என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப்பெண்கள் தினமும் மூன்று முறை தினம் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்பிரசவம் ஆகி பரம க்ஷேமங்கள் ஏற்படும்.
    ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத
    மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின்
    சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ
    ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே!

    இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப்பெண்கள் தினமும் மூன்று முறை தினம் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்பிரசவம் ஆகி பரம க்ஷேமங்கள் ஏற்படும். முன்னோர்கள் தொன்றுதொட்டு சொல்லிவந்த ஸம்பிரதாயமான ஸ்லோகம் இது.

    மேலும் கடவுள் கிருபையால் சுகபிரசவம் ஆனபிறகு ஸ்ரீதாயுமான ஸ்வாமிக்கு தாரோடு வாழைப்பழமும், பசும்பாலும் அர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

    வெளியூர்க்காரர்கள் கருவுற்றது முதல் பிரசவம் ஆகும் வரை தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வந்தாலே போதும்.
    படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள் சிறந்து விளங்க தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.
    வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம்
    ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம்
    பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம்
    பார்ஸேவே பங்கஜஸங்க்க   பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி:

    இந்த ஸ்லோகத்தை நவராத்திரி 9 நாட்களும் சொல்லி அன்னையை வழிபாடு செய்து வந்தால் துன்பம் நீங்கி நன்மை உண்டாகும்.
    1 தன லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

    2 வித்யா லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

    3 தான்ய லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

    4 வீர லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    5 ஸௌபாக்ய லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    6 சந்தான லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    7 காருண்ய லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    8 ஆதி லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

    சரஸ்வதி கல்வியின் தெய்வம். சரஸ்வதிக்கு தேவிக்கு உகந்த இந்த பாடலை நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் மாலையில் பாடி பூஜை செய்து வரலாம்.
    கலைவாணி நின் கருணை தேன்மழையே
    விளையாடும் என் நாவில் செந்தமிழே
    அலங்கார தேவதையே வனிதாமணி
    இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
    மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
    அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
    ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
    சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
    வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
    வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
    வானகம் வையகம் உன் புகழ் பாடும்.
    இன்று தொடங்கும் நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
    இன்று தொடங்கும் நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

    லட்சுமி பாடல் :

    செல்வத் திருமகளே! மோகனவல்லியே!
    எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!
    எண் கரங்களில் சங்கு சக்கரம்
    வில்லும் அம்பும் தாமரை
    மின்னும் கரங்களில் நிறைகுடம்
    தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!
    வரத முத்திரை காட்டியே
    பொருள் வழங்கும் அன்னையே!
    சிரத்தினில் மணி மகுடம்
    தாங்கிடும் சிந்தாமணியே!
    பல வரம் வழங்கிடும் ரமாமணியே!
    வரதராஜ சிகாமணியே!
    தாயே! தனலட்சுமியே!
    சகல வளமும் தந்திடுவாய்
    நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
    காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
    காசி விசாலாட்சி கருணாம்பிகையே!
    தருணம் இதுவே தயை புரிவாயம்மா!
    பொன் பொருள் எல்லாம்
    வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!
    ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்
    என் அன்னை நீயே அம்மா!
    மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!
    மங்கலத் தாயே நீ வருவாயே!
    என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!
    எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!
    பயிர்களில் உள்ள பசுமையில்
    கண்டேன் பரமேஸ்வரி உனையே!
    சரண் உனை அடைந்தேன்
    சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!
    அரண் எனக் காப்பாய்
    அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!
    நம் துன்பங்கள் போக தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் இந்த சீரடி சாய்பாபாவின் தியான மந்திரத்தை 108 முறை சொல்லி வரலாம்.
    பத்ரி க்ராம ஸமத் புதம்
    த்வாரகா மாயீ வாசினம்
    பக்தா பீஷ்டம் இதம் தேவம்
    ஸாயி நாதம் நமாமி :

    பத்ரி க்ராம ஸமத் புதம்
    த்வாரகா மாயீ வாசினம்
    பக்தா பீஷ்டம் இதம் தேவம்
    ஸாயி நாதம் நமாமி :

    உங்கள் ராசிப்படி (12 ராசிகள்) திருமணத்தடை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை உங்கள் ராசிக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
    மேஷம் : தினமும் அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

    ரிஷபம் : தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

    மிதுனம் : தினமும் அல்லது வியாழக்கிழமை அன்று ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

