என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    காக்கும் கனகவேலின்....கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தை தினமும் அல்லது சஷ்டி நாட்களில் சொல்லி முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    அழகுவடிவேலாய் வந்த அவதார திருவேலா நீ

    சூரபத்மனை சுருக்கி தனக்குள் அடக்கி
    ஆணவம் வென்ற ஆறுதிருமுகமா நீ

    யாரய்யா நீ கந்தய்யா..என்னய்யா நீ வந்த வழி

    பிரம்மன் மகன் காசிபன்...
    சிவதவம் கலைக்க வந்த மாயை யோடு
    முதல் ஜாமத்தில் கூட...

    சூரனெனும் பத்மன் பிறவியெடுத்து
    தனைவருத்தி சிவநோன்பிருந்து...
    108 யுகம்வாழ்ந்து 10008 அண்டம் அரசாள
    வரம் கேட்டு...பெண்கருஏந்தா பிறவியால்
    தன் சாவு வேண்டி..சிவசரணமடைய.....

    அழிக்கும் சிவன் தந்த அனுமதியில்
    அசுரகணம் தலையேற...

    தேவாதி தேவரெல்லாம் சிறைபட
    இந்திரன் வந்து பூமி ஒளிய
    சிவசிவா எனும்நாமம்
    ஒலமாய்..கையிலாயம் நிறைய

    சவம்காக்கும் சிவம் தவம் விழிக்க
    ஆறுமுக நெற்றிக்கண்ணின் வழி...
    தீப்பொறி எழுந்து ...வாயுபகவான் ஏந்தி வந்து
    தாமரைக்குளம் விட....

    அனல் வழி வடிவெடுக்கிறான்
    ஆறுகுழந்தையென.....அழகுதிரு வடிவேலன்

    கார்த்திகைப்பெண்டீர் கொஞ்சி சீராட்ட
    அன்னைபார்வதி கரமிழுத்துஅணைக்க ...

    ஆறுமுகமும் ஒரு உடலாய் இணைந்து
    இருகை ஒருமேனியாய்..கோடிஅழகாகிறான்
    சேவற்கொடியோன்

    திருவேலேந்தி...போர்முழக்கமிட்டு
    வீரபாகு அனுப்பி சேதிசொல்லி....முருகனவன்
    வீரமகாந்திரபுரி செல்ல

    சிறுபிள்ளை நீயா என் எதிரியென
    அசுரன் சிரித்து விஸ்வரூபமெடுக்க...
    அஞ்சாத பிள்ளையாய்..அம்புவிட்ட கந்தன் வெல்ல

    கடல்வடிவெடுத்து சூரன் அலைசீறி
    கல்லுக்குள் ஈரமாய்...வீர இழுக்கென
    சிறுகுமரனை கொல்ல மறுக்க
    அவனை ஆட்கொண்ட ..ஆறாம்நாள்..
    ஆணவம் அழிக்கிறார்....சஷ்டிப்பெருமான்

    அமைதிவடிவெடுத்த சூரன்..தனை ஆண்டவன் வணக்கி
    அலைகடலாய் அங்கி தங்க ...செந்தூரம் மணக்கும் திரூ ஊரில்
    குமரனும் கோயில் கொள்கிறான்....
    இந்திரன் மருமகனாய்...தெய்வானை மணந்து....

    சேவல்கொடியோனை..சிவாக்னி பெரியோனை
    கமல பிள்ளையென வந்த ஆறுமுகத்தை

    ஒருமுகமாய் ஒருமனதாய்...ஒரே சிந்தையாய்
    சஷ்டியில் விரதமிருந்து....அகப் பையில் ஏந்தி
    அரோகரா...அரோகரா...என்று

    கவசகோஷம் பாடி .....அழகுமுருகன்
    செந்திலாண்டவனை..வணங்கி
    பிறவி மோட்ச வழிபெறுவோமே...
    தினமும் சிவபெருமானுக்கு உகந்த திருமந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். மனம் அமைதியடையும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.
    காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
    ஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
    தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
    ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே.

