என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
    ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம:
    சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
    பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம:
    சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

    பொருள்: மலைபோல வரும் ஆபத்துகளைப் போக்கடிக்கும் மழு ஆயுதத்தைக் கையில் தரித்திருப்பவரும், ஜனங்களின் பாவங்களைப் போக்கும் தேவநதியான கங்கையை முடியில் உடையவரும், பாபங்களைப் போக்குபவரும், சாபத்தினால் ஏற்படும் தோஷங்களைக் கண்டிக்கிற சிவபெருமானே நமஸ்காரம்.
    மகான் ஆதிசங்கரர் சிவனைத் துதித்து கிருத்திகை நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
    இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம:
    சிவாய துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
    ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம:
    சிவாய அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய


    பொருள்: இஷ்டப்பட்ட சிறந்ததான பொருளைக் கொடுப்பதில் கருணையுள்ள வரும், முப்புரத்திலுள்ள அரக்கர் வம்சத்துக்கு தூமகேதுவானவரும், படைக்கும் தொழில் நடப்பதற்கான தர்மத்தைக் காப்பவரும், பூமி, ஆகாயம், நீர், அக்னி, காற்று, சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டையும் தன் உருவாய்க் கொண்டவரும், ரிஷபக் கொடியோனும் ஆகிய சிவபெருமானே நமஸ்காரம்.
    புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
    கால பீதவிப்ரபால பாலதே நம:
    சிவாய சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
    மூல காரணீய கால காலதே நம:
    சிவாய பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

    பொருள்: யமனுக்குப் பயந்திருந்த குழந்தையான மார்க்கண்டேயனைக் காத்தருளியவரும், வீரபத்திரமூர்த்தியாக அவதரித்து தட்சனைக் கொன்றவரும், அனைத்திற்கும் மூல காரணமானவரும், காலத்துக்கு மேம்பட்டவரும், கருணைக்கு இருப்பிடமானவருமாக விளங்கும் சிவபெருமானே, நமஸ்காரம்.
    காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து அஸ்வினி நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
    ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:
    சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
    நாம சோஷிதா நமத் பவாந்தவே நம:
    சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

    பொருள்: ஐஸ்வர்யம் மிகுந்தவரும், குணக்கடலும், தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியையும் தோற்கடிப்பவரும், தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு பந்துவாகவும், ஞானிகளுக்கு பிரதான பந்துவாகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.
    ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்...
    ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்...

    தத்புருஷாய வித்மஹே

    ஸீபர்ண பக்ஷாய தீமஹீ

    தன்னோ கருட ப்ரசோதயாத்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை இன்று பாராயணம் செய்தால் திருமணமாகாத கன்னியர்க்கு, தடைகள் எல்லாம் நீங்கி, நல்ல கணவர் அமைவார்.
    அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
    அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
    தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா

     தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
    கோதா ஸ்துதி

    பொதுப்பொருள்:

    ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள்  திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்.
    கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.
    கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.

    “ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
    சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.”

    - என்ற ஸ்லோகத்தை சதா மனதிற்குள் சொல்லிக்கொண்டு இருந்தாலே போதும். அதோடு கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.

    “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம:
     வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ
     ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா
     ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ ”
    ஏகாதசி முழுவதும் பகவானின் நாமம் சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரக மந்திரமான கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சொல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    ஏகாதசி முழுவதும் பகவானின் நாமம் சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரக மந்திரமான

    “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”

    எனும் மஹாமந்திரத்தைத் குறைந்தது-108-16×108- 25× 108-சுற்று உச்சரிப்பது மிகவும் சிறந்தது. ஏகாதசி அன்று அவசியம் கோயிலுக்குச் சென்று ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும். ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை நூல்களை படிப்பதும், கேட்பதும் மிகவும் நல்லது.

    ஏகாதசி அன்று சினிமா செல்வதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாக உறங்குவதோ விரதத்திற்கு சற்றும் உதவாது. தவிர, திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.
    தமிழில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு உகந்த இந்த புகழ்மாலையை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் பறந்தோடும்.
    மேலை விரிஞ்சன் வீயினும் வீயாமிகை நாளீர்
    நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல்தக்கீர்
    காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர்
    ஆலம் நுகர்ந்தானாம் என வெம்போர் அடர்கிற்பீர்

    வெப்புறு செந் தீ நீர் வளியாலும் விளியாதீர்
    செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்
    ஒப்புறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே
    குப்புறின் அண்டத்தப் புறமேயும் குதிகொள்வீர்

    நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீரச்
    சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர்
    வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே
    கொல்லவும் வல்லீர் தோள் வலிஎன்றும் குறையாதீர்

    மேரு கிரிக்கும் மீதுற நிற்கும் பெரு மெய்யீர்
    மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்
    பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர்
    சூரியனைச் சென்று ஒண்கையகத்தும் தொட வல்லீர்

    அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறழியாமை
    மறிந்து உருளப் போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்
    பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க
    எறிந்துழி இற்றோர் புன் மயிரேனும் இழவாதீர்

    போர்முன் எதிர்ந்தால் மூஉலகேனும் பொருள் ஆகா
    ஒர்வில் வலம் கொண்டு ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்
    பாருலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன்முன்
    தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர்

    நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்
    மாதர் தவம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம்
    ஓதி யுணர்ந்தீர் ஊழி கடந்தீர் உல கீனும்
    ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர்

    அண்ணல் அம் மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே
    கண்ணி உணர்ந்தீர் கமுமம் நுமக்கே கடன் என்னத்
    திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால்
    புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்

