என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தேவசகாய மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய விழாவில் நற்கருணை பவனி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.
விழாவில் நேற்று காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, புகழ் மாலை நடைபெற்றது. தொடர்ந்து நடந்த திருப்பலியில் ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை ரால்ப்கிராண்ட் மதன் தலைமை தாங்கினார். பனவிளை பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மறையுரையாற்றினார். பின்னர் நற்கருணை பவனி நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கத்தோலிக்க சங்கம் சார்பில் பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. சங்கத்தலைவர் சகாயபென்சிகர் தலைமை தாங்கினார். பங்கு தந்தை பிரைட், வட்டாரபேரவை தலைவர் ஜேக்கப் ்மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நிகழ்ச்சியில் 8, 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் நோயுற்ற ஏழைகளுக்கு நிதியுதவி வழங்கப் பட்டது. இதில் பங்குபேரவை துணைத் தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ், துணைச்செயலாளர் சகாயரூபிலெட் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

மாசிமகத்தை முன்னிட்டு வைத்திக்குப்பம் கடற்கரையில் இன்று(சனிக்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பொதுமக்கள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதியில் பொதுமக்கள் இறங்கி செல்வதற்கு வசதியாக பாறைகள் சரி செய்யப்பட்டுள்ளன. தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் தூய்மைபடுத்தப்பட்டு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தீர்த்தவாரியில் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள், புதுவை மணக்குள விநாயகர், ராமகிருஷ்ணாநகர் ஹயக்ரீவர், காசிபாளையம் சரபேஸ்வர், பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்படும். மாசி மகத்தையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தீர்த்தவாரி நடக்கும் வைத்திக்குப்பம் கடற்கரை மற்றும் சாமிகள் வரும் பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளது. மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தபப்ட்டது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஆளில்லா விமானம் மற்றும் 30 சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

மாசி மகத்தையொட்டி இன்று சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி கடலூர் சில்வர் பீச்சில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாசி மாதம் பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் தினத்தையே மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மகத்தில் கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளை கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு சென்று தீர்த்தவாரி நடத்துவது வழக்கம். அப்போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் தீர்த்தவாரியின் போது கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இதற்காக கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகளை மாலைகளால் அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் ஊர்வலமாக பக்தர்கள் கொண்டு வருவார்கள். இந்த ஊர்வலம் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்ததும், அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். இந்த நிலையில் மாசிமக தீர்த்தவாரியில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாசிமகம் நடைபெறும் இடங்களில் கடைகள் வைக்கவோ, ராட்டினம் உள்ளிட்டவை செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாசிமக தீர்த்தவாரிக்காக கடலூர் சில்வர் பீச்சில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 2 உயர்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலங்கரித்து வைக்கப்படும் சாமிகளை, பக்தர்கள் பார்த்து செல்லும் வகையில் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் கிள்ளை முழுக்குத்துறை, சி.புதுப்பேட்டை, வல்லம்படுகை, கூடலையாத்தூர், விருத்தாசலம் மணிமுக்தாறு உள்ளிட்ட இடங்களிலும் இன்று சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும்.
கும்பகோணத்தில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மாசி மக திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேசுவரர், காசி விசுவநாதர், காளகஸ்தீசுவரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேசுவரர், கவுதமேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதேபோல் சக்கரபாணி, ராஜகோபாலசாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய பெருமாள் கோவில்களிலும் மாசிமக திருவிழா நடைபெறுகிறது. இன்று(வெள்ளிக்கிழமை) மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளில்தான் உமா தேவியார் தச்சன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தச்சன் தனது மகளாக சிவபெருமானின் சக்தியாகிய உமா தேவியார் வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டி தவம் இருந்தார். அவனது தவத்தை கண்டு உள்ளம் குளிர்ந்த சிவன் அவன் முன்தோன்றி அவன் கேட்ட வரத்தை வழங்கினார்.
உமா தேவியாரும் தச்சனுக்கு மகளாகப் பிறந்தார். இறைவியே மகளாக பிறக்க அந்த குழந்தைக்கு தாட்சாயிணி என பெயரிட்டு வளர்த்து சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார் தச்சன்.
தோஷங்கள் நீங்கும்
மாசி மகம் நாளில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் கோவில்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும் மோட்சத்தையும் தருபவர்.
மாசிமக நாளை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்த நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். மாசி மகம் நாளில் கும்பகோணத்தில் தீர்த்தவாரி திருவிழா நடைபெறும்.
மாசி மகம் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாத மக நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுவது வழக்கம். இதுவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோவில்களிலும், 5 பெருமாள் கோவில்களிலும் மாசி மக விழா கொண்டாடப்படும். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மாசிமக விழா கொண்டாடப்படுகிறது.
