என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனாவை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாமக்கல் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலாவில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் தீமிதி விழா நடத்தப்படுவது வழக்கம். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து, ஆஞ்சநேயரை வழிபட்டு செல்வார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த கோவிலில் தீமிதி விழா ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் கடந்த ஆண்டு நிறைவேற்ற முடியாத நேர்த்திக்கடனை, இந்த ஆண்டு நிறைவேற்றலாம் என்று காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்தும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது திருக்குறுங்குடி திருத்தலம். இங்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது ஒரு மலைக்கோவில் ஆகும். நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தரான நம்பாடுவான் என்பவர், திருக்குறுங்குடி அடுத்த மகேந்திரகிரி மலையில் வாழ்ந்து வந்தார். யாழ் வாசிப்பதில் வல்லவரான அவர், ஒரு முறை கார்த்திகை மாத வளா்பிறை ஏகாதசி அன்று விரதம் இருந்து, திருக்குறுங்குடி நம்பியை தரிசிக்க வந்தார். வழியில் பிரம்ம ராட்சசன் ஒருவன், நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாகக் கூறினான்.
உடனே நம்பாடுவான், தான் நம்பிராயரை தரிசிக்கச் செல்வதாகவும், தரிசனம் செய்துவிட்டு வருகையில் தன்னை உணவாக்கிக் கொள்ளும்படியும் வாக்குறுதி கொடுத்து விட்டுச் சென்றார். பின்னர் மலைக்கு சென்று நம்பியை தரிசித்தார். அவர் பாடிய பாடலுக்கு மயங்கிய இறைவன், அவருக்கு காட்சியளித்து ஒரு பழத்தையும் அளித்தார். தரிசனம் முடிந்ததும், காட்டில் பிரம்ம ராட்சசன் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றார், நம்பாடுவான். வழியில் முதியவர் வடிவத்தில் வந்த இறைவன், நம்பாடுவானை வழிமறித்து, அந்தக் காட்டில் பிரம்ம ராட்சசன் வாழ்வதாகவும், அவ்வழியே செல்வோனை தின்றுவிடுவதாகவும் எச்சரித்தார்.
ஆனால் நம்பாடுவான், பிரம்ம ராட்சசனுக்கு தான் கொடுத்து வாக்குறுதியை கூறி, அதை நிறைவேற்றவே தற்போது செல்வதாகச் சொல்லி வேகமாக நடந்தார். காட்டில் ஓரிடத்தில் பிரம்ம ராட்சசனைக் கண்ட நம்பாடுவான், தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளும்படியும் கூறினார்.
ஆனால் பிரம்ம ராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி, நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான், நம்பியைப் பாடி பெற்ற பழத்தில் பாதியை பிரம்ம ராட்சசனுக்குக் கொடுத்தார். அதை உண்ட பிரம்ம ராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம ராட்சச வடிவில் இருந்து விமோசனம் பெற்று, தன் முற்பிறவி வடிவத்தைப் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.
இந்த ஆலயத்தில் அருளும் நம்பிராயரை, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், தெய்வநாயகன் மற்றும் வரமங்கை ஆகியோரின் சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டது. அதன்படி குறிப்பிட்ட இடத்தை தோண்டியபோது, அந்த தெய்வ ரூபங்கள் கிடைத்தன. அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோவிலில், அந்த மன்னன் பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறார்கள்.
பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சன்னிதி உள்ளது. இங்கே எழுந்தருளி இருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்.
நம்பிராயர் கோவிலில் தினசரி விஸ்வரூபம், காலசந்தி, உச்சி கால பூஜை, சாயரட்சை, அத்தாழம், அர்த்தசாமம் ஆகிய பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம், கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி, நவராத்திரி விழா ஆகியவை சிறப்புமிக்கது. விழாவின் போது தினசரி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நடத்தப்படுகிறது.
