என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    புரட்டாசி மாதத்தில் தினமும் காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்
    மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே
    லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய

    ஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம்.
    வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

    பொதுப் பொருள்:

    அகில உலகத்திற்கும் இறைவனே, வெங்கடாஜலபதியே! தங்களுக்கு நமஸ்காரம். அனைத்து உலகங்களையும் காப்பவரே, உம்மை வணங்குகிறேன். கருணைக் கடலே, உலகியல் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரை சேர்க்கக் கைகொடுத்து அருள்வாய். நான்பட்ட கடன்களைத் தீர்க்க என் மீது இரக்கம் காட்டுவாய். மகாலட்சுமியின் நாயகனே! எனக்கு எல்லா செல்வ வளங்களையும் அருளி, என் சகல தோஷங்களையும் போக்கி, என்னைக் காக்கும் இறைவனான வெங்கடாஜலபதியே, தங்களை மீண்டும் வணங்குகிறேன்.

    காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    மகாலட்சுமி நெல்லி மரத்திலும் வாசம் செய்கிறாள். நெல்லி இலைகளால் ஸ்ரீவிஷ்ணுவையும் ஸ்ரீமகாலட்சுமியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.
    மகாலட்சுமி நெல்லி மரத்திலும் வாசம் செய்கிறாள். அந்த ‘‘நெல்லி’’ அருநெல்லி மரமல்ல, சாதாரண பெருநெல்லி மரமே ஆகும். நெல்லிக் கனியை ஆமலகம் என்று கூறுவார்கள்.

    நெல்லியை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் அழுக்குகளையும், நெல்லிக்கனியை சாப்பிட்டால் நம் உடம்புக்குள் உள்ள அழுக்குகளையும் நீக்கும். அதனாலயே அப்பழுக்கற்ற தூய தலைவன் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு அமலன் என்ற பெயர் உண்டு.

    அதுமட்டுமல்ல தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான். தாத்ரீ என்ற பதம் ஸ்ரீபூமாதேவியை குறிக்கும். ஆம் பூமாதேவியும் ஸ்ரீதேவியின் அம்சம்தானே. ஹரிபலம் என்றாலும் நெல்லிக்கனிதான் இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராகும்.

    எனவே பல இடங்களில் விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.

    நெல்லி மரத்தின் நிழலில் நின்று தானம் செய்வதும் அன்னமளிப்பதும் மிகுந்த சிறப்புமிக்கது. அதிக பலன்களை தரக்கூடியது. நெல்லி இலைகளால் ஸ்ரீவிஷ்ணுவையும் ஸ்ரீமகாலட்சுமியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நடந்தது. விழாவில் முதல்நாள் ஜெபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆராதனை ஆகியவை நடந்தது.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன்கள் அதிகமாக கிடைத்து வந்ததால் தேர் திருவிழா நடத்துவதில் சிரமம் இருந்தது. இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்துக்கு திருவிழா மாற்றப்பட்டது.

    இருப்பினும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் 2 நாட்கள் மட்டும் “தேதிப்படி“ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.

    விழாவில் முதல்நாள் காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆராதனை ஆகியவை நடந்தது. 2-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி, மறையுரை நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஆன்டனி அல்காந்தர், இணை பங்குத்தந்தையர்கள் ஜெபமெர்ஜின், கிங்ஸ்லி சாஜூ, துணை பங்கு தந்தை ஜேக்கப் ஆஸ்லின், பேரவை தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் ஆன்டரின் செல்வகுமார், துணைச்செயலாளர் தினகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
    வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல வேதாரண்யம் கற்பகவிநாயகர், கட்சுவான் முனீஸ்வரர்சுவாமி கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவில் விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் ஆகிய விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
    புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகா விஷ்ணுவையும் விரதம் இருந்து வழிபடுவதால் சனி, ராகு கேதுக்களால் உண்டாம் தோஷங்களை போக்கிக் கொள்ளலாம்.
    சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கன்னி ராசியின் அதிபதியான புதனின் அதிதேவதை விஷ்ணு. எனவே மகா விஷ்ணுவை புரட்டாசியில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் கூடுதலான பலன்களை பெறலாம்.

    புரட்டாசியில் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் புதனின் அருளும் சிறப்பாக கிடைக்கும். புத்திகூர்மை, கற்றல், கற்பித்தல் போன்றவற்றுக்கு அதிபதி புதன்.

