
“குளுட்டாதையோன் நம் உடலில் மெலனின் செயல்பாட்டை சீர்படுத்தும். அதனால் சருமம் கருமை நிறத்திற்கு மாறுவது தடுக்கப்படும். மேலும் குளுட்டாதையோன் சருமத்தில் கருமையான புள்ளிகள் தோன்றாமலும் தடுக்கும். சருமத்தில் அல்ட்ரா வயலெட் கதிர்களால் உருவாகும் நச்சுகளை அகற்றவும் உதவும்” என்கிறார் தோல் மருத்துவர் சுஷாந்த் ரோரேன்.
சூரிய கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் லோஷனை தவறாமல் உபயோகிக்க வேண்டும். சன்ஸ்கிரீன் கண்ணாடி அணிவதும் நல்லது. ஒப்பனையை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக வண்ணமயமான மாய்ச்சரைசர், லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத தன்மை கொண்டதா? என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டியதும் அவசியம். அது சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவும்.
கதிர்வீச்சுக்களில் இருந்தும் பாதுகாப்பு தரும். உடலில் உள்ள நச்சுக்களையும் அவ்வப்போது வெளியேற்றிவிடும். கோடை காலத்தில் இறந்த செல்களை சுத்தப்படுத்தும் விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். ஏனெனில் வெப்பம் காரணமாக வறட்சி, தூசி சருமத்தில் படிந்திருக்கும். சுத்தப்படுத்தும்போது அவை நீங்கிவிடும். பச்சைக்காய்கறிகள், ப்ளூபெர்ரி, முலாம் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது கொலொஜன் வளர்ச்சியை தூண்டும். அவை சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும்.