என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சிவபெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.
    ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க  வேண்டும்.
     
    நமச்சிவாய வாழ்க!
    நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
     
    ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
    தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
     
    ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
    தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
     
    சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.
    இந்த மந்திரத்தைச் சொல்லி பிரம்மதேவரை வழிபடுவதால், வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் போன்றவை நல்ல முறையில் அமையும்.
    ஓம் வேதாத்மனாய வித்மஹே
    ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
    தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தைச் சொல்லி பிரம்மதேவரை வழிபடுவதால், வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் போன்றவை நல்ல முறையில் அமையும். எளிதில் அருள்புரிபவரும், வரங்களைத் தருபவருமான பிரம்மதேவர் அனைவரையும் நலமுடன் வாழ வைப்பார்.   
    ஐஸ்வர்ய லட்சுமிக்கு உகந்த இந்த 10 வரி துதியை வெள்ளிக்கிழமைகளில் கூறுவோர் என் அருள்பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறுவர்.
    ஸ்ரீ த்ரிபுர ரகஸ்யம் என்னும் ரிக்வேத பகுதி நூலில் சொல்லப்பட்ட ஸ்ரீ என்னும் ஐஸ்வர்ய லட்சுமி வஸ்யரகஸ்ய மந்திரத்தை வரலட்சுமி விரத நாளில் தொடங்கி ஒரு வருட காலம் வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வாருங்கள். உங்கள் முகத்தில் அழகும், முகவசீகரமும், தாராளமான பணவரவும், நிதிச்சேர்க்கையும் இருப்பதைக் காணலாம்.

    ஒரு சமயம் தேவர்கள் மகாலட்சுமியைக் குறித்துத் தவம், யாகம் செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த அசுரர்கள் அவர்களை கேலியும்,கிண்டலும் செய்து யாகப்பொருட்களையும், யாக மேடையையும் நாசப்படுத்தினர். சிதறி ஓடிய தேவர்கள் மகாலட்சுமியை குறித்து தியானித்தனர்.

    அப்போது அன்னை லட்சுமி அஷ்டாதசபுஜ துர்க்கையாக (18 கைகளுடைய துர்க்கை) அவதாரம் எடுத்து அசுரர்களை விரட்டி வதம் செய்தாள். உடனே தேவர்கள் பக்கம் திரும்பியவள் யாகத்தை சாஸ்திர விதியுடன் நடத்துங்கள் என்று கூறி அங்கே சாந்த சொரூபினியாக ஐஸ்வர்ய லட்சுமி வடிவம் கொண்டு அருளினாள். மேலும் தேவர்களுக்கு ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதியை உபதேசித்தாள். இந்த 10 வரி துதியை வெள்ளிக்கிழமைகளில் கூறுவோர் என் அருள்பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறுவர் என்று சொல்லி மறைந்தாள்.

    அந்த 10 வரி வருமாறு:

    நமோ லக்ஷ்மியை மகாதேவ்யை பத்மாயை ஸததும் நம!
    நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!!
    த்வம் சாட்சாத் ஹரிலட்சஸ்தா ஸீரே ஜ்யேஷ்டா வரோத்பவா!
    பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ!!

    பரமானந்ததா அபாங்கீ ஹ்ருத சம்ஸ்ருத துர்க்கதி
    அருணா நந்தினீ லக்ஷ்மீ மகாலக்ஷ்மீ த்ரிசக்திகா

     ஸாம்ராஜ்யா ஸர்வஸீகதா நிதிநாதா நிதிப்ரதா
    நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோந்நதி!!

    ஸம்பத்தி ஸம்மதா சர்வ சுபகா சம்ஸ்துதேஸ்வரி
    ரமா ரட்சாகரீ ரம்யா ரமணி மண்டலோத்தமா!!

    இந்த துதி 10 வரிகள்தான். முயற்சி செய்து மனப்பாடம் செய்து படித்தால் பெண்களுக்கு நல்ல காலம் வரும் என்று இதன் விதிகூறுகிறது.
    தினமும் காலையில் குளித்து விட்டு பயபக்தியுடன் மனதில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்ல வேண்டும்.
    தினமும் காலையில் குளித்து விட்டு பயபக்தியுடன் மனதில் ஸ்ரீ பிரத்யங்கராதேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்ல வேண்டும்.

    ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய
    க்ருத்யாம் க்ரூராம் வதுரமிவே
    ஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம
    ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது
    ஸ்ரீ சாய்பாபாவுக்கு உகந்த இந்த திருவடி சரணத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    சாய் நாதர் திருவடியே,
    சம்பத் தளிக்கும் திருவடியே,
    நேயம் மிகுந்த திருவடியே,
    நினைத்த தளிக்கும் திருவடியே,
    தெய்வ பாபா திருவடியே,
    தீரம் அளிக்கும் திருவடியே,
    உயர்வை அளிக்கும் திருவடியே
    உந்தன் அற்புதத் திருவடியே!
    ஸ்ரீ சர்வாங்க சுந்தரிக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் சர்வசக்தியும் வல்லமையும் உண்டாகும்.
    ஸ்ரீ ஞானஸ்கந்த பகவான்

    “சர்வசக்திஸ் வரூபே சர்வாங்கசந்தரி
    சர்வசத்ரு சாம் ஹாரிணி ஜகத்காரிணி ஜனநி பாஹிமாம்
    ஞானஸ்கந்த பீட நிவாஸிநி ஞானந்தமயி
    சர்குணேச்வர ப்ரியே ரக்ஷமாம் ரக்ஷமாம்”
    “ஓம் சக்தி சுபம்”

    தேவிஸ்துதி

    மதுர சரஸவாணி பசுவதி நின்
    மதுரகானம் சுபநிதி
    மாமதுரை நின்ற குணவதி
    ஞானசம்பந்தன் தாயே ஹே பார்வதி

    தாயன்பு குறையா நின் கருணை திரு
    ஞான சம்பந்தனுக்களித்த பெருமை திரு
    ஞானஸ் கந்தனோடு நீ செய்யும் புதுமை
    யாரறிவார் இந்தப்புவியில் உன் அருமை