    -திருமந்திரம்

    பொருள் :

    ஈசன் உறவுக்கு ஒப்பில்லை. தூல உடம்பும் சூக்கும் உடம்பும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில் தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் அல்லது நாத வழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை
    ஒரு வீட்டில் தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏற்பட்டிருந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் இல்லை என்று அர்த்தம். அத்தகைய வீடுகளில் அஷ்டமங்கல வழிபாடு செய்ய வேண்டும்.
    ஒரு வீட்டில் தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏற்பட்டிருந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் இல்லை என்று அர்த்தம். அத்தகைய வீடுகளில் அஷ்டமங்கல வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு 8 வகைப் பொருட்களை ஒரு பாட்டிலில் (மிட்டாய் டின் போன்ற சீசா) போட்டு அதன் அருகில் கமலதீபம் இரண்டை ஏற்றி வைத்து மனமுருகி வழிபட்டால் கஷ்டங்கள் மறைந்து வளம் உண்டாகும்.

    அஷ்டமங்கலப் பொருட்கள் விவரம் வருமாறு:-

    1.குண்டு மஞ்சள்-3, 2.குங்குமம், 3.மரப்சீப்பு, 4.தர்ப்பணம் என்ற கண்ணாடி, 5.சந்தனம், 6.தாம்பூலம், 7.தீபம், 8.ரவிக்கைத் துணி (பச்சை நிறம்).
    இரண்டு பக்கங்களிலும் கமலதீபங்களை ஏற்றி நடுவில் ஒரு தட்டில் சீசாவை வைத்து

    ஓம் லட்சுமி நம
    ஓம் ஸ்ரீதேவி நம
    ஓம் கமலாசனி நம
    ஓம் பத்ம பூஜனி நம
    ஓம் மகாதேவி நம
    ஓம் சங்கமாதா நம
    ஓம் சக்ர மாதா நம
    ஓம் கதா மாதா நம
    ஓம் ஐஸ்வர்னய நம

    ஆகிய ஒன்பது திருமகள் நாமங்களை எட்டு தடவைகள் கூற வேண்டும். பிறகு ஆத்ம பிரதட்சிணம் (தன்னைத் தானே சுற்றிக் கொள்ளுதல்) செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பணக்கஷ்டம் தீரும். லட்சுமியின் பார்வை பட்டு குடும்பத்தில் செல்வம் பெருகும்.

    -கே.குமாரசிவாச்சாரியார், குன்றத்தூர்.
    தினமும் சாய்பாபா மந்திரத்தை 108 முறை ஜெபித்து சாய் பாபாவை வழிபட்டால் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
    மனக்கவலைகளை போக்கும் சாய்பாபா மந்திரம் ஒருவரின் மனதில் உள்ள தேவையற்ற கவலைகள் மற்றும் பயங்களை போக்கும் வல்லமை கொண்ட சாய் பாபாவின் பதம் பணிந்து அவருக்கான இந்த சாய் பாபா மந்திரம் அதை ஜெபிப்பதன் மூலம் நமது கவலைகளும் துன்பங்களும் நீங்கீவிடும்.

    மந்திரம்:

    ‘ஓம் சாய் குருவாயே நமஹ
    ஓம் ஷீரடி தேவாயே நமஹ
    ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ’

    இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு இறைவனை வணங்கி ‘ஸ்ரீ சாய் பாபாவை’ மனதார நினைத்து இம்மந்திரத்தை 9 முறை கூறவேண்டும்.

    வியாழக்கிழமைகளில் சாய் பாபா கோவிலுக்கு சென்றோ அப்படி முடியாதவர்கள் வீட்டில் சாய்பாபா படமிருந்தால் அந்த படத்திற்கு முன்பு சிறிது முந்திரி பருப்புகளையோ அல்லது கற்கண்டுகளையோ நிவேதனமாக வைத்து இம்மந்திரத்தை 108 முறை ஜெபித்து சாய் பாபாவை வழிபட, உங்களின் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடமுடியும்.

