என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    விநாயகரின் வடிவம் ஓம் எனும் குறியினை கொண்டுள்ளது. இது இந்து மதத்தின் ஆணி வேராகவும் திகழ்கின்றது. ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவலை பார்க்கலாம்.
    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலஇசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்

    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்
    சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

    முப்பழம் நுகரும் மூஷிக வாகன
    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி
    தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
    மாயப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்

    பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி
    கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே

    உவட்டா வுபதேசம் புகட்டிஎன் செவியில்
    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து

    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
    தலம்ஒரு நான்கும் தந்தெனக் கருளி
    மலம்ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அதைப்பதும் காட்டி

    ஆறா தாரத்து அங்குச நிலையும்
    பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழிமுனைக் கபாலமுங் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

    நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்திக்
    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்புங் கருத்தறி வித்து

    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
    குமுத சகாயன் குணத்தையுங் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி
    சண்முக தூலமும் சதுர்மிக சூக்கமும்

    எண்முக மாக இனிதெனக் கருளிப்
    புரியெட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினிற் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி இனிதெனக் கருளி

    என்னை அறிவித்து எனக்கருள் செய்து
    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
    இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன

    அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்
    எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச்
    சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி

    அணுவிற்க்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

    நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத்
    தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே!
    பைரவர் சஷ்டி கவசம் நினைத்தாலே இன்பம் தரும். தேய்பிறை அஷ்டமியான இன்று பைரவர் சஷ்டி கவசத்தை படித்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    பைரவர் சஷ்டி கவசம்
    வணங்குவோர்க்கு வாழ்வு தரும்
    வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
    போற்றுவோர்க்கு புகழ் தரும்
    தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்
    நினைத்தாலே இன்பம் தரும்
    நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!
    பக்தர் பரவசமுற பலன்தரும்
    பைரவர் திருவடியே கதி
    சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்
    திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
    அகிலம் போற்றும் அஷ்டபைரவர்
    அன்பால் காக்கும் ஆனந்ததபைரவர்
    சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்
    சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
    சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்
    சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்
    வருக வருக வடுகபைரவா வருக
    வளம் தர வருக வஜ்ரபைரவா வருக
    வருக வருக உக்கிர பைரவா வருக
    உவகைதர வருக உலக பைரவா வருக
    பைரவி போற்றும் பைரவா வருக
    ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக
    ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக
    ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக
    காலத்தின் நாயகா கால பைரவா வருக
    கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக
    நலம் தரும் நரசிங்க பைரவா வருக
    நாளும்காக்கும் நாக பைரவா வருக
    கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக
    ஞாலம் போற்றும் ஞான பைரவா வருக
    தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக
    மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக
    அவலம் போக்கும் அஸிதாங்க பைரவா வருக
    குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக
    உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக
    திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக
    சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக
    ருசியான உணவு தரும் ருருபைரவா வருக
    சந்தோஷம் தரும் சம்கார பைரவா வருக
    பித்தம் போக்கும் பீஷண பைரவா வருக
    வருக வருக வரமருளும் வரத பைரவா வருக
    தருக தருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக
    பருக பருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக
    பெருக பெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக
    நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக
    சதிராடும் சர்பப பைரவா வருக
    ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக
    பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக
    சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்
    முப்புரமெரி செய் முக்கண்ணும்
    முகவழகுகூட்டும் நாசியும்
    சீற்றம் காட்டும் சிங்க பல்லும்
    இடது செவியில் பெண்ணாபரணமும்
    இன்பமூட்டும் இளநகையும்
    அழகிய தோளும் அற்புத அழகும்
    மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்
    எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்
    இளமை காட்டும் வாலிபமும்
    மணிஒசை தரும் கிண்கிணியும்
    கையிலே கபாலமும் சூலமும்
    தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்
    ஏற்றம் தரும் தோற்றமாய்
    பத்தினி பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்
    பரவசம் தர வருகவே வருகவே
    மெய் உணவு கேட்ட மெய்யடியாரே
    உய்ய வழிகாட்டும் உத்தமரே
    பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே
    சேய் மகிழ விரைந்து வருவீரே
    ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க
    அன்னை பார்வதி மனம் நொந்திடவே
    ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி
    அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்
    தலையொன்று துண்டான பிரமனும் சாபமிட்டான்
    தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்
    கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றிடவே
    பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே
    கற்றவர் போற்றும் காசியாம்
    பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்
    எங்கும் திரிந்தான் பரமன்
    காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே
    கபாலம் நீங்கிடவே விசுவநாதரை வணங்கிட்டார்
    காசியிலே நின் ஆட்சி நிலைக்கட்டுமென்றார்
    கால பைரவராய் ஈசனிருந்திட்டான்
    காலமெல்லாம் இன்னல் தீர்த்திட்டான்
    மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே
    ஜீவப்பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே
    பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்
    கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை
    வீடுதேடியொரு வேளையிலே
    பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே
    ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்
    தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே
    எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்
    அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்
    அழிந்திடத் தான் வேண்டுமென்றே
    பிரிம சிரம் துண்டித்தான் எம்பிரானே
    பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்
    காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்
    கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்
    மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்
    எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்
    முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்
    அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி
    ஆண்டியாய் அகிலம்மெலாம் சுற்றிவந்தார் பரமனே
    இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்
    இடையிலே வந்த விச்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்
    விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்
    கபாலமே நிறையவில்லை மயங்கிவிட்டார் மஹாவிஷ்ணு
    கண்ணான கணவன் மயங்கிவிழவே
    கதறி அழுதிட்டாள் மஹாலட்சுமி
    கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்
    மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ
    மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ
    மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்
    பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே
    இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்
