ணம் உருவாகும். அவர்கள் வீட்டிற்குள் நன்றி பாராட்ட ஆரம்பித்து அதை வெளியேயும் தொடருவார்கள். அதன் மூலம் அவர்கள் சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதராவார்கள்.
    மேக்கப் போடாமல் உங்கள் முகம் அழகாக தெரிய வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் அழகியாக ஜொலிக்கலாம்.
    * பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

    * தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.

    * ஆரஞ்சு பழ தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும். மேலும் அதோடு கடலைமாவு -2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும்.

    * சிறிதளவு வெண்வெண் எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.

    * நன்கு கனிந்து பழுத்த நிலையில் இருக்கும் வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.

    * பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.

    * தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.  

    * உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

    * செம்பருத்தி இலை, பயத்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.

    * அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.
    எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் வந்தவருக்கு இது அருமருந்தாகும். மேலும்குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி, சுத்தமாக வைக்கிறது.
    தேவையான பொருட்கள்

    உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
    கடுகு - சிறிதளவு
    எள் - 25 கிராம்
    நெய் - 100 கிராம்
    காய்ந்த மிளகாய் - 4
    உளுத்தம் பருப்பு - 50 கிராம்
    முந்திரிப் பருப்பு - 20
    பெருங்காயத் தூள் - சிறிதளவு
    எலுமிச்சம்பழம் - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    ஒரு கடாயில் நெய் காய்ந்தவுடன் அதில் எள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்கயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

    பின் அதே கடாயில் சிறிதளவு கடுகு, முந்திரி, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து அதில் வடித்து ஆறவைத்துள்ள சாதத்தை சேர்க்கவும்.

    அத்துடன் நாம் வறுத்து பொடி செய்து வைத்துள்ள எள்ளு பொடியை சேர்க்கவும்.

    பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வாசனைக்காக சிறிதளவு நெய், எலுமிச்சை பழ சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான எள்ளு சாதம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ‘ஹோ ஒப்பானோபானோ’ என்பது ஒரு ஹவாய் பழங்குடியின ஹீலிங் முறை சிகிச்சை. ஆழ் மன வெறுப்பு, கோபம் அல்லது துக்கத்தை வெளிக் கொணர்ந்து அதன் மூலம் உடலைச் சுத்தப்படுத்தும் வழிமுறை இது.
    ‘ஹோ ஒப்பானோபானோ’ என்பது ஒரு ஹவாய் பழங்குடியின ஹீலிங் முறை சிகிச்சை. இது ஒரு மன்னிப்பு கோருதல் போன்றதுதான். ஆனால், சற்றே ஆழமானது. ஆழ் மன வெறுப்பு, கோபம் அல்லது துக்கத்தை வெளிக் கொணர்ந்து அதன் மூலம் உடலைச் சுத்தப்படுத்தும் வழிமுறை இது. உடலில் நோய் வந்தால் அதற்கு ஆழ்மனத்தில் உள்ள கோபமோ வருத்தமோதான் காரணம் என்று இந்தப் பழங்குடிகள் நம்புகிறார்கள். அதனால் ஒருவர் சுகவீனமாக இருந்தால், அதை அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் பார்ப்பதில்லை. சரிசெய்ய வேண்டிய ஒன்றின் தேவை வந்துவிட்டதாக உடனே உணர்கிறார்கள்.

    அது ஒருவர் சம்பந்தப்பட்டதாக மட்டும் இருக்காது; கண்டிப்பாக மற்றவர்களின் பங்களிப்பும் உண்டு என்பதால், பெரும்பாலும் இது குடும்பமாகத்தான் கையாளப்படும். வீட்டில் பெரியவர்தான் இதைச் செய்துவைப்பார். அவரும் அதில் சம்பந்தப்பட்டிருந்தாலோ வேறு காரணங்கள் இருந்தாலோ, அந்தப் பழங்குடி இனத்தில் உள்ள வேறு ஒரு பெரியவர் அழைக்கப்படுவார்.

    கலந்து பேசுதல், பிரார்த்தனை, சுய சுத்திகரிப்பு, மன்னிப்பு கோருதல் எல்லாம் நடக்கும். இறுதியில் ஒரு குறிப்பிட்ட மூலிகையை உண்டு இந்தச் சடங்கை முடித்துக்கொள்வார்கள். எந்த கிலேசமும் மன அளவில் தங்காமல் இருக்க இவர்கள் குடும்பமாக, கூட்டமாக இதைச் செய்கிறார்கள். இதைச் செய்து முடித்தால் உடல்நலம் குன்றியவர் தேறுவதை உறுதி செய்கின்றனர்.

