என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது நீச்சம் பெற்றிருந்தாலோ செவ்வாய்க்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.
    நவக்கிரகத்தில் செவ்வாய் என்று அழைக்கப்படுபவர், ‘அங்காரகன்.’ இவருடைய அதிதேவதையாக முருகப்பெருமான் இருக்கிறார். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது நீச்சம் பெற்றிருந்தாலோ செவ்வாய்க்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.

    மேலும் செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள், 9-ம் எண்ணை கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆகியோரும் செவ்வாய்க்கான காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபாடு செய்தால், அனைத்து தோஷங்களும் விலகி அற்புத பலன் கைகூடும்.

    ‘வீரத்வாஜய வித்மஹே

    விக்நஹஸ்தாய தீமஹி

    தந்நோ பவும: ப்ரசோதயாத்’

    மேற்கண்ட செவ்வாய்க்குரிய காயத்ரி மந்திரத்தை, செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையில், தெற்கு நோக்கி அமர்ந்தபடி கடுகு எண்ணெய் தீபமேற்றி, துவரை சுண்டல் நைவேத்தியமாக படைத்து, செண்பக மலர்களால் 108 முறை ஜெபிக்க வேண்டும். இந்த காயத்ரி மந்திரம் மிகுந்த சக்தி கொண்டது.
    ஸ்ரீகாளிகாம்பாளுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்துவந்தால் வாழ்க்கை வளமாகும்.
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
    ஓம் அகிலாண்டநாயகியே போற்றி
    ஓம் அருமறையின் வரம்பே போற்றி
    ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
    ஓம் அரசிளங் குமரியே போற்றி
    ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி
    ஓம் அமுத நாயகியே போற்றி
    ஓம் அருந்தவ நாயகியே போற்றி
    ஓம் அருள்நிறை அம்மையே போற்றி
    ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி
    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
    ஓம் ஆதியின் பாதியே போற்றி
    ஓம் ஆலால சுந்தரியே போற்றி
    ஓம் ஆனந்த வல்லியே போற்றி
    ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி
    ஓம் இமையத்தரசியே போற்றி
    ஓம் இடபத்தோன் துணையே போற்றி
    ஓம் ஈஸ்வரியே போற்றி
    ஓம் உயிர் ஓவியமே போற்றி
    ஓம் உலகம்மையே போற்றி
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    ஓம் எண் திசையும் வென்றாய் போற்றி
    ஓம் ஏகன் துணையே போற்றி
    ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
    ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
    ஓம் கனகமணிக் குன்றே போற்றி
    ஓம் கற்பின் அரசியே போற்றி
    ஓம் கருணை யூற்றே போற்றி
    ஓம் கல்விக்கு வித்தே போற்றி
    ஓம் கனகாம்பிகையே போற்றி
    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
    ஓம் கற்பனைக் கடந்த கற்பமே போற்றி
    ஓம் காட்சிக் கினியோய் போற்றி
    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
    ஓம் காமாட்சி அம்பிகையே போற்றி
    ஓம் காளிகாம்பாள் அம்பிகையே போற்றி
    ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி
    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
    ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
    ஓம் சக்தி வடிவே போற்றி
    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
    ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
    ஓம் சிவயோக நாயகியே போற்றி
    ஓம் சிவானந்த வல்லியே போற்றி
    ஓம் சிங்கார வல்லியே போற்றி
    ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
    ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
    ஓம் சேனைத் தலைவியே போற்றி
    ஓம் சொக்கர் நாயகியே போற்றி
    ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
    ஓம் ஞானாம்பிகையே போற்றி
    ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி
    ஓம் தமிழ்க் குலச்சுடரே போற்றி
    ஓம் திருவுடையம்மையே போற்றி
    ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
    ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
    ஓம் திருநிலை நாயகியே போற்றி
    ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
    ஓம் தென்னவன் செல்வியே போற்றி
    ஓம் தேன்மொழி யம்மையே போற்றி
    ஓம் தையல் நாயகியே போற்றி
    ஓம் நற்கனியின் சுவையே போற்றி
    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
    ஓம் நல்ல நாயகியே போற்றி
    ஓம் நீலாம்பிகையே போற்றி
    ஓம் நீதிக்கரசியே போற்றி
    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
    ஓம் பழமையின் குருந்தே போற்றி
    ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
    ஓம் பசுபதி நாயகியே போற்றி ஓம் பாகம் பிரியா அம்மையே போற்றி
    ஓம் பாண்டிமாதேவியின் தேவி போற்றி
    ஓம் பார்வதி அம்மையே போற்றி
    ஓம் பிறவிப்பணி தீர்ப்பாய் போற்றி
    ஓம் பெரிய நாயகியே போற்றி
    ஓம் பொன்மயிலம்மையே போற்றி
    ஓம் பொற்கொடி அம்மையே போற்றி
    ஓம் மங்கல நாயகியே போற்றி
    ஓம் மழலைக் கிளியே போற்றி
    ஓம் மனோன்மனித் தாயே போற்றி
    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
    ஓம் மாயோன் தங்கையே போற்றி
    ஓம் மாணிக்க வல்லியே போற்றி
    ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
    ஓம் மீனாட்சி யம்மையே போற்றி
    ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
    ஓம் யாழ்மொழி யம்மையே போற்றி
    ஓம் வடிவழ கம்மையே போற்றி
    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
    ஓம் வேதநாயகியே போற்றி
    ஓம் சவுந்த ராம்பிகையே போற்றி
    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீகாளிகாம்பாள் அம்பிகையே போற்றி போற்றி
    காயத்ரி மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் யார் ஜெபிகின்றார்களோ அவர்களை இந்த மந்திரம் ரட்சிக்கும், பாதுகாக்கும் அத்துடன் அவர்களுக்கு எல்லா நலன்களையும் அளிக்கும்.
    ஓம் பூர் புவஸ் ஸூவஹ
    ஓம் தத் சவிதுர் வரேண்யம்
    பர்கோ தேவஸ்ய தீ மஹி
    தியோயோன: பிரசோதயாத்

