என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சேலம் செவ்வாய்ப்பேட்டை தூய ஜெயராக்கினி அன்னை இணை பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை தூய ஜெயராக்கினி அன்னை இணை பேராலய திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் திருப்பலி நடந்து வந்தது. முக்கிய நாளான நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய ஜெயராக்கினி அன்னை சொரூபம் வைக்கப்பட்டது.
தேர்பவனியை சேலம் மறைமாவட்ட முதன்மை குரு அருளப்பன் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். தேவாலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி, செவ்வாய்பேட்டையின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவாலய பங்கு தந்தை அழகுசெல்வன், உதவி பங்குதந்தை அருள்வழவன், துணைத்தலைவர் சகாயராஜ், செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் ஜேக்கப் மற்றும் விமல் ஆகியோர் செய்திருந்தனர்.

திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 20 மணி ரேம் ஆகிறது.பக்தர்கள் பொறுமையாக இருந்து தரிசனம் செய்ய வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு 7 மணியளவில் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக திருமலைக்கு பக்தர்கள் யாரும் வர முடியவில்லை.
கோவிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பொறுமையாக இருந்து தரிசனம் செய்ய வேண்டும்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பொறுமையை கடைப்பிடித்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்....இன்று வைகாசி மாத அமாவாசை... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்...

வைகாசி அமாவாசை தினமான இன்று விரதம் இருந்து நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் என்ன என்பதை குறித்து விரிவாக இங்கே அறிந்து கொள்ளலாம்.
வைகாசி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.
தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் வைகாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும்.
வைகாசி மாதம் இறை வழிபாடு, விரதங்கள் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் நிம்மதியற்ற நிலை நீங்கும்.
சுபிட்சங்கள் பெருகும். திருமணத்தடை, புத்திர பாக்கியமின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி நல்ல லாபங்கள் ஏற்படும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலை உண்டாகும். கடன், வறுமை நிலை போன்றவை ஏற்படாமல் காக்கும்.

காக்கும் தாயாய் கற்பகத்தருவாய் ஆதிக்கம் செலுத்தும் ஆதியாய், கேட்கும் வரம் கொடுக்கும் அன்னையாய் பரிதவிக்கும் தாய் உள்ளம் குளிரச் செய்யும் அன்னை அவள் அருளால் மகிழ்வோம்.
அருள் வளம் செழிக்கும் அன்னை கரூர் மாரி கருணை பொலிவுடன் காக்கும் எல்லை தெய்வம் பூவாடைக்காரி பாவாடை கரூர் மாரி அன்னைக்கு நாளெல்லாம் திருவிழாதான். மதியத்தில் ஒன்றான அபிஷேகம் அவ்வப்போது சகோதரர் மாவடியான் துணை வர உற்சவராக பவனி உற்சவ அன்னைக்கு எடுக்கும் திருவிழா கம்பம் விடும் விழா.