அமைவிடம்
திருநெல்வேலியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், வள்ளியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாகர்கோவிலில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் திருக்குறுங்குடி திருத்தலம் உள்ளது.

அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு 7 சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், சுந்தரர் பதிகம் பாடிய திருத்தலமாகவும், தமிழ்நாட்டிலேயே 3-வது பெரிய தேர் என்பன உள்ளிட்ட பல சிறப்புகளை பெற்றுள்ளதாக விளங்குகிறது.
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு 7 சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், சுந்தரர் பதிகம் பாடிய திருத்தலமாகவும், தமிழ்நாட்டிலேயே 3-வது பெரிய தேர் என்பன உள்ளிட்ட பல சிறப்புகளை பெற்றுள்ளதாக விளங்குகிறது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த பல வருடங்களாக சித்திரை மாதத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் கொரோனா பாதிப்பு அதிகமானதாலும் ஊரடங்கு இருந்ததாலும் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் வருகிற 17-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற இருந்தது. அதற்கான முன்னோட்டப்பணிகள் அனைத்தும் கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துவந்தனர்.
இதனால் இந்த வருடமாவது தேரோட்டம் நடைபெறும் என்று பக்தர்களும், பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்பார்த்திருந்த நிலையில் அரசு ஆணை 342-ன் படி கோவில்களில் திருவிழாக்கள், மதம் சம்மந்தப்பட்ட கூட்டங்களுக்கு தடைசெய்யப்பட்டது. ஆகவே 2-வது ஆண்டாக இந்த வருடமும் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில் வழக்கம்போல் தேர்த்திருவிழா நிகழ்வு நடைபெறும் நாட்களில் சாமிக்கு நடைபெறும் பூஜைகள், அபிஷேகம், ஆகியவை கோவிலுக்குள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவையொட்டி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் கொடியேற்றம் தொடங்கி, ஒரு வாரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் முக்கிய நிகழ்ச்சியாக சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண்ணுக்கு தாயுமான சுவாமி அவளது பேறுகாலத்தில் அவளது தாயாக வந்து மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சியான செட்டிப்பெண் மருத்துவம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவை நடக்கும்.
சென்ற ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா, சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடந்த இருவாரங்களுக்கு முன்பு தெப்பத்திருவிழா நடைபெற்றது.
இந்தநிலையில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவிலிலும் திருவிழாக்கள் நடைபெறவில்லை. மேலும் நோய் தொற்றை தடுக்கும் விதமாக கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு திருவிழாக்கள் நடைபெறாது என்று மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை (புதன்கிழமை) தமிழ் புத்தாண்டுக்கும் எந்தவிதமான சிறப்பு ஏற்பாடும் நடைபெறவில்லை. வழக்கம்போல கோவிலில் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்றும், இதில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் பாதுகாப்பாக தரிசனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறு அருகே பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து ஜெனகை மாரியம்மன்கோவிலுக்கு வெளியே உள்ள கொடிபீடத்தில் 3 மாத கொடி ஏற்றும் விழா நடந்தது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும். இதைத் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதற்கு முன்பாக பங்குனி மாத அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை சுற்றுப்புற கிராம பக்தர்களுக்கு திருவிழா நடத்துவதற்கு முன் அறிவிப்பாக 3 மாத கொடியேற்று விழா நடைபெறும்.
இதேபோல் இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான 3 மாத கொடியேற்று விழா நேற்று இரவு நடந்தது. பக்தர்களுக்கு கை கழுவும் எந்திரம் மூலம் கை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக கவசமும் வழங்கப்பட்டது. சண்முக வேல் அர்ச்சகர் 3 மாத கொடிக்கம்பத்தை எடுத்து கோவில் வளாகத்தை சுற்றி வந்தார்.