    காயத்ரி மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் யார் ஜெபிகின்றார்களோ அவர்களை இந்த மந்திரம் ரட்சிக்கும், பாதுகாக்கும் அத்துடன் அவர்களுக்கு எல்லா நலன்களையும் அளிக்கும்.

    வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் எட்டு எழுத்துகள் கொண்ட 3 பாதங்கள் உள்ளன. ஒவ்வொறு பாதமும் ஒவ்வொரு வேதத்தின் சாரம். ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களின் சாரமே காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்திற்கு ஒப்பான மந்திரம் வேறு எதுவும் இல்லை.

    காயத்ரி மாத்திரம் சூரிய பகவானை நோக்கி சொல்லப்படும் மந்திரம். இந்த மந்திரத்தை ஐந்து பாகங்களாக பிரித்து ஜபிப்பது உத்தமம். பிரணவம், வ்யாஹ்ருதி மற்றும் காயத்ரி மந்திரத்தின் மூன்று பாகங்கள், ஆக ஐந்து பாகங்களாக பிரித்து ஜபிக்க வேண்டும்.

    வாழ்கையில் அணைத்து வளங்களையும் அளித்து நம்மை பாதுகாக்கும் இம் மஹா மந்திரம் கோடிகணக்கான மக்களால் ஜபிக்கப்பட்டு வருகின்றது. பெரியவர்கள் முதல் சிறியவர் வரை இந்த மஹா மந்திரத்தை குரு மூலமாக உபதேசசம் பெற்று தினமும் காலையும், மாலையும் ஜபித்து வர வாழ்கையில் அனைத்து துன்பங்களும் விலகி நல்ல தேக ஆரோக்கியம் கிட்டும்.
    ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.
    'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
    சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.'

    ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.
    ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று, ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
    அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில்  ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில்  நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று, ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
     
    ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்:
     
    ஓம் பைரவாய வித்மஹே
    ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
    தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

    ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:
     
    ஓம், ஏம், ஐம், க்லாம்; க்லீம், க்லூம்; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்
    சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
    ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
    ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ
    நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் சமயத்தில், நமக்கு இடையூறாக, தடைக்கல்லாக வந்து நிற்பது, கண் திருஷ்டி தான். கண் திருஷ்டி நீங்க பரிகாரம் உள்ளது.
    நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் சமயத்தில், நமக்கு இடையூறாக, தடைக்கல்லாக வந்து நிற்பது, கண் திருஷ்டி தான். நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து, விபத்து வந்தாலும் தப்பித்துக்கொள்ளலாம். முதலில் உங்கள் குடும்பத்தில் யாருக்கு திருஷ்டி அதிகமாக இருக்கின்றதோ, அந்த குறிப்பிட்ட நபரை, கிழக்கு பார்த்தது போல், அமர வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து, அதன் மேல் ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி, இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி, கற்பூரத்தை கீழே தள்ளிவிட்டு முழுமையாக எரிய விட்டு விடுங்கள்.