    உங்கள் மனத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகி உங்கள் மனம் சாந்தமடையும்.
    ஸ்ரீலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும், கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபித்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா
    விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச ||
    ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ|||

    ஸ்ரீலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும், கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும். வெள்ளிக்கிழமை மாலைவேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் வேலைகிடைக்கும்.
    ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த சுப்ரபாதத்தை தினமும் காலையில் அல்லது சனிக்கிழமைகளில் சொல்லி ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வந்தால் எதிரிகளை வெல்ல முடியும்.
    அமலா கனகவர்ணம் ப்ரஜ்வல பாவ காட்சம்
    சரசஜனி பவத்ரம் ஸர்வதா சுப்ரசன்னம்
    படுதர கணகாத்ரம் குண்டலாலம் க்ருதாம்கம்
    ரணஜய கரவாலம் ராமதூதம் நமாமி ||

    அஞ்சனா சுப்ரஜா வீரா பூர்வா சந்த்யா ப்ரபத்ததே |
    உத்திஷ்ட ஹரிசார்தூல கர்த்தவ்யம் தெய்வ மாஹ்நிகம் ||

    உத்திஷ்டோ த்திஷ்ட ஹனுமன் உத்திஷ்ட விஜயத்வஜ|
    உத்திஷ்டரவிஜா காந்த த்ரைலோக்யம் மங்களம் குரு ||

    ஸ்ரீராமசந்தரா சரணாபுஜ மத்தப்ருங்கா
    ஸ்ரீராம மந்ர ஜபாஸ்ரீலா பவாப்தி போதா
    ஸ்ரீஜானகி ஹிருதய தாப நிவார மூர்த்தே
    ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்

    ஸ்ரீராம திவ்ய சரிதாம்ருத ச்வாதுலோலா
    ஸ்ரீராம கிங்கர குணாகர தீணபந்தோ
    ஸ்ரீராம பக்த ஜகதேகா மஹோக்ர சௌர்யா
    ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்

    சுக்ரீவ மித்ர கபிஸேகர குண்ய மூர்த்தே
    சுக்ரீவ ராகவ சமாகம திவ்ய கீர்த்தே
    சுக்ரீவ மந்திரிவர சூர குலாக்ரகண்யா
    ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்

    பக்தார்தி பஞ்சன தயகர யோகி வந்த்யா
    ஸ்ரீகேஸரி ப்ரியதனுஜ்ய சுவர்ணதேஹி
    ஸ்ரீபாஸ்கராத்மாஜ மனோம்புஜ சந்தரீகா
    ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்

    ஸ்ரீ மாருத ப்ரிய தனுஜ மராபலாட்யா
    மைனாக வந்தித பாதாம்புஜ தன்டிதாரின்
    ஸ்ரீஉஷ்த்ர வாஹன சுலட்சனலட்சிதாநிக
    ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்

    பஞ்சாந்நன்யா பவ பீதி ஹரஸ்யராமா
    பாதாபஜசேவன பரஸ்ய பராத்பரயா
    ஸ்ரீ அஞ்சனா ப்ரியஸுதஸ்ய சுவிக்ரஹச்யா
    ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்

    கந்தர்வாயட்க்ஷா புஜகாதிபாக்ன்னர ஆச்ரசா
    ஆதித்ய விஷ்வ வசுருத்ர மஹர்சி கம்கா(சுரக்க்ஷ சங்கா)
    கங்கீர்தியன்தி தவதிவ்ய சுனாம் பம்திம்
    ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்

    ஸ்ரீகௌதமிச்வனா தும்புராநாரதாத்ரி
    மைத்ரேயா வ்யாச ஜனகாதி மஹர்சி சங்கா
    காயன்தி ஹர்ச பரிதாஸ்தவ திவ்ய கீர்திம்
    ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்

    பிருங்காவளிச மகரந்த ரசம் பிபேத்வை
    குஜம் த்வதார்த மதுரம் சரனாயுதாஸ்ச
    தேவாலயே கணகபீர சுசன்காகோஷ்ஹ
    நிர்யான்தி வீர ஹனுமான் தவசுப்ரபாதம்

    பம்பா சரோவர சுபுன்ய பவித்ர தீர்த்ர
    ஆதாய ஹேமகல சைச்சா மஹர்க்ஷி ஸங்கா
    திஷ்சன்தி த்வத்சரணா மங்கள சேவநார்த்தம்
    ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்