    உடல் நலமற்றவருக்கு இது பிரச்சினை எனக் கொள்ளக்கூடாது. அவர் ஓர் உறவு அல்லது குடும்ப சீர்கேட்டை தன் உடல் மூலம் தெரிவிக்கிறார் என்று பொருள். அவருக்கு மட்டும் தனியே வைத்தியம் செய்வதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் வைத்திய நடைமுறைக்கு உட்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்டவர் தன் உள் மன போராட்டத்தைக் கொட்டி தீர்க்க உதவுகிறார்கள். இதன் மூலம் தனி நபர்களாகவும் உணர்வுகளுக்கும், உடலுக்கும் உள்ள உறவை புரிந்து மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

    இதே போன்ற வழிமுறைகள் உலகமெங்கும் பல பழங்குடிகளிடம் உள்ளன. இவை மெல்ல மெல்ல வளர்ந்த நாடுகளை அடைந்து நல்ல வடிவம் பெற்றுவிட்டது. இன்று பலர் ஹோ ஒப்பானோபானோவை சிகிச்சை முறையாக கற்றுத் தருகின்றனர். யாரும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் நான்கு விஷயங்களை கூறுகிறார்கள்.

    அந்த நான்கு விஷயங்கள் வருத்தம் தெரிவித்தல், மன்னிப்பு கோருதல், நன்றி சொல்லுதல், அன்பு செலுத்துதல். இதை நான்கு அபர்மேஷன்கள் என்றும் சொல்லலாம். ‘நான் வருத்தம் அடைகிறேன்.’, ‘நான் மன்னிப்பு கேட்கிறேன்.’, ‘நான் நன்றி செலுத்துகிறேன்’, ‘நான் அன்பு செலுத்துகிறேன்.’ எந்த பிரச்சினை என்றாலும் அடுத்தவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பார். அவரிடம் இந்த 4 வாக்கியங்களைச் சொல்லுங்கள். நேரில் சொல்லக்கூட அவசியமில்லை. அவரை நினைத்து எழுதுங்கள். அல்லது தனிமையில்கூடச் சொல்லுங்கள்.

    முதலில், யாரிடம் பிரச்சினையோ அவரிடம் மன்னிப்பு கோருதல் என்பது தர்க்க ரீதியாக கடினமாக இருக்கும். ஆனால் அதுதான் தொடக்கப் புள்ளி. இந்த முதல் வாக்கியம் நடப்பதில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணரச் செய்கிறது. சுய பொறுப்பு தெரிவது மாறுதலின் முதல் படி தன் நிலையை மாற்றுவதுதான் எனப்புரியும்.

    தான் இடம் கொடுக்காமல் இந்த நிலை வராது என்பதால்தான், செய்ததற்கு முதலில் வருத்தம் அடைவது முதல் படி. தனக்கு வருத்தம் வந்ததைப்போல் எதிராளிக்கும் வருத்தமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எது சரி, எது நியாயம் என்பதைவிட வருத்தமும் வலியும் எதிராளிக்கும் உண்டு என்று கண்டுகொண்டு மன்னிப்பு கோருதல் இரண்டாம் படி. இந்த ஹீலிங் முறை சிகிச்சை மூலம் மனதளவிலும், உடல் அளவிலும் வலிமை கிடைக்கும் என்கின்றனர் ஹவாய் பழங்குடிகள்.
    கொரோனா தொற்றுக்கு ஆளான தாயிடம் இருந்து சிசுவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பரிமாற்றம் ஆவதை ஒரு ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    புதுடெல்லி :

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான 16 கர்ப்பிணிகளை அடிப்படையாக வைத்து விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி அனிமல்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த ஆய்வில் சிங்கப்பூரில் 4 மூன்றாம் நிலை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட 16 கர்ப்பிணிகளிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த ஆய்வில், மாதிரிகளை முறையாக ஆய்வு செய்ததில் தாயிடம் இருந்து குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது நஞ்சுக்கொடி வாயிலாக கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு கொரோனாவின் தாக்கம் மிதமாகவே இருந்தது. 2 பேர் உடல் பருமன் மற்றும் வயது மூப்பு காரணமாக ஆபத்து காரணிகளை கொண்டிருந்தனர்.

    ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா தாக்கம் 80 நாட்கள் வரை நீடித்தது.

    தொப்புள்கொடி ரத்தத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருட்களை கண்டுபிடிக்க முடிந்தது. எனவே தாயிடம் இருந்து சிசுவுக்கு நோய் எதிர்ப்பு பொருள் பரிமாற்றம் நடைபெற முடியும்.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறி உள்ளனர்.
    பொதுவாக ஒரு ஆண், பெண் இருவரிடமும் பரஸ்பர நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் புகைப்படங்களை வைத்து மிரட்டுவது, பொதுதளத்தில் பகிர்ந்து உன்னை அசிங்கப்படுத்துவேன் போன்ற செயல்கள் பெண்களை பெரிதும் பாதிக்கிறது.
    ‘தனிமையில் எடுத்த வீடியோவை காட்டி மிரட்டுவது சமூக குற்றம்’ என்றும் ‘பெண்களை மிரட்டுவது வன்கொடுமைகளுக்கு சமமானது’ என்றும் பாலியல் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் கருத்து ஒன்றை முன் வைத்திருக்கிறது.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே எல்லோருக்கும் தெரிந்து கொள்வதற்கும், தங்களது ஒவ்வொரு அசைவுகளையும் மற்றவரிடத்தில் வெளிப்படுத்தும் போதைக்கு அடிமையாகியுள்ள ஆபத்தான சூழலில் இருக்கிறோம். விழிப்போடு இருக்க என்னதான் தொடர்ந்து முன் நடவடிக்கைகள் எடுத்தாலும் அதை பின்பற்றுவது அன்று ஒரு நாளாக மட்டுமே இருக்கிறது.

    இவ்வாறான சூழலின் அடிப்படையிலேயே சில மாற்றங்களை முன் வைக்கவேண்டும் என்பதைக் காலங்காலமாக சொல்லி வருகிறோம். ஒரு ஆண் வளரவளர அவன் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை விட ஒரு பெண் வளரும் பருவத்தில் அவள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் தன்மை வேறுபட்டதாக இருக்கிறது. அந்த விஷயங்களை குடும்பம் இருட்டு அறைக்குள் சந்திக்கிறது.

    ஒரு பெண் குழந்தை வளரும் போது மாற்றங்கள் பற்றி தாய்மார்கள், அதன் பிறகு வீட்டிலிருக்கும் மற்ற பெண்கள்; இவர்களையும் விட முக்கியமாக அந்த வீட்டில் உள்ள ஆண்களும் உடல் மாற்றம் குறித்து சகஜமாக பேசுவார்கள் என்கிற நிலைமை ஏற்படும்போது தான் உடலை ரகசியமாக பார்த்துக் கொள்ள கூடிய மனோநிலை பெண்ணுக்கு இருக்காது.

    அதேவேளையில் சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் என்னென்ன செய்கிறார்கள்? யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள்?...போன்ற விஷயங்களை கண்காணிக்கக் கூடிய பெற்றோர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கிறார்கள். எந்த ஒரு விஷயத்தையும் மனதடையில்லாமல் பேசும் சூழலை குடும்பம் உருவாக்கி கொடுக்கும்போது தான் அந்த குழந்தை சுதந்திரமாக இருப்பதோடு, எல்லா விஷயங்களையும் பகிர்வதற்கும் தயாராகிறது.
     
    பொதுவாக ஒரு ஆண், பெண் இருவரிடமும் பரஸ்பர நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது, சமூகவலைத் தளங்களில் வெளியிடுவது, சில ரகசியமான விஷயங்களை அவர்களுக்குள் பகிர்ந்து கொள்வதாக இருக்கலாம். அதை அந்த உறவுக்கு பின்னால் வெளியே போய் இதை வைத்து மிரட்டுவது, பொதுதளத்தில் பகிர்ந்து உன்னை அசிங்கப்படுத்துவேன் போன்ற செயல்கள் பெண்களை பெரிதும் பாதிக்கிறது.