தீர்த்தவாரி
இன்று அதிகாலை 4 மணி முதல் மகா மககுளத்தில் பக்தர்கள் புனித நீராடத் தொடங்குவர். மதியம் 12.30 மணிக்கு ஆதிகும்பேசுவரர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் மகாமக குளக்கரையில் எழுந்தருள, தீர்த்தவாரி நடக்கிறது. இதேபோல பெருமாள் கோவில்களிலிருந்து உற்சவர் புறப்பாடும், காவிரி சக்கர படித்துறையில் தீர்த்தவாரியும் நடக்கிறது. மாசி மகம் விரதம் இருக்க விரும்புபவர்கள் காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, உலர்ந்த ஆடைகளை அணிந்து சிவசிந்தனையுடன் சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். ஒரு நேரம் மட்டும் சாப்பிடலாம். இரவு நேரத்தில் பால், பழம் சாப்பிடலாம். அன்று நாள் முழுவதும் சிவ சிந்தனையில் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்களில் மிகப்பெரிய திடல் அமைந்த தலமும், கோட்டை மாரியம்மன் கோவில் மட்டுமே ஆகும். இது கோட்டை மாரியம்மன் கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், திண்டுக்கல் மலைக்கோட்டை திப்புசுல்தான் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் திப்புசுல்தானின் படை வீரர்கள், மாரியம்மனை தங்களுடைய காவல் தெய்வமாக வணங்கினர். இந்த மாரியம்மன் கோவில், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் மாரியம்மன் கோவிலை கோட்டை மாரியம்மன் கோவில் என்று மக்கள் அழைத்தனர்.
அதுவே காலப்போக்கில் நிலைத்து நின்றது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கோட்டை மாரியம்மன் கோவிலின் மூலவர் அம்மன் சிலையின் பின்பகுதியில் ஒரு சிறு துவாரம் இருக்கிறது. அது ஒரு சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. இத்தகைய அம்சம் பொருந்திய அம்மன் சிலை வேறு எங்கும் இல்லை என்று காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார். இது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
அதோடு தமிழகத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்களில் மிகப்பெரிய திடல் அமைந்த தலமும், கோட்டை மாரியம்மன் கோவில் மட்டுமே ஆகும். இது கோட்டை மாரியம்மன் கோவிலின் மற்றொரு சிறப்பாகும். தன்னை தேடி வந்து மனமுருக பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு, கோட்டை மாரியம்மன் அருளை அள்ளித்தருகிறார். பக்தர்களுக்கு கேட்ட வரங்களை வழங்குகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த மாசித்திருவிழாவில் அம்மனை தரிசனம் செய்வதற்கு, திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோட்டை மாரியம்மனின் அருளால் காரியங்கள் நிறைவேறியதும் மக்கள் நேர்த்திக்கடன் செலுத்த தவறுவது இல்லை. அந்த வகையில் மாசித்திருவிழாவில் அக்னிச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், கரும்பு தொட்டில் கட்டுதல், மாவிளக்கு எடுத்தல், மொட்டை போடுதல் என பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகின்றன.
மேலும் சாதி, மத பேதமின்றி மக்கள் மாசித்திருவிழாவில் மாரியம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். அதேபோல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கும் காட்சியை பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது. அத்தனை அருள்நிறைந்த காட்சியாக அது அமைந்து இருக்கும்.

பழனி முருகன் கோவிலுக்கு வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி எடுத்து வந்தனர்.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் வந்தனர். இந்நிலையில் தைப்பூச திருவிழா முடிந்த பிறகும் ஏராளமான பக்தர்கள் அலகுகுத்தி பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த 9 பக்தர்கள் சண்முகநதியில் இருந்து பறவைக்காவடியில் பழனிக்கு வந்தனர். இதற்காக பெரிய கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து காரமடை, நால்ரோடு சந்திப்பு, புதுதாராபுரம் சாலை, குளத்துரோடு, திருஆவினன்குடி என பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்டோர் 15 அடி நீள அலகு குத்தியும் வந்தனர். ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடியில் வந்த பக்தர்களை பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் எடுத்தனர்.
இதுகுறித்து அந்த குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த 45 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக வருகிறோம். தைப்பூச திருவிழா முடிந்த பிறகு வால்பாறையில் இருந்து பாதயாத்திரையாக பழனி சண்முகநதிக்கு வந்து, பின்னர் அங்கிருந்து பறவை காவடி எடுத்தும், அலகுகுத்தியும் பழனிக்கு வருவோம் என தெரிவித்தனர்.

இந்த தவக்காலத்தில் நாம் உபவாசம் இருந்து தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்து நம்முடைய வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்வோமாக ஆமென்.
