என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தெய்வங்களை வலம் வந்து வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    விநாயகர் - 1 அல்லது 3 முறை

    சூரியன் - 2 முறை

    சிவபெருமான் - 3, 5, 7 முறை

    முருகன் - 3 முறை

    தட்சிணாமூர்த்தி - 3 முறை

    சோமாஸ் கந்தர் - 3 முறை

    அம்பாள் - 4, 6, 8 முறை

    விஷ்ணு - 4 முறை

    மகாலட்சுமி - 4 முறை

    அரச மரம் - 7 முறை

    அனுமன் - 11 அல்லது 16 முறை

    நவக்கிரகம் - 9 முறை

    ஏதாவது மனதில் நினைத்து அது நிறைவேற வேண்டும் என்று கோவிலை வலம் வருபவர்கள், 108 முறை வலம் வருவது நல்லது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிளாஞ்சேரிதான் அந்த திருத்தலம்.
    பைரவர் என்றாலே நம் நினைவுக்கு வருவது காசி மாநகரம்தான். காசியில், அஷ்ட பைரவர்களுக்கும் தனித்தனி கோவில்கள் அமைந்துள்ளன. காசிக்கு செல்லும் பக்தர்கள், அஷ்ட பைரவர்களையும் அவசியம் தரிசிக்க வேண்டும் என்பார்கள், பெரியோர்கள். தமிழகத்திலும் அஷ்ட பைரவர்கள் அருளும் ஒரு திருத்தலம் உண்டு.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிளாஞ்சேரிதான் அந்த திருத்தலம். இங்கே அருள்மிகு காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டிருக்கிறார், அருள்மிகு கயிலாசநாதர். இந்தக் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிக்கொண்டிருக்கிறாள்.

    இக்கோவிலின் தலவரலாறு மகத்துவமானது.

    பிரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிக்க திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே, சப்த ரிஷிகளை அழைத்து தவம் மேற்கொள்ளும்படி கூறினார். அப்போது அத்ரி மகரிஷியின் மகனான பிராச முனிவர், தாமும் சப்தரிஷிகளோடு சேர்ந்து தவம் இருக்க விரும்பினார். அதற்கு சிவபெருமானின் அனுமதியை வேண்டினார். ஆனால், அவருடைய முன்வினைகள் முழுவதும் தீரவில்லை என்பதால், அவர் தவம் இருக்க சிவபெருமான் அனுமதிக்கவில்லை.

    இதனால் மனம் வருந்திய பிராச முனிவர், தன்னுடைய முன்வினைகள் தீருவதற்கு ஒரு வழி கூறியருளும்படி சிவனாரைப் பிரார்த்தித்தார். சிவனாரும் மனமிரங்கி, அவரைப் `பிராச வனஞ்சேரி’ என்ற பகுதிக்குச் சென்று, அந்தத் தலத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கயிலாசநாதரை வழிபடும்படி அருள்பாலித்தார்.

    அத்துடன், அந்த தலத்தில் சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, தொடர்ந்து ஆயிரம் பவுர்ணமிகள் ஜயமங்களா யாகம் செய்து முடித்தால், முனிவரின் முன்வினைகள் முழுவதும் நீங்கும்; சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடையலாம் என்று அருளினார்.

    சிவனாரைப் போற்றித் துதித்த பிராச முனிவர், இறை ஆணைப்படி இந்தத் தலத்துக்கு வந்து, பதினெட்டு திருக்கரங்களுடன் கூடிய சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரம் ஜயமங்களா யாகம் செய்து வழிபட்டார். அதன் பலனாக அவரின் முன்வினைகள் நீங்கின. சப்த ரிஷிகளுக்கும் மேலானவராகத் திகழும் பெரும்பேறும் கிடைத்தது. எங்குமே காண முடியாத 5½ அடி உயரத்தில் சிம்மவாராஹி அம்மன் இங்கு தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். சிம்ம வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தினத்தில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெறுவது சிறப்பு.

    ஜய மங்களா மகா யாகம்

    இந்த தலத்தின் பிரார்த்தனைச் சிறப்புகள் குறித்து இக்கோவிலில் பூஜைகள் செய்து வரும் கண்ணன் குருக்கள் கூறுகையில், ` பவுர்ணமிதோறும் இங்கு மாலை 5 மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது, பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதிகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம், அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.