    மிரட்டலுக்கு பணிந்துபோகக்கூடிய சமூகமாகத்தான் இன்றளவும் பெண்கள் இருக்கிறார்கள். மிரட்டப்படும் பெண் உண்மையில் அனுதாபத்துக்கு உரியவள் என்று எல்லோருக்கும் புரிந்திருந்தாலும் கூட அந்த பெண்ணை மட்டுமே தண்டிக்கக்கூடிய சமூக சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    இணைய வழியாக சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களுக்கான சட்டங்களில் இன்றும் நாம் பூஜ்ய அளவில் தான் இருக்கிறோம். எது குற்றம் என்பதை தீர்மானிப்பதில் சட்டத்தின் வரையறை முக்கியம். மக்களுக்கும் தெரியும் எது குற்றம்? எது குற்றமில்லை? ஆனால் ஒரு நீதிமன்றத்திற்கு சட்டபுத்தகத்தின் வரையறை தேவைப்படுகிறது.

    ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளின் நிர்வாணம் வெளியே வருகிறது என்றால் குடும்பம் அவளை தாங்கி பிடிக்கக்கூடிய தூணாக இருப்பதோடு, உடல் என்பது அவமான சின்னம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தவும் வேண்டும். இதை விட சமூகம் செய்யவேண்டிய மிகப் பெரிய விஷயம் இது போன்ற போர்னோ வீடியோக்களை கண்ணை மூடி ஃபார்வேர்டு செய்வதை நிறுத்த வேண்டும்.
    வீட்டில் அலுவலகப் பணியை செய்வதால் உங்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் இன்னும் அதிகமாக உதிர்வதற்கு அடிப்படைக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தம். இதை சரி செய்யும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
    கொரோனா வைரஸ் பலரது வாழ்க்கை முறையையே சிதைத்துள்ளது. தூக்கம், உணவு , உடல் உழைப்பு என அனைத்தும் தலைகீழாகிவிட்டது. இதனால் பல பக்கவிளைவுகளையும் சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தலை முடி உதிர்வு. தலை முடி உதிர்வது வழக்கமான பிரச்னைதான் என்றாலும் இந்த லாக்டவுனில் உங்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் இன்னும் அதிகமாக உதிரும் உடையும். இதற்கு அடிப்படைக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தம். இதை சரி செய்ய தீர்வுகள் என்ன..?

    வளர்ச்சிதை மாற்றத்தைத் தூண்டுவதற்கு வைட்டமின் B சத்து மிகவும் அவசியம். எனவே வைட்டமின் B சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. அதேபோல் ஸிங்க் ஊட்டச்சத்து தலை முடி வளர்ச்சியை தூண்டி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

    வீட்டில் இருப்பதால் முடிந்தவரை ஹேர் டிரையர் , ஹேர் ஸ்டிக், ஸ்ட்ரெய்ட்னர் போன்ற தலைமுடி அழகுசாதனப் பொருட்களை தவிர்த்தல் நல்லது. அதேபோல் தலைமுடியை சிம்பிளாகப் பின்னல் போடுவதே போதுமானது. கூடுதல் ஸ்டைலிங், ஹேர் ஸ்பிரே போன்றவற்றையும் தவிருங்கள்.

    உங்கள் தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷ்னர் என பயன்படுத்துங்கள். தலை முடி வறட்சி அடையாமல் இருக்க தேங்காய் எண்ணெய் தடவுவதை மறவாதீர்கள். வீட்டில் இருப்பதால் கெமிக்கல் ப்ராடெக்டுகளை தவிர்த்து இயற்கை முறையிலான ஹேர் பேக் போடுவது, பராமரிப்பது என முயற்சி செய்தல் ஆரோக்கியமான வழி.

    உணவில் புரோட்டின் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். மீன், முட்டை, சிக்கன் போன்றவை புரோட்டின் நிறைந்த உணவுகள்தான். அதேபோல் வைட்டமின் C நிறைந்த ஆரஞ்சு , கிவி, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.

    வைட்டமின் D சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே உடல் நிலைக் காரணமாக தலைமுடி உதிர்வு ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாலும் இதைத் தடுக்கலாம். கால்சியம் சத்தும் முக்கிய ஊட்டச்சத்தாகும்.

