search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காசிபாளையம் சரபேஸ்வர், பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மனை படத்தில் காணலாம்.
    X
    காசிபாளையம் சரபேஸ்வர், பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மனை படத்தில் காணலாம்.

    மாசிமகத்தை முன்னிட்டு வைத்திக்குப்பம் கடற்கரையில் இன்று தீர்த்தவாரி

    மாசிமகத்தை முன்னிட்டு வைத்திக்குப்பம் கடற்கரையில் இன்று(சனிக்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    பொதுமக்கள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதியில் பொதுமக்கள் இறங்கி செல்வதற்கு வசதியாக பாறைகள் சரி செய்யப்பட்டுள்ளன. தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் தூய்மைபடுத்தப்பட்டு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த தீர்த்தவாரியில் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள், புதுவை மணக்குள விநாயகர், ராமகிரு‌‌ஷ்ணாநகர் ஹயக்ரீவர், காசிபாளையம் சரபேஸ்வர், பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்படும். மாசி மகத்தையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    தீர்த்தவாரி நடக்கும் வைத்திக்குப்பம் கடற்கரை மற்றும் சாமிகள் வரும் பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளது. மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தபப்ட்டது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஆளில்லா விமானம் மற்றும் 30 சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
    Next Story
    ×