    மங்கள மாங்கல்ய மகிழ்ச்சி தரவா!
    சந்ததியை உன் திதியில் அள்ளித் தரவா!
    எந்தையும் என் தாயு மானவளே என்
    சிந்தையில் எந்நாளும் நின்றருளே
    முருகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சூரசம்ஹாரமான இன்று சொல்லி முருகப்பெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    ஓம் அழகா போற்றி
    ஓம் அறிவே போற்றி
    ஓம் அரன் மகனே போற்றி
    ஓம் அயன்மால் மருகா போற்றி
    ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
    ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
    ஓம் பன்னிருகை வேலவா போற்றி
    ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
    ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
    ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
    ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
    ஓம் இடர் களைவோனே போற்றி
    ஓம் உமையவள் மகனே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி
    ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
    ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
    ஓம் ஓம்கார சொருபனே போற்றி
    ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
    ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
    ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
    ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
    ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
    ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
    ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
    ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
    ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
    ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
    ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
    ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
    ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
    ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
    ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
    ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
    ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
    ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
    ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
    ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
    ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
    ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
    ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கதிர் வேலவனே போற்றி
    ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
    ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
    ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
    ஓம் ஏழாவதுபடை விடுடையவா போற்றி
    ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
    ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
    ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
    ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
    ஓம் மருதமலை இறைவா போற்றி
    ஓம் மயில் வாகனனே போற்றி
    ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
    ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
    ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
    ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
    ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
    ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
    ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
    ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
    ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
    ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
    ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
    ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
    ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
    ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
    ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
    ஓம் சரவணபவ சண்முகா போற்றி
    ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
    ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
    ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
    ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
    ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
    ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
    ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
    ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
    ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
    ஓம் யோக சித்தியே அழகே போற்றி
    ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
    ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
    ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
    ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
    ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
    ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
    ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
    ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
    ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
    ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
    ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
    ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
    ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
    ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
    ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
    ஓம் துதிபுரி அன்ªபன் துணையே போற்றி
    ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
    ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
    ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
    ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
    ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
    ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
    ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
    ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
    ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
    ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
    ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
    ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
    ஓம் மருதமலை ஆண்டவா போற்றி
    ஓம் போற்றி... போற்றி... மருதமலை வேலவா போற்றி
    தமிழ்நாட்டில் உள்ள மற்ற சக்தி தலங்களை விட அங்காளபரமேஸ்வரி சற்று வித்தியாசமாகக் காணப்படுகிறாள். ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றியை பார்க்கலாம்.
    1. ஓம் அங்காள அம்மையே     போற்றி
    2. ஓம் அருளின் உருவே     போற்றி
    3. ஓம் அம்பிகை தாயே     போற்றி
    4. ஓம் அன்பின் வடிவே     போற்றி
    5. ஓம் அனாத ரட்சகியே     போற்றி
    6. ஓம் அருட்பெருந்ஜோதியே     போற்றி
    7. ஓம் அன்னப்பூரணியே     போற்றி
    8. ஓம் அமுதச் சுவையே     போற்றி
    9. ஓம் அருவுரு ஆனவளே     போற்றி
    10. ஓம் ஆதி சக்தியே     போற்றி
    11. ஓம் ஆதிப்பரம் பொருளே      போற்றி
    12. ஓம் ஆதிபராசக்தியே     போற்றி
    13. ஓம் ஆனந்த வல்லியே     போற்றி
    14. ஓம் ஆன்ம சொரூபினியே     போற்றி
    15. ஓம் ஆங்காரி அங்காளியே     போற்றி
    16. ஓம் ஆறுமுகன் அன்னையே     போற்றி
    17. ஓம் ஆதியின் முதலே     போற்றி
    18. ஓம் ஆக்குத் சக்தியே     போற்றி
    19. ஓம் இன்னல் களைவாளே     போற்றி
    20. ஓம் இடர்நீக்குவாளே     போற்றி
    21. ஓம் இமயத்து அரசியே     போற்றி
    22. ஓம் இச்சா சக்தியே     போற்றி
    23. ஓம் இணையிலா தெய்வமே     போற்றி
    24. ஓம் இரவு பகலாகி இருப்பவளே     போற்றி
    25. ஓம் இயக்க முதல்வியே     போற்றி
    26. ஓம் இறைவனின் இறைவியே     போற்றி
    27. ஓம் இகம்பர சுகமே     போற்றி
    28. ஓம் ஈசனின் தாயே     போற்றி
    29. ஓம் ஈஸ்வரி தாயே     போற்றி
    30. ஓம் ஈகைப் பயனே     போற்றி
    31. ஓம் ஈடில்லா தெய்வமே     போற்றி
    32. ஓம் ஈசனின் பாதியே     போற்றி
    33. ஓம் ஈஸ்வரி அங்காளியே     போற்றி
    34. ஓம் ஈசனின் இயக்கமே     போற்றி
    35. ஓம் ஈஸ்வரி ஆனவளே     போற்றி
    36. ஓம் ஈகை குணவதியே     போற்றி
    37. ஓம் உண்மை பொருளே     போற்றி
    38. ஓம் உலகை ஈன்றாய்     போற்றி
    39. ஓம் உலகில் நிறைந்தாய்     போற்றி
    40. ஓம் உருவம் ஆனாய்     போற்றி
    41. ஓம் உமை அம்மையே     போற்றி
    42. ஓம் உயிரே வாழ்வே     போற்றி
    43. ஓம் உயிராய் இருப்பாய்     போற்றி
    44. ஓம் உடலாய் அ¬ந்தாய்     போற்றி
    45. ஓம் உமாமகேஸ்வரியே     போற்றி
    46. ஓம் ஊனுயிர் ஆனாய்     போற்றி
    47. ஓம் ஊக்கம் அருள்வாய்     போற்றி
    48. ஓம் ஊழ்வினை அறுப்பாய்     போற்றி
    49. ஓம் ஊரைக்காப்பாய்     போற்றி
    50. ஓம் ஊழலை ஒழிப்பாய்     போற்றி
    51. ஓம் ஊக்கமாய் நிறைவாய்     போற்றி
    52. ஓம் ஊடல் நாயகியே     போற்றி
    53. ஓம் ஊழ்வினை களைவாய்     போற்றி
    54. ஓம் ஊற்றும் கருணை மழையே     போற்றி
    55. ஓம் எங்கும் நிறைந்தாய்     போற்றி
    56. ஓம் எங்களை காப்பாய்     போற்றி
    57. ஓம் எண்குண வல்லி     போற்றி
    58. ஓம் எழில்மிகு தேவி     போற்றி
    59. ஓம் ஏழிசைப் பயனே     போற்றி
    60.ஓம் ஏகம்பன் துணைவி     போற்றி
    61. ஓம் ஏகாந்த ருபிணியே     போற்றி
    62. ஓம் ஏழையை காப்பாய்     போற்றி
    63. ஓம் ஐங்கரன் தாயே     போற்றி
    64. ஓம் ஐயனின் பாகமே     போற்றி
    65. ஓம் ஐயம் தெளிந்தாய்     போற்றி
    66. ஓம் ஐம்பொறி செயலே     போற்றி
    67. ஓம் ஐம்புலன் சக்தியே     போற்றி
    68. ஓம் ஒருமாரி உருமாரி     போற்றி
    69. ஓம் ஒன்பான் சுவையே     போற்றி
    70. ஓம் ஒலி ஒளி ஆனாய்     போற்றி
    71. ஓம் ஒப்பில்லா சக்தி     போற்றி
    72. ஓம் ஒழுக்கம் அருள்வாய்     போற்றி
    73. ஓம் ஒங்காரி ஆனாய்     போற்றி
    74. ஓம் ஒங்காரி அங்காளி     போற்றி
    75. ஓம் ஓம்சக்தி தாயே     போற்றி
    76. ஓம் ஒருவாய் நின்றாய்     போற்றி
    77. ஓம் ஒங்கார சக்தியே     போற்றி
    78. ஓம் கல்விக் கடலே     போற்றி
    79. ஓம் கற்பூர வல்லி     போற்றி
    80. ஓம் கந்தன் தாயே     போற்றி
    81. ஓம் கனகாம்பிகையே      போற்றி
    82. ஓம் கார்மேகன் தங்கையே     போற்றி
    83. ஓம் காளி சூலியே     போற்றி
    84. ஓம் காக்கும் அங்காளியே     போற்றி
    85. ஓம் சங்கரி சாம்பவீ     போற்றி
    86. ஓம் சக்தியாய் நின்றாய்     போற்றி
    87. ஓம் சாந்தவதியே     போற்றி
    88. ஓம் சிவகாம சுந்தரி     போற்றி
    89. ஓம் சினம் தணிப்பாய்     போற்றி
    90. ஓம் சிங்க வாகனியே     போற்றி
    91. ஓம் சீற்றம் கொண்டாய்     போற்றி
    92. ஓம் சுந்தரவல்லி     போற்றி
    93. ஓம் சூரசம்மாரி     போற்றி
    94. ஓம் தாண்டவ ஈஸ்வரி     போற்றி
    95. ஓம் தாட்சாயணிதேவி     போற்றி
    96. ஓம் திரிபுரசுந்தரி     போற்றி
    97. ஓம் தீபச் சுடரொளியே     போற்றி
    98. ஓம் நடன நாயகி     போற்றி
    99. ஓம் நான்மறைப் பொருளே     போற்றி
    100. ஓம் நீலாம்பிகையே     போற்றி
    101. ஓம் நீதிக்கு அரசி     போற்றி
    102. ஓம் பஞ்சாட்சரியே     போற்றி
    103. ஓம் பம்பை நாயகியே     போற்றி
    104. ஓம் பார்வதா தேவி     போற்றி
    105. ஓம் பாம்பின் உருவே     போற்றி
    106. ஓம் பார்புகழும் தேவியே     போற்றி
    107. ஓம் பிணிக்கு மருந்தே     போற்றி
    108. ஓம் பிறவி அறுப்பாய்     போற்றி.
    ஸ்ரீ பகளாமுகி தேவியின் மாலா மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர ஆயுள் கூடும், அடிக்கடி விபத்துக்கள், நோய்கள் ஏற்படாது. எதிரிகளின் கெட்ட செயல்கள் நம்மிடம் பலிக்காது.
    ஸ்ரீ பகளாமுகி தேவியின் மாலா மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர ஆயுள் கூடும், அடிக்கடி விபத்துக்கள், நோய்கள் ஏற்படாது. எதிரிகளின் கெட்ட செயல்கள் நம்மிடம் பலிக்காது.

    ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்:

    ஓம் நமோ பகவதி |
    ஓம் நமோ வீரப்ரதாப விஜய பகவதி பகளாமுகி |
    மம சர்வ நிந்தகானாம் சர்வ
    துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய |
    ஜிஹ்வாம் முத்ரய முத்ரய |  
    புத்திம் விநாசய விநாசய |அபாரபுத்திம் குரு குரு ||
    ஆத்ம விரோதினாம் சத்ரூனாம் சிரோ லலாடம்
    முகம் நேத்ர கர்ண நாசிகோரு பாத அன்னு அன்னு |
    தந்தோஷ்டஹ ஜிஹ்வாம் தாலு
    குஹ்ய குதா கட்டி ஜானு சர்வாங்கேஷு
    கேசாதி பாதானாம் பாதாதி கேச பர்யந்தம் ஸ்தம்பய  ஸ்தம்பய |
    கேம் கீம் மாரய மாரய |
    பரமந்திர பரயந்திர பரதந்த்ராணி ச்சேதய ச்சேதய |
    ஆத்ம மந்தர தந்த்ராணி ரக்ஷ  ரக்ஷ |
    க்ரஹம் நிவாரய நிவாரய |
    வ்யாதிம் விநாசய விநாசய |துக்கம் ஹர ஹர |
    தாரித்ர்யம் நிவாரய நிவாரய |
    சர்வ மந்த்ரஸ்வரூபிணி துஷ்ட க்ரஹ பூத க்ரஹ
    பாஷான் சர்வ சாண்டாள க்ரஹ யக்ஷ கின்னர கிம்புருஷ க்ரஹ
    பூத பிரேத பிசாசானாம் சாகினி டாகினி க்ரஹானாம் |
    பூர்வ திஷம் பந்தய பந்தய வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ |
    தக்ஷிண திஷம் பந்தய பந்தய ஸ்வப்ன வார்த்தாளி
    மாம் ரக்ஷ ரக்ஷ |பச்சிம திஷம் பந்தய பந்தய உக்ரகாளி  மாம் ரக்ஷ ரக்ஷ |
    பாதாள திஷம் பந்தய பந்தய பகளா பரமேஸ்வரி  
    மாம் ரக்ஷ ரக்ஷ |சகல ரோகான் விநாசய  விநாசய  |
    சத்ரு பலாயணம் பஞ்சயோஜன்மாதயே  
    ராஜஜன ஸ்வபக்ஷம் குரு குரு |
    சத்ரூன் டஹ டஹ பச பச ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய
    மோஹய ஆகர்ஷய ஆகர்ஷய |மம சத்ரூன்
    உச்சாடய உச்சாடய ஹ்லீம் பட் ஸ்வாஹா ||
    பிரிந்திருக்கும் தம்பதியரை சேர்ந்து வாழ வைக்கும் மந்திரம் இது. கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
    கணவனை பிரிந்து வாழும் மனைவிதான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும். அவரது சார்பாக வேறு எவரும் செய்யக்கூடாது. தட்டு ஒன்றில் குங்குமத்தைப் பரப்பி, அதில் தன் கணவரின் பெயரை எழுதி கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும்.

    த்ரை லோக்ய மோகனா ரங்கே
    த்ரை லோக்ய பரி பூஜிதே
    த்ரை லோக்ய வஸீதே தேவீ
    த்ரை லோக்ய மே வஸம் குரு

    ஜபம் முடிந்ததும் அந்த தட்டை பூஜிக்க வேண்டும். அதாவது தீபாராதனை செய்ய வேண்டும். பிறகு அந்த குங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்.(பூஜைக்கு முன்பு எப்போதும் போல் குங்குமம் இட்டுக் கொள்ளலாம்)

    மறுநாள், இதேபோல் அந்த தட்டில் உள்ள குங்குமத்தில் கணவரின் பெயரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு காலத்தில் 4 நாட்கள் வரை பூஜிக்க வேண்டாம்).

    சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை 48 நாட்கள் ஜபித்துவர பலன் நிச்சயம்.
    வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு வந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 48 நாட்கள் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    (ஸ்தம்பனம் உடைய) வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு ஸ்தம்பித்து நின்று விட்டால் அந்த இடத்தில் ஈசானியத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு “ஓம் அரி ஒம்”; என்று தினசரி 1008 உரு 48 நாட்கள் ஜெபிக்க முடக்கம் உடையும்.

    48 நாட்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
    பணம் மற்றும் புகழை ஒருசேர கொடுக்கும் ஸ்ரீ குபேரனின் மந்திரத்தை தீபாவளி அன்று அதை கூறி வழிபட வேண்டும்.
    குபேரன் மந்திரம்

    ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம்
    ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
    க்லீம் விட்டேஸ்வராய நமஹ

    இந்த மந்திரத்தை வட திசையை பார்த்தவாறு நின்று உங்கள் இதயபூர்வமாக குபேரனை வேண்டி 108 முறை கூறி வணங்கி வரவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் சாயங்கால வேளைகளிலும் இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட உங்களுக்கு செல்வ சேர்க்கை ஏற்படும். மேலும் புகழ், மக்கள் செல்வாக்கு போன்றைவையும் உண்டாகும்.

    ×