    உடலில் நீர் வற்றாமல் பார்த்துக்கொள்வதும் முக்கிய பொறுப்பு. எனவே அடிக்கடி தண்ணீர் அருந்துவதை மறவாதீர்கள்.
    நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
    “பெண்கள் கடைக்கு சென்று மாதவிடாய் கால நாப்கின் வாங்கும் விஷயத்தில் அசவுகரியங்கள் இருக்கத்தான் செய்கிறது. வீட்டிலுள்ள ஆண்களிடம் நாப்கின் வாங்கி தர சொல்வதற்கு ஒருவித தயக்கம் இருக்கிறது. பெரும்பாலும் பெண்கள்தான் நேரடியாக சென்று வாங்க வேண்டி இருக்கிறது. கடையில் கூட்டமாக இருக்கும்போது கேட்பதற்கும் சில பெண்கள் தயங்குகிறார்கள். நாப்கினை பேப்பரில் மடித்து வாங்கி வீட்டுக்கு கொண்டு வரும்போது மன நெருக்கடியையும் எதிர்கொள்கிறார்கள்.

    “நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. தங்களுக்கு பொருத்தமான நாப்கின்களை தேர்வு செய்வதற்கும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தேவையற்ற சரும பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். நாப்கின்களை சீரான இடைவெளியில் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதனை அசவுகரியமாக கருதி நீண்ட நேரம் பயன்படுத்தவும் செய்கிறார்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும் என்பது சுகாதார நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

    காட்டன் நாப்கினைகளை உபயோகித்தால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதற்கு சிரமப்பட்டு நிறைய பெண்கள் காட்டன் நாப்கின்களை உபயோகிப்பதில்லை. மற்ற நாப்கின்களை விட காட்டன் நாப்கின்கள் சிறந்தது என்பது படித்த பெண்களுக்கு தெரிந்திருந்தாலும் அதனை உபயோகிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

    மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்களை நாப்கின் டெலிவரி செய்யும் கவர்களில் அச்சிட்டும் வழங்கி வருகிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள்:

    *மாதவிடாய் காலத்தில் பழங்கள், காய்கறிகளை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுங்கள். அது உடல் ஆற்றல் திறனை அதிகரிக்க வழிவகை செய்யும்.

    *உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம். அதனால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது வலியை குறைக்க உதவும். இடுப்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

    *டார்க் சாக்லேட்டையும் சாப்பிடலாம். அது பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதோடு மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    *மாதவிடாய் காலத்தில் பேரீச்சம் பழத்தையும் தவறாமல் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் இரும்பு சத்து மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடு செய்ய உதவும்.

    *மாதவிடாய் காலத்தில் உடல் சுத்தத்தை பராமரிப்பதும் முக்கியம். நாப்கின்களை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். 4 மணி நேரத்திற்குள் மாற்றுவது நல்லது. மாதவிடாய் கப்கள் உபயோகித்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும்.

    *மாதவிடாயின்போது தினமும் இருமுறை குளிப்பதும் நல்லது. அது வலியை குறைக்கும். மன நிலையையும் மேம்படுத்த வழிவகை செய்யும்.

    *வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை மாதவிடாய் காலத்திலும் தவறாமல் பின் தொடர வேண்டும். உடல் இயக்கம் செயல்பாட்டில் இல்லாமல் போனால் வலி அதிகரிக்கும். குறைந்தபட்சம் நடைப்பயிற்சி மேற்கொள்வது வலியை குறைக்கும். மனதிற்கும் இதமளிக்கும்.

    * இரவில் தூங்க செல்லும்போது நாப்கின்களை அப்புறப்படுத்தக்கூடாது. துரித உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அவைகளை தவிர்ப்பது உடலில் திரவத்தின் இருப்பை அதிகரிக்க செய்யும்.

    * காபின் கலந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதனை அதிகம் பருகுவது வலியை அதிகரிக்க செய்துவிடும்.

    *நாப்கின்களை உபயோகித்த பிறகு அதனை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கழிவறையில் நாப்கினை போடுவதை தவிர்க்க வேண்டும்.

    *உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் வலி அதிகரிக்கும். வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    தட்டை பயறுகளில் நார்ச்சத்து வளமையாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது முக்கிய பங்கை வகிக்கிறது. இதில் வைட்டமின் ஏ போன்ற ஆண்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளதால், பல வகையான நோய்கள் அண்டாமல் தடுப்பதில் இது முக்கிய பங்கை வகிக்கிறது.
    தேவையான பொருட்கள்

    வெள்ளரிக்காய் - 1
    தட்டப்பயறு - 50 கிராம்
    தக்காளி - 1
    சிவப்பு குடைமிளகாய் - 1
    தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    தட்டப்பயறை வேக வைத்து கொள்ளவும்.

    வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தட்டப்பயறை போட்டு பின்னர் காய்கறிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அதில் உப்பு, மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம்.

    சூப்பரான தட்டப்பயறு வெஜிடபிள் சாலட் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல! இந்த வலிக்கு பல காரணங்கள் உண்டு.
    முதுகில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது கீழ் முதுகு வலி. மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காக சிகிச்சை பெறும் பிரச்சினைகளில், கீழ் முதுகு வலி 2-ம் இடத்தில் உள்ளது. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல! இந்த வலிக்கு பல காரணங்கள் உண்டு. முதுகு பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள் ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளை இதற்கு முதன்மை காரணங்களாக சொல்லலாம்.

    சில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பையில் கல் உள்ளவர்களுக்கு கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்கு கீழ் முதுகில்தான் முதலில் வலி ஆரம்பிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90 சதவீதம் முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம்.

    கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையை தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்ட சத்துக்குறைவு, தரையில் வழுக்கி விழுவது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரென குனிவது அல்லது திரும்புவது, உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகி கீழ் முதுகில் வலி ஏற்படும்.

    ‘ஆஸ்டியோமைலிட்டிஸ்’, ‘ஸ்பாண்டிலிட்டிஸ்’, காச நோய் போன்றவற்றின் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும். வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம். சிலருக்கு பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக இருக்கும். இவர்களுக்குச் சிறு வயதிலேயே முதுகு வலி ஏற்படும். முதுகெலும்பில் கட்டி அல்லது புற்று நோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரும். கர்ப்ப காலம், விபத்துக் காயங்கள், தசைப்பிடிப்பு, தசைநார் வலி, மன அழுத்தம், நீரிழப்பு போன்றவற்றாலும் முதுகு வலி வரும்.

    வயதானாலும் இந்த வலி தொல்லை கொடுக்கும். காரணம் முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள வட்டில் ஏற்படும் முதுமை பிரச்சினை. இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். புதிதாக வாங்கிய பந்தை கீழே எறிந்தால் நன்கு துள்ளியபடி மேலெழும்பும். நாளாக ஆக, அந்த பந்துக்கு மேலெழும்பும் தன்மை குறைந்துவிடும்.

    அதுபோலவே வயதாக ஆக இடைவட்டில் நீர்ச்சத்து குறைந்துவிடுவதால் குஷன்’ போல இயங்குகிற தன்மையும் குறைந்துவிடுகிறது. அதிர்ச்சியை கிரகித்துக்கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் முதிய வயதில் கீழ் முதுகில் வலி வருகிறது. எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயது அதிகமாக அதிகமாக கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்துவிடும். இதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்று பெயர். இது கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.
    3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
    குழந்தைகள் இரண்டு வயதை கடந்த பிறகு உதடு உச்சரிப்பு முதல் உண்ணும் முறை வரை ஒவ்வொரு விஷயத்தையும் பெற்றோரை பார்த்து கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். பெற்றோர்களிடம் இருந்து எந்தவொரு பழக்கத்தையும் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு எளிதானது. பெற்றோரின் செயல்பாடுகளையும், பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள்.

    இருப்பினும் சில குழந்தைகள் தவழ்வது, நடக்க தொடங்குவது, வார்த்தைகளை உச்சரிப்பது போன்ற குழந்தை பருவ அடிப்படை விஷயங்களில் பின் தங்கி இருப்பார்கள். மற்ற குழந்தைகளை விட தாமதமாகவே கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். உதாரணமாக இரண்டு வயது குழந்தை சுமார் 50 வார்த்தைகளை சொல்லலாம். இரண்டு மூன்று வாக்கியங்களை பேசுவதற்கு முயற்சிக்கலாம். அதுவே மூன்று வயதுக்குள் உச்சரிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். வாக்கியங்களையும் சரளமாக உச்சரிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் 3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. குழந்தைகள் பேசும் விஷயத்தில் நிறைய பேர் அசட்டையாக இருந்துவிடுகிறார்கள்.