    உங்கள் கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை முடிந்தால், கைகளால் நசுக்கி இரண்டு துண்டாக ஆக்கி விடுங்கள். முடியாதவர்கள் கத்தியால் இரண்டு துண்டாக ஆக்கி, அதை வீதியில் போட்டு விட வேண்டும். இந்த எலுமிச்சை பழத்தை சுற்றும்போது மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். எலுமிச்சை பழ திருஷ்டியை சுற்றும்போது, நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதோ!

    மஞ்சள் வர்ண புளித்த மாரி!
    ரத்த வீர ராசா கன்னி,
    மனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா!வா!

    அவ்வளவுதான். உங்களை பிடித்த கண்திருஷ்டியுனது, ஒரே நாளிலேயே ஓடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு மந்திரத்தை உச்சரித்து, நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து, பயனடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
    வாஸ்து பகவானுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 27 முறை ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். எதிர்மறை சக்திகள் மறையும்.
    ஓம் அனுக்ரகரூபாய விதமஹே
    பூமி புத்ராய தீமஹி
    தந்நோ வாஸ்து புருஷ ரசோதயாத்

    தினமும் 27 முறை வாஸ்து காயத்ரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
    திருச்செந்தூர் முருகனுக்கு உகந்த திருபுகழை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். கோவில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் திருச்செந்தூர் முருகன் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.
    உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
    பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்
    உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே

    உரைக்கும் வீரிகள் கோளர வாமென
    வுடற்றுந் தாதியர் காசள வேமனம்
    உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ

    அருக்கன் போலொளி வீசிய மாமுடி
    யணைத்துந் தானழ காய்நல மேதர
    அருட்கண் பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே

    அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
    வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
    அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய்

    இருக்குங் காரண மீறிய வேதமும்
    இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்
    இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி

    இலக்கந் தானென வேதொழ வேமகிழ்
    விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
    கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா

    திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
    துதிக்குந் தாளுடைய நாயக னாகிய
    செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே

    செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
    கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்
    திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே.
    அங்கயற்கண்ணி அம்மனுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக நீங்கும்.
    சீறுதரு மூடர்கடஞ் சேவைகளே செய்தொழுகிப்
    பேறுதரு நின்னருளைப் பேணேனை யாள்குவையோ
    கூறுதரு குறட்கன்னக் குழியினொடு வையையெனும்
    ஆறுதரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [1]

    குன்றுவரு கொங்கையுடைக் கோதையர்கள் மேனிதொறும்
    சென்றுவரு தீமைமிகு சிந்தையனை யாள்குவையோ
    கன்றுவரு மானணிகைக் கண்ணுதலா லெழுகடலும்
    அன்றுவரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [2]

    உண்ண லுடுத்த லுறங்கன் முதலியவே
    நண்ணலுறு மிக்கொடிய நாயேனை யாள்குவையோ
    விண்ணடைந்தாங் கின்பநுகர் வீரன்மல யத்துவச
    அண்ணல்வரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [3]

    குன்றுவளை மலர்க்கரத்துக் கோவையுநின் னையுமதியா
    தின்றுவளைக் கரமடவார்க் கிரங்குமெனை யாள்குவையோ
    சென்றுவளை புகழ்மிகுமோர் செழியனிந் திரன்முடிமேல்
    அன்றுவளை யெறிகூடல் அங்கயற்க ணாயகியே. [4]

    கடித்தவெயி றுடைச்செங்கோற் காலன்றண் டனைகருதா
    தொடித்தவற வினைமிகவு முடையேனை யாள்குவையோ
    கடித்தபொழில் மேருவினைக் கைச்செண்டி னுக்கிரன்முன்
    அடித்தபெரும் பொழிற்கூடல் அங்கயற்க ணாயகியே. [5]

    வெங்கணர்கண் டீவினையே விழைந்துன்சந் நிதியணுகா
    திங்கணுக ரறக்கடைசெய் திருப்பேனை யாள்குவையோ
    எங்கணரு ளெனுமுனிவர்க் கீரிருவே தப்பொருளை
    அங்கணனா ரருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [6]

