என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் மணப்பாடு திருச்சிலுவை ஆலயமும் ஒன்றாகும். கடலோரத்தில் இயற்கையாக அமைந்த மணல் குன்றின் மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆலயத்தில் 440-ம் ஆண்டு மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலையில் பங்கு ஆலயத்தில் முதல் திருப்பலி நடந்தது. காலையில் திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீரை தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் பெர்னாந்து, ஆலய கொடிமரத்தில் கொடியேற்றினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் நிறைவு நாளான 14-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தமிழிலும், 5 மணிக்கு மலையாளத்திலும் திருப்பலி நடக்கிறது. காலை 6 மணிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் ஐந்து திருக்காய சபையினரின் பவனியை தொடர்ந்து திருவிழா திருப்பலி நடக்கின்றது. மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை ஆசீரை தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது. 
    முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை தாங்குகிறார்.

    8-ந் தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் மரிய வில்லியம் தலைமையில் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து 11 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், வசந்தகுமார் எம்.பி. தலைமை தாங்குகிறார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மனோதங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் திருப்பலி, மறையுரை, ஜெபமாலை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    14-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவையும் நடக்கிறது. இதில், அருட்பணியாளர் யேசு ரெத்தினம் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 15-ந் தேதி காலை 9.30 மணிக்கு அருட்பணியாளர்கள் அகஸ்டின், மரிய ராஜேந்திரன் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள். தொடர்ந்து 11 மணிக்கு தேர்பவனியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நன்றி திருப்பலி, இரவு 8 மணிக்கு சிறப்பு தேர் பவனி ஆகியவை நடக்கிறது.

    விழாவையொட்டி கடந்த 2-ந் தேதி முதல் நற்செய்தி கூட்டம் நடந்து வருகிறது. நாளை (வியாழக்கிழமை) ஒப்புரவு கொண்டாட்டம் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள் டோமினிக் கடாட்சதாஸ், தாமஸ், ஆன்டனி, ஜெரால்டு ஜஸ்டின், ஜோஸ் ராபின்சன், பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜிமோன் மணி, பொருளாளர் விஜி கலா, துணை செயலாளர் ஹெலன் மேரி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    தளர்ந்து போன உங்கள் நம்பிக்கையை மறுபடியும் தட்டி எழுப்பி, உங்களை பெலவீனப்படுத்துகிற சாத்தானை இயேசுவின் நாமத்திலே கடிந்து கொண்டு அற்புத சுகத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.
    ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய சரீரத்தில் எப்போதும் ஆரோக்கியமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஒரு சிறிய வேதனை நம்முடைய சரீரத்தில் ஏற்பட்டாலும் நம்முடைய முழு உடலும் அதனால் பாதிக்கப்பட்டு, ஆத்மாவிலே சமாதானத்தை இழந்து சோர்வடைந்து விடுகிறோம்.

    இந்த நாட்களில் சத்துரு தன்னுடைய வஞ்சகத்தினால் அநேக குடும்பங்களில் வியாதிகளைக் கொண்டு வந்து அவர்களுடைய பொருளாதாரம் முழு வதையும் வீணாக விரயம் செய்து, மருத்துவர்களுக்கு செலவழித்து, குடும்பங்களில் சமாதானத்தை இழக்கப் பண்ணுகிறான்.

    நாம் ஆராதிக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜீவனுள்ளவர்.

    ‘அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்’. (சங்.33:9)

    ‘நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்’. (யாத்.15:26)

    ‘அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்’. (சங்.107:20)

    மேற்கண்ட வாக்குத்தத்தங்களைப் போல இன்னும் ஏராளமான தெய்வீக சுகத்தைக் குறித்த வாக்குத்தத்தங்களை ஆண்டவர் நமக்கு கிருபையாகவும், இலவசமாகவும் தந்துள்ளார்.