    அதேபோல், இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.

    அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இது. அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை 6 மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்’’ என்றார்.

    அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோவில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!

    எட்டு பேறுகள் அருளும் எட்டு பைரவர்கள்

    சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இரண்யகசிபுவை வதைத்த நரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷத்தைத் தணிக்க, சிவபெருமான் எடுத்த திருவடிவே ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இந்த மூர்த்தியின் வலப்புற இறக்கையில் இருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி.

    இந்தத் தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். ``சரபசூலினிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கும் காவலாக இருந்து அருள்பாலிக்கிறார்கள் இந்த அஷ்ட பைரவர்கள்’’ என்று சிலிர்ப்போடு பகிர்ந்துகொள்கிறார்கள் பக்தர்கள். இவர்கள் எண்மரையும் வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அசிதாங்க பைரவர்: அன்ன வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இவர், நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் அன்பர்களும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். இவரை வழிபட்டால் கல்வி, கலை, செல்வம், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். கலைத் துறையினர் இவரை வழிபட்டால் மகத்தான வெற்றிகளைப் பெறலாம்.

    குரு பைரவர்: ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் ஜாதகர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். பித்ரு தோஷங்கள் நீங்கவும், திருமணத் தடைகள் விலகவும், கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் நீங்கிக் குடும்ப ஒற்றுமை ஏற்படவும் இவரை வழிபட வேண்டும்.

    சண்ட பைரவர்: மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி நடைபெறும் ஜாதகர்களும் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர். காரியத் தடைகள் அகலவும், துன்பங்கள் நீங்கவும், ரத்தம் சம்பந்தமான வியாதிகளில் இருந்து விடுபடவும் இவரை வழிபடுவது, விசேஷம்.

    குரோதன பைரவர்: கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். புதன் திசை, புதன் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். கடன்தொல்லை தீரவும், செல்வம் பெருகவும், தோல் வியாதிகள் விலகவும் இவரை வழிபடவேண்டும்.

    உன்மத்த பைரவர்: குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். கேது திசை, கேது புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் நீங்கவும், ஏவல், பில்லி-சூன்யம் போன்ற தீவினைகள் விலகவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் இவரை வழிபடவேண்டும்.

    கபால பைரவர்: யானை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர். சுக்கிர திசை, சுக்கிர புக்தி நடைபெறும் ஜாதகர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மூர்த்தி இவர். இவரை வழிபட்டால் ஜனவசியம், ஆட்சி-அதிகாரம், அரசியலில் உயர் பதவிகள் ஆகியவை வாய்க்கும்.

    பீஷண பைரவர்: சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். குரு திசை, குரு புக்தி நடைபெறும் ஜாதகர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், இதயம் தொடர்பான பிணிகள், பக்கவாதம் ஆகியவை விலகவும் இவரை வழிபடவேண்டும்.

    சம்ஹார பைரவர்: நாய் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். பத்து திருக்கரங்களைக் கொண்டவர். சனி திசை-சனி புக்தி மற்றும் ராகு திசை-ராகு புத்தி நடைபெறும் ஜாதகர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய பைரவர் இவர். சத்ரு உபாதைகள் நீங்கவும், கண்டங்களிலிருந்து தப்பிக்கவும், விபத்துகளில் சிக்காதிருக்கவும், வாக்குப் பலிதம் வாய்க்கவும் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.
    வீட்டின் பூஜை அறையில் தினமும் ஒரு மண் பானை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது மிகவும் நல்லது. இதனால் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    வீட்டின் பூஜை அறையில் தினமும் ஒரு மண் பானை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது மிகவும் நல்லது. இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.

    அதேப்போல் நாம் தினமும் பூஜை அறையில் அமர்ந்து இஷ்ட தெய்வத்தின் மூல மந்திரத்தை கூறி தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் சொல்லும் மந்திரத்தின் அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். பிறகு அந்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.

    அதேப்போல் தினமும் பூஜை அறையில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்து மறுநாள் காலையில் அந்த நீரை கூரையில் ஊற்றிவிட்டு மீண்டும் புதிதாக தண்ணீர் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் வீட்டில் துர்சக்திகள் இருந்தால் வீட்டை விட்டு வெளியேறிவிடும்.

