search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    காக்கும் கனகவேலின்....கந்தசஷ்டி சூரசம்ஹாரம்

    காக்கும் கனகவேலின்....கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தை தினமும் அல்லது சஷ்டி நாட்களில் சொல்லி முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    அழகுவடிவேலாய் வந்த அவதார திருவேலா நீ

    சூரபத்மனை சுருக்கி தனக்குள் அடக்கி
    ஆணவம் வென்ற ஆறுதிருமுகமா நீ

    யாரய்யா நீ கந்தய்யா..என்னய்யா நீ வந்த வழி

    பிரம்மன் மகன் காசிபன்...
    சிவதவம் கலைக்க வந்த மாயை யோடு
    முதல் ஜாமத்தில் கூட...

    சூரனெனும் பத்மன் பிறவியெடுத்து
    தனைவருத்தி சிவநோன்பிருந்து...
    108 யுகம்வாழ்ந்து 10008 அண்டம் அரசாள
    வரம் கேட்டு...பெண்கருஏந்தா பிறவியால்
    தன் சாவு வேண்டி..சிவசரணமடைய.....

    அழிக்கும் சிவன் தந்த அனுமதியில்
    அசுரகணம் தலையேற...

    தேவாதி தேவரெல்லாம் சிறைபட
    இந்திரன் வந்து பூமி ஒளிய
    சிவசிவா எனும்நாமம்
    ஒலமாய்..கையிலாயம் நிறைய

    சவம்காக்கும் சிவம் தவம் விழிக்க
    ஆறுமுக நெற்றிக்கண்ணின் வழி...
    தீப்பொறி எழுந்து ...வாயுபகவான் ஏந்தி வந்து
    தாமரைக்குளம் விட....

    அனல் வழி வடிவெடுக்கிறான்
    ஆறுகுழந்தையென.....அழகுதிரு வடிவேலன்

    கார்த்திகைப்பெண்டீர் கொஞ்சி சீராட்ட
    அன்னைபார்வதி கரமிழுத்துஅணைக்க ...

    ஆறுமுகமும் ஒரு உடலாய் இணைந்து
    இருகை ஒருமேனியாய்..கோடிஅழகாகிறான்
    சேவற்கொடியோன்

    திருவேலேந்தி...போர்முழக்கமிட்டு
    வீரபாகு அனுப்பி சேதிசொல்லி....முருகனவன்
    வீரமகாந்திரபுரி செல்ல

    சிறுபிள்ளை நீயா என் எதிரியென
    அசுரன் சிரித்து விஸ்வரூபமெடுக்க...
    அஞ்சாத பிள்ளையாய்..அம்புவிட்ட கந்தன் வெல்ல

    கடல்வடிவெடுத்து சூரன் அலைசீறி
    கல்லுக்குள் ஈரமாய்...வீர இழுக்கென
    சிறுகுமரனை கொல்ல மறுக்க
    அவனை ஆட்கொண்ட ..ஆறாம்நாள்..
    ஆணவம் அழிக்கிறார்....சஷ்டிப்பெருமான்

    அமைதிவடிவெடுத்த சூரன்..தனை ஆண்டவன் வணக்கி
    அலைகடலாய் அங்கி தங்க ...செந்தூரம் மணக்கும் திரூ ஊரில்
    குமரனும் கோயில் கொள்கிறான்....
    இந்திரன் மருமகனாய்...தெய்வானை மணந்து....

    சேவல்கொடியோனை..சிவாக்னி பெரியோனை
    கமல பிள்ளையென வந்த ஆறுமுகத்தை

    ஒருமுகமாய் ஒருமனதாய்...ஒரே சிந்தையாய்
    சஷ்டியில் விரதமிருந்து....அகப் பையில் ஏந்தி
    அரோகரா...அரோகரா...என்று

    கவசகோஷம் பாடி .....அழகுமுருகன்
    செந்திலாண்டவனை..வணங்கி
    பிறவி மோட்ச வழிபெறுவோமே...
    Next Story
    ×