    தளர்ந்து போன உங்கள் நம்பிக்கையை மறுபடியும் தட்டி எழுப்பி, உங்களை பெலவீனப்படுத்துகிற சாத்தானை இயேசுவின் நாமத்திலே கடிந்து கொண்டு அற்புத சுகத்தை சுதந் தரித்துக் கொள்ளுங்கள்.

    இயேசு அவளைக்கண்டார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய் பலவீனப் படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். இயேசு அவளைக்கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ‘ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்’ என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப் படுத்தினாள்’. (லூக்கா 13:1113)

    நம்முடைய இரட்சகருக்கு வேதத்திலே எத்தனையோ பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலே ஒன்று ‘அவர் நம்மை காண்கிறவர்’.

    வனாந்தரத்திலே அலைந்து திரிந்த ஆகார் நம் ஆண்டவரைப் பார்த்து ‘நீர் என்னைக் காண்கிற தேவன்’ என்று கூறினாள்.

    ஆள் நடமாட்டமும், மிருக ஜீவன் களும் இல்லாத ஒரு வெறுமையான இடம் தான் வனாந்தரம். ஒருவேளை உங்கள் வாழ்க்கையும் ஒரு வனாந்தரத்தைப் போல உங்கள் கண்களுக்கு காட்சி அளிக்கலாம். உங்கள் சரீரத்தில் ஏற்பட்டுள்ள வியாதியின் நிமித்தம் எல்லோராலும் நீங்கள் கைவிடப்பட்டவர் களாய் கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

    பழைய ஏற்பாட்டு காலத்தில் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஆகாரைக் கண்ட ஆண்டவர், இக்கிருபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற உங்களைக் கண்டும் காணாதவர் போல இருப்பாரோ? நிச்சயமாகவே அவர் உங்களைக் காண்கிறார். ஆகவே கவலைப்படாதிருங்கள். உங்கள் நம்பிக்கை நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் மேல் இருக்கட்டும்.

    இயேசு தம்மிடத்தில் அழைத்தார்

    வியாதி அநேக காரணங்களினால் நம்முடைய சரீரத்தை ஆட்கொள்ளு கிறது. அதில் ஒன்று அசுத்த ஆவியினால் நம் சரீரம் பாதிக்கப்படும்போது, அந்த அசுத்த ஆவியே நமக்குள் வியாதியைக் கொண்டு வருகிறது.

    ஒருமுறை இயேசு எரிகோ பட்டணத்தின் வீதியில் நடந்து போன போது திரளான ஜனங்களுக்கு மத்தியிலே வழி யருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்த குருடனாகிய பர்திமேயுவின் சத்தத்தை தம் காதுகளில் கேட்டு அழைத்து வரும்படி சொன்னவர், உங்களுக்கு அற்புதம் செய்யாமல் இருப்பாரா?.

    நம் ஆண்டவர் அற்புதங்களின் தேவன் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். வியாதியின் கொடூரத்தின் நிமித்தம், வேதனையின் நிமித்தம் உங்கள் விசுவாசத்தை நீங்கள் தளரவிட்டிருக்கலாம். உங்கள் நாவில் எப்போதும் அவிசுவாசமான வார்த்தைகளையே இன்று வரை நீங்கள் உச்சரித்துக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட அவிசுவாச வார்த்தைகளுக்கு இன்றே நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்களுக்கு அற்புதம் செய்வதற்கு என்று ஆண்டவர் ஒரு வேளை வைத் திருப்பார். அந்த நேரம் வரும்போது நிச்சயம் ஆண்டவர் அற்புதம் செய்வார்.

    தேவனிடத்திலிருந்து வரக்கூடிய தெய்வீக சுகம் என்பது அது மனிதனுடைய அறிவுக்கு எட்டாத ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சியாகும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு மாம்சத்தில் இருந்த நாட்களில் அவர் வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கின சம்பவங்களைக் குறித்து மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களில் நாம் தெளிவாகக் காணலாம்.