    அதேபோல் நாம் பூஜை செய்யும்போது மணி அடித்து சுவாமி தரிசனம் செய்வதால் துர்சக்திகள் நெருங்காது. மேலும் தெய்வீக சக்தி வீட்டில் இருக்கும். நாம் பூஜை அறையில் பூஜை செய்யும்போது ஐம்பூதங்களும் இருக்க வேண்டும். முதலாவதாக ஆகாயம் என்பது பூஜை அறையில் வியாபித்து இருக்கும். நிலம் என்பது நம்மை தாங்கி நிற்கிறது.

    நெருப்பு விளக்கு ஏற்றும்போது இருக்கிறது. காற்று இயற்கையாகவே இருக்கிறது. ஆனால் தண்ணீர் மட்டும் இருக்காது. அதனால் நாம் பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஐம்பூங்களின் சக்தி நமக்கு கிடைக்கும் என்று ஐதீகத்தில் சொல்லப்படுகிறது.

    தேன் தமிழ் சுவை பாடும் தென்னகத்தில், தனிப்பெரும் கடவுளாக வீற்றிருக்கும் முருகப்பெருமானின் திருநாமத்தை உள்ளத்தில் உரக்க சொன்னால் உள்ளமும் உலகமும் அமைதி பெறும் என்பது பக்தர்கள் அனைவரும் கண்ட உண்மை.
    தேன் தமிழ் சுவை பாடும் தென்னகத்தில், தனிப்பெரும் கடவுளாக வீற்றிருக்கும் முருகப்பெருமானின் திருநாமத்தை உள்ளத்தில் உரக்க சொன்னால் உள்ளமும் உலகமும் அமைதி பெறும் என்பது பக்தர்கள் அனைவரும் கண்ட உண்மை. பழனி மலைக்கோவில், அடிவாரம் திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவிலை உள்ளடக்கியது பழனி. அழகிய குன்றுகள் நிறைந்து காட்சியளிக்கும் இப்புண்ணிய தலத்திற்கு தைப்பூச திருநாளில் வழிபடுவது கண்கொள்ளா காட்சியாகும்.

    பழனி மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்லும் பாதையில் சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் ஆகியோரது சிற்பங்கள் புராண வரலாற்றை காட்டுகிறது. ஞான தண்டாயுதபாணியான முருகப்பெருமான் பழனியில் ஆண்டியாய், ஒரு கரத்தில் தண்டு ஏந்தி மற்றொரு கரத்தில் வேல் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனந்த கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. அதாவது காங்கேயன், கார்த்திகேயன், சரவணன், குமரன், சண்முகன், சேனாதிபதி, குகன், வேலாயுதன், கந்தன், கடம்பன், கதிர்வேலன் ஆகிய முக்கியமான பெயர்களில் பக்தர்கள் அன்புடன் வழிபட்டு வருகின்றனர்.

    போகர் என்ற சித்தர் நவபாஷாணங்களை கொண்டு பழனி மலை மீது உள்ள முருகப்பெருமானின் சிலையை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நவபாஷாணம் காரணமாகவே அபிஷேகத்தின்போது சிலையில் படும் பன்னீர், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், திருநீறு ஆகியவை தீராத நோய் தீர்க்கும் தன்மையை பெற்றதாக மாறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற தைப்பூச திருநாளில் வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானின் அருளால் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று பேரின்ப வாழ்வு பெற வேண்டும்.
    பொதுவாக கனவு என்பது நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை கொண்டு வருவது தான் கனவு. அந்த வரிசையில் ஆன்மீக கனவுகளுக்கு என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம்.
    பொதுவாக கனவு என்பது நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை கொண்டு வருவது தான் கனவு. அதிலும் தூக்கம் கலைந்த பிறகு நாம் கண்ட கனவிற்கு என்ன பலன் என்று யோசித்து கொண்டே இ௫ப்போம். பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இருக்கும் போது ஒரு கனவு வந்தால் அது வருங்காலத்தில் ஒரு நல்லது நடக்கப்போவதையே கனவில் குறிக்கிறது.