    அடங்கபும் வல்லீர்காலமது அன்றேல் அமர்வந்தால்
    மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர் மதி நாடித்
    தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்
    இடங்கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடை யாதீர்

    ஈண்டிய கொற்றத் திந்திரன் என்பான் முதல் யாரும்
    பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும்
    பண்டிதர் நீரே பார்த்தினிது உய்க்கும்படி வல்லீர்
    வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர்

    ஏகுமின் ஏகி எம்முயிர் நல்கிஇசைகொள்ளீர்
    ஓகை கொணர்ந்தும் மன்னையும் இன்னம் குறைவு இல்லாச்
    சாகரம் முற்றும் தாவிமும் நீர் இக்கடல் தாவும்
    வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான்.
    லட்சுமி என்றும் நீங்காது இருக்க, செட்டிநாட்டில் வழங்கப்படும் பாடல். இப்போதும் இப்பாடல் அங்கு பல வீடுகளில் சட்டமிட்டு தொங்குவதை காணலாம்.
    லட்சுமி என்றும் நீங்காது இருக்க, செட்டிநாட்டில் வழங்கப்படும் பாடல். இப்போதும் இப்பாடல் அங்கு பல வீடுகளில் சட்டமிட்டு தொங்குவதை காணலாம்.

    “காடு வெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
    வீடு கட்டிக்கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு
    அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
    என்றைக்கும் நீங்காதிரு”
    ஆடி மாதத்தில் வெள்ளி கிழமைகளில் அம்மனை பூஜித்து 108 அம்மன் போற்றி ஸ்லோகத்தை கூறுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழலாம்!
    ஓம் அம்மையே போற்றி
    ஓம் அம்பிகையே போற்றி
    ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
    ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
    ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
    ஓம் ஆதார சக்தியே போற்றி
    ஓம் ஆதி பராசக்தியே போற்றி
    ஓம் இருள் நீக்குபவளே போற்றி
    ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
    ஓம் இடரைக் களைவாய் போற்றி
    ஓம் இஷ்ட தேவதையே போற்றி
    ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
    ஓம் ஈடிணை இலாளே போற்றி
    ஓம் ஈகை மிக்கவளே போற்றி
    ஓம் உமையவளே தாயே போற்றி
    ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
    ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
    ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
    ஓம் ஏழையர் அன்னையே போற்றி
    ஓம் ஐங்கரத்தவளே போற்றி
    ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
    ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
    ஓம் ஒளடதம் ஆனவளே போற்றி
    ஓம் கவுமாரித்தாயே போற்றி
    ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
    ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
    ஓம் காக்கும் அன்னையே போற்றி
    ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
    ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
    ஓம் குங்கும நாயகியே போற்றி
    ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
    ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
    ஓம் கை கொடுப்பவளே போற்றி
    ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
    ஓம் சக்தி உமையவளே போற்றி
    ஓம் சவுந்தர நாயகியே போற்றி
    ஓம் சித்தி தருபவளே போற்றி
    ஓம் சிம்ம வாகினியே போற்றி
    ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
    ஓம் சீதளா தேவியே போற்றி
    ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
    ஓம் செந்தூர நாயகியே போற்றி
    ஓம் செண்பகாதேவியே போற்றி
    ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
    ஓம் சொல்லின் செல்வியே போற்றி
    ஓம் சேனைத் தலைவியே போற்றி
    ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
    ஓம் தத்துவ நாயகியே போற்றி
    ஓம் தர்ம தேவதையே போற்றி
    ஓம் தரணி காப்பாய் போற்றி
    ஓம் தத்துவ நாயகியே போற்றி
    ஓம் தர்ம தேவதையே போற்றி
    ஓம் தரணி காப்பாய் போற்றி
    ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
    ஒம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
    ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
    ஓம் தீமை களைபவளே போற்றி
    ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
    ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
    ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
    ஓம் தேசமுத்து மாரியே போற்றி
    ஓம் தையல் நாயகியே போற்றி
    ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
    ஓம் தோன்றாத் துணையே போற்றி
    ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
    ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
    ஓம் நாக வடிவானவளே போற்றி
    ஓம் நாத ஆதாரமே போற்றி
    ஓம் நாகாபரணியே போற்றி
    ஓம் நானிலம் காப்பாய் போற்றி
    ஓம் நித்ய கல்யாணியே போற்றி
    ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
    ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
    ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
    ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
    ஓம் நேசம் காப்பவளே போற்றி
    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
    ஓம் பவளவாய் கிளியே போற்றி
    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
    ஓம் பசுபதி நாயகியே போற்றி
    ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
    ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
    ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
    ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
    ஓம் பீடை போக்குபவளே போற்றி
    ஓம் பீடோப ஹாரியே போற்றி
    ஓம் புத்தி அருள்வாய் போற்றி
    ஓம் புவனம் காப்பாய் போற்றி
    ஓம் பூமாரித்தாயே போற்றி
    ஓம் பூவில் உறைபவளே போற்றி
    ஓம் பூஜைக்குரியவளே போற்றி
    ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
    ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
    ஓம் மழைவளம் தருவாய் போற்றி
    ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
    ஓம் மந்திர வடிவானவளே போற்றி
    ஓம் மழலை அருள்வாய் போற்றி
    ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
    ஓம் மாணிக்க வல்லியே போற்றி
    ஓம் மகமாயித் தாயே போற்றி
    ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
    ஓம் முத்தாலம்மையே போற்றி
    ஓம் முத்து நாயகியே போற்றி
    ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
    ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
    ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
    ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
    ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
    ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

    ஓம் முருகா !!
    ஆறுமுகனே ஆனந்த மயமானவனே
    வினையறுக்கும் யாழ் நல்லூர் வேலவனே
    உந்தன் திருமுகம் காண ஒருமுகமானேனே
    தஞ்சமென்றுன் பாதம் பணிகின்றேன் !
    ×