    இயேசு சில வியாதிகளை தம்முடைய வார்த்தையை அனுப்பி குணமாக்கி இருக்கிறார். சில நோயாளிகளை இயேசு குணமாக்கும் போது தம்முடைய அற்புதம் செய்யும் கரத்தை அவர்கள் மேல் வைத்து சுகமாக்கி இருக்கிறார்.

    அதைப் போல இன்றைக்கும் ஆவியாயிருக்கிற அவர் தம்முடைய கரத்தினால் உங்களை தொடுவது அதிக நிச்சயம்.

    ஏசாயா சொல்லுகிறார் ‘அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’. (ஏசா.53:5)

    அவருடைய தழும்புகளுள்ள வல்லமையின் கரம் உங்கள் வியாதியை தொட்டு உங்களை சுகமாக்கும். ஜெபிப்போமா?

    ஜெபம்: பரிசுத்தமுள்ள நல்ல ஆண்டவரே! இயேசுவின் நாமத்தினால் வியாதியாய் இருக்கிற உம்முடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறேன். சிலுவையில் நீர் சிந்தின உம்முடைய ரத்தத்தின் வல்லமையினாலே பிசாசின் கிரியைகளை இப்பொழுதே நீர் அழித்து உம்முடைய பிள்ளைகளை நீர் குணமாக்கும். உம்முடைய தழும்புள்ள கரம் ஒவ்வொரு வியாதியுள்ள சரீரங்களையும் இப்பொழுதே தொடட்டும். எங்கள் ஜெபத்திற்கு நீர் இப்பொழுதே பதில் கொடுக்கிறதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54. 
    ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6 மணிக்கு நாகர்கோவில் இசைவழி ஆற்றுப்படுத்துதல் பணி இயக்குனர் தேவதாஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். கோட்டார் பங்குதந்தை கிரேஸ் குணபால் மறையுரையாற்றினார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 7.30 மணிக்கு மறைமாவட்ட தலைமை செயலாளர் இம்மானுவேல் ராஜ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, 8-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு புனித ஜெரோம் கல்லூரி தாளாளர் சுவக்கின் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். மறைமாவட்ட குருக்கள் நல வாரிய இயக்குனர் அல்போன்ஸ் மறையுரையாற்றுகிறார். காலை 8 மணிக்கு மறைமாவட்ட முதன்மை பணியாளர் ஹிலாரியுஸ் தலைமையில் பாதுகாவலர் திருவிழா திருப்பலி நடக்கிறது.

    முட்டம் மறைவட்ட முதன்மை பணியாளர் ஜான்ரூபஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு அன்னையின் தேர்பவனி, 6 மணிக்கு கொடியிறக்கம், நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு கன்னியாகுமரி கிளாரட் இல்லம் அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ராஜ், பங்குபேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். 
    பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் திருவிழா நேற்று மாலை கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    சின்ன வேளாங்கண்ணி என்று அறியப்படும் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தமிழக அளவிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    மாதாவை வழிபடும் கிறிஸ்துவ மக்களின் திருத்தலங்களில் வேளாங்கண்ணிக்கு பிறகு மிகவும் பிரசித்தி பெற்றதாக இருப்பது பெசன்ட் நகர் மாதா கோயில். பல நூறு மக்கள் இங்கு தினமும் வந்து மாதாவை வழிப்பட்டு செல்கின்றனர்.

    பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டிற்கான மாதா கோயில் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின்முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது.
    நாகை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி திகழ்கிறது. கீழை நாடுகளில் “லூர்து நகர்“ என்ற பெருமையுடன் அன்னை மரியாவின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாகவும் வேளாங்கண்ணி விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்ககூடிய பசிலிக்கா என்ற பெருமை மிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்றாகும்.