    ஸ்ரீ சூர்ய புத்ரி ப்ரியநாத மனோன்ய மூர்த்தே
    வாதாத்ம ஜாத கபீவீர சுபிங்கலாக்ஷா
    சஞ்சீவராயா ரகுவீர சுபக்தவர்யா
    ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
    ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிய ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அஷ்டகத்தை தினமும் சொல்லி நரசிம்மரை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    1. ஸ்ரீமதகலங்க பரிபூர்ண சசிகோடி
    ஸ்ரீதர மநோஹர ஸடாபடல காந்த
    பாலய க்ருபாலய பவாம்புதி நிமக்னம்
    தைத்யவர கால நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

    2. பாத கமலாவனத பாதகி ஜனானாம்
    பாதக தவானல பதத்ரிவர கேதோ
    பாவன பராயண பவார்த்திஹரயா மாம்
    பாஹி க்ருயைவ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

    3. துங்க நக பங்க்தி தளிதாஸுர வராஸ்ருக்
    பங்க நவகுங்கும விபங்கில மஹோர
    பண்டிதநிதான கமலாலய நமஸ்தே
    பங்கஜ நிஷண்ண நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

    4. மௌளிஷு விபூஷண மிவாமர வராணாம்
    யோகி ஹ்ருதயேஷுச சிரஸ்ஸுநிகமாநாம்
    ராஜதரவிந்த ருசிரம் பதயுகம் தே
    தேஹி மம மூர்த்தி நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

    5. வாரிஜ விசோசன மதந்திம தசாயாம்
    க்லேச விவசீ க்ருத ஸமஸ்த கரணாயாம்
    ஏஹி ரமயா ஸஹசரண்ய விஹகானாம்
    நாத மதிருஹ்ய நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

    6. ஹாடக கிரீட வரஹார வனமாலா
    தார ரசனா மகரகுண்டல மணீந்த்ரை
    பூஷிதமசேஷ நிலயம் தவவபுர் மே
    சேதஸி சகாஸ்து நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

    7. இந்து ரவி பாவக விலோசன ரமாயா
    மந்திர மஹா புஜ லஸத்வர ரதாங்க
    ஸுந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
    நந்தித ஸுரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

    8. மாதவ முகுந்த மதுஸூதன முராரே
    வாமன ந்ருஸிம்ஹ சரணம் பவ நதாநாம்
    காமத க்ருணின் நிகிலகாரண நயேயம்
    கால மமரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

    9. அஷ்டகமிதம் ஸகலபாதக பயக்னம்
    காமத மசேஷ துரிதாமய ரிபுக்னம்
    ய: படதி ஸந்தத மசேஷ நிலயம் தே
    கச்சதிபதம் ஸ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!
    அகிலாண்டேசுவரியின் அருளினால் லட்சுமி கடாட்சம் குறைவரக் கிடைப்பதற்கும், வருங்காலத்தை முன் கூட்டியே உணருகின்ற அற்புதமான ஆற்றலைப் பெற்று வளமுடன் வாழவும் ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரி மூலமாக மந்திரத்தைத் தினம் தோறும் 1000 முறை 45 நாட்கள் ஜெபித்து வர வேண்டும்.
    சதாசிவத்துடன் ஒன்றி நின்று இந்த உலகத்தை வாழ வைத்து வரும் அகிலாண்டேசுவரியின் அருளினால் லட்சுமி கடாட்சம் குறைவரக் கிடைப்பதற்கும், வருங்காலத்தை முன் கூட்டியே உணருகின்ற அற்புதமான ஆற்றலைப் பெற்று வளமுடன் வாழவும் ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரி மூலமாக மந்திரத்தைத் தினம் தோறும் 1000 முறை 45 நாட்கள் ஜெபித்து வர வேண்டும்.