    அந்தகாகரனென்னும் புதல்வனும் அகரனானான்
    அகிலத்தையே ஆட்டி படைத்தான்
    அன்னையுருவு கண்டு ஆசைபட்டான்
    அவனை அழித்து அல்லல் அகற்றினார்
    மணி மல்லர்கள் செயிதிட்ட கொடுமை அதிகம்
    இனியொரு விதி செய்தே மக்களை காக்க
    கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே
    மதிகெட்டவர்களை அழித்திட்டார்
    முண்டன் என்றொரு கொடியவன்
    கண்டபடி தந்தான் துன்பங்களை
    அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்
    பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே
    எண்ணங்களிலே மாற்றம் தரும்
    இதயத்திலே எழுச்சி தரும்
    அடியவருக்கு அருள் புரியும்
    பைரவ புராணத்தை பாடிடுவோம்
    காலத்தின் நாயகன் கால பைரவனென்றே
    ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே
    விதியும் அவனே வெற்றியும் அவனே
    வேதமும் அவனெ வேதநாயகனும் அவனே
    அட்டவீரட்ட தலங்கள் அற்புத தலங்கள்
    ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்
    அம்பலவாணன் பைரவருபமான இடங்கள்
    அகிலத்தோரை காத்திட்ட தலங்கள்
    தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்
    ஐந்து முக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்
    எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரே தெய்வம்
    அத்துனை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே
    எங்கும் பைரவர் எதிலும் பைரவர்
    என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க
    ஐந்துதலையரசே ஆகாசபைரவரே
    அல்லல் நீங்கிட வருவீரே
    தலைதனை தரபாலன பைரவர் காக்க
    கேசந்தனை கேசர பைரவர் காக்க
    நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க
    கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க
    செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க
    நாசிதனை நர்த்தன பைரவர் காக்க
    வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க
    நாக்கினை நானாரூப பைரவர் காக்க
    கழுத்தினை கராள பைரவர் காக்க
    தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க
    கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க
    மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க
    விலாவினை விருபாச பைரவர் காக்க
    வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க
    இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க
    மறைவுப்பகுதிதனை மங்கள பைரவர் காக்க
    தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க
    முழங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க
    பாதம்மிரண்டும் பரம பைரவர் காக்க
    விரல்களனைத்தும் விஜய பைரவர் காக்க
    இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி
    சங்கடம்தரும் சர்க்கரை நோய் போக்குவாய் போற்றி
    சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி
    உயிர்கொல்லி நோய் போக்குவாய் போற்றி
    உன்மதம் போக்குவாய் போற்றி
    குருட்டை நீக்குவாய் போற்றி
    கர்ப்ப தோஷம் போக்குவாய் போற்றி
    உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி
    ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி
    இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி
    சளித்தொல்லை போக்குவாய் போற்றி
    சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி
    விஷ பயம் போக்குவாய் போற்றி
    பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி
    விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி
    பகைமையை அழிப்பாய் போற்றி
    உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி
    அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி
    தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி
    முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி
    நல்லதொரு துணைதருவாய் போற்றி
    துணையின் துன்பம் களைவாய் போற்றி
    சந்தானபாக்கியம் தருவாய் போற்றி
    புத்திரதோஷம் போக்குவாய் போற்றி
    கடன்தொல்லை நீக்குவாய் போற்றி
    களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி
    என்றும் புகழ் தருவாய் போற்றி
    ஏற்றம்பெற செல்வம் தருவாய் போற்றி
    பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி
    பில்லி சூன்யக்கொடுமை போக்குவாய் போற்றி
    கெட்டவர் சதிதிட்டம் அழிப்பாய் போற்றி
    பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி
    சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக
    பாசமிகு பைரவமுர்த்தியே வருக
    காலனைவிரட்டும் கால பைரவா வருக
    ஸமயோசித புத்தி தரும் சமயபைரவா வருக
    கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக
    பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக
    சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக
    சந்ததிதரும் சந்தான பைரவா வருக
    ஆபத்தை நீக்கிடும் ஆதிபைரவா வருக
    சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக
    வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக
    நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக
    சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக
    தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக
    விசாலமனம் தரும் விசாலாஷ பைரவா வருக
    சம்சாரவாழ்வுதரும் சம்சார பைரவா வருக
    குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக
    கல்வி உயர்வுதரும் கபால பைரவா வருக
    மேன்மைதரும் மேகநாத பைரவா வருக
    சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக
    கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக
    அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக
    சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக
    பூதபைசாத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக
    தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக
    காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக
    லாபம் தரும் லோகபால பைரவா வருக
    பூமிசெல்வம்தரும் பூமிபால பைரவா வருக
    ஆற்றல்தரும் ஆகர்ஷண பைரவா வருக
    கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக
    அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக
    தட்சணை பெறுவோருக்குமருளும் தட்சிண்பித்தித பைரவா வருக
    வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக
    அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட்ட பைரவா வருக
    பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக
    குலம்காக்கும் குல பைரவா வருக
    சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக
    ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக
    சிம்மமாய் வாழ்விக்கும் சிவாராஜ பைரவா வருக
    சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக
    கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக
    குற்றம் களையும் குல பால பைரவா வருக
    சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக
    கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக
    புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக
    லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜ பைரவா வருக
    நிறைவான வாழ்தரும் நீலகண்ட பைரவா வருக
    சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக
    கஷ்டத்தில் காத்திடும் கால ராஜ பைரவா வருக
    பிதுர்க்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக
    மண்டலம் போற்றும் ருண்ட மால பைரவா வருக
    விருப்பமானவற்றை தரும் விஸ்வருப பைரவா வருக
    சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக
    கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ர பைரவா வருக
    பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக
    எதிர்ப்பழிக்கும் மகாரெளத்ர பைரவா வருக
    சோபித வாழ்வு தகும் சோமராஜ பைரவா வருக
    பீடுநடைபோடவைக்கும் பிரேசத பைரவா வருக
    பூர்வீக சிற்ப்புதரும் பூத வேதாள பைரவா வருக
    ரத்த பாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக
    பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக
    வினைகள் தீர்க்கும் விக்ன ராஜ பைரவா வருக
    நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாண பைரவா வருக
    சக்திக்கு பாதியுடல்தந்த சச்சிதானந்த பைரவா வருக
    அட்டாமாசித்திதரும் ஓங்கார பைரவா வருக
    பைரவப்ரியர் போற்றும் சிவ பைரவா வருக
    பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக
    ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக
    முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக
    பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்
    பக்தரை காக்கும் நல்லதொரு கவசம்
    சண்முகசுந்த்தரம் பாடிய கவசம்
    நவபைரவர் அருளும் நற்கலசம்
    பைரவ சஷ்டி கவசம் இதனை
    செப்பிடுவோர் ஜெகமாள்வர்
    ஓதுவோர் ஒங்குபுகழ் பெறுவர்
    கூறுவோர் கூற்றனை வெல்வர்
    வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்
    பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்
    சொல்வோர் சொத்துக்களை பெறுவர்
    கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்
    சரணம் சரணம் பைரவா சரணம்
    சரணம் சரணம் ஸம்ஹார சரணம்
    சரணம் சரணம் திருவடி சரணம்