    அந்த வரிசையில் ஆன்மீக கனவுகளுக்கு என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம். நம் கனவில் சிவன் வந்தால் நம் தொடர்ச்சியான தியான பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றாகும்.

    முருகன் வந்தால் நாம் நினைத்த காரியம் கைகூடும் என்றாகும். விநாயகர் வந்தால் நாம் புதிதாக தொடங்கும் வேலையில் நல்லனவையே நடக்கும் என்றாகும். பெருமாள் வந்தால் புதிதாக தொடங்கும் தொழில் நன்கு வளரும் என்றாகும்.

    விஷ்ணு பகவான் வந்தால் நாம் செல்வந்தர் ஆகுவோம் என்றாகும்.

    அம்பாள் கனவில் வந்தால் வீட்டில் நல்ல சுப காரியங்கள் நிகழும். மேலும் குலதெய்வம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மேலும் நல்ல சுபிட்சம் வ௫வதை குறிக்கும்.

    யானை துரத்துவது போல கனவு கண்டால் விநாயக௫க்கு ஏதோ நீங்கள் செய்ய வேண்டியது பாக்கி உள்ளது என அர்த்தம். கோவில் கோபுரம் வந்தால் பூர்வ ஜென்ம பாவம் நீங்கி விட்டது போலவும் நல்ல நிலைக்கு செல்ல போகிறீர்கள் என்றும் அர்த்தமாகும். கடவுள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் வாழ்க்கையில் குறை இன்றி, நல்லது உண்டாகும் என்பதாகும்.

    எனவே, ஆன்மீக கனவு என்பது பெரும்பாலும் ஒரு வகை நல்லதை குறிப்பதற்காகவே என்று அர்த்தம் ஆகும்.
    அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசையில் ஊஞ்சலில் வைக்கப்பட்டிருக்கும் அங்காளம்மனை மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் வேண்டியது நிறைவேறும்.
    அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் தான் அமாவாசை. மேலும் பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.

    மூன்று அமாவாசை விரதத்தின் பயன்கள்

    அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசையில் ஊஞ்சலில் வைக்கப்பட்டிருக்கும் அங்காளம்மனை மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் வேண்டியது நிறைவேறும்.

    கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும்.

    ஆன்ம பிணிகளாக பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம் போன்றவை விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரமஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.

    ஒரு எலுமிச்சை பழத்தை நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம்.

    பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.

    அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாகும்.
    சிவலிங்க தோஷம் அடைந்த ஆஞ்சநேயர் பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபூஜை செய்து, விமோசனம் பெற்றார். சென்னையில் இருந்து15 கிலோ மீட்டர் தூரத்தில் பாடி உள்ளது.
    ராவணனை வதம் செய்த பாவம் நீங்குவதற்காக, ராமபிரான் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். இதற்காக காசியில் இருந்து சிவலிங்கத்தைக் கொண்டு வரும்படி அனுமனை பணித்தார். ஆனால் அவர் வர தாமதமானதால், கடற்கரை மணலில் சீதை பிடித்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்தார், ராமர்.

    இந்த நிலையில் லிங்கத்துடன் அங்கு வந்த அனுமன், கோபத்தில் மணல் லிங்கத்தை தன்னுடைய வாலின் வலிமையால் பெயர்க்க முற்பட்டார். ஆனால் அது முடியாமல் மூர்ச்சையடைந்தார். மயக்கம் தெளிந்தபோது, தான் சிவலிங்க தோஷம் அடைந்ததை உணர்ந்தார். இதையடுத்து பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபூஜை செய்து, விமோசனம் பெற்றார்.

    இதை நினைவுகூறும் வகையில் இந்த ஆலய பிரகாரத்தில் ஒரு சிவலிங்கம் தனிச் சன்னிதியில் உள்ளது. அதன் அருகில் அனுமன், சிவலிங்கத்தை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். சென்னையில் இருந்து15 கிலோ மீட்டர் தூரத்தில் பாடி உள்ளது.
    செங்கல்பட்டு அடுத்த சிங்கம்பெருமாள் கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ள அனுமன், அழகான ஜடையுடன் அருள்பாலிக்கிறார்.
    செங்கல்பட்டு அடுத்த சிங்கம்பெருமாள் கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, கருநீலம் கிராமம். இங்கு லட்சுமி நாராயணர் திருக்கோவில் இருக்கிறது.

