search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    லட்சுமி
    X
    லட்சுமி

    வெள்ளியன்று சொன்னால் அள்ளி தரும் ஐஸ்வர்ய லட்சுமி துதி

    ஐஸ்வர்ய லட்சுமிக்கு உகந்த இந்த 10 வரி துதியை வெள்ளிக்கிழமைகளில் கூறுவோர் என் அருள்பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறுவர்.
    ஸ்ரீ த்ரிபுர ரகஸ்யம் என்னும் ரிக்வேத பகுதி நூலில் சொல்லப்பட்ட ஸ்ரீ என்னும் ஐஸ்வர்ய லட்சுமி வஸ்யரகஸ்ய மந்திரத்தை வரலட்சுமி விரத நாளில் தொடங்கி ஒரு வருட காலம் வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வாருங்கள். உங்கள் முகத்தில் அழகும், முகவசீகரமும், தாராளமான பணவரவும், நிதிச்சேர்க்கையும் இருப்பதைக் காணலாம்.

    ஒரு சமயம் தேவர்கள் மகாலட்சுமியைக் குறித்துத் தவம், யாகம் செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த அசுரர்கள் அவர்களை கேலியும்,கிண்டலும் செய்து யாகப்பொருட்களையும், யாக மேடையையும் நாசப்படுத்தினர். சிதறி ஓடிய தேவர்கள் மகாலட்சுமியை குறித்து தியானித்தனர்.

    அப்போது அன்னை லட்சுமி அஷ்டாதசபுஜ துர்க்கையாக (18 கைகளுடைய துர்க்கை) அவதாரம் எடுத்து அசுரர்களை விரட்டி வதம் செய்தாள். உடனே தேவர்கள் பக்கம் திரும்பியவள் யாகத்தை சாஸ்திர விதியுடன் நடத்துங்கள் என்று கூறி அங்கே சாந்த சொரூபினியாக ஐஸ்வர்ய லட்சுமி வடிவம் கொண்டு அருளினாள். மேலும் தேவர்களுக்கு ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதியை உபதேசித்தாள். இந்த 10 வரி துதியை வெள்ளிக்கிழமைகளில் கூறுவோர் என் அருள்பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறுவர் என்று சொல்லி மறைந்தாள்.

    அந்த 10 வரி வருமாறு:

    நமோ லக்ஷ்மியை மகாதேவ்யை பத்மாயை ஸததும் நம!
    நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!!
    த்வம் சாட்சாத் ஹரிலட்சஸ்தா ஸீரே ஜ்யேஷ்டா வரோத்பவா!
    பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ!!

    பரமானந்ததா அபாங்கீ ஹ்ருத சம்ஸ்ருத துர்க்கதி
    அருணா நந்தினீ லக்ஷ்மீ மகாலக்ஷ்மீ த்ரிசக்திகா

     ஸாம்ராஜ்யா ஸர்வஸீகதா நிதிநாதா நிதிப்ரதா
    நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோந்நதி!!

    ஸம்பத்தி ஸம்மதா சர்வ சுபகா சம்ஸ்துதேஸ்வரி
    ரமா ரட்சாகரீ ரம்யா ரமணி மண்டலோத்தமா!!

    இந்த துதி 10 வரிகள்தான். முயற்சி செய்து மனப்பாடம் செய்து படித்தால் பெண்களுக்கு நல்ல காலம் வரும் என்று இதன் விதிகூறுகிறது.
    Next Story
    ×