search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கொரோனா தொற்றுக்கு ஆளான தாயிடம் இருந்து சிசுவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி
    X
    கொரோனா தொற்றுக்கு ஆளான தாயிடம் இருந்து சிசுவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி

    கொரோனா தொற்றுக்கு ஆளான தாயிடம் இருந்து சிசுவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி

    கொரோனா தொற்றுக்கு ஆளான தாயிடம் இருந்து சிசுவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பரிமாற்றம் ஆவதை ஒரு ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    புதுடெல்லி :

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான 16 கர்ப்பிணிகளை அடிப்படையாக வைத்து விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி அனிமல்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த ஆய்வில் சிங்கப்பூரில் 4 மூன்றாம் நிலை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட 16 கர்ப்பிணிகளிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த ஆய்வில், மாதிரிகளை முறையாக ஆய்வு செய்ததில் தாயிடம் இருந்து குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது நஞ்சுக்கொடி வாயிலாக கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு கொரோனாவின் தாக்கம் மிதமாகவே இருந்தது. 2 பேர் உடல் பருமன் மற்றும் வயது மூப்பு காரணமாக ஆபத்து காரணிகளை கொண்டிருந்தனர்.

    ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா தாக்கம் 80 நாட்கள் வரை நீடித்தது.

    தொப்புள்கொடி ரத்தத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருட்களை கண்டுபிடிக்க முடிந்தது. எனவே தாயிடம் இருந்து சிசுவுக்கு நோய் எதிர்ப்பு பொருள் பரிமாற்றம் நடைபெற முடியும்.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறி உள்ளனர்.
    Next Story
    ×