    புதன் பகவான் சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாக பிறந்தவர். சகல கலைகளிலும் வல்லவர். மகா ஞானியாக விளங்குபவர். கிரகங்களில் சுபக் கிரகர் என்பதால் இவரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு மிகுதியாக அறிவைக் கொடுப்பவர். ஞானமளிப்பவர். வாக்கு சாதுர்யம் அளிப்பவர். தீயகிரகங்களால் உண்டாகும் பீடைகளை நீக்கும் ஆற்றல் உடையவர்.

    எனவே புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகா விஷ்ணுவையும் விரதம் இருந்து வழிபடுவதால் சனி, ராகு கேதுக்களால் உண்டாம் தோஷங்களை போக்கிக் கொள்ளலாம். புதனின் நட்புக் கிரகம் சனி. இவரை விரதம் இருந்து வழிபடுவதால் சனிபகவான் தோஷம் குறையும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வெங்கடேசப் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். புரட்டாசியில் கொண்டாடப்படும் திருப்பதி பிரம்மோற்சவம் குறிப்பிடத்தக்கது. சூரிய உதயத்தில் எழுந்து குளித்து பெருமாள் சன்னதிக்கு துளசி மாலை வாங்கி சென்று வழிபடவேண்டும். இனிப்பும், எள்ளும் கலந்து இடித்து காகத்திற்கும் உணவு அளிக்கலாம். இதன் மூலம் சனி தோஷம் விலகுவதாக நம்பிக்கை.
    கிருஷ்ணனின் அவதாரம் பல சிறப்புகளை உள்ளடக்கியது. கண்ணனுக்கு ‘திரிபங்கி லலிதாகரன்’ என்ற பெயரும் உண்டு. கண்ணனின் நாமங்களை அறிந்து கொள்ளலாம்.
    * ஹரி - இயற்கையின் அதிபதி

    * கேசவன் - அளவிட முடியாதவன்

    * ஸ்ரீதரன் - லட்சுமியை மார்பில் கொண்டவன்

    * வாசுதேவன் - உயிர்கள் அனைத்திலும் வசிப்பவன்

    * விஷ்ணு - எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்

    * மாதவன் - பெரும் தவம் செய்பவன்

    * மதுசூதனன் - மது என்னும் அசுரனைக் கொன்றவன்

    * புண்டரீகாட்சன் - தாமரை போன்ற கண்களை உடையவன்

    * ஜனார்த்தனன் - தீயவர்களின் இதயத்தில் அச்சத்தை விளைவிப்பவன்

    * சாத்வதன் - சாத்வ குணத்தை விட்டு விலகாதவன்

    * விருபாட்சணன் - வேதங்கள், அவனைக் காண்பதற்கான கண்கள் என்பதால் இப்பெயர் வந்தது.

    * நாராயணன் - மனிதர்களின் புகலிடமாக இருப்பவன்

    * புருசோத்தமன் - ஆண்களில் மேன்மையானவன்

    * அனந்தன் - அழிவில்லாதவன்

    * கோவிந்தன் - பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன்

    * பத்மநாபன் - தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்

    * அச்சுதன் - எந்த ஒரு காரியத்திலும் இருந்து நழுவ நினைக்காதவர்
    சைவ சமயத்தின் முதன்மை கடவுளாகத் திகழும் சிவபெருமான், மதுரை நகரில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் வரலற்றை ‘திருவிளையாடல் புராணம்’ என்கிறோம்.
    ‘புராணம்’ என்பதற்கு ‘பழமைவாய்ந்த வரலாறு’ என்று பொருள். அதே போல் இறைவனால் நடத்தப்படும் செய்வதற்கரிய செயல்களை ‘திருவிளையாடல்’ என்பார்கள். சைவ சமயத்தின் முதன்மை கடவுளாகத் திகழும் சிவபெருமான், மதுரை நகரில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் வரலற்றை ‘திருவிளையாடல் புராணம்’ என்கிறோம். உலக உயிர்களிடம் அன்பு கொண்டு, அவர்களுக்கு அருள் செய்த இறைவனின் கருணையை கதை களாக இந்த புராணம் விளக்குகிறது.

    இந்த நூலை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். இருப்பினும் இந்த புராணம் முதன் முதலாக தமிழ்க்கடவுளான முருகப்பெருமானால், அகத்தியருக்கு அருளப்பட்டது. அகத்தியர் மூலம் மற்ற முனிவர்கள் அறிந்துகொண்டனர்.

    பரஞ்சோதி முனிவர் சிவதல யாத்திரை மேற்கொண்ட வேளையில், மதுரைக்கு வந்து தங்கினார். அப்போது அவரது கனவில் தோன்றிய மீனாட்சி அம்மன், திருவிளையாடல் புராணத்தைப் பாட கட்டளையிட்டார். அதன்படி அவர் இயற்றியதே ‘திருவிளையாடல் புராணம்.’

