என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    அவரவர் ஜாதகப்படி ராகு வழங்கும் பலன்கள் எதிர்மறையாக அமையுமானால் அவற்றின் வீரியத்தைக் குறைக்கவும், கெடுபலன்கள் செய்யாத படி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம்.
    அவரவர் ஜாதகப்படி ராகு வழங்கும் பலன்கள் எதிர்மறையாக அமையுமானால் அவற்றின் வீரியத்தைக் குறைக்கவும், கெடுபலன்கள் அதிகரிக்காதபடியும் செய்ய அந்த கிரகங்களை மகிழ்விக்கும் சில ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம்.  

    வாகு சேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு
    அமுதம் ஈய
    ஏகி நீ நடுவிருக்க இருசிரம் அற்று வெய்ய

    பாகுசேர் மொழியாள் பங்கன் பரன் கையில்
    சிரமே பெற்ற
    ராகுவே உன்னைத் துதித்தேன்
    ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!
    அரவெனும் ராகு ஐயனே போற்றி
    கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி

    ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
    ராகுக் கனியே ரம்யா போற்றி.
    வெம்கடு உமிழ்முகம் விளங்கு
    பாம்பு உருப் பொங்கொளி மணி
    முடி பூண்ட பொற்சிடம் அங்கு அமை வடிவொடும்
    அன்பர் போற்றி செய் சிங்கிகை அளித்திடு சேயைப்
    போற்றுவோம்.

    பொலியு நீலாம்பரத்தோன்
    பொற்பு உறு சிரம் புரக்க
    நலிவுறும் உலகம் போற்றும்
    நாயகன் நெற்றி காக்க
    மலிபுகழ் இராகு நாட்டம்

    வரம்படப் புரக்க கன்னம்
    மெலிவுறும் பாதி மேனி
    வித்தகம் மேவிக்காக்க
    நஞ்சு உமிழ் பவள வாயான்
    நாசிகை புரக்க கண்டம்
    விஞ்சு எழில் சூலபாணி

    விழைவொடு புரக்க
    செவ்வாய்
    வஞ்சி சிம்ஹிகை தன்
    மைந்தன்
    மருவினன் புரக்க கண்டம்
    துஞ்சு உறு கண்டம் உண்போன்

    தொலைவறப் புறந்து காக்க
    பொன்பொலி புயங்கநாதன்
    புயவரை புரக்க பூங்கை
    மின்பொலி நீலமாலை
    வித்தகன் புரக்க மார்பம்
    மன்பொலி தவமே என்றும்
    வடிவு எனக் கொள்வோன் காக்க

    தென்பொலி உந்தி என்றும்
    செழுமதி உண்போன் காக்க
    நயம்படு விகடச் செல்வன்
    நற்கடி தடம் புரக்க
    பயம் படுவானோர் போற்றும்

    பண்ணவன் தொடை புரக்க
    வயம்படு முழந்தாள் கோல
    மலிசுவர்ப் பானு காக்க
    சயம்படு நாக வேந்தன்
    தளாவறு கணைக்கால் காக்க

    விண்ணெழு கிரகநாதன்
    விளங்கு ஒளிப்பரடு காக்க
    மன்னறு மடி இரண்டும்
    மலி புகழ்க் கோர ரூபன்
    நண்ணினன் புரந்து காக்க

    நயக்குமென் அங்கமெல்லாம்
    தண்ணிய நீலச் சாந்தம்
    தரிப்பவன் புரந்து காக்க
    தண்ணமரும் புனலாடிச் சந்திமுதல்
    கடல் அனைத்தும் தவறாது ஓம்பி
    விண்ணமரும் மதிவிழுங்கும் ராகுகவசம்

    புகல்வோன் விரும்பும் உள்ளத்து
    எண்ணம் வரும் அவை பெறுவன் புகழ்பெறுவன்
    செல்வம் எலாம் எய்தி வாழ்வன்
    மண்ணமரு நோய் அகன்று வளர்ந்து ஏறும்
    பேராயுள் மருவி வாழ்வன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை சொல்லி தினமும் சங்கை வழிபட குபேரனது அருளும், லக்ஷ்மியின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
    பாஞ்ச ஜன்யாய வித்மஹே
    சங்க ராஜாய தீமஹி
    தந்நோ சங்க பிரசோதயாத்

    இந்த மந்திரத்தை சொல்லி சங்கை வழிபட குபேரனது அருளும், லக்ஷ்மியின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