    ‘எங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் காலதாமதமாகத்தான் பேசுவார்கள். அதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. குழந்தை தானாகவே பேச ஆரம்பித்துவிடும்’ என்று வீட்டு பெரியவர்கள் கூறிவிடுவார்கள். அதை கேட்டு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்துவிடக்கூடாது. குறைந்தபட்சம் உங்களின் உதட்டு உச்சரிப்பை குழந்தையை கவனிக்க வைத்து பேச வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதில் முன்னேற்றம் இல்லாதபட்சத்தில் சிகிச்சை பெறுவது ஆரம்பத்திலேயே குறைபாடுகளை சரிசெய்வதற்கு உதவும். நாக்கு அல்லது வாயில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் குழந்தைகள் பேசுவதற்கு தாமதமாகும். குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கு மேலும் சில காரணங்கள் இருக்கின்றன.

    அன்கிலோக்ளோசியா: இந்த பிரச்சினை இருந்தால் நாக்கு வாயின் அடிப்பகுதியுடன் ஒட்டியிருந்து வார்த்தைகளை உச்சரிப்பதை தாமதமாக்கும். குழந்தைகளால் ஒருசில வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாது. குறிப்பாக எஸ், டி, எல், ஆர், இசெட், டி.எச் போன்ற வார்த்தைகளை பேசுவது கடினமாக இருக்கும்.

    நரம்பியல் குறைபாடுகள்: மூளையில் ஏற்படும் சில கோளாறுகள் பேச்சில் சிக்கலுக்கு வழிவகுக்கும். பெருமூளை வாதம் மற்றும் மூளை காயம் போன்ற நரம்பியல் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.

    ஆட்டிசம்: மற்றவர்களுடன் பழகுவதிலும், அவர்களுடன் பேசுவதற்கு வார்த்தைகளை உச்சரிப்ப திலும் சிக்கல்களை எதிர்கொண்டால் ஆட்டிசம் பாதிப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தைகள் பேசுவதற்கு தாமதிப்பதற்கு ஆட்டிசமும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரே வார்த்தையை, வாக்கியங்களை மீண்டும் மீண்டும் பேசுவது ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பேச்சு சிகிச்சை அளித்தால் குணப்படுத்திவிடலாம்.

    செவித்திறன் குறைபாடு: காதுகேளாமை பிரச்சினை இருந்தால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். செவித்திறன் குறைபாட்டால் பேசுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனை கவனத்தில் கொண்டு குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    சிகிச்சை: சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். பேச்சு மற்றும் மொழி சிகிச்சையை சிறிய வயதிலேயே தொடங்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு குழந்தைகள் நன்றாக பேசுவதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.

    ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். அது அவர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும். படித்தும், பாடியும் காட்டி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை கவனமாக கேட்க வேண்டும். ஏதாவது வார்த்தைகளை பேசுவதற்கு சிரமப்பட்டால் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உச்சரிக்க பழக்க வேண்டும். பொம்மைகள், விளையாட்டு பொருட்களை காண்பித்தும் பேச்சாற்றலை மேம்படுத்தலாம்.
    பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரிப்பது ஏன்? அதைத் தவிர்க்க முடியாதா? என்ன சிகிச்சைகள் இருக்கின்றன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    தாய்மை அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தாலும், அதன் பிறகு ஏற்படும் எடை அதிகரிப்பு பெண்களை அதிகம் கவலை கொள்ளச் செய்துவிடுகிறது. பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரிப்பது ஏன்? அதைத் தவிர்க்க முடியாதா? என்ன சிகிச்சைகள் இருக்கின்றன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு உடல் சோர்வு, மனச்சோர்வு, குழந்தையை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்புகளால் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றால் தாயின் உடலில் அதிகரிக்கும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களாலும் உடல் எடை அதிகரிக்கிறது. பாலூட்டுவதால் தாய்மார்கள் இயல்பை விட அதிகளவு உணவு உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனாலும், முழு நேரம் ஓய்வில் இருப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது. பல சமயம் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும் அதிக அளவு கலோரிகளை தொடர்ந்து உட்கொள்ளுவதாலும் அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும் உடல் எடை அதிகரிப்பு தொடர்கிறது.