    கடகம் : தினமும் அல்லது சனிக்கிழமை அன்று ஓம் சம் சனைச்சராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

    சிம்மம் : தினமும் அல்லது சனிக்கிழமை அன்று ஓம் சம் சனைச்சராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

    கன்னி : தினமும் அல்லது வியாழக்கிழமை அன்று ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

    துலாம் : தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

    விருச்சிகம் : தினமும் அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

    தனுசு : தினமும் அல்லது புதன்கிழமை அன்று ஓம் பும் புதாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

    மகரம் : தினமும் அல்லது திங்கட்கிழமை அன்று ஓம் சோம் சோமாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

    கும்பம் : தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

    மீனம் : தினமும் அல்லது புதன்கிழமை அன்று ஓம் பும் புதாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.
    ஜாதகத்தில் குரு பலன் குறைந்தவர்கள் வியாழக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள காயத்ரி மந்திரம் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும். அங்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம். திருச்செந்தூரில் முருகப்பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். எல்லா சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடலாம்.

    ‘ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
    க்ரூணி ஹஸ்தாய தீமஹி
    தந்தோ குரு பிரசோதயாத்’

    அல்லது

    ‘ஓம் குரு தேவாய வித்மஹே
    பிரம்மானந்தாய தீமஹி
    தந்நோ குரு பிரசோதயாத்’

    என்ற குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.

    ‘ஓம்பிம் சிவய வசி குரு தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.

    வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.
    சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் குறைந்தது 36, 54 முறை சொல்லி வரும் போது சந்திர பகவானால் ஏற்படும் தீங்கு விலகி நன்மை உண்டாகும்.
    சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது சந்திர பகவானால் ஏற்படும் தீங்கு விலகி நன்மை உண்டாகும். (குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) சந்திர பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். சந்திர ஷேத்திரம் திங்களுர், திருப்பதி கோவில், மற்றும் காஞ்சிபுரம் காமாட்சி, சென்று வழிபட்டு வரவும். இது சிறந்த பரிகாரம் ஆகும்.

    சந்திர காயத்ரி மந்திரம் – Chandra Gayatri Mantra


    சந்திர காயத்ரி -அழகு, தாய், மூளை வளர்ச்சி, உணர்சிகள், கற்பனை திறனுக்கு சந்திரனே அதிபதி
    சந்திர காயத்ரி
    ஓம் பத்மத்வஜாய வித்மஹே
    ஹேம ரூபாய தீமஹி
    தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

    ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
    அமிர்தாய தீமஹி
    தன்ன: சந்திரஹ் ப்ரசோதயாத்

    அம்ருதேசாய வித்மஹே
    ராத்ரிஞ்சராய தீமஹி
    தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

    ஓம் சுதாகராய வித்மஹே
    மஹாஓஷதீஸாய தீமஹி
    தன்ன: சோமஹ் ப்ரசோதயாத்

    ஓம் ஆத்ரேயாய வித்மஹே
    தண்டஹஸ்தாய தீமஹி
    தன்ன: சந்திரஹ் ப்ரசோதயாத்

    ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
    நிதீச்வராய தீமஹி
    தன்ன: சோமஹ் ப்ரசோதயாத்
    காவிரி புஷ்கர விழா செப்டம்பர் 12-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடபெறுகிறது. காவேரியில் நீராடும் போது காவேரி அம்மன் போற்றியை சொல்லி வரலாம்.
    1. ஓம் லோபா முத்ரையே போற்றி
    2. ஓம் அகஸ்திய பத்தினியே போற்றி
    3. ஓம் கவேர ராஜரிஷி மகளே போற்றி
    4. ஓம் பிரம்மா மானஸ புத்திரியே போற்றி
    5. ஓம் சுத்தமாயா சக்தியே போற்றி
    6. ஓம் ஹாதிவித்யா தலைவியே போற்றி
    7. ஓம் பொன்னியே போற்றி
    8. ஓம் புண்ய தீர்த்தமே போற்றி
    9. ஓம் தேவஜோதியே போற்றி
    10. ஓம் ஸஹ்யாசலவாசிநியே போற்றி

    11. ஓம் பாவங்களைப் போக்குபவளே போற்றி
    12. ஓம் விரும்பியவற்றை அருள்பவளே போற்றி
    13. ஓம் வீடுபேறு அளிப்பவளே போற்றி
    14. ஓம் அகஸ்திய கமண்டல வாசினியே போற்றி
    15. ஓம் கும்பமுனி பத்தினியே போற்றி
    16. ஓம் சௌந்தரியே போற்றி
    17. ஓம் விஷ்ணுமாயையே போற்றி
    18. ஓம் பிதிருதேவதாபிரியையே போற்றி
    19. ஓம் பிரம்மா சாபமோசனியே போற்றி
    20. ஓம் விஷ்ணு சாபமோசனியே போற்றி