    ஸ்ரீ காலபைரவர் திருவடிகள் துணை
    ஸ்ரீ வைரவா போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை
    அனுமனின் இத்துதியை மனமார பாராயணம் செய்து அனுமனுக்கு வெண்ணெய், வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபட மனசஞ்சலம், பலவீனம் அகன்று மன அமைதி, ஆத்மஞானம் அனைத்தும் கிட்டும்.
    "ஆஞ்சநேய மதி பாடலானனம்
    காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
    பாரிஜாத தருமூலவாஸிநம்
    பாவயாமி பவமான நந்தனம்"

    மூலமந்திரம்:

    ஓம் நமோ பகவதே
    ஹனுமதே மம மதநக்ஷோபம்
    ஸம்ஹர ஆத்மதத்வம் ப்ரகாஸய
    ஹூம்பட் ஸ்வாஹா.

    அனுமனின் இத்துதியை மனமார பாராயணம் செய்து அனுமனுக்கு வெண்ணெய், வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபட மனசஞ்சலம், பலவீனம் அகன்று மன அமைதி, ஆத்மஞானம் அனைத்தும் கிட்டும்.
    கமலாம்பிகை தேவிக்குரிய அஷ்டகம் மந்திரம் இது. இந்த அஷ்டகத்தை தினமும் ஜெபிப்பதால் விரும்பிய எதுவும் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும்.
    பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம்
    ப்ருந்தார கைர்வந்திதாம்
    மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம்

    மந்தஸ்மிதாம் ஸுந்தரீம்
    பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம்
    போகாபவர் கப்ரதாம்
    வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
    வாஞ்சானுகூலாம் ஸிவாம்

    கமலாம்பிகை தேவிக்குரிய அஷ்டகம் மந்திரம் இது. இந்த அஷ்டகத்தை தினமும் காலை மற்றும் மாலையில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வருவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, அம்பிகையின் படத்திற்கு முன் தீபம் ஏற்றி, இந்த மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை ஜெபிப்பதால் விரும்பிய எதுவும் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். 
    ​செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
    வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

    இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது. செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.

    அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.

    கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

    நவக்கிரகங்களில் ராஜகிரகமாக விளங்கும் சூரியனை வழிபட்டு, சூரியனுக்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்வதன் மூலம் எதிரிகள் விலகுவர்.
    நவக்கிரகங்களில் ராஜகிரகமாக விளங்கும் சூரியனை வழிபட்டு, சூரியனுக்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்வதன் மூலம் எதிரிகள் விலகுவர். சத்ருக்களை அண்டவிடாமல் இருக்கவும், வெற்றியை நமக்கு வரவழைத்துக் கொடுக்கவும் இந்தச் சூரிய காயத்ரி மந்திரம் நமக்கு உகந்ததாக அமையும். ராமபிரான் தினமும், சூரியனை வழி பாடு செய்ததோடு, ஆதித்ய ஹிருதய சுலோகத்தையும் கூறி வந்ததால், ராவணனை சம்ஹாரம் செய்து வெற்றி கண்டார். பஞ்சபாண்டவர்கள் சூரியனை வேண்டிக்கொண்டதன் மூலம் அட்சய பாத்திரத்தைப் பெற்றனர். எனவே சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் எதிரிகளை வெல்லும் ஆற்றல் நமக்குக் கிடைக்கும்.

    சூரிய காயத்ரி:-

    ‘ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

    பாச ஹஸ்தாய தீமஹி

    தந்நோ சூரிய ப்ரசோதயாத்’

    இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 51 முறை சொல்லலாம். இதைப் படிப்பதன் மூலம் சூரியனின் அருள் கிடைப்பதோடு, அரசாங்க வேலை, உயர் பதவி, அரசியலில் முன்னேற்றம் கிடைக்கும். கண்நோய், காமாலை நோய், இதயநோய் அகலும். சூரிய வழிபாடு வெற்றி வாய்ப்பை வழங்கும். 
    கீழ்க்காணும் சத்யநாராயண அஷ்டோத்திரத்தை தினமும் அல்லது பௌர்ணமி நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் சூழும்; பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
    ஓம் ஸத்ய தேவாய நம
    ஓம் ஸத்யாத்மனே நம
    ஓம் ஸத்ய பூதாய நம
    ஓம் ஸத்ய புருஷாய நம
    ஓம் ஸத்ய நாதாய நம
    ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
    ஓம் ஸத்ய யோகாய நம
    ஓம் ஸத்ய ஜ்ஞானாய நம
    ஓம் ஸத்யஜ்ஞானப்ரியாய நம
    ஓம் ஸத்யநிதயே நம

    ஓம் ஸத்ய ஸம்பவாய நம
    ஓம் ஸத்ய ப்ரபவே நம
    ஓம் ஸத்யேஸ்வராய நம
    ஓம் ஸத்ய காமினே நம
    ஓம் ஸத்ய பவித்ராய நம
    ஓம் ஸத்ய மங்களாய நம
    ஓம் ஸத்ய கல்பாய நம
    ஓம் ஸத்ய ப்ரஜாபதயே நம
    ஓம் ஸத்ய விக்ரமாய நம
    ஓம் ஸத்ய ஸித்தாய நம

    ஓம் ஸத்ய அச்யுதாய நம
    ஓம் ஸத்ய வீராய நம
    ஓம் ஸத்ய போகாய நம
    ஓம் ஸத்ய தர்மாய நம
    ஓம் ஸத்ய க்ரஜாய நம
    ஓம் ஸத்ய ஸந்துஷ்டாய நம
    ஓம் ஸத்ய வராஹாய நம
    ஓம் ஸத்ய பாராயணாய நம
    ஓம் ஸத்ய பூர்ணாய நம
    ஓம் ஸத்ய ஒளஷதாய நம

    ஓம் ஸத்ய சாஸ்வதாய நம
    ஓம் ஸத்ய ப்ரவர்தனாய நம
    ஓம் ஸத்ய விபவே நம
    ஓம் ஸத்ய ஜேஷ்டாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரேஷ்டாய நம
    ஓம் ஸத்ய விக்ரமினே நம
    ஓம் ஸத்ய தன்வினே நம
    ஓம் ஸத்ய மேதாய நம
    ஓம் ஸத்ய தீராய நம
    ஓம் ஸத்ய க்ரதுவே நம

    ஓம் ஸத்ய ஸுசாய நம
    ஓம் ஸத்ய கலாய நம
    ஓம் ஸத்ய வத்ஸலாய நம
    ஓம் ஸத்ய வாஸவே நம
    ஓம் ஸத்ய மோகாய நம
    ஓம் ஸத்ய ருத்ராய நம
    ஓம் ஸத்ய ப்ரும்ஹணே நம
    ஓம் ஸத்ய அம்ருதாய நம
    ஓம் ஸத்ய வேதாங்காய நம
    ஓம் ஸத்ய சதுராத்மனே நம