கொரோனா தொற்று காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறு அருகே பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து கோவிலுக்கு வெளியே உள்ள கொடிபீடத்தில் 3 மாத கொடி ஏற்றும் விழா நடந்தது. செயல் அலுவலர் இளமதி, கிராம நிர்வாக அலுவலர் செல்வமணி, உபயதாரர் காவல் ராசு அம்பலம் குடும்பத்தினர், கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நாளை தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசமும், வைரகிரீடமும், சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படுகிறது.
தமிழ்ப்புத்தாண்டு நாளை (புதன்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசமும், வைரகிரீடமும், சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டையும் நாளை அணிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7.31 மணி வரையிலும் சாத்துப்படி செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகஸ்தியருக்கு இறைவன் திருமண காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவிலில் குறைவான பக்தர்கள் பங்கேற்புடன் விழா எளிமையாக நடத்தப்படுகிறது.
அம்பை காசிநாத சுவாமி கோவில், அகஸ்தீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவிலில் குறைவான பக்தர்கள் பங்கேற்புடன் விழா எளிமையாக நடத்தப்படுகிறது.
8-ம் திருநாளான நேற்று அகஸ்தியருக்கு இறைவன் திருமண காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து அகஸ்தியர் மற்றும் உலோப முத்திரை அம்பாள் அம்பை அம்மையப்பர் கோவிலுக்கு வந்தடைந்தனர். அங்கு சிவபெருமான் நடராஜர் கோலத்தில் அம்பாளுடன் எழுந்தருளி, கோவில் வளாகத்திலேயே அகஸ்தியருக்கு திருமண காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கோவில் நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணவேணி, முருகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் வாசுதேவ ராஜா, பண்ணை கண்ணன், அகஸ்தீசுவரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சங்கு சபாபதி, சங்கரன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகன் சாமிநாதன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தீர்த்தவாரி நிகழ்ச்சியும் கோவில் பணியாளர்களை கொண்டே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்கள் பேசுவதைக் கூர்மையாகவும், பொறுமையுடனும் கேட்பது ஒரு சிறந்த பழக்கம். உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் இன்னும் பொறுமையைக் கையாளலாம்.
மனிதர்களை ஆபத்து இல்லாத பகுதிகளில் வழிநடத்திச் சென்றார். அங்கு இளைப்பாறுதலும் தந்தார். அவரைப் போலவே, பெற்றோர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மேய்ப்பர்களாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொள்கிறார்.
“மழை, வெயில், பனி என்று பார்க்காமல் வயல்களில் தங்கி ஆடுகளை மேய்த்தார்கள். எதிரிகளிடமிருந்தும், கொடிய விலங்குகளிடமிருந்தும் ஆடுகளைப் பாதுகாத்தார்கள். காயப்பட்ட ஆடுகளுக்கும், வியாதிக்குள்ளான ஆடுகளுக்கும் தேவையானதைச் செய்தார்கள். ஆட்டுக்குட்டிகளை இன்னும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்” (40:11) என்று ஏசாயா புத்தகம் மேய்ப்பர்களின் பணியை விவரிக்கிறது.
பெற்றோர்களும் மேய்ப்பர்களைப் போல்தான் இருக்கிறார்கள். பிள்ளைகளை `பரலோகத் தந்தைக்கு ஏற்ற முறையில்' வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானதில்லை. ஏனென்றால் பிள்ளைகளுக்கு, சாத்தான் நிறைய சோதனைகளைக் கொடுக்கிறான்; இளமைப் பருவத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் உடல், மன ரீதியான ஆசை களோடு பிள்ளைகள் போராட வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பெற்றோர்கள் நல்ல மேய்ப்பர்களாக செயல்பட விவிலியம் வழிகாட்டுகிறது.