    இந்தக் கோவிலின் அருகில் ஆஞ்சநேயர் ஆலயமும் உள்ளது. இங்குள்ள அனுமன், அழகான ஜடையுடன் அருள்பாலிக்கிறார். காதில் குண்டலம் காணப்படுகிறது. ஆஞ்ச நேயரின் வால், இடுப்பிற்கு கீழே ஆரம்பித்து வளைந்து நுனிபாகம் சுருட்டிய நிலையில் அற்புதமாக காட்சி தருகிறார்.

    இந்த ஆஞ்சநேயர் 5 அடி உயரத் தில் பவ்யமாக காட்சி அளிக்கிறார்.
    இயேசு என்ற இம்மானுவேல் நம்மோடு இருந்து நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்படி தன்னையே இவ்வுலகிற்கு கொடுத்தார். அந்த இமானுவேல் ஆகிய இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு அனைத்து ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சியையும் பெற்று வாழ ஆண்டவர் கிருபை செய்வாராக.
    இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். இந்த வார்த்தையை தேவதூதன் சொல்லும்போது தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என்று எழுதப்பட்டுள்ளது. இயேசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்.

    அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று (ஏசாயா 7:14) முன்னுரைத்து விட்டார். கடவுள் மனித உருவமாய் பிறந்தார். இந்த செயல் கடவுள் மனிதருள் மனிதராய் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாயிருக்கிறது. ஏசாயா 8:8ல் இமானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விலாசத்தை மூடும் என்றான். இது அசீரியா ராஜாவால் ஆகாஷின் நாட்களில் யூதருக்கு வந்த கெடுதியை குறிக்கிறது என்றும், இதன்படி இமானுவேல் பாடனுவிப்பார் என்றும் விளங்கப்பட்டு உள்ளது.

    ஆகவே மேசியா வருவாரென்றும், அவர் நமக்காக பாடுபடுவார் என்றும் நம்பி இமானுவேல் ரட்சகர் என்று நினைத்தார்கள். இது சரித்திரம் கூறும் சான்று. ஏசாயா தீர்க்கனால் உரைக்கப்பட்டது. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழ விடாமலும் அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததை போல நம்மோடு இருக்கிறார். (ராஜா 8:57) .

    இயேசு என்ற இம்மானுவேல் நம்மோடு இருந்து நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்படி தன்னையே இவ்வுலகிற்கு கொடுத்தார். அந்த இமானுவேல் ஆகிய இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு அனைத்து ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சியையும் பெற்று வாழ ஆண்டவர் கிருபை செய்வாராக.
    தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில், உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும்போது, அவரது முகம் படிப்படியாக செந்தூர நிறுத்திற்கு மாறுவதைக் காணலாம்.
    தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது, நவநீதகிருஷ்ணன் ஆலயம். இங்கு அருளும் ஆஞ்சநேயர், மிக அபூர்வமாக வடக்கு முகமாக காட்சி தருகிறார்.

    பக்தர்கள் தங்களுக்கு நிறைவேற வேண்டிய காரியங்களை நினைத்து, மட்டை தேங்காயை ஒரு துணியால் மூடி அதை ஆஞ்சநேயர் சன்னிதியில் கட்டிவிட்டு வந்தால், விரைவில் பிரார்த்தனை நிறைவேறும்.

    இந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும்போது, அவரது முகம் படிப்படியாக செந்தூர நிறுத்திற்கு மாறுவதைக் காணலாம். அவரது உடலில் நரம்புகள் ஓடுவதையும் நன்றாக பார்க்க முடியும்.
    எல்லோருக்கும் பணிவு இருக்க வேண்டும் என்பதைத்தான், திருவள்ளுவர் தன்னுடைய குறளில், எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து” என்று கூறுகிறார்.
    ஆன்மிகத்தில் ‘பணிவு’க்கு முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பணிவு வாழ்க்கையை உயர்த்துகிறது. பணிவின்மை வாழ்க்கையை அழித்து விடுகிறது. பணிவு இல்லாவிட்டால், கணவன் - மனைவி உறவு, பெற்றோர் - பிள்ளை உறவு, ஆசிரியர் - மாணவர் உறவு, அதிகாரி - பணியாளர் உறவு என அனைத்தும் சிதறிப்போய்விட வாய்ப்பிருக்கிறது. அதன் மூலம் சமுதாயத்திலும், குடும்பத்திலும் குழப்பங்கள், போராட்டங்கள், பிரச்சினைகள் உருவாகும். எனவே எங்கும், எவ்விடத்திலும், எப்போதும் பணிவோடு இருங்கள்.