    இதேபோல் பிரசவத்துக்குப் பிறகு தொப்பை அதிகரிப்பதாக ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், உடல் எடை முழுவதுமே அதிகரிக்கிறது என்பதே உண்மை. இப்போது பரவலாக கர்ப்ப காலத்தின்போது உடற்பயிற்சிகள், யோகா ஆகியவை செய்யப்படுகின்றன. அதேபோல பிரசவத்துக்குப் பிறகும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு சிக்கலும் இல்லாத சுகப்பிரசவமாக இருந்தால், பிரசவத்துக்குப் பின் வரும் நாட்களில் மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது நடைப்பயிற்சி, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை இறுகச் செய்யும் பயிற்சிகள் ஆகியவற்றை செய்யலாம்.

    இத்தகைய உடற்பயிற்சிகள் தாய்மார்களின் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசை நார்களை இறுகச் செய்து பின்னாளில் கர்ப்பப்பை இறக்கம், தானாக சிறுநீர் வெளியேறுவது(Urinary Incontinence) போன்றவை ஏற்படாமலும் தவிர்க்கும்.பிரசவத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தாலோ அல்லது சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ 6 முதல் 8 வாரங்கள் கழித்து உடற்பயிற்சிகளை செய்யலாம். எந்தவொரு உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

    தாய்ப்பால் கொடுக்கும் நாட்களில் 2,500 கிலோ கலோரிகள் அளவிலான உணவு உட்கொண்டால் உடல் எடை இழப்பு ஏற்படாமல் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட முடியும். இதுவே தாய்மார்கள் 2,000- 2,300 கிலோ கலோரி உணவுகளை உட்கொண்டு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மிதமான உடற்பயிற்சிகள் செய்யும்போது தாய்ப்பால் சுரப்பதில் தடை இல்லாமல் உடல் எடையும் குறைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு தாங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவுகளை மேலும் குறைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யும் போது உடலின் எடை வேகமாக குறைகிறது. மேலும் உடலில் உள்ள கலோரிகளை குறைக்க ஏரோபிக் பயிற்சிகள் எனப்படும் ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங், டான்ஸிங் ஆகியவற்றைச் செய்யலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கும் எடையானது குறையாமல் இருப்பதாலும், அதிக அளவு உடல் உழைப்பு இல்லாததாலும் பிற்காலத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது, சுவாசக் கோளாறுகள், மூட்டு தேய்மானம், பித்தப்பையில் கற்கள், நெஞ்சுவலி, பக்கவாதம் உள்ளிட்ட பல வகையான உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாம் உட்கொள்ளும் உணவுகளே 80% நமது உடல் எடையை தீர்மானிக்கின்றன. எனவே, உடல் எடையைக் குறைக்க முற்படும்போது முதலில் என்ன உட்கொள்கிறோம், எவ்வளவு உட்கொள்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள் கொழுப்புச்சத்து குறைந்த மீன் மற்றும் கடல் உணவுகள், கோழிக்கறி, பருப்புகள், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவை எடுத்துக் கொள்ளத் தகுந்தவை. கொழுப்புச்சத்து நிறைந்த பொரித்த உணவுகள், ஜங்க்ஃபுட் எனப்படும் பீட்சா, பர்கர், உப்புச்சத்து நிறைந்த பட்கெட் உணவுகள், இனிப்பு, பிஸ்கெட், மைதா பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

    அதிகமான உடல் எடையோ, தொப்பையோ ஒரே நாளில் ஏற்படுவதல்ல. எனவே, அதை மருந்து மாத்திரையால் சில நாட்களில் கரைத்து விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இவ்வகையான மாத்திரைகளை உட்கொள்வோருக்கு அதிக ரத்த அழுத்தம், பசியின்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு, தூக்கமின்மை, படபடப்பு, தலைசுற்றல், ஜீரணக் கோளாறு, இதயக் கோளாறு போன்றவை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். எனவே, எடை, தொப்பையைக் குறைக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

    கர்ப்பிணி பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய இயலாது. குறிப்பாக நஞ்சுப்பை (Placenta previa) கர்ப்பப்பையின் வாய் பகுதியில் இருந்தால் உடற்பயிற்சி செய்யும்போது ரத்தப்போக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு (Placenta previa) நடைப்பயிற்சி கூட சாத்தியப்படாமல் இருப்பதால் உடல் எடை அதிகமாகும்.

    சிலர் அவர் எடையில் இருந்து கூட 20 கிலோ எடை அதிகமாகக் கூட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களுக்கு உணவு கட்டுப்பாடுமுறை கற்று தரப்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு இவர்களும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இருந்தால் உடல் எடையைக் குறைக்கலாம்!
    ×