தன் மந்தையில் உள்ள ஆடுகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கிறது என்று ஒரு நல்ல மேய்ப்பர் அடிக்கடி கவனிப்பார். “உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு” (27:23) என நீதிமொழி எடுத்துக் காட்டுகிறது. உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று நீங்கள் கவனிக்க வேண்டும்; என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக பிள்ளைகளிடம் மனந்திறந்து பேசுங்கள். இளமை பருவத்தில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் மனந்திறந்து பேசத் தயங்குவார்கள். இதை சரிசெய்ய உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். அவர்களோடு சேர்ந்து சாப்பிடுங்கள். அவர்களுக்குப் பிடித்தமான விஷயம் பேசும்போது, அதில் உங்களுக்குத் தெரிந்ததைக் கூறி, உங்களுக்கும் அவர்களுக்குமான மனத்தடையை உடைத்தெறியுங்கள். இப்படி அவர்களோடு போதுமான அளவு நேரம் செலவிட்டால், பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேச முன்வருவதைப் பார்ப்பீர்கள்.
மற்றவர்கள் பேசுவதைக் கூர்மையாகவும், பொறுமையுடனும் கேட்பது ஒரு சிறந்த பழக்கம். உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் இன்னும் பொறுமையைக் கையாளலாம்.
நீங்கள் பொறுமையாகக் கேட்கிறீர்கள் என்று பிள்ளைகளுக்குத் தெரிந்தால்தான் பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேசுவார்கள். நீங்கள் எப்போதும் அலுவலக மனநிலையிலேயே இருந்தால் உங்களிடம் பேசத் தயங்குவார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான் வெளிப்படையாகப் பேசுவார்கள்.
“கெட்ட சகவாசமோ, மோசமான பொழுதுபோக்கோ அவர்களைத் தவறாக வழிநடத்திவிடும்” என்கிறது நீதிமொழி. ஒரு ஆடு, சற்று தூரத்தில் இருக்கும் பசுமையான இடத்தைப் பார்த்து, அங்கிருக்கும் புல்லை மேய்வதற்குச் சென்றுவிடலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வழிமாறிப் போய்விடலாம். அதேபோல், பிள்ளைகளும் கொஞ்சம் கொஞ்ச மாகப் பெற்றோர்களை விட்டு விலகிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் நல்ல மேய்ப்பர் என்றால் உங்கள் ஆடுகளாகிய அன்புப் பிள்ளைகள், எத்தகைய மேய்ச்சல் நிலத்தில் இளைப்பாறிவருகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும். மேய்ச்சல் நிலம் ஆபத்துக்கள் நிறைந்ததாக இருந்தால், மந்தையிலுள்ள ஆடு தொலைந்துபோக வாய்ப்பிருக்கிறது என்று உணர்ந்தால் அவர்களை பக்குவமாய் வழிநடத்துங்கள். நல்ல நிலத்திற்கு அழைத்து வாருங்கள். அது நல்ல மேய்ப்பனின் வேலை.

மனதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் பண்டிகையாக இருக்கும் யுகாதி பண்டிகை, புது வருடத்தின் நிகழ்வுகளை ஜோதிட ரீதியாக எடுத்துச் சொல்லும் பண்டிகையாகவும் விளங்குகிறது.
தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை இந்த ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை ஆந்திர மாநிலத்தவரும், கர்நாடக மாநிலத்தவரும் கொண்டாடுகிறார்கள். புது வருட தினத்தைக் கொண்டாடும் பண்டிகையாக இது கடைபிடிக்கப்படுகிறது. மனதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் பண்டிகையாக இருக்கும் யுகாதி பண்டிகை, புது வருடத்தின் நிகழ்வுகளை ஜோதிட ரீதியாக எடுத்துச் சொல்லும் பண்டிகையாகவும் விளங்குகிறது.
யுகாதி பண்டிகையின் பின்னணி
யுகாதி என்ற சொல்லுக்கு சம்ஸ்க்ருதத்தில் யுகத்தின் ஆரம்பம் எனப் பொருள். புராணப் பின்னணியில் பார்த்தால் கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கியவுடன் கலி யுகம் ஆரம்பித்தது. அந்த கலியுகத்தை, அதாவது, நாம் வாழும் யுகத்தை குறிக்கும் வண்ணம் யுகாதி என்ற சொல் சொல்லப்படுகிறது.