    திருவிளையாடல் புராணத்தை ‘திருஆலவாய் மான்மியம்’, ‘மதுரைப் புராணம்’ என்றும் அழைக்கிறார்கள்.

    தமிழ் மொழியில் உள்ள மூன்று புராணங்கள், சிவபெருமானின் மூன்று கண்களோடு ஒப்பிடப்படுகின்றன. அதில் சேக்கிழார் இயற்றிய ‘பெரியபுராணம்’ வலது கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய ‘கந்தபுராணம்’ நெற்றிக்கண்ணாகவும், ‘திருவிளையாடல் புராணம்’ இடது கண்ணாகவும் விளங்குகின்றன.

    இந்தப் புராணம், மொத்தம் 3 ஆயிரத்து 363 பாடல்களால் ஆனது. இறைவனின் திருவிளையாடல் 344-வது செய்யுளில் இருந்துதான் தொடங்குகிறது. அதற்கு முந்தை 343 செய்யுள்களும், செய்யுள் காப்பு மற்றும் மதுரை நகர சிறப்புகளை எடுத்துரைக்கின்றன.

    திருவிளையாடல் புராணமானது, ‘மதுரைக் காண்டம்’, ‘கூடற்காண்டம்’, ‘திருஆலவாய் காண்டம்’ என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய் காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன.

    இதில் இந்திரன் பழி தீர்த்த படலம் முதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

    நான்மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன.

    திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

    64 திருவிளையாடலைசொல்லும் படலங்கள்

    1. இந்திரன் பழி தீர்த்த படலம்

    2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

    3. திருநகரங்கண்ட படலம்

    4. தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்

    5. தடாதகை பிராட்டியாரின் திருமணப் படலம்

    6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

    7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

    8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்

    9. ஏழுகடல் அழைத்த படலம்

    10. மல‌யத்துவசனை அழைத்த படலம்

    11. உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்

    12. உக்கிரபாண்டியனுக்கு வேல், வளை, செண்டு கொடுத்த படலம்

    13. கடல் சுவற வேல்விட்ட படலம்

    14. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்

    15. மேருவைச் செண்டால் அடித்த படலம்

    16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்

    17. மாணிக்கம் விற்ற படலம்

    18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

    19. நான்மாடக் கூடலான படலம்

    20. எல்லாம் வல்ல சித்தரான படலம்

    21. கல்யானைக்குக் கரும்பருத்திய படலம்

    22. யானை எய்த படலம்

    23. விருத்த குமார பாலரான படலம்

    24. கால்மாறி ஆடின படலம்

    25. பழி அஞ்சின படலம்

    26. மாபாதகம் தீர்த்த படலம்

    27. அங்கம் வெட்டின படலம்

    28. நாகம் எய்த படலம்

    29. மாயப் பசுவை வதைத்த படலம்

    30. மெய் காட்டிட்ட படலம்

    31. உலவாக்கிழி அருளிய படலம்

    32. வளையல் விற்ற படலம்

    33. அட்டாம சித்தி உபதேசித்த படலம்

    34. விடை இலச்சினை இட்ட படலம்

    35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

    36. இரசவாதம் செய்த படலம்

    37. சோழனை மடுவில் வீழ்த்திய படலம்

    38. உலவாக் கோட்டை அருளிய படலம்

    39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

    40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

    41. விறகு விற்ற படலம்

    42. திருமுகம் கொடுத்த படலம்

    43. பலகை இட்ட படலம்

    44. இசைவாது வென்ற படலம்

    45. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்

    46. பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்

    47. கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம்

    48. நாரைக்கு முக்தி கொடுத்த படலம்

    49. திருஆலவாயான படலம்

    50. சுந்தரப் பேரம்பு எய்த படலம்

    51. சங்கப்பலகை கொடுத்த படலம்

    52. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

    53. கீரனை கரையேற்றிய படலம்

    54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

    55. சங்கத்தார் கலம்தீர்த்த படலம்

    56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

    57. வலை வீசின படலம்

    58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்

    59. நரியை பரியாக்கிய படலம்

    60. பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்

    61. மண் சுமந்த படலம்

    62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

    63. சமணரை கழுவேற்றிய படலம்

    64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்
    திருவோடு, குறிப்பிட்ட ஒரு மரத்தின் விதையில் இருந்து மட்டுமே செய்யப்படுகிறது. அந்த மரம் ‘மெக்ஸிகன் காலேபேஷ்’ என்று அழைக்கப்படுகிறது.
    சைவத்தைப் பின்பற்றும், சிவனடியார்களின் கையில் கட்டாயம் இருக்கும் ஒரு பொருள், ‘திருவோடு.’ சிவபெருமான் ‘பிட்சாடனர்’ வடிவத்தில் கையில் ஏந்தியிருந்த இந்தத் திருவோடு, சிவனடியார்களின் புனிதப் பொருளாக விளங்குகிறது.

