search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டை மாரியம்மன்
    X
    கோட்டை மாரியம்மன்

    அருளை அள்ளித்தரும் கோட்டை மாரியம்மன்

    தமிழகத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்களில் மிகப்பெரிய திடல் அமைந்த தலமும், கோட்டை மாரியம்மன் கோவில் மட்டுமே ஆகும். இது கோட்டை மாரியம்மன் கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.
    ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், திண்டுக்கல் மலைக்கோட்டை திப்புசுல்தான் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் திப்புசுல்தானின் படை வீரர்கள், மாரியம்மனை தங்களுடைய காவல் தெய்வமாக வணங்கினர். இந்த மாரியம்மன் கோவில், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் மாரியம்மன் கோவிலை கோட்டை மாரியம்மன் கோவில் என்று மக்கள் அழைத்தனர்.

    அதுவே காலப்போக்கில் நிலைத்து நின்றது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கோட்டை மாரியம்மன் கோவிலின் மூலவர் அம்மன் சிலையின் பின்பகுதியில் ஒரு சிறு துவாரம் இருக்கிறது. அது ஒரு சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. இத்தகைய அம்சம் பொருந்திய அம்மன் சிலை வேறு எங்கும் இல்லை என்று காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார். இது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

    அதோடு தமிழகத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்களில் மிகப்பெரிய திடல் அமைந்த தலமும், கோட்டை மாரியம்மன் கோவில் மட்டுமே ஆகும். இது கோட்டை மாரியம்மன் கோவிலின் மற்றொரு சிறப்பாகும். தன்னை தேடி வந்து மனமுருக பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு, கோட்டை மாரியம்மன் அருளை அள்ளித்தருகிறார். பக்தர்களுக்கு கேட்ட வரங்களை வழங்குகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த மாசித்திருவிழாவில் அம்மனை தரிசனம் செய்வதற்கு, திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோட்டை மாரியம்மனின் அருளால் காரியங்கள் நிறைவேறியதும் மக்கள் நேர்த்திக்கடன் செலுத்த தவறுவது இல்லை. அந்த வகையில் மாசித்திருவிழாவில் அக்னிச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், கரும்பு தொட்டில் கட்டுதல், மாவிளக்கு எடுத்தல், மொட்டை போடுதல் என பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகின்றன.

    மேலும் சாதி, மத பேதமின்றி மக்கள் மாசித்திருவிழாவில் மாரியம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். அதேபோல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கும் காட்சியை பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது. அத்தனை அருள்நிறைந்த காட்சியாக அது அமைந்து இருக்கும்.
    Next Story
    ×