உபவாசம் என்பது இந்த தவக்காலத்தில் மட்டும் கடைபிடிக்கப்பட வேண்டியது அல்ல. நாம் எப்போது வேண்டுமானாலும் உபவாசம் இருந்து கடவுளோடு நம் உறவை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த தவக்காலத்தில் உபவாசம் இருப்பது என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஏனென்றால் நாம் பல்வேறு விஷேச நாட்களில் பல்வேறு சிறப்பான உணவுகளை உண்பது போல இந்த தவக்காலத்தில் நாம் மிகவும் உபவாசம் இருந்து தேவனை மகிமைப்படுத்தி இன்னும் அதிகமாக கர்த்தரிடத்தில் நெருங்கி சேர அழைக்கப்படுகின்றோம்.
எனவே இந்த நாளில் நம்முடைய வாழ்க்கையில் இரண்டு காரியங்களை முக்கியமாக செய்ய வேண்டும். அதாவது நாம் நம்மை பரிசோதித்து நம் வாழ்வில் காணப்படும் தேவையற்றவைகளை முற்றிலும் விட்டுவிட வேண்டும். அதே போல நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல குணங்களையும் பெற்று கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்பு கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தியே கர்த்தர் கேட்கிறார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நம்முடைய தவறுகளுக்காக மனம் மாறுதல், மன்னிப்பு கேட்டல் ஆகியவை நம்மை மாற்றுகிறது. அதற்கு உபவாச ஜெபம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
உபவாசத்தோடு காணப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள் ஜெபமும், விசுவாசமும் ஆகும். ஜெபம், விசுவாசம் மற்றும் உபவாசம் இந்த மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஜெயத்திற்கு விசுவாசம் தேவை. விசுவாசம் வளர ஜெபம் தேவை. இவை இரண்டும் தொடர உபவாசம் தேவை. இந்த மூன்று காரியங்களும் ஒன்று சேரும் போது நம்முடைய வாழ்க்கையில் அற்புதம் நிகழ்கிறது.
எனவே இந்த தவக்காலத்தில் நாம் உபவாசம் இருந்து தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்து நம்முடைய வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்வோமாக ஆமென்.
சகோ. மைக்கேல், காங்கேயம் ரோடு, திருப்பூர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 5 கோபுரம், 5 நந்தி, 5 கொடிமரங்கள், 5 தீர்த்தங்கள், 5 பிரகாரம் என அனைத்தும் 5-ஆக அமையப்பெற்றுள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதைகளுக்கும் உற்சவம் நடைபெறும்.
அந்த வகையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி கோவிலில் தேர் முகூர்த்தமும், ஜனவரி 25-ந்தேதி அய்யனாருக்கு காப்புகட்டுதலும், 26-ந்தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதலும் நடைபெற்று, 2-ந் தேதி பால்குடம் எடுத்தல் மற்றும் செடல் உற்சவம், தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆழத்து விநாயகருக்கு நடந்த திருவிழாவில் கடந்த 14-ந்தேதி தேர் திருவிழாவும், 15-ந்தேதி தேரோட்டமும் நடைபெற்றது.
இதையடுத்து கடந்த 17-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், காலை மற்றும் மாலை நேரங்களில் விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது. கடந்த 22-ந்தேதி கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு பழமலைநாதர் காட்சி அளிக்கும் ஐதீக திருவிழா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு ஆழத்து விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் ஏற்கனவே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 5 தேர்களிலும், பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். முதலில் ஆழத்து விநாயகர் தேர், சரியாக காலை 5.45 மணிக்கு புறப்பட்டது. அப்போது சிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்களை ஓத, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரானது சன்னதி வீதி, தென் கோட்டை வீதி, மேற்கு கோட்டை வீதி, வடகோட்டை வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளிய தேரானது காலை 6.30 மணிக்கு புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. அப்போது சிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்களை ஓத, மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேர் நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தேரோட்டத்தில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மாசிமக உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பஞ்சமூர்த்திகளுக்கு மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
நாளை(சனிக்கிழமை) புஷ்ப பல்லக்கில் சுப்பிரமணியருக்கு தெப்ப உற்சவமும், 28-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், வருகிற 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பவனி வந்தார்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 11-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி நேற்று தில்லை தெரு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் ரத வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பால், பழம் உள்ளிட்ட 20 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
அதைத் தொடர்ந்து அம்மன் புறப்பாடாகி மண்டகப்படிதாரர் மண்டபத்தை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பிறகு மாலை 6 மணியளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பவனி வந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படி தாரர்கள் செய்திருந்தனர்.