    குயிலோ கிளியோவிக் கோதையர்கள் மாற்றமென்று
    மயலே மிகுத்துழலிவ் வஞ்சகனை யாள்குவையோ
    வெயிலாரும் பூணணிகள் மேவுக் கிரவரசா
    அயிலோன் வருகூடல் அங்கயற்க ணாயகியே. [7]

    இன்பினொடு நின்பெருமை யெண்ணியொழு குதலின்றித்
    துன்பினொடு நாளகற்றுந் துன்மதியை யாள்குவையோ
    வன்பினொடு மெம்பெருமான் வளைசெண்டு வேலொருசேய்க்
    கன்பினொடு மருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [8]

    வெயில்விடுத்த செம்மேனி விமலனொடு நினைநினைப்போர்ப்
    பயில்விடுத்த முழுமூடப் பாதகனை யாள்குவையோ
    மயில்விடுத்த வுக்கிரனாம் வழுதியலை கடல்சுவற
    அயில்விடுத்த திருக்கூடல் அங்கயற்க ணாயகியே. [9]

    முக்காலங் களுமுணரும் மூதறிஞர் தமைச்சார்தல்
    எக்கால மெனநினையா திருப்பேனை யாள்குவையோ
    நக்கால நுகர்ந்தபிரா னவமணியி னியலமைச்சர்க்
    கக்காலம் பகர்கூடல் அங்கயற்க ணாயகியே. [10]

    வெம்புபசி பிணிதாகம் வெவ்வறுமை யடைந்துன்னை
    நம்புதலி லாதுழலு நாயேனை யாள்குவையோ
    பம்புதிரைக் கடலதனைப் பசுபதிவே ணியினுறுநான்
    கம்புதமார் தருகூடல் அங்கயற்க ணாயகியே. [11]

    பாகியலு மொழிமடவார்ப் பற்றிநினைப் பற்றாது
    போகியபுல் லருக்கரசாம் புன்மையனை யாள்குவையோ
    வாகியல்விண் மழைதடுக்க மழைமுகில்கள் நான்மாடம்
    ஆகியமுத் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [12]

    பாடியலுந் தமிழ்நூல்கள் பலபடித்து மறிவின்றி
    வாடியநெஞ் சகமுடைய மாண்பிலியை யாள்குவையோ
    தேடியமா றனக்கரியர் சித்தரென வந்தெல்லாம்
    ஆடியமுத் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [13]

    தேனையுறழ் சுவைமிகுத்த செய்யுளினின் றனைத்துதியா
    தேனையதி பாதகனை யீனனைநன் காள்குவையோ
    மானையணி மலர்க்கரத்து வள்ளலார் கழையினைக்கல்
    லானையுணப் புரிகூடல் அங்கயற்க ணாயகியே. [14]

    குன்றெய்து கொங்கையுடைக் கோதையர்கட் காளாகி
    இன்றெய்தும் பழியினனா யிருப்பேனை யாள்குவையோ
    மன்றெய்து நடமுடையார் வல்லமணர் விடுகளிற்றை
    அன்றெய்து செறுகூடல் அங்கயற்க ணாயகியே. [15]

    மருத்தகுழன் மடவார்கள் வாஞ்சைமரீஇ மனமலையும்
    ஒருத்தனைக்கா சினிச்சுமையா வுற்றேனை யாள்குவையோ
    விருத்தன்முதல் மூன்றுருவ மேவியருட் பரனாடும்
    அருத்தியுறு வளக்கூடல் அங்கயற்க ணாயகியே. [16]

    வாடிமன மயங்காதுன் மலர்ப்பதத்தை யின்கவியாற்
    பாடிநிதங் களித்திடுமா பயிற்றியெனை யாள்குவையோ
    தேடிவரு புகழரச சேகரற்குப் பரன்மாறி
    ஆடியருள் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [17]

    வெஞ்சினக்கூற் றுவன்புரியும் வெந்தண்டம் மருவாதுன்
    கஞ்சமலர்ச் சேவடியைக் கருதேனை யாள்குவையோ
    நஞ்சினழ குறுகளத்து நம்பனொரு பெண்பழிக்கா
    அஞ்சினவான் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [18]

    நீண்டவிழி மங்கையரை நேசித்து நினைவணங்கா
    தீண்டவறக் கடைபுரிந்தே யிழிந்தேனை யாள்குவையோ
    மாண்டதிருத் தந்தைதனை மாய்த்தனையைப் புணர்ந்தோனை
    ஆண்டருளுந் திருக்கூடல் அங்கயற்க ணாயகியே. [19]