இதில்தான் எத்தனை எத்தனை வேண்டுதல்கள். துன்பம், துயரம், வாழ்வில் மங்களம் தங்க மலர் பாவாடை, ஆயிரமாயிரமாய் உள்ளம் குளிர அன்னைக்கு நீர் சுமந்து ஊற்றுதல், எண்ணம் சிறக்க வண்ண வண்ண வாசனை மலர் சொரிதல், வயிறு, கண் வலி என துடிப்போர் அன்னை சன்னதியில் மாவிளக்கு வழிபாடு, குழந்தை வரம் வேண்டி பிள்ளை சுமத்தல், குழந்தை பிறந்து கரும்பு தொட்டில் சுமத்தல், உடல்நல, உள்ளம், உடல் நல குறை போக்க அக்னி வேண்டுதல்கள், ஒன்றோடு ஒன்று இணைந்து சுடரொளி அக்கினி கையில் ஏந்தி அன்னைக்கு சமர்ப்பித்தல்,
நலம் வேண்டி ஆலயத்தை சுற்றி அங்கப்பிரதட்சணம், இடை இன்னல்கள், குடும்பத்தில் பிரச்சினை, வாழ்க்கையில் வறுமை, அமைதியின்மை இவற்றிற்கு அம்மனை வேண்டி அலகு, நாவில் வேல், பறவை காவடி, அலகு காவடி, விமான அலகு காவடி என விதவிதமாய் அலகேந்தி, பால்குடம் சுமந்து, பச்சிளம் குழந்தைகளுக்கு முடி இறக்கி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி எத்தனை எத்தனை வழிபாடு கரூர் அன்னைக்கு. காக்கும் தாயாய் கற்பகத்தருவாய் ஆதிக்கம் செலுத்தும் ஆதியாய், கேட்கும் வரம் கொடுக்கும் அன்னையாய் பரிதவிக்கும் தாய் உள்ளம் குளிரச் செய்யும் அன்னை அவள் அருளால் மகிழ்வோம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபத்தில் வருகிற 3-ந் தேதி வசந்த உற்சவத்தையொட்டி பல நூற்றாண்டுக்கு பின்பு மண்டபத்தில் தண்ணீர் நிரப்பி விழா நடத்த ஏற்பாடு நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு ராஜகோபுரம் எதிரே கீழசித்திரை வீதியில் அமைந்துள்ளது புதுமண்டபம். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் கோடை காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக முற்றிலும் கற்களால் இந்த மண்டபத்தை கட்டினார். எனவே இதனை வசந்த மண்டபம் என்றும் அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் வசந்த மண்டப மேடை அழகுற அமைந்துள்ளது. வைகாசி வசந்த உற்சவத்தின்போது மீனாட்சி-சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி அளிப்பர். அதுதவிர கோடை காலத்தின்போது வெப்பம் அதிகமாக இருக்கும். அப்போது மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக சிறிய அகழி போன்ற அமைப்பும் உள்ளது. எனவே நீராழி மண்டபம் என்றும் அழைத்துள்ளனர். மேலும் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவமும் இந்த மண்டபத்தில்தான் நடைபெறும்.
திருவிழா நாட்களை தவிர பக்தர்கள் அங்கு ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, இங்கு பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணி கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் சில்வர் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் அங்கு செயல்பட்டு வந்தன. மேலும் அந்த மண்டபத்தில் திருமலை நாயக்கர் மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட 28 அற்புத சிலைகளும் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு கோவில் நிர்வாகமும், தொல்லியல், சுற்றுலா துறை இணைந்து அந்த புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை எல்லோரும் காணும் வகையில் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்தது.
அதன்படி அங்குள்ள கடைகள் அனைத்தையும் அங்கிருந்து காலி செய்யுமாறு கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் கடைக்காரர்கள் தங்களுக்கு மாற்று இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து புதுமண்டபம் அருகே உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டி அவர்களுக்கு கொடுக்க அரசு முன் வந்தது.