    ஓம் ஸத்ய போக்த்ரே நம
    ஓம் ஸத்ய அர்சிதாய நம
    ஓம் ஸத்யேந்திராய நம
    ஓம் ஸத்ய ஸங்காய நம
    ஓம் ஸத்ய ஸ்வர்காய நம
    ஓம் ஸத்ய நியமாய நம
    ஓம் ஸத்ய வேதாய நம
    ஓம் ஸத்யவேத்யாய நம
    ஓம் ஸத்ய பீயூஷாய நம
    ஓம் ஸத்ய மாயாய நம

    ஓம் ஸத்ய மோஹாய நம
    ஓம் ஸத்ய ஸுரநந்தாய நம
    ஓம் ஸத்ய ஸாகராய நம
    ஓம் ஸத்ய தபஸே நம
    ஓம் ஸத்ய ஸிம்ஹாய நம
    ஓம் ஸத்ய ம்ருகாய நம
    ஓம் ஸத்ய லோக பாலகாய நம
    ஓம் ஸத்ய ஸ்திராய நம
    ஓம் ஸத்யௌஷதாய நம
    ஓம் ஸத்ய திக்பாலகாய நம

    ஓம் ஸத்ய தனுர்தராய நம
    ஓம் ஸத்ய புஜாய நம
    ஓம் ஸத்ய வாக்யாய நம
    ஓம் ஸத்ய குரவே நம
    ஓம் ஸத்ய ந்யாயாய நம
    ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
    ஓம் ஸத்ய ஸம்விருதாய நம
    ஓம் ஸத்ய ஸம்ப்ரதாய நம
    ஓம் ஸத்ய வஹ்னயே நம
    ஓம் ஸத்ய வாயவே நம

    ஓம் ஸத்ய சிக்ஷராய நம
    ஓம் ஸத்யானந்தாய நம
    ஓம் ஸத்ய நீரஜாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரீபாதாய நம
    ஓம் ஸத்ய குஹ்யாய நம
    ஓம் ஸத்யோதராய நம
    ஓம் ஸத்ய ஹ்ருதயாய நம
    ஓம் ஸத்ய கமலாய நம
    ஓம் ஸத்ய நாலாய நம
    ஓம் ஸத்ய ஹஸ்தாய நம

    ஓம் ஸத்ய பாஹவே நம
    ஓம் ஸத்ய ஜிஹ்வாய நம
    ஓம் ஸத்ய முக்காய நம
    ஓம் ஸத்ய தம்ஷ்டராய நம
    ஓம் ஸத்ய நாஸிகாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரோத்ரே நம
    ஓம் ஸத்ய சக்ஷுஷே நம
    ஓம் ஸத்ய ஸிரஸே நம
    ஓம் ஸத்ய மகுடாய நம
    ஓம் ஸத்யாம்பராய நம

    ஓம் ஸத்ய ஆபரணாய நம
    ஓம் ஸத்ய ஆயுதாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரீவல்லபாய நம
    ஓம் ஸத்ய குப்தாய நம
    ஓம் ஸத்ய த்ருதாய நம
    ஓம் ஸத்யபாமா ரதாய நம
    ஓம் ஸத்ய கரஹரூபிணே நம
    ஓம் ஸத்ய நாராயணஸ்வாமி தேவதாப்யோ நமோ நம!
    தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த சிவ மந்திரங்களை சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    * நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்

    * அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்

    * வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.

    * அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்

    * ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

    * கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்

    * ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்

    * ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.

    * நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.

    * உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்
    .
    * கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்

    * சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.

    * நமசிவாயவங் - பூமி கிடைக்கும்

    * சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்

    * சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்

    * சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்

    * அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்

    * அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்

    * ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்

    * லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்

    * ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்

    * ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்

    * ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்

    * ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்

    * ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்

    எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
    சண்டிகேஸ்வரருக்கு உகந்த இந்த போற்றியைச் சொன்னால் மன உறுதி கிடைக்கும். இவரை 108 அர்ச்சனை மலர்கள் தூவி கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடலாம்.
    சிவாலயங்களுக்கு செல்பவர்கள் சண்டிகேஸ்வரரை வழிபட்டால் மட்டுமே, கோயிலுக்குச் சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த போற்றியைச் சொன்னால் மன உறுதி கிடைக்கும். இவரை 108 அர்ச்சனை மலர்கள் தூவி கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடலாம்.