    துங்கமுறு குருவடியைத் தொழலின்றி நாள்கழியாப்
    பங்கமுறு பழிமிகுத்த பதகனையு மாள்குவையோ
    புங்கமுறு குருமனையைப் போற்றாது விழைந்தோன்றன்
    அங்கமறுத் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [20]

    இரவைநிகர் குழல்வாட்க ணேந்திழையார் தமைவிழைந்தே
    உரவையகன் றலக்கணுறீஇ யொழியேனை யாள்குவையோ
    பரவையமண் பதகர்விறற் பாண்டியன்மேல் விடுத்தவிட
    அரவையறுத் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [21]

    பாவையுரைத் துனதுமலர்ப் பதம்பணித லொழிந்திந்த
    நாவைவறி தேசுமக்கும் நாயேனை யாள்குவையோ
    கோவைவெறுத் தேயமணக் கொடியர்விடுத் திடவந்த
    ஆவையொழித் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [22]

    குழைத்த மனமுமலர் கொண்டு குவிகையும்
    இழைத்த அருச்சனையு மில்லேனை யாள்குவையோ
    தழைத்த படையைச் சவுந்தரசா மந்தனுக்கா
    அழைத்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [23]

    இளித்த செயலு மிழிவுடையோர்ச் சேர்ந்து
    களித்த மனமுமுடைக் கள்வனையு மாள்குவையோ
    ஒளித்த நிதிய முலவாக் கிழியொருவற்
    களித்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [24]

    இடைந்த செயலுநனி யேக்கறவும் புல்லருக்
    குடைந்த மனமு முடையேனை யாள்குவையோ
    மிடைந்த வளைகடமை மெய்ப்பர மன்வீதி
    அடைந்து பகர்கூடல் அங்கயற்க ணாயகியே. [25]

    பொருளும் மனையும் புதல்வரும் மெய்யென்று
    மருளுங் கொடிய மனத்தேனை யாள்குவையோ
    தெருளுமட வார்க்கட்ட சித்தி களைப்பெம்மான்
    அருளுந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [26]

    படையாள் விழியவரைப் பார்த்துருகி நின்னை
    உடையா ளெனமதியா துற்றேனை யாள்குவையோ
    நடையாள் வளவனுக்கு நாத னருளிவிடை
    அடையாளஞ் செய்கூடல் அங்கயற்க ணாயகியே. [27]

    கருத்து மொழியுமிந்தக் காயமும் வேறாகி
    இருத்துந் துயர்க்கிடமா மீனனையு மாள்குவையோ
    செருத்துன் படைபடைக்குத் தேவன் புனல்வைத்
    தருத்தும் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [28]

    பாற்றுங் கொடுமை படைத்தே யறவழியை
    மாற்றுங் கொடிய மனத்தேனை யாள்குவையோ
    போற்றுந் தெரிவை பொருட்டமலன் செம்பொன்மிக
    ஆற்றுந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [29]

    பாழ்த்த புறச்சமயப் பாழை யடைந்துபிறர்
    தாழ்த்த வருந்தும் தமியேனை யாள்குவையோ
    காழ்த்த பகையுடைய காவலனைப் பாம்புரியில்
    ஆழ்த்தும் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [30]

    பலவா தனைமருவிப் பற்றிகந்து நெஞ்சம்
    சுலவா வுழலுமிந்தத் துட்டனையு மாள்குவையோ
    உலவாநெற் கோட்டை யொருவற் கொருவனருள்
    அலையார் புனற்கூடல் அங்கயற்க ணாயகியே. [31]

    காமனென்ன வீனர்தமைக் கட்டுரைத்து மிக்குழலும்
    தீமனத்த னாய சிறியனையு மாள்குவையோ
    மாமனென வந்து வழக்குரைத்த வேணியிடை
    ஆமணிவோன் மணிக்கூடல் அங்கயற்க ணாயகியே. [32]

    மருளார் மனத்துன் மலரடியைப் பேணா
    திருளார் குழுவோ டிணங்குமெனை யாள்குவையோ
    தெருளார் வரகுணர்க்குச் சிவலோகங் காட்டியோர்
    அருளாளர் வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [33]