    இதனை ‘கடல் தேங்காய்’ என்றும், ‘கோக்கோ டி மெர்’ என்றும் அழைக்கிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய விதை, இந்த திருவோடு காய்தான்.
    இந்த மரத்தின் பூர்வீகம், தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கில் உள்ள கோஸ்டா ரிக்கா வரையான பகுதிகள். திருவோடு மரத்தில் சில வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மரத்திற்கு மரம் இலைகளும், காய்களின் வடிவமைப்புகளும் கூட மாறுபடுகின்றன.

    திருவோடு, குறிப்பிட்ட ஒரு மரத்தின் விதையில் இருந்து மட்டுமே செய்யப்படுகிறது. அந்த மரம் ‘மெக்ஸிகன் காலேபேஷ்’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்தியப் பெருங்கடலில் உள்ள சீசெல் என்னும் தீவுகளில் காணப்படும் இந்த மரத்தின் விதைதான், திருவோடு செய்வதற்கான காய் ஆகும்.

    திருவோடு மரத்தில் ஆண், பெண் பிரிவு உண்டு. பூ மலர்ந்து காயாக 10 வருடங்கள் பிடிக்கும் என்கிறார்கள். பூக்கள் நறுமணம் கொண்டது. இதனைத் தேடி வவ்வால்கள் படையெடுக்கும். இவைதான் மரகந்த சேர்க்கைக்கு உதவுகின்றன.

    காய், பெரிய தேங்காய் போல இருக்கும். ஓடு மிகவும் கடினமானது. ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி பனை நுங்கு போல் இருக்கும். முற்றியதும் தேங்காய் போல சுவை இருக்கும். முற்றிய காய் உதிர்ந்து விழுந்துவிடும். மாலத்தீவுகளில் இந்த காய்கள் நிறைய கரை ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது.

    விதை ஒன்றின் எடை 7 கிலோ வரை இருக்குமாம். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. தோட்டங்களில் முளைக்க வைக்க எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை என்கிறார்கள்.

    திருவோடு, பிச்சைப் பாத்திரம் மட்டுமல்ல. அது சிறந்த மூலிகை விருட்சத்தில் இருந்து கிடைக்கும் ஒப்பற்ற அட்சயமாகவும் உள்ளது. இதில் முப்பத்திரண்டு வகையான தான, தர்ம தேவதைகள் வாசம் செய்கிறார்களாம்.
    பெண்கள் மத்தியில் அம்மன் வழிபாடு சிறந்ததாக கருதப்படுகிறது. வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மனைப் பற்றி அறிந்துகொள்வோம்.
    * காரைக்குடியில் உள்ள கொப்புடையம்மன் கோவிலில், மூல விக்கிரகம் கிடையாது. உற்சவர் விக்கிரகமே மூலவராக வழிபடப்படுகிறது.

    * திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் அருகில் உள்ளது பராஞ்சேரி. இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் துர்க்கை அம்மனை தரிசிக்கலாம்.

    * திருவெண்காட்டில் பிரம்மனுக்கு ஞானம் அருளும் சக்தியாக, ‘பிரம வித்யாம்பிகை’ என்ற பெயரில் அம்பாள் வீற்றிருக்கிறார்.

    * மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் துர்க்கை அம்மனுக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது.

    * காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில், எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் உள்ள துர்க்கை அம்மனை தரிசனம் செய்யலாம்.

    * திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் பெரியநாயகி அம்மன் சன்னிதி மலை அடிவாரத்திலும், கனககிரீஸ்வரர் சன்னிதி மலைக்கு மேலேயும் அமைந்திருக்கிறது.

    * கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில், சயன கோலத்தில் அம்மன் காட்சி தருகிறாள்.

    * திருவாரூர் தியாகராஜர் கோவிலில் முருகப்பெருமானின் தலையை தடவிய நிலையில் நீலோத்பலாம்பாளையும், கால்மேல் கால்போட்ட கோலத்தில் கமலாம்பாளையும் தரிசிக்கலாம்.