    21. ஓம் வீரஹத்திதோஷநாசினியே போற்றி
    22. ஓம் குடமுனி பத்தினியே போற்றி
    23. ஓம் சித்தயோகினியே போற்றி
    24. ஓம் பிரம்மச்சாரிணியே போற்றி
    25. ஓம் விதர்ப்ப நாட்டு மகளே போற்றி
    26. ஓம் நதி ரூபிணியே போற்றி
    27. ஓம் பாவ விமோசனியே போற்றி
    28. ஓம் சாப விமோசனியே போற்றி
    29. ஓம் சர்யா நாதார் சிஷ்யையே போற்றி
    30. ஓம் ஸ்ரீவித்யா மந்தர வடிவே போற்றி

    31. ஓம் பொதியமலை வாசியே போற்றி
    32. ஓம் யோக சித்தியே போற்றி
    33. ஓம் மந்த்ர சித்தியே போற்றி
    34. ஓம் இத்மவாஹன் அன்னையே போற்றி
    35. ஓம் ஜல ரூபிணியே போற்றி
    36. ஓம் கன்னியே போற்றி
    37. ஓம் பிரம்மகிரி வாசினியே போற்றி
    38. ஓம் முக்கூடல் தீர வாசினியே போற்றி
    39. ஓம் சம்பா பதி வாசினியே போற்றி
    40. ஓம் கவிரிபூம்பட்டின வாசினியே போற்றி

    41. ஓம் சாயபுர சக்தி பீட வாசினியே போற்றி
    42. ஓம் பூரணியேபோற்றி
    43. ஓம் ஈங்கோய்மலை வாசினியே போற்றி
    44. ஓம் அகண்ட காவேரியே போற்றி
    45. ஓம் மத்திய அகண்டகாவேரியே போற்றி
    46. ஓம் 66 கோடிதீர்த்த பாவமோசனியே போற்றி
    47. ஓம் புண்யதீர்த்தமே போற்றி
    48. ஓம் மஹாதேவியே போற்றி
    49. ஓம் தட்சணதேச வாசினியே போற்றி
    50. ஓம் பசுமையை காப்பவளே போற்றி

    51. ஓம் லோகபாவனியே போற்றி
    52. ஓம் ஸமுத்ரகாமிநியே போற்றி
    53. ஓம் கவேரபுத்ரியே போற்றி
    54. ஓம் வேதங்களால் புகழப்படுபவளே போற்றி
    55. ஓம் கருணைக் கடலே போற்றி
    56. ஓம் நான்முகன் மகளே போற்றி
    57. ஓம் பதிவ்ரதாதேவியே போற்றி
    58. ஓம் திவ்யமானவளே போற்றி
    59. ஓம் மங்கள ரூபிணியே போற்றி
    60. ஓம் பவித்திரமானவளே போற்றி

    61. ஓம் புக்தி, முத்தி, சாந்தியை கொடுப்பவளே போற்றி
    62. ஓம் இனியவளே போற்றி
    63. ஓம் பாபநாசினியே போற்றி
    64. ஓம் ஹயக்ரீவரால் வணங்கப்பட்டவளே போற்றி
    65. ஓம் 51 உபநதிகளை உடையவளே போற்றி
    66. ஓம் ஜகன்மாதாவே போற்றி
    67. ஓம் முனிவர்களால் பூஜிகப்படுபவளே போற்றி
    68. ஓம் பரிசுத்தமானவளே போற்றி
    69. ஓம் நதிகளின் நாயகியே போற்றி
    70. ஓம் தேவர்களால் வழிபடுபவளே போற்றி

    71. ஓம் உத்தமமானவளே போற்றி
    72. ஓம் தயா நிதியே போற்றி
    73. ஓம் மாசற்றவளே போற்றி
    74. ஓம் தட்சணகங்கையே போற்றி
    75. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    76. ஓம் காவேரரிஷியின் குலதனமே போற்றி
    77. ஓம் ஞானவடிவே போற்றி
    78. ஓம் செந்நெல் தருவோய் போற்றி
    79. ஓம் அரங்கனைச் சூழ்ந்தவளே போற்றி
    80. ஓம் தண்தமிழ் பாவையே போற்றி