60 ஆண்டு சுழற்சியில் ஒவ்வொரு வருடமும் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. இந்த அறுபது ஆண்டுகள் முடியும் போது மீண்டும் முதல் ஆண்டின் பெயர் ஆரம்பிக்கும். அப்படிப் பார்க்கும்போது படைக்கும் கடவுளான பிரம்மா முதன் முதலில் படைக்கத் தொடங்கிய நாளினை யுகாதி என்கிறது புராணம்.
யுகாதி பண்டிகையின் சிறப்பு
இந்த யுகாதி ஆண்டு வசந்த காலத்தில் அமைந்துள்ளது. இது, வசந்தத்தின் பசுமையையும்,மகிழ்ச்சியையும் எடுத்துக்காட்டும் வண்ணம் பழைய நிகழ்வுகள் மறைந்து புதிய முயற்சிகளையும் எண்ணங்களையும் ஊக்குவிக்கும் முகமாகக் கொண்டாடப்படுகிறது. எனவே புதுத் தொழில் ஆரம்பிப்பதை இந்த நாளில் செய்கிறார்கள்.
புதிய ஆண்டின் நிகழ்வுகளை ஜோதிட உதவி கொண்டு பஞ்சாங்கம் வாசித்து சொல்வது யுகாதி பண்டிகையின் சிறப்பு அம்சமாகும். பஞ்சாங்கம் வாசிப்பது, கேட்பது இந்த பண்டிகையின் முக்கிய அம்சமாகும். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அமைந்துள்ள ’யுகாதி க்ரித்’ என்னும் நாமத்திற்கு யுகங்களை உருவாக்குபவர் என்று பொருள். இந்த நாளில் விஷ்ணுவை வணங்குவது சாலச் சிறந்தது.
யுகாதியை கொண்டாடும் முறை
யுகாதி புதிய ஆண்டுத் தொடக்கத்தை கொண்டாடும் வகையில் உள்ளது.அதி காலையிலேயே எண்ணெய் குளியலோடு புது வருடக் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது . வாசலில் மாவிலை தோரணம் கட்டி, ரங்கோலி இட்டு யுகாதி பச்சடி செய்து சாப்பிடுகிறார்கள். யுகாதி பச்சடி மாறுபட்ட சுவைகளை தரும் பொருட்களால் செய்யப்படுகிறது. புளிப்பும், இனிப்பும் கசப்பும் சேர்ந்து வாழ்க்கையும் அவ்வண்ணமே என உணர்த்துவது.
மாலையில் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கமுண்டு. பண்டிதர்கள் அல்லது பெரியவர்கள் கோவிலிலோ பொது இடங்களிலோ வீடுகளிலோ பஞ்சாங்கம் படித்து புதுவருடப் பிறப்பின் சிறப்பு அம்சங்களை எடுத்து சொல்கிறார்கள்.
யுகாதி பச்சடி
யுகாதி பச்சடியில் ஆறுவிதமான உணவு பொருட்கள் சேர்க்கப்படுகின்றன
1. வெல்லம் -இனிப்பு,மகிழ்ச்சி
2. வேப்பமொட்டு- கடுப்பு,சோகம்
3. புளி சாறு- புளிப்பு,வெறுப்பு
4. உப்பு-உப்பு சுவை,பயம்
5. பச்சை மிளகாய்-காரம்,கோபம்
6. வேப்பம்பூ,சிறிதளவு மாங்கொட்டை- துவர்ப்பு,ஆச்சர்யம்
மேலே கூறப்பட்ட கலவையில்ருந்து அறுசுவை நாக்குக்கு மட்டுமல்ல.வாழ்க்கைக்கும் உண்டு . வாழ்க்கை மகிழ்ச்சி, சோகம், வெறுப்பு, பயம், கோபம், ஆச்சர்யம் ஆகியவற்றின் கலவை என்பதை யுகாதி பச்சடி உணர்த்துகிறது. எனவே ஆண்டின் முதல் தினமே அதை ருசி பார்த்திட வேண்டும் என்ற நம்பிக்கை தெரிகிறது.