குன்னத்தூர் சத்திரத்தில் 191 கடைகள் கட்டப்பட்டு, அதில் 169 கடைகள் புதுமண்டபத்தில் இருந்த கடைக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து புதுமண்டபத்தில் இருந்த பெரும்பாலான கடைகள் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் பாத்திரக்கடை, புத்தக்கடை என 32 கடைக்காரர்கள் மட்டும் இன்னும் தங்களுக்கு ஒதுக்கிய இடத்திற்கு செல்லாமல் புதுமண்டபத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்தனர். அந்த கடைகளையும் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த உற்சவ விழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் மாலை நேரத்தில் இங்கு வந்து, மண்டபத்தின் உள்ளே 3 முறை வலம் வந்து மேடையில் எழுந்தருள்வர். பல்லாண்டுக்கு முன்பு இந்த விழாவின் போது மண்டபத்தின் நான்குபுறமும் தண்ணீரால் நிரப்பப்படுவது போல் தற்போது தண்ணீரை நிரப்பி திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மண்டபத்தை சுத்தம் செய்யும் பணி தற்போது தொடங்கி உள்ளது. அது தவிர தண்ணீரை நிரப்புவதற்காகவும், தண்ணீர் தடையின்றி நான்கு புறமும் அகழியில் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இதன் மூலம் வசந்த உற்சவ விழா பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பழைய முறைப்படி நடைபெற உள்ளதால் பக்தர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உற்சவர் வைகுண்டப் பெருமாள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் ஜொலிக்க சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
காஞ்சீபுரம் குண்டவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 26-ந் தேதி அதிகாலை கொடியேற்றதுடன் தொடங்கியது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய வைபவமான கருட சேவை உற்சவம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதையொட்டி உற்சவர் வைகுண்டப் பெருமாள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் ஜொலிக்க சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
அர்ச்சகர்கள் சிறப்பு ஆராதனைகள்,கற்பூர தீபாராதனைகள் காட்டினார்கள். மேள தாளங்கள் முழங்க கோவில் வெளிபிரகாரத்தை வந்தடைந்து பின்னர் பஜனை கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாட, மேள தாளங்கள் முழங்கியப்படி உற்சவர் வைகுண்டப்பெருமாள் கருட வாகனத்தில் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
வழி நெடுகிலும் திரண்டிருந்த திரளான பக்தர்கள் பூ, வாழைப்பழம், கற்பூர தீபாராதனைகளை தாம்பூல தட்டுகளில் ஏந்தியவாறு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவச கோஷங்களை எழுப்பினார்கள். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
பிரம்மோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் செயல் அலுவலர் பூவழகி மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

திருமணம் நிச்சயம் ஆகாமல் பல இடையூறுகளை சந்திப்பவர்களும் விரைவில் மணவாழ்க்கை அமையப்பெற்று வாழ்வாங்கு வாழ பார்வதி தேவியை பிரார்த்தித்துக்கொள்கிறோம்.
திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் துர்வாச முனிவர் அருளிய கீழ்க்காணும் ‘ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரத்தை சொல்லிவரலாம்.
ஓம் ஹ்ரீம் யோகின்யை நம:
ஓம் ஹ்ரீம் யோகேஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் பயங்கர்யை நம:
ஓம் ஹ்ரீம் பந்தூக வர்ணாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸுகாத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் அம்போஜருத்யை நம:
ஓம் ஹ்ரீம் அபிலாஷ தாத்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் நிர்ஜாதாரு கல்பாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் மந்த்ராண்யை நம:
ஓம் ஹ்ரீம் காமாயை
நம: (10)
ஓம் ஹ்ரீம் க்ஷேமங்கராண்யை நம:
ஓம் ஹ்ரீம் பால்யாவஸ்தாயை நம:
ஓம் ஹ்ரீம் லலிதாயை நம:
ஓம் ஹ்ரீம் பவத்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீகண்டபாமின்யை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரபதீன வேண்யை நம:
ஓம் ஹ்ரீம் நவயெளவனாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ துர்க்காயை நம:
ஓம் ஹ்ரீம் விலாச பயாக்ஷிண்யை நம:
ஓம் ஹ்ரீம் க்ருச்சாயை
நம: (20)
ஓம் ஹ்ரீம் விலக்ராயை நம:
ஓம் ஹ்ரீம் பர்யுஸ்த்ரிதாயை நம:
ஓம் ஹ்ரீம் குசபராயை நம:
ஓம் ஹ்ரீம் ஜகன்யை நம:
ஓம் ஹ்ரீம் ஜனகாயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரசுர பக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் கிரிசாயை நம:
ஓம் ஹ்ரீம் பரிசாரிண்யை நம:
ஓம் ஹ்ரீம் அனுகூலாயை நம:
ஓம் ஹ்ரீம் ஈச்வர்யை
நம: (30)
ஓம் ஹ்ரீம் க்ரியாட்ஹ்யஜாயை நம:
ஓம் ஹ்ரீம் பஞ்ச ஹுதாசனாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸதாசிவாயை நம:
ஓம் ஹ்ரீம் வித்ராச தாத்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் வர்ணதாமல ஸத்கராயை நம:
ஓம் ஹ்ரீம் மந்தஹாஸாயை நம:
ஓம் ஹ்ரீம் மோஹாவஹாயை நம:
ஓம் ஹ்ரீம் பவான்யை நம:
ஓம் ஹ்ரீம் பத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரமோத ஜனன்யை
நம: (40)
ஓம் ஹ்ரீம் நந்தானுபூதி ரஸிகாயை நம:
ஓம் ஹ்ரீம் கல்யாண்யை நம:
ஓம் ஹ்ரீம் மஹேஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் சம்முக்த மன்மத சராசன
சாருரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் அம்பிகாயை நம:
ஓம் ஹ்ரீம் புவன ஸுந்தர்யை நம:
ஓம் ஹ்ரீம் தீஷ்ணாம்பராலாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸுந்தர்யை நம:
ஓம் ஹ்ரீம் ருத்ரப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் கஸ்தூரிகா திலகின்யை
நம: (50)
ஓம் ஹ்ரீம் ரக்தாம்பராபரண
மால்யதராயை நம:
ஓம் ஹ்ரீம் நவகுங்கும மாத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் சாருரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் கிரிஜாயை நம:
ஓம் ஹ்ரீம் கனகமங்கள சூத்ர சோபாயை நம:
ஓம் ஹ்ரீம் சந்த்ரார்த்த சாரு மகுடாயை நம:
ஓம் ஹ்ரீம் நவபத்ம ஸம்ஸ்த்தாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரிநேத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் கதம்ப வன வாஸின்யை நம:
ஓம் ஹ்ரீம் உத்வேலமத்ய வஸத்யை
நம: (60)
ஓம் ஹ்ரீம் மதுராங்காயை நம:
ஓம் ஹ்ரீம் மாயாயை நம:
ஓம் ஹ்ரீம் தத்வாத்மிகாயை நம:
ஓம் ஹ்ரீம் பகவத்யை நம:
ஓம் ஹ்ரீம் சம்பு ப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் சசிகலா வதம்ஸாயை நம:
ஓம் ஹ்ரீம் பாசபாண்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸம்பத்ப்ரதான நிரதாயை நம:
ஓம் ஹ்ரீம் புவனேச்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் அபாக்ருபாயைக்ஷ
நம: (70)
ஓம் ஹ்ரீம் ஆருட துங்க துர்காயை நம:
ஓம் ஹ்ரீம் ம்ருது பாஹுவல்யை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரகல்பாயை நம:
ஓம் ஹ்ரீம் மனோஞாயை நம:
ஓம் ஹ்ரீம் காமாத்மிகாயை நம:
ஓம் ஹ்ரீம் அகில தர்ம மூர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் ஜயாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரிகுணஸ்வரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் கருணாம்ருதாயை நம:
ஓம் ஹ்ரீம் சமஸ்த மூர்த்யை
நம: (80)
ஓம் ஹ்ரீம் விஸ்வஜன மோஹன
திவமாயாயை நம:
ஓம் ஹ்ரீம் ஜகதீஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் கர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் பர்த்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹர்த்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் விதிஹராத்ம சக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் புக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் அமிதப்ரஸூத்யை நம:
ஓம் ஹ்ரீம் பக்தானுகம்பின்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹாயை
நம: (90)
ஓம் ஹ்ரீம் ஸாகர ஸுதாயை நம:
ஓம் ஹ்ரீம் முனிமண்டல
த்ருச்யமூர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸுராபகாயை நம:
ஓம் ஹ்ரீம் வ்யாஹாரரூப கக்ஷமாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரிப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் நீஹாரசைல தனயாயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ருஹத் ப்ரகாச ரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் பரேச மஹிஷ்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹரஜீவ நாதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரிப்ர முகாபி வந்த்யாயை நம: (100)