    புயலில் சிக்கிய போர்த்துக்கீசியர்களை வேளாங்கண்ணியில் பத்திரமாக கரைசேர்த்த அன்னை மரியாவிற்கு நன்றிக்கடனாக கட்டப்பட்ட ஆலயமாக இந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் வங்க கடல் அமைந்திருப்பது ஆலயத்துக்கு மேலும் அழகூட்டும் காட்சி ஆகும்.

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்தநாள் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக அன்னை ஆரோக்கிய மாதாவின் தேர் பவனி நடந்தது. அப்போது பெண்கள் தேரை தூக்கி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதைத்தொடர்ந்து மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக பேராலயம் அருகில் உள்ள கொடி கம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    திருவிழாவையொட்டி மாதா சொரூபம் வைக்கப்பட்ட தேரை பக்தர்கள் சுமந்து சென்ற காட்சி.

    பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயர கொடி கம்பத்தில் 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் எரிய விடப்பட்டன.

    அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து “மரியே வாழ்க“ என கோஷங்கள் எழுப்பினர். வண்ண பலூன்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை நடந்தது. விழாவில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. மறுநாள் 8-ந் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பேராலய கீழ்க்கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீரும், தமிழில் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது.
    வாடிப்பட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.
    தென்னகத்து வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் பால்ராஜ் தலைமையில் திருவிழா கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா, இறைவார்த்தை சபை 144-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவ ஊற்று இயேசுவின் அருமருந்து 19-வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கின்றன. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையையும், 6 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியையும் மதுரை உயர்மாவட்டம் முதன்மை குரு ஜெயராஜ் நடத்துகிறார். இரவு 7 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து 9-ந்தேதி காலை 6.30 மணிக்கு கொடியிறக்கமும், நன்றி திருப்பலியும் பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் நடந்து விழா நிறைவு பெறுகிறது.

    இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.வி.டி. அதிபர் ஜோசப், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், எஸ்.வி.டி. உதவி பங்குத்தந்தை யூஜின்டென்சிங், ஆன்மிக குரு அகஸ்டின்காரமல் மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் செய்துள்ளனர்.
    சேலம் சாமிநாதபுரம் பகுதியில் அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சேலம் சாமிநாதபுரம் பகுதியில் அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவுக்கு சேலம் மறைவட்ட முதன்மை குரு அருளப்பன் தலைமை தாங்கினார்.

    பின்னர், அவர் ஆலயத்தின் முன்பு திருக்கொடியை ஏற்றி வைத்து பெருவிழாவை தொடங்கி வைத்தார். சேலம் குழந்தை ஏசு பேராலயத்தின் பங்கு தந்தை ஜான் ஜோசப் முன்னிலை வகித்தார். இதையடுத்து நவநாள் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு மற்றும் பங்கு ஆலோசனைக்குழுவினர் செய்திருந்தனர்.

    திருவிழாவை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு சிறு தேர்பவனி ஊர்வலம் மற்றும் நவநாள் திருப்பலியும், 8-ந் தேதி மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலி மற்றும் அன்னையின் ஆடம்பர தேர்பவனியும், 9-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலி மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. மேலும் விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மாலை ஆராதனை போன்றவை நடக்கிறது. 31-ந் தேதி அருட்தந்தை அமல்ராஜ் தலைமையில் சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார். 1-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஹென்றி தலைமையில் ஆரோக்கிய ஆன்றோ மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடைபெறுகிறது.

    2-ந் தேதி ஸ்டேன்லி சகாயம் தலைமையில் நிக்சன் மறையுரையாற்றுகிறார். 3-ந் தேதி கிறிஸ்பின் பொனிப்பாஸ் தலைமையில் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி மனோகியாம் சேவியர் தலைமையில் சகாய தாஸ் மறையுரையாற்றுகிறார்.

    5-ந் தேதி பென்சிகர் தலைமையில் ஜெகன் மறையுரையாற்றுகிறார். 6-ந் தேதி காலை 10 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலிக்கு காட்பரே தலைமைதாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 7-ந் தேதி அமுத வளன் தலைமையில் சகாய சுனில் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு பட்டி மன்றம் நடைபெறுகிறது.