    ‘சைவ சமயம்’ என்பதற்கு ‘தாழ்வு என்னும் தன்மையோடு சைவமாம் சமயம் சார்தல்’ என்று சைவ சமயத்தினர் இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறார்கள். தாழ்வு, அடக்கம், பணிவு போன்றவை, சைவ சமயத்திற்கு உரிய சிறப்பு என்று அந்த சமயம் வலியுறுத்துகிறது. பணிவு என்ற ஒன்று அமையும்போதுதான், ஒரு சைவனின் வாழ்க்கை முழுமை பெறுவதாகவும் அந்த சமயம் சுட்டிக்காட்டுகிறது. “புல்லைப் போன்று பணிவுடையவனாக இரு” என்பது கிருஷ்ண சைதன்யரின் முக்கியமான உபதேசமாகும்.

    விவேகானந்தரின் குருவாக இருந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், பணிவு குறித்து இவ்வாறு சொல்கிறார். “மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. அது பள்ளமான இடத்துக்கு ஓடிவந்து விடுகிறது. அதுபோல், இறைவனின் திருவருளானது தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. அது பணிவு உள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும்” என்கிறார்.

    நெற்கதிர்கள் முதிர்ச்சி அடைந்தால், அதுவாகவே தலையை சாய்க்கும். அதுபோல் வாழ்க்கையில் உயர உயர மனிதர்களிடமும் பணிவு வளர வேண்டும். வாழ்க்கையில் உயர்வுபெற விரும்புபவன், பணிவுடையவனாக இருக்க வேண்டியது அவசியம். எல்லோருக்கும் பணிவு இருக்க வேண்டும் என்பதைத்தான், திருவள்ளுவர் தன்னுடைய குறளில், எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து” என்று கூறுகிறார்.
    ஆடம்பரம், எளிமையற்ற, இரக்கமற்ற வாழ்க்கையாக இல்லாமல் பொதுநலம், எளிமை, அடக்கமென்று அழகிய நபி (ஸல்) அவர்களின் ஆட்சி, பல ஆட்சியாளர்களுக்கு முகவரியாக மாறுகிறது.
    தனக்காகவும், தன் வாரிசுகளுக்காகவும், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை தன் கணக்கில் சேர்க்கும் தலைவர்களை நெடுங்காலமாக உலகம் கண்டு வருகிறது. ஆனால், வறுமைகளை மட்டுமே செழுமையாகக் கண்ட, முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு, நீதமான ஆட்சியின் புதிய அத்தியாயத்திற்கு அடித்தளமாக மாறியதை ஆச்சரியக்கண்களால் பார்த்து வியக்கிறது உலகம்.

    ஆடம்பரம், எளிமையற்ற, இரக்கமற்ற வாழ்க்கையாக இல்லாமல் பொதுநலம், எளிமை, அடக்கமென்று அழகிய நபி (ஸல்) அவர்களின் ஆட்சி, பல ஆட்சியாளர்களுக்கு முகவரியாக மாறுகிறது.

    நேர்மையான ஆட்சி

    நேர்மையாகவும், நேர்த்தியாகவும் ஆட்சி, அதிகாரங்களைக் கொண்டு மக்களுக்கு சேவைகள் செய்வதையே இறைவன் விரும்புகிறான். சேவைகள் செய்வதற்கே உங்களுக்கு ஆட்சிகள் தரப்படுவதாக இஸ்லாம் கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரங்களை மக்களுக்கு எதிரான அம்பாக மாற்ற இஸ்லாம் விரும்பவில்லை. இஸ்லாம் கூறக்கூடிய ஆட்சி, அதிகாரம் பூக்களில் நடக்கும் பூனை நடை அல்ல. மாறாக இரு பக்கம் கூர் முனையுள்ள கத்தி மேல் நடக்கும் விஷப் பரிட்சை. இதில் சிறிதேனும் தவறு ஏற்பட்டால், நாளை மறுமையில் விசாரணையின் போது முழு விளக்கம் கொடுக்க நேரிடும் என்பதால் பொறுப்புகளைச் சரியாக நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகிறது.