    சித்திர மென்னத் திகழ்மடவார்க் காளாகிக்
    குத்திர மேய கொடியேனை யாள்குவையோ
    பத்திரற்கு வீணை பரிந்தே பகைவெலுமால்
    அத்திரர்வாழ் கூடனகர் அங்கயற்க ணாயகியே. [34]

    நேரலர்கட் கஞ்சியுனை நிமிடப் பொழுதேனும்
    ஓரலனாய்த் தீமைமிக வுற்றேனை யாள்குவையோ
    சேரலன்பாற் செல்லத் திருமுகம்பா ணர்க்கருளி
    ஆரணிகோ வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [35]

    நையமன நின்றனுரு நாடிப் பணிந்துதுதித்
    துய்ய வறியா துழல்வேனை யாள்குவையோ
    செய்யமனப் பாணர்க்குச் சேர்மழையிற் பொற்பலகை
    ஐயனிடு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [36]

    வசையாருந் தீய வழிமருவி நின்பால்
    நசையாது மின்றியுறை நாயேனை யாள்குவையோ
    இசைவாது வெல்லவோ ரேழைக் கருள்செய்
    தசையா னுறைகூடல் அங்கயற்க ணாயகியே. [37]

    உன்னை யுனதருளை யுன்னா தனுதினமும்
    தன்னை மதித்துத் தருக்குமெனை யாள்குவையோ
    மன்னை வுறச்செய்த வன்றிக் குருளைகளுக்
    கன்னையனை யான்கூடல் அங்கயற்க ணாயகியே. [38]

    தேக்கிய வின்பவழி தேராது துன்பவழி
    ஆக்கிய வொப்பரிய வற்பனையு மாள்குவையோ
    பாக்கிய வேனப் பறழ்களை மந்திரியா
    ஆக்கிய கூடனகர் அங்கயற்க ணாயகியே. [39]

    நின்னாம மென்று நியம முறச்செபியா
    துன்னா ரருளைவிழை வுற்றேனை யாள்குவையோ
    கொன்னாருங் காரிக் குருவிக் கருள்புரிந்த
    அன்னான் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [40]

    காரை யுறழ்கரத்தா யென்று கசடர்கடம்
    பேரை யியம்பியலை பேதையனை யாள்குவையோ
    நாரை யுறமுத்தி நல்கி யருள்புரிந்த
    ஆரையணி வார்கூடல் அங்கயற்க ணாயகியே. [41]

    பாலவாய் மேவுதமிழ்ப் பாக்களினுன் றாள்பரவா
    தேலவா யோதியரை யேத்துமெனை யாள்குவையோ
    சாலவா யொருவழுதி தான்காணப் பாம்புசுலாய்
    ஆலவா யாங்கூடல் அங்கயற்க ணாயகியே. [42]

    வம்பெய்து கொங்கை மடவாரைப் போற்றியுனை
    நம்பெய்த லில்லாத நாயினையு மாள்குவையோ
    கும்பெய்து தானையுடைக் கோனஞ்சச் சுந்தரப்பேர்
    அம்பெய்த கோன்கூடல் அங்கயற்க ணாயகியே. [43]

    தேன்றோய் சுவைத்தமிழைத் தெள்ளித் தௌியாது
    மான்றோய் விழியால் மயங்குமெனை யாள்குவையோ
    ஏன்றோ ருயர்ந்தோ ரிழிந்தோ ரெனும்பலகை
    ஆன்றோர்க் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [44]

    களித்த வுளமுங் கசடர்தமைச் சொல்வாயும்
    ஒளித்த நடையு முடையேனை யாள்குவையோ
    தளித்ததொடைப் பெம்மான் றருமிக்குப் பொற்கிழியன்
    றளித்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [45]

    சித்தநா வுடல்நின்பாற் செலுத்திவழி படலின்றி
    மத்தனாய்த் திரிந்திடுமிம் மாண்பிலியை யாள்குவையோ
    கத்தனார் கீரனைநீர்க் கரையேற்றி யாண்டருளும்
    அத்தனா ருறைகூடல் அங்கயற்க ணாயகியே. [46]

    இகத்தியலும் வழியிதுவென் றெண்ணாம லின்பனைத்தும்
    உகத்தியங்கி நாள்கழிக்க லுற்றேனை யாள்குவையோ
    மிகத்தியங்கு கீரனுக்கு விமலரரு ளாலியலைந்
    தகத்தியனார் நவில்கூடல் அங்கயற்க ணாயகியே. [47]