    1. ஓம் அருள்வடிவே போற்றி
    2. ஓம் அபயவரதனே போற்றி
    3. ஓம் அந்தணனே போற்றி
    4. ஓம் அனுகூலனே போற்றி
    5. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    6. ஓம் அகத்துள் ஆழ்ந்தவனே போற்றி
    7. ஓம் அன்பர்க்கு எளியவனே போற்றி
    8. ஓம் அரவப்புரியோனே போற்றி
    9. ஓம் ஆதிசிவன் வடிவே போற்றி
    10. ஓம் ஆதிசண்டேஸ்வரனே போற்றி
    11. ஓம் இடையனே போற்றி
    12. ஓம் இனியவனே போற்றி
    13. ஓம் இடையூறு களைபவனே போற்றி
    14. ஓம் இறையருள் கூட்டுவிப்பவனே போற்றி
    15. ஓம் ஈராறு கண்ணனே போற்றி
    16. ஓம் ஈசானத்து அமர்ந்தவனே போற்றி
    17. ஓம் உத்தமனே போற்றி
    18. ஓம் உறுதி நெஞ்சனே போற்றி
    19. ஓம் உறுதுணையே போற்றி
    20. ஓம் எளியவனே போற்றி
    21. ஓம் எச்சத்தன் சேயே போற்றி
    22. ஓம் ஏற்றம் தரும் தெய்வமே போற்றி
    23. ஓம் ஐயனே போற்றி
    23. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
    24. ஓம் கஜவாகனனே போற்றி
    25. ஓம் கமண்டலதாரியே போற்றி
    26. ஓம் கலியில் இருகரனே போற்றி
    27. ஓம் கரியுரி அணிந்தவனே போற்றி
    28. ஓம் களங்கமிலானே போற்றி
    29. ஓம் காலமெல்லாம் அருள்பவனே போற்றி
    30. ஓம் கிருபாநிதியே போற்றி
    31. ஓம் கிருதயுகத்து பதினாறுகரனே போற்றி
    32. ஓம் கும்பிடுங்கையனே போற்றி
    33. ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
    34. ஓம் கொன்றைப் பிரியனே போற்றி
    35. ஓம் கோ ரட்சகனே போற்றி
    36. ஓம் சங்கு நிறனே போற்றி
    37. ஓம் சடைமுடியனே போற்றி
    38. ஓம் சச்சிதானந்தனே போற்றி
    39. ஓம் சண்டீசன் ஆனவனே போற்றி
    40. ஓம் சாந்தரூபனே போற்றி
    41. ஓம் சாயுஜ்யம் அளிப்பவனே போற்றி
    42. ஓம் சிவபக்தனே போற்றி
    43. ஓம் சிவகண நாயகனே போற்றி
    44. ஓம் சிவபாலனே போற்றி
    45. ஓம் சிங்க வாகனனே போற்றி
    46. ஓம் சிவபூஜைப் பிரியனே போற்றி
    47. ஓம் சிவ பிரசாதம் ஏற்பவனே போற்றி
    48. ஓம் சிவனருள் பெற்றவனே போற்றி
    49. ஓம் சிவாலய தேவனே போற்றி
    50. ஓம் சிரஞ்சீவியே போற்றி
    51. ஓம் சிவனிடம் இட்டுச்செல்வோனே போற்றி
    52. ஓம் சிகரமாய் விளங்குவோனே போற்றி
    53. ஓம் சுருதிப்பிரியனே போற்றி
    54. ஓம் சூலதாரியே போற்றி
    55. ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
    56. ஓம் சேய்ஞலூரனே போற்றி
    57. ஓம் ஞானியே போற்றி
    58. ஓம் ஞானியர் காவலனே போற்றி
    59. ஓம் தவசியே போற்றி
    60. ஓம் தனித்திருப்போனே போற்றி
    61. ஓம் தயாபரனே போற்றி
    62. ஓம் தனிச்சன்னதியுள்ளானே போற்றி
    63. ஓம் துவாபரத்து நாற்கரனே போற்றி
    64. ஓம் தியானேஸ்வரனே போற்றி
    65. ஓம் திரேதாயுகத்து எண்கரனே போற்றி
    66. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    67. ஓம் தேஜஸ் ரூபியே போற்றி
    68. ஓம் நாற்கரனே போற்றி
    69. ஓம் நற்றவ நாயகனே போற்றி
    70. ஓம் நல்வழிப்படுத்துபவனே போற்றி
    71. ஓம் நாயனார் ஆனவனே போற்றி
    72. ஓம் நாடப்படுவனே போற்றி
    73. ஓம் நூல் வடிவினனே போற்றி
    74. ஓம் நித்தியனே போற்றி
    75. ஓம் நிர்மலனே போற்றி
    76. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    77. ஓம் நீறணிந்தவனே போற்றி
    78. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    79. ஓம் பிரம்ம ஞானியே போற்றி
    80. ஓம் பிரசண்டனே போற்றி
    81. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
    82. ஓம் பவித்ரனே போற்றி
    83. ஓம் பவித்ரை குமாரனே போற்றி
    84. ஓம் பத்மாசனனே போற்றி
    85. ஓம் பதமளிப்பவனே போற்றி
    86. ஓம் புனிதனே போற்றி
    87. ஓம் பூஜைபலன் அருள்வோனே போற்றி
    88. ஓம் பெரியவனே போற்றி
    89. ஓம் பேரருளாளனே போற்றி
    90. ஓம் மண்ணிக்கரை மணியே போற்றி
    91. ஓம் மறையோருள் மாணிக்கமே போற்றி
    92. ஓம் முக்கண்ணனே போற்றி
    93. ஓம் முன்னிலையறிந்தோனே போற்றி
    94. ஓம் மோனனே போற்றி
    95. ஓம் மோட்சமளிப்பவனே போற்றி
    96. ஓம் ரிஷப வாகனனே போற்றி
    97. ஓம் ரட்சிப்பனே போற்றி
    98. ஓம் ருத்ராட்சனே போற்றி
    99. ஓம் ருத்ராட்சம் அணிந்தவனே போற்றி
    100. ஓம் வழித்துணையே போற்றி
    101. ஓம் வரமருள் தேவனே போற்றி
    102. ஓம் வித்தகனே போற்றி
    103. ஓம் விசாரசர்மனே போற்றி
    104. ஓம் வில்வப்பிரியனே போற்றி
    105. ஓம் வீடளிப்பவனே போற்றி
    106. ஓம் சர்வ உபகாரனே போற்றி
    107. ஓம் சர்வ வல்லமை தருவோனே போற்றி
    108. ஓம் சண்டிகேஸ்வரனே போற்றி! போற்றி.
    இத்துதியில் ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் ஸெளபாக்யவர்த்தனீ இரகசியம் அடங்கி உள்ளதாக ஸ்ரீ சங்கரரே சொல்லி இருக்கிறார். இதை தினமும் மூன்று முறை ஸ்ரீசக்கரத்தை வணங்கிக் கூறலாம்.
    ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜன விதி:
    ஸீதா ஸீதேச் சந்த்ரோபல ஜலல வைராக்ய ரசனா
    ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸெளஹித்ய கரணம்
    த்வதீயாபிர் வாக்பிஸ் தவஜனனி வாசாம் ஸ்துதிரியம்