    8-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி சுவக்கின் தலைமையில் அல்போன்ஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு அன்னையின் தேர் பவனி, 6 மணிக்கு ஜெபமாலை, கொடியிறக்கம், நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மாவட்ட அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி போட்டி நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை பிரபு, பங்கு இறைமக்கள், நிதிக்குழு, பங்குப்பேரவையினர் செய்து வருகிறார்கள்.
    உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை:

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடக்கமாக இன்று மாலை 5.45 மணிக்கு திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. கொடி ஊர்வலத்தின் நிறைவில், தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியைப் புனிதம் செய்வித்தார். இதையடுத்து கொடியேற்றம் நடைபெற்றது.

    ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் மற்றும் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும் அலங்காரத் தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இதில், பங்கேற்க பலரும் பாத யாத்திரையாக வேளாங்கண்ணி வருவார்கள். 8ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 

    கொடியேற்றம் துவங்கியது முதல் ஆலயத்தில் தினமும் சிறப்பு திருப்பலி நடைபெறும். கொடியேற்றம், திருப்பலி, தேர் பவனியில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி, தஞ்சையில் இருந்து சிறப்பு டெமு ரெயில் மற்றும் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.
    கீழ ஆசாரிபள்ளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகர்கோவில் அருகே கீழ ஆசாரிபள்ளத்தில் உள்ள புனித பனிமய அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து விழா 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவில் வருகிற 6-ந் தேதி இரவு 9 மணிக்கு புனித வளனார் தேர் பவனி, 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு முன்னாள் பங்குத்தந்தை ஆன்றனி கிளாரட் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி, காலை 10 மணிக்கு வளனார் தேர் பவனி, மாலை 6.15 மணிக்கு சூசை தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனை, இரவு 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

    8-ந்தேதி காலை 5 மணிக்கு திருப்பலி, 7 மணிக்கு மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி, 10 மணிக்கு அன்னையின் தேர் பவனி ஆகியவை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணிபிச்சை மற்றும் பங்கு நிர்வாகிகள், பங்கு மக்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    நாகர்கோவில், அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது.
    நாகர்கோவில், அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, மன்றாட்டு மாலை, கொடியேற்றம் நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் டைனீஷியஸ் தலைமையில், பபியான்ஸ் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

    31-ந் தேதி மாலை 6.15 மணி திருப்பலிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். 1-ந் தேதி அருட்பணியாளர் செல்வராஜ் தலைமையில் வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். மதியம் அன்பு விருந்து, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. 2-ந்தேதி அருள் ஜோசப் தலைமையில் ரவி காட்சன் மறையுரையாற்றுகிறார். 3-ந் தேதி செயில் சிங் தலைமையில் பிரான்சிஸ் நெல்சன் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி அமுதவளன் தலைமையில் பெலிக்ஸ் அலக்சாண்டர் மறையுரையாற்றுகிறார்.

    5-ந் தேதி ஆரோக்கிய ரமேஷ் தலைமையில் கோல்ரிட்ஜ் ஜிம் மறையுரையாற்றுகிறார். 6-ந் தேதி சுவக்கின் தலைமையில் ஆன்றனி ராஜ் மறையுரையாற்றுகிறார். 7-ந் தேதி ஜெபமாலை, திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு அற்புத ராஜ் தலைமையில் பேட்ரிக் சேவியர் மறையுரையாற்றுகிறார்.

    விழாவின் கடைசி நாளான 8-ந் தேதி காலை 7.15 மணிக்கு ஜெபமாலை, பெருவிழா திருப்பலி சுரேஷ்குமார் தலைமையில் நடக்கிறது. ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். மாலை 6.15 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா, பரிசு வழங்குதல், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.
    ×