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவருக்கும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித்தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத்தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான். அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி).

    ‘மக்கள் நலன்களை கவனத்தில் கொண்டால், சுவனம் செல்லும் பாதையை இலகுவாகக் கடந்து விடலாம்’ என்பதை மேலுள்ள நபிமொழி குறிப்பிட்டுக் காட்டுகிறது.

    சொல்வதும், அதன் படி நடத்தலும் சமமான பாதையில் செல்வது மிக அரிது. ஆனால் நபி (ஸல்) அவர்களின் கூற்றும், அதன்படி நடத்தலும் ரெயில் பாதையைப் போன்று அவர்களின் வாழ்வு முழுவதும் சமமான நிலையில் பயணித்தது என்பதே உண்மை.

    மத, இன, மொழி, நிற, குல, தேச பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் பொதுவான ஆட்சியாக நபியின் ஆட்சி, அதிகாரம் அமைந்திருந்தது.

    பணிவான அரசர்

    பலவகையான கனிகள் பல நாட்டு உணவு வகைகளென்று, உணவுகளை அடுக்கி வைத்துச் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து, சாப்பிடுவது மன்னர்களின் பெருமைகளைப் பறைசாற்றும் முறைகளாகப் பார்க்கப்படுகின்றன.

    இப்படிப்பட்ட முறைகளுக்கு நேர் எதிர்த்திசையில், அரசனாக இருந்தாலும், இறைவனின் அடிமை என்பதை உணர்ந்து தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டதாக நபி (ஸல்) அவர்களின் உணவு சாப்பிடும் பழக்கம் இருந்தது. நபியவர்களின் எளிமை, கர்வம் என்ற சொல்லிற்குச் சாட்டை அடியாக விழுந்தது.

    ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவை சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்’ என்று நபியவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.

    பொதுப்பணத்தை பாதுகாத்தல்

    நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் மக்களின் வரிப்பணம் கவனமாய் பாதுகாக்கப்பட்டு, மக்களின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது‌. தனக்காகவோ அல்லது தனது குடும்பத்தார்களுக்கோ எப்போதும் நபி (ஸல்) அவர்கள் மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தியது கிடையாதென்பதை பல நிகழ்வுகள், நம்மைத் தீர்க்கமான முடிவுகளின் பக்கம் இழுக்கின்றன.

    மக்கள் பணத்தில் வீடு கட்டி குடியேறும் சில ஆட்சியாளர்களைப் பல நாடுகள் கொண்டுள்ளது. ஆனால், மக்களின் வரிப்பணம் தவறி நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருப்பதைக் கூட நபியவர்களின் மனம் ஏற்க மறுத்ததென்ற வரலாறு, பொதுப் பணத்தில் நம் கவனம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு வழிகாட்டலாக இருக்கின்றது.

    ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்தார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனே திரும்பி வந்ததையும் நபித்தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ‘நான் ஏன் அவசரமாக சென்றேன் தெரியுமா?, அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டிலிருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்’ என்றார்கள். (நூல்: புகாரி).

    நூலிழையில் கூட ஆட்சி, அதிகாரத்தில் தவறுகள் ஏற்பட்டு விடாமல் உன்னிப்பாகக் கவனித்தலில் அழகிய தலைமைக்கு நங்கூரம் பாய்ச்சியது நபியின் நல்லாட்சி. ஆட்சியாளர் என்ற மமதையில் மக்கள் முன் தோன்றாமல் அல்லாஹ்வின் அடிமை, மக்களின் சேவகன் என்ற ரீதியில் மக்கள் முன் செல்வதற்கு இஸ்லாம் ஆணையிடுகிறது.

    வெளிப்படையான, நேர்மையான ஆட்சி அல்லாஹ்வின் நிழலில் நிற்க இடம் பிடித்துக் கொடுக்கும். அல்லாஹ்வின் நிழலைப் பெறுவதற்கு நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் இருந்த பொறுப்புணர்வும், பொதுநலமும் நம் வாழ்விலும் தொடர அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    ×