    * திருவெண்காட்டில் உள்ள புதன் தலத்தில், திருஞானசம்பந்தரை இடுப்பில் தூக்கி வைத்த நிலையில் பெரியநாயகி அம்மன் காணப்படுகிறாள்.

    * காஞ்சிபுரத்தில் உள்ள ஆதி காமாட்சி ஆலயத்தில், லிங்கத்தின் பாணத்தில் அம்மன் வடிவம் காணப்படுகிறது. இதனை ‘அர்த்தநாரீஸ்வர லிங்கம்’ என்கிறார்கள்.

    * கும்பகோணம் அய்யவாடி பிரத்தியங்கிரா ஆலயத்தில், சிம்ம முகத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறார்.
    ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
    நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
    பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
    நித்யாய சுத்தாய திகம்பராய

    தஸ்மை நகாராய நம:சிவாய
    மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
    நந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய
    மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
    தஸ்மை மகாராய நம:சிவாய

    சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த
    ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய
    ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
    தஸ்மை சிகாராய நம:சிவாய

    வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
    முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
    சந்த்ரார்க்க வைச்வாநர லோச்சனாய
    தஸ்மை வகாராய நம:சிவாய

    யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
    பினாக ஹஸ்தாய சனாதனாய
    திவ்யாய தேவாய திகம்பராய
    தஸ்மை யகாராய நம:சிவாய

    பஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ
    சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

    பொதுப்பொருள்: ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில்  பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

    பொருள் செலவு, நேரமின்மை, பயண அலைச்சல் போன்ற பலவிதமான காரணங்களால், பலராலும் இந்த புண்ணிய யாத்திரையை சரிவர கடைப்பிடிக்க முடியாமல் போகக்கூடும்.
    சிவாலய யாத்திரை என்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும் சக்தி கொண்டது என்பது ஆன்மிக பெரியோர்களின் அசைக்க முடியாத கருத்து. அதனால்தான் சிவனடியார்களாக வாழ்ந்த பெரும்பாலானவர்கள், சிவபெருமானைத் தேடி ஒவ்வொரு தலமாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சமயக்குரவர்கள் நால்வரான அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்து பேறுபெற்றனர்.

    பொதுவாக 108 சிவாலயங்கள் வரை வழிபாடு செய்திருந்தால், அது பெரும் புண்ணியம் என்று கருதப்படுகிறது. பொருள் செலவு, நேரமின்மை, பயண அலைச்சல் போன்ற பலவிதமான காரணங்களால், பலராலும் இந்த புண்ணிய யாத்திரையை சரிவர கடைப்பிடிக்க முடியாமல் போகக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான் காஞ்சிபுரம். புராதனச் சிறப்புமிக்க இந்த ஊர், ஏராளமான ஆலயங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகிறது.

    காஞ்சிபுரத்தில் சிறப்புமிக்க 108 சிவாலயங்கள் இருக்கின்றன. அந்த 108 சிவாலயங்களிலும் மொத்தம் 168 சிவலிங்கங்கள் மற்றும் பைரவர், சிவபெருமான் திருமேனிகள் உள்ளன. எனவே நீங்கள் வேறு எங்கள் அலைச்சல் கொள்ளாமல், காஞ்சிபுரம் தலத்தில் உள்ள 108 சிவாலயங்களை மட்டும் தரிசனம் செய்தாலே போதுமானது. சிவாலய யாத்திரையால் கிடைக்கும் புண்ணிய பலன்கள் அனைத்தும் வந்துசேரும்.
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கருவறை முன்பு சூரியஒளி கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு நேற்று நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
    108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத தொடக்கத்தில் மாலை நேரம் சூரியனின் மயக்கும் பொன்னிற கதிர்கள் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் பெருமாளின் உடலில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அதாவது, புரட்டாசி மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை மாலையில் மறையும் சூரிய ஒளி கதிர்கள் கோவில் கருவறை வரை பாய்ந்து செல்லும் அதிசயம் நடைபெறும்.

    இப்போது கோவில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதால் கருவறையின் முன்புற உதய மார்த்தாண்ட மண்டபத்தில் உள்ள வாசல் கதவு திறக்கப்படுவது இல்லை. இதனால் கதவில் மாலையில் சூரிய ஒளி விழுந்தது. அதாவது நேற்று மாலை மறைய தொடங்கிய சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையின் முன்புறம் உதயமார்த்தாண்ட மண்டப பகுதியில் விழுந்தது. இதை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த அபூர்வ காட்சியை இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் காணலாம்.
    ×