ஓம் ஹ்ரீம் ஹேரம்ப சக்திதர நந்தின்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹேம வாண்யை நம:
ஓம் ஹ்ரீம் சண்டிகாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹேமவத்யை நம:
ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
ஓம் ஹ்ரீம் மதுகமலாயை நம:
ஓம் ஹ்ரீம் ச்யாமாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரைலோக்ய ஸமயோகின்யை நம:
ஓம் ஹ்ரீம் பரதேவதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஜகன்மோஹின்யை
நம: (110)
ஓம் ஹ்ரீம் அத்ரிஸுதாயை நம:
ஓம் ஹ்ரீம் இஷ்டார்தததாயை நம:
ஓம் ஹ்ரீம் தேவ முனீந்த்ர வந்தித
பதாயை நம:
ஓம் ஹ்ரீம் பார்வத்யை நம:
ஓம் ஹ்ரீம் வரப்ரதாயை நம:
ஓம் ஹ்ரீம் தரா தரேந்த்ர கன்யகாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரித்ரா ஸமன்விதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்வயம்வரா பார்வத்யை
நம: (118)

கன்னியாகுமரி பகவதி அம்மன கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கால் நாட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக 2-ந் தேதி மாலையில் கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு 'மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான' நிகழ்ச்சியாக நடக்கும் கொடி மரக்கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 1-ம் திருவிழாவான 3-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
இதுதவிர விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள்,அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இரவு சமய சொற்பொழிவு, பாட்டுக்கச்சேரி, நாதஸ்வரகச்சேரி, வாகன பவனி, சப்பர ஊர்வலம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9-ம் திருவிழாவான 11-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்றுகாலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
10-ம் திருவிழாவான 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் ஆராட்டு நிகழ்ச்சி முடிந்ததும் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.
தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் வறண்ட குளத்தின் கரையில் அம்மனை வைத்து பூஜைகள் நடத்துகிறார்கள். தெப்ப திருவிழா முடிந்த பிறகு நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி இன்று காலை 8-30 மணிக்கு நடந்தது. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரிலும் கன்னியம்பலம் மண்டபத்திலும் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

வித்யாம்பிகை ஆலயச் சிறப்பு என்னவென்றால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் நாக தோஷமிருப்பின் திருமணம் விரைவில் கை கூட இங்கு பரிகாரம் செய்தால் விரைவில் நிறைவேறும்.
தலைநகர் சென்னைக்கு அருகில் சாஸ்திர நூல்கள் ‘நகரேஷீ காஞ்சி’ எனச் சிறப்பித்துக் கூறுகின்ற காஞ்சி மாநகருக்குச் செல்லும் வழியில் உள்ள அழகிய கிராமம்தான் முடிச்சூர். ஆதியில் மணமுடிச்ச நல்லூர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ள இவ்வூரில் ஈசனும் இறைவியும் திருமணக் கோலத்தில் காட்சி தந்தமையால் அப்பெயர் விளங்கியது. நாளடைவில் முடிச்சூர் என்று மருவியது. மேலும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை ஸ்ரீஅப்பாரியார் சுவாமிகள் என்ற மகான் ஓலைச் சுவடிகளிலிருந்து எடுத்து அச்சில் கோர்த்து இவ்வூரில் இருந்து முடித்தமையால் முடிச்சூர் என்ற பெயரைப் பெற்றது என்பர்.
நல்லோர் பலர் நாவின் மூலம் நனி சிறந்த வார்த்தைகளின் படியும் முன்னோர்களின் சான்றின் படியும், தொல் பொருள் ஆய்வாளர்களின் பார்வையின்படியும் இத்திருக்கோயில் சுமார் 1300 ஆண்டுக்கு முற்பட்ட தென்றும், இதுவே பல்லவர் காலக் கட்டடக் கலைக்குச் சான்று பகரும் ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது.ஸ்ரீஎன்றால் லட்சுமி, வித்யா என்றால் சரஸ்வதி. இந்த இரண்டு ஸ்வரூபமும் சேர்ந்து அருள்காட்சி புரிபவள்தான் ஸ்ரீவித்யாம்பிகை.