    துங்கத்தார் நின்கோயில் தொண்டுசெயா துட்டருக்கிப்
    பங்கத்தார்க் காளாமிப் பாவியினை யாள்குவையோ
    சங்கத்தார் மாறு தணித்தே யராவணிந்த
    அங்கத்தார் வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [48]

    இணங்குமற வாற்றினிடை யேகாத மூடர்
    கணங்குழுமி நிற்பாடக் கல்லேனை யாள்குவையோ
    பிணங்குமிடைக் காடனுளப் பேதகற்றி ஆண்டவனோ
    டணங்கரசாய்க் கூடல்வளர் அங்கயற்க ணாயகியே. [49]

    மலைவீசு முத்தே மயிலே மரகதமே
    உலைவீசு பொன்னேயென் றோதேனை யாள்குவையோ
    வலைவீசி முன்ன மணந்தபெரு மானுயிரே
    அலைவீசு நீர்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [50]

    கந்தடருங் களியானைக் காவலனே யெனச்சிதடன்
    முந்தணவித் துதித்தலையும் முழுமகனை யாள்குவையோ
    மந்தணத்தைப் பெருந்துறையின் மாணிக்க வாசகப்பேர்
    அந்தணருக் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [51]

    நயமாக்குஞ் செஞ்சுவைப்பா நான்கினையு மூடர்கடம்
    வயமாக்கி மிகவருந்திம் மாண்பிலியை யாள்குவையோ
    சயமாக்கும் பரசணிந்த சம்புமுனஞ் சம்புவினை
    அயமாக்கும் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [52]

    குன்றோடு வல்லிரும்பாங் குணமருவி யெவ்விடத்தும்
    சென்றோடுஞ் சிந்தையுடைச் சிறியனையு மாள்குவையோ
    மன்றோடு மன்பர்மனம் வாழ்பரமன் பரிநரியா
    அன்றோடப் புரிகூடல் அங்கயற்க ணாயகியே. [53]

    எண்சுமந்த செந்தமிழை எண்ணிஎண்ணித் துன்பமரீஇப்
    புண்சுமந்த நெஞ்சமுடைப் புல்லியனை யாள்குவையோ
    மண்சுமந்து பின்னர் வடுச்சுமந்த மாதேவன்
    அண்சுமந்த கூடனகர் அங்கயற்க ணாயகியே. [54]

    பரசிற் சுகமருணின் பாதம் பணிந்துன்பால்
    விரசற் குளந்துணியா வீணனைநீ யாள்குவையோ
    வரசண் பையர்தலைவர் வந்தே சுரந்தீர்த்
    தரசற் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [55]

    துளிக்குஞ் சுவைத்தமிழைச் சொல்லித் துதியாதே
    களிக்கும் பயனறியாக் கள்வனை நீ யாள்குவையோ
    தௌிக்கு மறைச்சிறுவர் தீச்சமணை மாற்றி
    அளிக்குந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [56]

    மறம்பயனாக் கொண்டசில மானிடரைப் போற்றித்
    திறம்புமதி பாதகனாந் தீயனைநீ யாள்குவையோ
    புறம்பயத்துச் சான்றாம் பொருளை யழைத்த
    அறம்பயனார் கூடனகர் அங்கயற்க ணாயகியே. [57]

    வம்போடு நெஞ்சு மழையோடு கண்களுமாய்த்
    துன்போடு பாவாற் றுதிக்குமெனை யாள்குவையோ
    .............................மெல்லோரும் பூசையுவந்
    ................................................ [58]
    சிவபெருமானின் பெருமையை உயர்த்தி சொல்லும் இந்த பாடலை பிரதோஷ தினமான இன்று சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.
    பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
    பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
    ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
    கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
    ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

    பொருள்: தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல் வேறு மலர்களை அணியும் திருமுடியானது வான த்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!