    (இத்துதியில் ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் ஸெளபாக்யவர்த்தனீ இரகசியம் அடங்கி உள்ளதாக ஸ்ரீ சங்கரரே சொல்லி இருக்கிறார். இதை தினமும் மூன்று முறை ஸ்ரீசக்கரத்தை வணங்கிக் கூறலாம்).

    அன்னையே போற்றி! ஞாலத்து அல்லலை ஒழிப்பாய் போற்றி!
    துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து
    நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி! நல்லோர்க்கு
    உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!

    மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.

    சிவசக்கரம் ஒரு நான்கும் வடதிசையை நோக்க
    தேவியுடன் ஐந்து வட்டம் தென்புறமே பார்க்க
    பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட யோனியதுவாக
    சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக
    சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக
    நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய்
    நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய்

    வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் இட்டுக் கொண்டு மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும். ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுக யோகங்கள் அதிகரிக்கும்.
    ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.
    ஸ்ரீசக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீசக்கரம் இருப்பதைக் காணலாம். ஆனால், எல்லோருமே செல்வச் செழிப்புடன் நலமோடு இருக்கிறார்களா? இல்லையே! காரணம் ஸ்ரீசக்கர வழிபாட்டுக்கான விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்காததுதான்.

    ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும். பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம். பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப் பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.

    வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும். வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும். பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.

    ஸ்ரீ சக்கர பூஜையின்போது, முதலில் குரு வந்தனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும். ஆத்மதத்வம் சோதயாமி, வித்யா தத்வம் சோதயாமி, சிவதத்வம் சோதயாமி, சர்வ தத்வம் சோதயாமி என்று நான்கு முறை தீர்த்தம் உட்கொள்ள வேண்டும். அன்றைய திதி-வாரம்-நட்சத்திரம் சொல்லிக்கொண்டு, மம குடும்ப சௌபாக்ய தனவிருத்தியர்த்தம் ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரி அனுக்ரஹ ப்ரசாத சித்யர்த்தம் ஸ்ரீசக்ர பூஜாம் கரிஷ்யே என்று மலர் எடுத்து ஸ்ரீசக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
    அடுத்ததாக,

    தீபதேவி மகாதேவி சுபம் பவதுமே ஸதா
    யாவத் பூஜா ஸமாப்தி:ஸ்யாத் தாவத் ப்ரஜ்வல ஸஸ்திரா:

    என்று அருகில் உள்ள குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் மலர் சமர்ப்பிக்க வேண்டும். சுத்தமான தாம்பாளத்தில் ஸ்ரீ சக்கரத்தை வைத்து மஞ்சள் பொடி, அரிசி மாவுப்பொடி அபிஷேகப்பொடி, எலுமிச்சம்பழம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்து பட்டுத்துணியால் சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சாற்றி தயாராக வைக்கவும். கைகளைக் கூப்பியபடி தியானம் செய்யவேண்டும்.

    அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம் த்ருத
    பாசாங்கு சபுஷ்பபாண சாபாம்
    அணிமாதிபி ராவ் ருதாம் மயூகை: அஹமித்யேவ விபாவயே பவானீம்
    மகாபத்ம வனாந்தஸ்தே தாரணா நந்த விக்ரணே
    சர்வபூத ஹிதே மாத: ஏகி யேகி பரமேஸ்வரி
    ஸ்ரீலலிதா மகா த்ரிபுர சுந்தரீம் சௌபாக்ய லக்ஷ்மி ஸ்வரூபிணீம் யந்திர ஸ்தானே
    ஆவாகயாமி ஸ்வாகதம் தர்ஸயாமி.
    சமஸ்த சக்ர சக்ரேசி யுதே தேவி நவாத்மிகே
    ஆராத்திக மிதம் துப்யம் க்ருஹாண மம சித்தயே -

    என்று சொல்லி வணங்கிய பிறகு, கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, குங்குமமும் சேர்த்து அர்ச்சனை செய்க. (ஸ்ரீ சக்கரத்தை முதலில் பிரதிஷ்டை செய்து வழிபட ஒன்பது ஆவரண பூஜை என்ற விதியில் அதிகமான மந்திரங்கள் இருப்பதால் அவற்றைத் தொகுத்து இலகுவான பூஜையாக இங்கே தந்துள்ளோம்)

    ஓம் ஹ்ருதய தேவ்யை நம;
    ஓம் சிரோ தேவ்யை நம:
    ஓம் சிகா தேவ்யை நம:
    ஓம் கவச தேவ்யை நம:
    ஓம் நேத்ர தேவ்யை நம:
    ஓம் அஸ்திர தேவ்யை நம:
    ஓம் காமேஸ்வர்யை நம:
    ஓம் பகமாலியை நம:
    ஓம் நித்யக்லின்னாயை நம:
    ஓம் பேருண்டாயை நம:
    ஓம் வன்னிவாசின்யை நம:
    ஓம் மகா வஜ்ரேஸ்வர்யை நம:
    ஓம் சிவதூத்யை நம:
    ஓம் த்வரிதாயை நம:
    ஓம் குலசுந்தர்யை நம:
    ஓம் நித்யாயை நம:
    ஓம் நீல பாதகாயை நம:
    ஓம் விஜயாயை நம:
    ஓம் சர்வ மங்களாயை நம:
    ஓம் ஜ்வாலாமாலின்யை நம:
    ஓம் சித்ராயை நம:
    ஓம் லலிதா மகாநித்யாயை நம:
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சௌம் லலிதா
    மகாதிரிபுர சுந்தரீ ஸ்ரீ சக்ர மாதாயை நம:
    நானாவித பத்ரபுஷ்பாணி சமர்ப்பயாமி

    என்று கூறி தேவியை துதித்து, தூபதீபம் காட்டியபின் பழம் வைத்து நிவேதித்து, வாசனை மலர்களில் சந்தனம் தெளித்து கையில் எடுத்துக்கொண்டு சௌந்தர்ய லஹரியை முழுவதும் பாடிய பலனைத் தரும் ஒரு துதியைக் கூறவும். ஸ்ரீசக்ரத்திற்கு உரிய விசேட நவாவர்ண பூஜையை சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை, ஆடி, பவுர்ணமிகளில் கூட்டாகச் செய்யலாம்.
    அமாவாசை அன்று தொடங்கி குறைந்தது 10 ஞாயிற்றுக்கிழமைகள் 108 முறை சொல்லி வரலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசையில் செய்ய மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
    சூரியன் இன்றி உலக இயக்கம் இல்லை.
    நவக்கிரஹங்களில் ஒருவராகவும்,
    நவக்கிரகங்களுக்குத் தலைவராகவும் போற்றப்படுகிறார்.
    பஞ்ச பூதங்களில் அக்னி அம்சமாகக் கருதப்படுபவர்.
    சூரியன் வெப்பத்தை அளிக்கிறது.
    ஆனால், குளிர்ச்சியைத் தரும் சந்திரனும் கூட
    சூரியனிடம் இருந்தே அதற்கான
    சக்தியைப் பெற்றுச் செயல்படுகிறது.

    மந்திரத்தின் பலன்கள்

    அக்னி சூரிய மந்திர பலத்தால் கர்ம வினையின் கெடுபலன்கள் வெகுவாகக் குறையும். பித்ரு தோஷம் தீரும்.  வேலையில், அதிகாரிகளுடன்  உள்ள பிரச்சனைகள் தீரும்.
    அதோடு வேலை, தொழில், அரசாங்க காரியம் இவற்றில் உயர்வும் கிட்டும். இதை குடும்பத்தில் உள்ள யாவரும் தனியாகவோ அல்லது சேர்ந்தோ செய்யலாம்.

    சொல்லும் முறைகள்

    அமாவாசை அன்று துவங்கிக் குறைந்தது 10 ஞாயிற்றுக்கிழமைகள் 108 முறை சொல்லி வரலாம். (அ)  ஒரே நாளில் (அமாவாசை அன்று)  1008 முறை சொல்லி வரலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசையில்  செய்ய மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

    மந்திரம்

    ஓம் பூர் புவ ஸூவஹா |அக்னயே ஜாதவேத இஹாவஹா |
    சர்வகர்மாணி சாதய சாதய ஸ்வாஹா ||
    ×