    லட்சுமி கடாட்சம் சக்கரத்தை ஒரு காகிதத்தில் எழுதி தலையணையின் கீழ் வைத்துப்படுத்துக் கொண்டால் நாம் விரும்பிய பொருளை அடையும் வழி முறைகளைக் கனவு மூலம் அறிந்து கொள்ளலாம். தேவிக்கு நிவேதனமாகப் பால் பாயாசத்தை படைக்கலாம். இந்தச் சக்கரத்தை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் பதித்துப் பூஜை செய்து வீட்டில் பூஜையறையில் சட்டம் போட்டு வைத்தால் லட்சுமி கடாட்சம் குறைவின்றி கிடைக்கும்.

    ஒரு தட்டில் விபூதியைப் பரப்பி அதில் எழுதி வரலாம். நற்பலன்கள் கிட்டும். அதற்கான மந்திரம்.

    “தடித்வந்தம் ஸக்த்யா திமிர பரிபந்த்தி-ஸ்புரணயா
    ஸ்புரந்-நா நாரத் நாபராண - பரிணத் தேர்த்ர -தனுஷம்.
    தவ ஸ்யாமல் மேகம் கம்பி மணிபூரனரக- ஸரணம்
    நிஷேவ வர்ஷந்தம் ஹரமிஸிர- தப்தம் த்ரிபுவநம”

    இந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது காலை வேளையில் வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமர்ந்து கொள்வது மிகவும் சிறப்பாகும். அன்னையின் அருள் கிடைப்பதற்கு உதவும் இந்தச் சக்கரமும் மந்திரமும் அனைவராலும் போற்றப்படுகிறது.
    வில்வ இலையை பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக நினைத்துக் கொண்டு கீழ்காணும் இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
    “நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
    ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
    ஸம்ஸுர விஷவைத்யஸ்ய ஸும்பஸ்ய கருணாநிதே
    அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே”

    பொருள்: போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலான சிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும். இந்த அர்ச்சனை ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்குமாம்.
    பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.
    பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.

    ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
    ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
    பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:

    இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
    ஓம் நம சிவாய 
    குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள்.
    நாம் வழிபடும் தெய்வங்களுக்கு மூலமந்திரங்கள் உள்பட பலவகைப்பட்ட மந்திரங்கள் உள்ளன. காயத்ரிமந்திரம், மாலா மந்திரம், அஷ்டகம், தியானம், (16) நாமாவளி என்று இருக்கிறது. இவற்றில் சேராமல் மிகவும் சக்தி வாய்ந்தது பதஞ்சலி முனிவர் அருளிய சிந்தாமணி மந்திரம். கேட்டதைத் தரும் சிந்தாமணி என்பது சான்றோர் வாக்கு. அப்படிப்பட்ட குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள். சிந்தாமணி மந்திரத்தால் லட்சுமி குபேரன் மகிழ்ந்து செல்வம் செழிக்க அருள்புரிவார்.

    குபேர சிந்தாமணி மந்திரம்

    ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம்
    உனபதுமாம் தேவஸக |
    கீர்த்திஸ்ச மணினா ஸக:
    ப்ராதுர் பூதேஸ்மி ||
    ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம்
    வருத்திம் ததாதுமே |||
    ஓம் குபேராய ஐஸ்வர்யாய
    தனதான்யாதிபதயே
    தன விருத்திம்
    குருகுரு ஸ்வாஹா! ||||

    அதிகாலையில் ஜெபம் செய்து வர வீட்டிலும், தொழிலிலும், செல்வம் சேரும்.
    அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.
    ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி
    யோகேஸ்வரி யோக பயங்கரி
    ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
    முக ஹ்ருதயம் மம வசம்
    ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ

    சொல்லும் முறை

    ஒரு வெள்ளி அல்லது திங்கட்கிழமையில் சாயங்கால வேளையில் சங்கல்பம் செய்து கொண்டு மந்திர வழிபாட்டுப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். தினமும் அதே நேரத்தில் செய்து வர வேண்டும். 90 நாட்கள் தொடர்ந்து செய்து வர சௌபாக்கிய விருத்தி ஏற்பட்டு வாழ்வு வளம் பெறும்.

    பலன்கள்

    அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம் வளரவும்,
    குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது. காயத்ரி மந்திரத்திற்கு இணையானது.
    ×