பஞ்சாங்கம் வாசித்தல்
பஞ்சாங்கம் புது ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை கோடிட்டுக் காட்டுவது.புது ஆண்டிற்கான பஞ்சாங்கத்தை பண்டிதர்களும், பெரியவர்களும் படிக்க அதை காதால் கேட்பது விசேஷம். பஞ்சாங்கம் ஜோதிட முறைப்படி கணிக்கப்பட்ட நூல். அதில் புதிய ஆண்டிற்கான பலன்களை ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்வதே பஞ்சாங்கம் வாசிப்பது. யுகாதி அன்று இது முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இவ்வாறாக யுகாதி கொண்டாடுதல் தென் இந்திய மாநிலங்களில் ஒரு முக்கிய பண்டிகையாகும். மகாராஷ்ட்ராவில் இந்த பண்டிகையை ‘குடி பட்வா’ என்கிறார்கள். இதையே ராஜஸ்தானில் மார்வாடிகள் ‘தப்னா’ எனக் கூறுகிறார்கள். சிந்தியர்கள் ‘சேதி சந்த்’ என அழைக்கிறார்கள்.
பழையன கழிந்து புதியன புக, உங்கள் சமயம் தமிழ் சார்பில் இந்நாள் போல் எந்நாளும் நன்னாள் ஆக இனிய யுகாதி நல்வாழ்த்துக்கள்.!

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

இந்த ஆண்டுக்கான ரமலான் மாத பிறை நேற்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் தென்படவில்லை. எனவே நாளை (புதன்கிழமை) முதல் ரமலான் நோன்பு தொடங்கும்.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு தலைமை ஹாஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் வெளியிட்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் ஆகியவற்றில் யுகாதி பண்டிகை விழா நடக்கிறது.
திருமலை :
ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) யுகாதி பண்டிகை விழா நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் ஆகியவற்றில் யுகாதி பண்டிகை விழா நடக்கிறது.
அதையொட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. சாமிகள் வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

ஏப்ரல் மாதம் 13-ம் தேதியில் இருந்து ஏப்ரம் மாதம் 19-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
13-ம் தேதி செவ்வாய் கிழமை :
* தெலுங்கு வருடப்பிறப்பு
* சந்திர தரிசனம்
* யுகாதி பண்டிகை
* சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்
14-ம் தேதி புதன் கிழமை :
* தமிழ் வருடப்பிறப்பு
* சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை
15-ம் தேதி வியாழக்கிழமை :
* கார்த்திகை விரதம்
* சந்திராஷ்டமம்- சித்திரை, சுவாதி
16-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சதுர்த்தி விரதம்
* சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
17-ம் தேதி சனிக்கிழமை :
* சிறிய நகசு
* வளர்பிறை பஞ்சமி
* சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்
18-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சஷ்டி விரதம்
* சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
19-ம் தேதி திங்கள் கிழமை :
* வளர்பிறை சப்தமி
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - மூலம்
* தெலுங்கு வருடப்பிறப்பு
* சந்திர தரிசனம்
* யுகாதி பண்டிகை
* சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்
14-ம் தேதி புதன் கிழமை :
* தமிழ் வருடப்பிறப்பு
* சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை
15-ம் தேதி வியாழக்கிழமை :
* கார்த்திகை விரதம்
* சந்திராஷ்டமம்- சித்திரை, சுவாதி
16-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சதுர்த்தி விரதம்
* சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
17-ம் தேதி சனிக்கிழமை :
* சிறிய நகசு
* வளர்பிறை பஞ்சமி
* சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்
18-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சஷ்டி விரதம்
* சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
19-ம் தேதி திங்கள் கிழமை :
* வளர்பிறை சப்தமி
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - மூலம்