அபய வரத ஹஸ்தம் காட்டி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறாள். இந்த வித்யாம்பிகை ஆலயச் சிறப்பு என்னவென்றால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் நாக தோஷமிருப்பின் திருமணம் விரைவில் கை கூடவும், தோஷம் நீங்கவும் இங்குள்ள நாகர் மேடையை வலம் வந்து அன்னையின் சந்நதியில் ஒரு விரலி மஞ்சளைக் கயிற்றில் கட்டி விட்டு வழிபாடுகள் நடத்தி விட்டுச் சென்றால் உடனே நல்ல இடத்தில் அப்பெண் வாழ்க்கைப் படுகிறாள் என்பது ஐதீகம். அத்தோடு அனுபவித்தவர்களும் எடுத்துச் சொல்கிறார்கள். விரைவில் விவாகம் நடைபெற வரம் அருளும் இந்த வித்யாம்பிகையை திருமணமாகாத ஆண்களும் பெண்களும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகளவில் பக்தர்கள் வருவதால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
அதிகளவில் பக்தர்கள் வருவதால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 25 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலமாக தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழக பக்தர்கள் நடைபாதை வழியாக தரிசனத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். இதனால் பக்தர்களை தங்கவைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுண்டம் காம்ப்ளக்சில் 33 குடோன்களிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் பக்தர்கள் தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,358 பேர் தரிசனம் செய்தனர். 41,900 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.11 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர்.
மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர்.
விரதம் கடைபிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணைசெய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது.
2. வைகாசி மாதம் :- வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவானால் வழிபடப்பட்டது.
3. ஆனி மாதம் :- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.
4. ஆடி மாதம் :- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.
5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.
6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.
7. ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.
8. கார்த்திகை மாதம் :- இரண்டு சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.
10. தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.
11. மாசி மாதம் :- தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.
12. பங்குனி மாதம் :- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.

திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பணசாமி கோவிலில் ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு இருந்து சுவாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை படைத்து வழிபட்ட வினோத திருவிழா நடந்தது.
திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் செல்லும் வழியில் உச்சிக் கருப்பணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுாமிக்கு உருவம் கிடையாது. ஆனால் பெரிய அளவில் 2 கல்தூண்கள் கருவறையாக அமைந்து உள்ளது. அதன் மையத்தில் சுமார் 5 அடி உயரம் உள்ள 2 அரிவாள் உள்ளது. மேலும் காற்று ஓசைக்கு ஒலித்து கொண்டே இருக்ககூடிய ஏராளமான மணிகள் உள்ளன. இந்த கோவிலில் பாரம்பரியமாக தொன்று தொட்டு ஆண் பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வருகிறார்கள்.
கோவிலுக்கு வந்து செல்லக்கூடிய ஒவ்வொரு பக்தரும் அவரவர் நெற்றியில் விபூதியை பூசிக்கொள் கிறார்கள். அதே சமயம் கோவிலை விட்டு வெளியேறும்போது நெற்றியில் பூசிய விபூதியை அழித்துவிட்டுசெல்கிறார்கள். மேலும் பெண்கள் கண்களுக்கு தெரியக்கூடாது என்பதால் சாமிக்கு படைக்க கூடிய பழங்களை கோவிலை விட்டு வெளியே கொண்டு செல்லக்கூடாது.
இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஒரு வெள்ளிக் கிழமை அன்று கனிகள் மாற்றும் திருவிழா தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் உள்ள சாமிபெட்டி இருக்கும் இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாழைப் பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பலாபழங்கள் ஆகிய முக்கனிகளை ஒரு டிராக்டரில் வைத்து ஊர்வலமாக புறப்பட்டு உச்சிக்கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர்உச்சிக்கால வேளையில் சாமிக்கு குவியலாக முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.