    சங்கு இருக்கும் வீட்டில் தீய சக்திகள் வராமல் நல்லவைகள் நம்மை வந்து சேரும்.
    மகாவிஷ்ணுவின் வலது கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம் சக்கரத்தாழ்வாரை குறிப்பதாகும். பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக சக்கரத்தாழ்வார் விளங்குகிறார்.
    ஓம் சுதர்ஸனாய வித்மஹே
    ஜ்வாலாசகராய தீமஹி
    தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

    ஓம் சுதர்சனாய வித்மஹே
    மஹாஜ்வாலாய தீமஹி
    தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

    ஓம் சுதர்சனாய வித்மஹே
    ஹேதிராஜாய தீமஹி
    தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

    ஓம் சுதர்சனாய வித்மஹே
    மஹாமந்த்ராய தீமஹி
    தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

    ஓம் சுதர்சனாய வித்மஹே
    சக்ரராஜாய தீமஹி
    தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

    சக்கரத்தாழ்வார் ஸ்தோத்திரம் :

    ஸஹஸ்ராதித்ய ஸங்காசம் ஸஹஸ்ர வதநாம் பரம்
    ஸஹஸ்ர தோஸிஸஹஸ்ராரம்ப்ரபத்யே (அ) ஹம்ஸுதர்சநம்
    ஹும் கார பைரவம் பீமம் ப்ரபந்நார்த்தி ஹரம் ப்ரபும்
    ஸர்வ பாப ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம்

    சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) மந்திரம் :

    வெற்றியைக் கொடுக்கும். நோய் நீக்கும். பயம் விலக்கும்.

    எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அனுமன் பாடலை தினமும் பாடி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
    அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

    அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
    வெஞ்சினைக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !
    மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி !
    எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் ! போற்றி !

    அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
    செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்
    வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
    அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே.

    வால்விசைத் தெடுத்து வன்றாண் மடக்கிமார்பொடுக்கி மானத்
    தோள்விசைத்துணைகள்பொங்கக் கழுத்தினைச் சுருக்கித் தூண்டு
    கால் விசைத்தடக்கை நீட்டிக் கட்புலங் கதுவாவண்ணம்
    மேல்விசைத் தெழுந்தானுச்சி விரிஞ்சனாடுரிஞ்ச வீரன்.

    சுந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி
    அந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு
    வந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட
    நந்தலில்லாத தூதன் நம்மையும் அளித்துக் காப்பான்.

    அன்னைகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து
    இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன
    உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று
    மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி.

    சொல்லுரம் பெற்ற சோர்விலா தூயவீரன்
    வல்லவன் ராமன் சீதை வாயுறை பெற்ற அன்பன்
    அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும்காலை
    கல்லினைப் பெண்ணாய்ச் செய்தான் கழலிணைப் போற்றுவோமே.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள கருப்பசாமி தியான ஸ்லோகத்தை தினமும் அல்லது கருப்பசாமி கோவிலுக்கு செல்லும் போது மனதார சொல்லி தரிசிக்கலாம்.
    மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைக் கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.

    த்விபுஜம் பீன க்ருஷ்ணாங்கம் பப்ருச்மச்ரு சிரோருஹம்
    கதாம் கட்கம்ச பிப்ராணம் மஹாகாலம் வயம் நும:
    உடலில் அயர்ச்சியையும் உள்ளத்தில் தளர்ச்சியையும் ஒருங்கே அகற்றி புத்துணர்ச்சியும், தெளிவும், தைரியமும் அளிக்கும் ராம ஹனுமன் மஹா மந்திரத்தை பார்க்கலாம்.
    நமோஸ்து ராமாய ஸ
    லக்ஷ்மணாய தேவ்யைச தஸ்ய
    ஜனகாத்மஜாயை நமோஸ்து ருத்ர
    இந்தர யம அநிலேப்யக நமோஸ்து
    சந்தராக்க மருத் கணேப்ய:

    என்ற அனுமனின் மஹா மந்திரம் உடலில் அயர்ச்சியையும் உள்ளத்தில் தளர்ச்சியையும் ஒருங்கே அகற்றி புத்துணர்ச்சியும், தெளிவும், தைரியமும் அளிக்கும் மாமருந்தாக திகழ்கிறது..
    ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.
    'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
    சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

    ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.
    சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
    ஸெளரி: க்ருஷ்ணருசிச்ச பச்சிமமுக: ஸெளராஷ்ட்ரப: காச்யபோ
    நாத: கும்பம்ருகர்க்ஷயோ: ப்ரியஸூஹ்ருத்சுரக்ஞயோர்க்ருத்ரக:
    ஷட்த்ரிஸ்த: சுபதோசுபோதநுகதிச்சாபாக்ருதௌ மண்டலே
    ஸந்திஷ்டந் சிரஜீவதாதிபலத: குர்யாத் ஸதா மங்களம்

    பொருள்: காசியப கோத்ரியும், கும்பம், மகரம் ராசிகளுக்கு தலைவரும், மேற்கே தெற்கு முகமாக வில் போன்ற மண்டலத்தில் இருப்பவரும், நீண்ட ஆயுளை அளிப்பவருமான சனி மங்களத்தைச்செய்யட்டும்.

    சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

    பெண்களின் துயர் துடைக்கும் இந்த ஸ்ரீ பத்ரகாளியம்மன் போற்றியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
    ஓம் அன்னையே போற்றி
    ஓம் அழகே போற்றி
    ஓம் ஆத்தா போற்றி
    ஓம் ஆரணி போற்றி
    ஓம் இளகியோய் போற்றி
    ஓம் இமயோய் போற்றி 6
    ஓம் ஈஸ்வரி போற்றி
    ஓம் ஈவோய் போற்றி
    ஓம் உமையே போற்றி
    ஓம் உத்தியே போற்றி
    ஓம் எழிலே போற்றி
    ஓம் ஏதிலாய் போற்றி 12
    ஓம் ஐங்குனி போற்றி
    ஓம் ஐஸ்வரி போற்றி
    ஓம் அங்கயல் போற்றி
    ஓம் அருமையே போற்றி
    ஓம் உருமையே போற்றி
    ஓம் ஒளியின் ஒளியே போற்றி 18
    ஓம் கனல் விழியே போற்றி
    ஓம் கமலினியே போற்றி
    ஓம் கங்கனியே போற்றி
    ஓம் கிளி மொழியே போற்றி
    ஓம் குயில் மொழியே போற்றி
    ஓம் குண சீலியே போற்றி 24
    ஓம் குணவதியே போற்றி
    ஓம் குடும்பினியே போற்றி
    ஓம் கொற்றவையே போற்றி
    ஓம் கொல்லியே போற்றி
    ஓம் குவிமுலையே போற்றி
    ஓம் கோள்களாட்சியே போற்றி 30
    ஓம் கெளரியே போற்றி
    ஓம் கௌமாரியே போற்றி
    ஓம் கெளசகியே போற்றி
    ஓம் கமலையே போற்றி
    ஓம் சண்டி சாமுன்டியே போற்றி
    ஓம் சூலினியே போற்றி 36
    ஓம் செங்கனியே போற்றி
    ஓம் செஞ்சடையே போற்றி
    ஓம் சைகையே போற்றி
    ஓம் தைலஸ்ரீயே போற்றி
    ஓம் தர்பரையே போற்றி
    ஓம் பராபரையே போற்றி 42
    ஓம் தாட்சாயணியே போற்றி
    ஓம் தினகரியே போற்றி
    ஓம் நடனகாளியே போற்றி
    ஓம் நல்மையிலே போற்றி
    ஓம் நற்குயிலே போற்றி
    ஓம் ஆதியே போற்றி 48
    ஓம் ஓங்காரியே போற்றி
    ஓம் பைரவியே போற்றி
    ஓம் கருஉருவே போற்றி
    ஓம் புனலின் இதயமே போற்றி
    ஓம் புரந்தரியே போற்றி
    ஓம் நிரந்தரியே போற்றி 54
    ஓம் மகா மாயா போற்றி
    ஓம் மகமாயி போற்றி
    ஓம் மாலினியே போற்றி
    ஓம் குண்டலினியே போற்றி
    ஓம் பரிபூரணியே போற்றி
    ஓம் பார்கவியே போற்றி 60
    ஓம் உடையவள் போற்றி
    ஓம் பங்கஜா போற்றி
    ஓம் சாம்பவியே போற்றி
    ஓம் மோகனாவே போற்றி
    ஓம் மனோன்மணியே போற்றி
    ஓம் தடாதகையே போற்றி 66
    ஓம் ஜடாதாரியே போற்றி
    ஓம் மணிமகளே போற்றி
    ஓம் அலர்மகளே போற்றி
    ஓம் சந்த்ரிகையே போற்றி
    ஓம் சியாமளா போற்றி
    ஓம் ஸ்ரீயந்திரம் போற்றி 72
    ஓம் பொங்கழல் போற்றி
    ஓம் இளம் மலரே போற்றி
    ஓம் மதியொளியே போற்றி
    ஓம் ஒளிசிவையே போற்றி
    ஓம் வான்நிதியே போற்றி
    ஓம் பசிலோக பயங்கரியே போற்றி 78
    ஓம் நிரஞ்சனியே போற்றி
    ஓம் ஆனந்த நாயகியே போற்றி
    ஓம் பரோப காரியே போற்றி
    ஓம் பராசக்தியே போற்றி
    ஓம் வாராஹியே போற்றி
    ஓம் ஓம் வாக்தேவியே போற்றி 84
    ஓம் வீரகோஷ்டித் தாயே போற்றி
    ஓம் நவகாளியே போற்றி
    ஓம் அஷ்டகாளியே போற்றி
    ஓம் வீர காளியே போற்றி
    ஓம் வீர பத்ரகாளியே போற்றி
    ஓம் வன பத்ரகாளியே போற்றி 90
    ஓம் கொல்லிக்காளியே போற்றி
    ஓம் பச்சைக் காளியே போற்றி
    ஓம் பவழக் காளியே போற்றி
    ஓம் வக்ரகாளியே போற்றி
    ஓம் மதுரகாளியே போற்றி
    ஓம் கொண்டத்துக் காளியே போற்றி 96
    ஓம் ஊர்த்துவ காளியே போற்றி
    ஓம் வெட்டுடைக் காளியே போற்றி
    ஓம் அக்கினி காளியே போற்றி
    ஓம் பாதாள காளியே போற்றி
    ஓம் இரண காளியே போற்றி
    ஓம் தில்லைக் காளியே போற்றி 102
    ஓம் மங்கள சண்டிகா போற்றி
    ஓம் மா காளியே போற்றி
    ஓம் கோட்டைக் காளியே போற்றி
    ஓம் உஜ்ஜயினி மாகாளியே போற்றி
    ஓம் பத்ரகாளித் தாயே போற்றி
    ஓம் வடபத்ர காளித் தாயே போற்றி … போற்றி … 108
    ஓம் சக்தி … ஓம் சக்தி … ஓம் சக்தி …ஓம் …
    ஓம் சக்தி … பராசக்தி … ஓம் சக்தி … ஓம் …
    ஓம் சக்தி … பத்ரகாளி… ஓம் சக்தி … ஓம் .
    எதிரிகளில் தொல்லை, பணக்கஷ்டம், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஹனுமத் கவசத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |
    ஸ்ரீராமசந்த்ரருஷி: |
    காயத்ரீச்சந்த: |
    ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா |
    மாருதாத்மஜ இதி பீஜம் |
    அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி: |
    ஸ்ரீராமதூத இதி கீலகம் |
    மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக: ||
    ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-
    ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |
    ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||
    ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |
    லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||
    ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |
    பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||
    நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர: |
    கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||
    நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர: |
    பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||
    புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |
    நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர: ||
    வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ: |
    ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||
    லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம் |
    நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||
    குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய: |
    ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||
    ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |
    அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||
    அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |
    ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான் ||
    ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |
    ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||
    த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |
    ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத் ||
    அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |
    க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||
    அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |
    அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||
    ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |
    ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||
    ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |
    அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||
    ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |
    அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ: ||
    முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |
    பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய: ||
    அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
    ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||
    ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.
    வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |
    அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
    ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||
    ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.
    சூரியனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் அல்லது ஞாயிற்று கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    அறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்
    ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
    பாச ஹஸ்தாய தீமஹி
    தந்நோ ஸீ ர்ய ப்ரசோதயாத்

    - இது சூரியனுக்குரிய காயத்ரி மந்திரம். இதேபோல் ராமபிரான், ராவணனை வெற்றி கொள்ள வேண்டுமானால் சூரிய பகவானைத் துதிக்க வேண்டும் என்று அகத்திய முனிவர் உபதேசித்த ஸ்தோத்திரம்தான் ஆதித்ய ஹ்ருதயம். காயத்ரி மந்திரமும், ஆதித்ய ஹ்ருதயம் ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் கொடுக்க கூடியவை.
    காயத்ரி மந்திரத்தை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.
    ஓம்
    பூர்: புவ: ஸுவ:
    தத் ஸவிதுர் வரேண்யம்
    பர்கோ தேவஸ்ய தீமஹி
    தியோ: யோந: ப்ரசோதயாத்

    அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.

    24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.

    இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.
    ×