search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீசக்கர பூஜை
    X
    ஸ்ரீசக்கர பூஜை

    தினமும் ஸ்ரீசக்கரத்தை வணங்கி 3 முறை இந்த துதியை சொல்லுங்கள்

    இத்துதியில் ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் ஸெளபாக்யவர்த்தனீ இரகசியம் அடங்கி உள்ளதாக ஸ்ரீ சங்கரரே சொல்லி இருக்கிறார். இதை தினமும் மூன்று முறை ஸ்ரீசக்கரத்தை வணங்கிக் கூறலாம்.
    ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜன விதி:
    ஸீதா ஸீதேச் சந்த்ரோபல ஜலல வைராக்ய ரசனா
    ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸெளஹித்ய கரணம்
    த்வதீயாபிர் வாக்பிஸ் தவஜனனி வாசாம் ஸ்துதிரியம்

    (இத்துதியில் ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் ஸெளபாக்யவர்த்தனீ இரகசியம் அடங்கி உள்ளதாக ஸ்ரீ சங்கரரே சொல்லி இருக்கிறார். இதை தினமும் மூன்று முறை ஸ்ரீசக்கரத்தை வணங்கிக் கூறலாம்).

    அன்னையே போற்றி! ஞாலத்து அல்லலை ஒழிப்பாய் போற்றி!
    துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து
    நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி! நல்லோர்க்கு
    உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!

    மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.

    சிவசக்கரம் ஒரு நான்கும் வடதிசையை நோக்க
    தேவியுடன் ஐந்து வட்டம் தென்புறமே பார்க்க
    பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட யோனியதுவாக
    சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக
    சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக
    நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய்
    நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய்

    வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் இட்டுக் கொண்டு மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும். ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுக யோகங்கள் அதிகரிக்கும்.
    Next Story
    ×