search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பச்சிளம் குழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி?
    X
    பச்சிளம் குழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி?

    பச்சிளம் குழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி?

    பச்சிளம் குழந்தையின் ஒவ்வொரு உறுப்பையும் சுத்தம் செய்வது அவசியம். அந்த வகையில் பச்சிளம் குழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் கொடுத்தப் பின்னரும் ஈரத்துணியால் வாய், ஈறு, நாக்கு ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். பற்கள் ஒன்று, இரண்டு முளைத்த குழந்தைகள் என்றால், மிகவும் சாஃப்டான பிரஷ் வாங்கி மிதமாக பற்களை சுத்தம் செய்யவும். சர்குலர் மோஷனாக குழந்தையின் பல்லை சுத்தம் செய்யுங்கள். பழுப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் ஏதேனும் வாயில் வந்தால் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்கவும்.

    வாய் துர்நாற்றம், பற்சொத்தை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் காண்பிக்கவும். 0-1 வயது வரை குழந்தைக்கு இனிப்பு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டாம். 1-3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை சாக்லேட், கேண்டி போன்றவற்றைக் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெல்லம், பனங்கற்கண்டு, பனை சர்க்கரை தரலாம். பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, டீத்திங் பொம்மைகள் வாங்கித் தரலாம். ஃபிங்கர் ஃபுட்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள்.

    குழந்தைகளுக்கு எப்போதுமே பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதிக அளவு பேஸ்ட் தேவையில்லை. பல் தேய்த்த பிறகு வாயை நன்றாகத் தண்ணீரால் கழுவி, கொப்பளித்துத் துப்ப வேண்டும் என அறிவுறுத்துங்கள். காலை, இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க கற்றுக் கொடுக்கவும். ஒவ்வொரு முறை எந்த உணவு சாப்பிட்ட பின்பும், வாய் கொப்பளித்து துப்பும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

    இதையும் படிக்க: 3 மற்றும் 4 மாத குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும்? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
    Next Story
    ×