    81. ஓம் நெல்லிமரதீர்த்ததாரையே போற்றி
    82. ஓம் வனதேவதையேபோற்றி
    83. ஓம் விரும்பியவரம் அளிப்பவளே போற்றி
    84-. ஓம் நாவலந்தீவில் வசிப்பவளே போற்றி
    85. ஓம் ஆசாபாச கற்பரசியே போற்றி
    86. ஓம் உத்தம கற்பரசியே போற்றி
    87. ஓம் கர்நாடகவாசியே போற்றி
    88. ஓம் திராவிடவாசியே போற்றி
    89. ஓம் கடலில் கரைபவளே போற்றி
    90. ஓம் சுமங்கலியே போற்றி

    91. ஓம் தூர்வாசர் மாணவியே போற்றி
    92. ஓம் 64 இலக்கண முடையவளே போற்றி
    93. ஓம் தஞ்சை பெரிய கோவில் உடையாய் போற்றி
    94. ஓம் திருச்சி மலைக்கோட்டையுடையாய் போற்றி
    95. ஓம் மாயூரவசினியே போற்றி
    96. ஓம் லலிதை பக்தையே போற்றி
    97. ஓம் பாரதவாசிநியே போற்றி
    98. ஓம் சிவாலயம் உடையோய் போற்றி
    99. ஓம் விஷ்ணு ஆலயம் உடையோய் போற்றி
    100. ஓம் சக்தி ஆலயம் உடையோய் போற்றி
    101. ஓம் சோழமண்டல வாசினியே போற்றி
    102. ஓம் சேரநாடு செழிப்படையச் செய்பவளே போற்றி
    103. ஓம் கொங்குநாடு உய்யச் செய்பவளே போற்றி
    104. ஓம் விவசாயிகளின் தேவியே போற்றி
    105. ஓம் நால்வரால் புகழப்பெற்றவளே போற்றி
    106. ஓம் சங்க இலக்கியம் வளர்த்தவளே போற்றி
    107. ஓம் காவிரி தேவியே போற்றி
    108. ஓம் போற்றி போற்றி ஸ்ரீராஜராஜச்வரியின் வடிவானளே போற்றி போற்றி
    ஏழு புண்ணிய நதிகளுள் உயர்ந்த மகாநதியாக விளங்கும் காவிரித்தாயை புஷ்கர் நீராடலின் போது காவிரிக்கரையில் நின்று கைகூப்பியபடி மூன்று முறை படிக்க வேண்டிய துதி.
    ஏழு புண்ணிய நதிகளுள் உயர்ந்த மகாநதியாக விளங்கும் காவிரித்தாயை நினைத்து வடநூலாரும் தமிழ்ப்புலவர்களும் துதி பாடி உள்ளனர். காவிரி புஷ்கர் நீராடலின் போது காவிரிக்கரையில் நின்று கைகூப்பியபடி மூன்று முறை படிக்க வேண்டிய துதி.

    காற்றாகிப் பெருகி வருபவளே!
    வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய
    பேறுகளைத் தன்னிடம் கொண்டிருப்பவளே!
    விரதங்களை நிறைவேற்றிப் பலன்களைத்
    தருகின்ற ஒப்பற்ற தாயே! அனைவரது
    மனங்களையும் கொள்ளை கொள்பவளே!
    உன்னிடம் புனித நீராடல் செய்து
    வருபவர்களது பாவங்களை அழிப்பவளே!
    புண்ணியங்களைக் கொடுத்தருளும் காவிரித்தாயே!
    நாங்கள் அறியாமல் செய்துவிட்ட
    பாவங்களைப் போக்குவாயாக!
    காவிரி மகராஜனின் அன்பு மகளே!
    கடல் அரசனுடைய மனம் கவர்ந்த பட்டத்து அரசியே!
    எல்லா புண்ணிய தீர்த்தங்களுடைய உருவமானவளே!
    காவிரி சக்தியே எங்களுக்குச்
    சிந்தனை செய்கின்ற திறனையும்,
    அறிவையும் அனைத்துச் செல்வங்களையும்,
    நற்பேறுகளையும் தந்து காத்திட வேண்டுகிறோம்.
    கருணைக் கடலாக விளங்குபவளே!
    நதிகளில் உயர்ந்தவளே!
    எங்களைச் சம்சாரம் என்கின்ற கொடுமையான
    கடலிலிருந்து கரையேற்றி விட வேண்டுகிறோம்.
    ×