    விளக்கம்: சிவனின் பெருமையை உயர்த்திச் சொல்லும் பாடல் இது. "போதார் புனை முடியும் என்ற வரிக்கு "மலர்களை அணிந்தவன் என்ற பொருள் வருகிறது. சிவனுக்கு கொன்றை, ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை ஆகிய மலர்களை அணிவிக்கும் வழக்கமுண்டு. இதில் எதையாவது மனிதர்கள் பயன்படுத்துவதுண்டா? "உனக்கு மல்லிகையையும், ரோஜாவையும் வைத்துக் கொள். உனக்கு பயன்படாத ஒன்றை எனக்கு அணிவி என்று தன் எளிமையை வெளிப்படுத்துகிறான் இறைவன்.
    தினந்தோறும் சூரிய பகவானின் முன்பாக நின்று கொண்டு இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால், சூரிய பகவானின் பரிபூரண அருளைப் பெற முடியும்.
    நவக்கிரகங்களில் ராஜகிரகமாகவும், நவக்கிரகங்களின் தலைவராகவும் கருதப்படுபவர், சூரிய பகவான். நவக்கிரகங்களின் மையத்தில் இவர் காட்சியளிப்பார். இவரைச் சுற்றிதான் மற்ற கிரகங்கள் காணப்படும். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட பல மந்திரங்கள், துதிகள் என்று இருந்தாலும், விஸ்வாமித்திரரால் உருவாக்கப்பட்ட காயத்ரி மந்திரங்களுக்கு என்று தனியொரு சக்தி இருக்கிறது. அப்படி சூரியனுக்கும் காயத்ரி மந்திரம் உள்ளது. தினந்தோறும் சூரிய பகவானின் முன்பாக நின்று கொண்டு இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால், சூரிய பகவானின் பரிபூரண அருளைப் பெற முடியும்.

    நவயோகம் என்று சொல்லப்படும் ஒன்பது விதமான யோகங்கள் கைவரப்பெறும் அதிஅற்புத ரகசியத்தைக் கொண்டது இந்த காயத்ரி மந்திரம். இதனை மனதார ஜெபித்து வந்தால், வெற்றி நிச்சயம் என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு.

    ‘அஸ்வதீ வசாய வித்மஹே

    பாஸ ஹஸ்தாய தீமஹி

    தந்நஸ் ஸுர்ய ப்ரசோதயாத்’

    மேற்கண்ட இது தான் சூரியனுக்கான காயத்ரி மந்திரம். தினமும் பகல் 12 மணி அளவில் கிழக்குப் பக்கமாக அமர்ந்து, இலுப்பை எண்ணெய் அல்லது சுத்தமான நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். கோதுமையை பரப்பி அதன் மேல் எருக்கு இலை வைத்து, அதன்மேல் அந்த தீபத்தை வைக்க வேண்டும். இப்படி தீபம் ஏற்றி சூரியனுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் மலைபோல் வந்த துயரங்கள் பனிபோல் விலகும்.

    வெற்றியை அள்ளித்தருபவர் சூரிய பகவான். அவர் பகைவரை வெற்றிகொள்ளக்கூடிய பரிபூரண சக்தி படைத்தவர். நவக்கிரக காயத்ரி மந்திரங்களில், அதிக சக்தி வாய்ந்த இந்த சூரிய மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சூரிய புத்தி நடைபெறுபவர்கள், ஜாகத்தில் சூரியன் பலமிழந்து இருப்பவர்கள், பிதுர் தோஷம் உள்ளவர்கள் என அனைவரும் வழிபாடு செய்யலாம். இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்க வேண்டும்.
    எப்படி அழைத்தாலும் வரக்காத்திருக்கும் வரலட்சுமியை கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.
    எப்படி அழைத்தாலும் வரக்காத்திருக்கும் வரலட்சுமி விரத நாளில் நமது வீட்டில் உள்ள பூஜைப் பொருட்களை பயன்படுத்தி எளிமையாகவும், பூஜை செய்யலாம். துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் தெரியவில்லையே என யாரும் பூஜை செய்யாமல் இருந்து விட வேண்டாம். முதலில் விநாயகர் பாடல் எல்லோருக்கும் தெரியும். அதை சொல்லியே பின் கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.

    1. சகல சித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!
    2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!
    3. ராஜமரியாதை தரும்-கஜலட்சுமியே போற்றி!
    4. செல்வச் செழிப்பைத் தரும்-தனலட்சுமியே போற்றி!
    5. தான்ய விருத்தியளிக்கும்- தான்ய லட்சுமியே போற்றி!
    6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும்- விஜயலட்சுமியே போற்றி!
    7. சவுபாக்கியங்கள் தரும்- மகாலட்சுமியே போற்றி!
    8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும்- வீரலட்சுமியே போற்றி!
    9. அனைத்து நன்மைகளையும் வரமாகத் தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!!.
    ×