மாசிமக தீர்த்தவாரி நாளை (சனிக்கிழமை) நடப்பதாக பொதுவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருக்காஞ்சி கோவிலில் இன்று நடக்கிறது. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கவராக நதீஸ் வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விழாவின் 9-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. மாசிமக விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) கோவில் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
மாசிமக தீர்த்தவாரி நாளை (சனிக்கிழமை) நடப்பதாக பொதுவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருக்காஞ்சி கோவிலில் இன்று நடக்கிறது. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருக்காஞ்சி கோவில் தலைமை அர்ச்சகர் சரவணா சிவாச்சாரியர் கூறியதாவது:-
ஆண்டுதோறும் மாசி மகத்தன்று ஆறு, குளங்களில் நடக்கும் தீர்த்தவாரிகளை மாசி மாதம் மகம் நட்சத்திரம் பிறக்கும் நேரத்தில் செய்வது ஆகம விதி. அதன் காரணமாக திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் இன்று தீர்த்தவாரி நடக்கிறது. கடற்கரை பகுதியில் நடைபெறும் தீர்த்தவாரியானது திதியை மேற்கோள்காட்டி நடை பெறுவது. எனவே பவுர்ணமி திதியை கடைப்பிடித்து நாளை நடக்கிறது. திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் இன்று மதியம் 12.30 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. பக்தர்கள் சங்கராபரணி ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவையொட்டி ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையில் கொங்கு நாட்டு காவல் தெய்வமாக விளங்கி வரும் மாசாணியம்மன் உப்பாற்றங்கரையில் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக மயான பீட நாயகியான மாசாணியம்மனுக்கு மயான பூஜை நள்ளிர வில் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது. ஆழியாற்றங்கரையில் பீடம் அமைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து தலைமை முறைதாரர் மனோகரன் தலைமையில் அம்மன் அருளாளி அருண் மற்றும் நூற்றுக்கணக்கான முறைதாரர்கள் ஆபரணப் பெட்டியில் பூஜை பொருட்கள் எடுத்து கொண்டு முன்செல்ல பக்தர்கள் படைசூழ மயான பூஜை நடைபெறும் ஆழியாற்றங்கரையில் உள்ள பீடத்துக்கு வந்தனர். அங்கு சயன கோலத்தில் மயான மண்ணில் உருவாக்கப்பட்டு இருந்த மாசாணியம்மன் உருவத்துக்கு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் ஆழியாற்றங்கரையில் புனித நீராடி பம்பை இசை முழுங்க, மயானத்தில் உருவாக்கப்பட்டு இருந்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
நள்ளிரவு 2.30 மணிக்கு அருள் வந்து கையில் சூலாயுதத்துடன் அம்மன் அருளாளி அருண் ஆடினார். அப்போது பெண்கள் மாசாணித்தாயே, மயான பீட நாயகியே வேண்டுதல்களை நிறைவேற்ற வருவாயாக என்று பக்தி கோஷ மிட்டனர். அம்மன் அருளாளி அருண் மயானத்தில் இருந்த அம்மன் உருவாரத்தை சிதைத்து எலும்பை கவ்வியடி பிடி மண் எடுத்து, அம்மன் பட்டு சேலையில் பத்திரப் படுத்தினார். தொடர்ந்து எலும்புகளை வாயில் கவ்விய படி ஆழியாற்றங்கரையில் இருந்து உப்பாற்றங்கரைக்கு சென்றார். அப்போது அவருடன் முறைதாரர்கள், பக்தர்கள் சென்றனர். அங்கு புனித நீராடினார்கள்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் மயான பூஜையில் எடுக்கப் பட்ட பிடி மண் மூலம் சக்தி கும்பஸ்தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனைமலை ஆழியாற்றங்கரை மயானத்தில் விடிய, விடிய நடந்த மயான பூஜையில் பெண் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு சித்திரதேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி வாணவேடிக்கையுடன் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 28-ந் தேதி காலை 8 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும் நடக்கிறது. 1-ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் :
முருகப்பெருமனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி விதவிதமான சப்பரங்களில் வீதி உலா வந்தார். திரு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதனையொட்டி காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு ரதவீதிகள் வழியாக வந்து நிலையம் வந்தடைந்தது.
தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளித்தேரில் பவனி வந்தனர். கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அவருடன் கோவில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. தனப்பிரியா ஆகியோர் சேர்ந்து வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அம்பாள் தேர் புறப்பட்டு ரதவீதிகள் வழியாக சென்று நிலையம் வந்து சேர்ந்தது.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் அரசுராஜா, காயாமொழியை சேர்ந்த கணேஷ்குமார் ஆதித்தன், குமரேச ஆதித்தன், சங்கேச ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், கே.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
நாளை (சனிக்கிழமை) 11-ம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்ப உற்சவமும், 12-ம் திருவிழா அன்று இரவு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பர பவனியும் நடக்கிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். இதனையொட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.