search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆரோக்கிய மாதா
    X
    ஆரோக்கிய மாதா

    புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது

    ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6 மணிக்கு நாகர்கோவில் இசைவழி ஆற்றுப்படுத்துதல் பணி இயக்குனர் தேவதாஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். கோட்டார் பங்குதந்தை கிரேஸ் குணபால் மறையுரையாற்றினார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 7.30 மணிக்கு மறைமாவட்ட தலைமை செயலாளர் இம்மானுவேல் ராஜ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, 8-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு புனித ஜெரோம் கல்லூரி தாளாளர் சுவக்கின் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். மறைமாவட்ட குருக்கள் நல வாரிய இயக்குனர் அல்போன்ஸ் மறையுரையாற்றுகிறார். காலை 8 மணிக்கு மறைமாவட்ட முதன்மை பணியாளர் ஹிலாரியுஸ் தலைமையில் பாதுகாவலர் திருவிழா திருப்பலி நடக்கிறது.

    முட்டம் மறைவட்ட முதன்மை பணியாளர் ஜான்ரூபஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு அன்னையின் தேர்பவனி, 6 மணிக்கு கொடியிறக்கம், நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு கன்னியாகுமரி கிளாரட் இல்லம் அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ராஜ், பங்குபேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். 
    Next Story
    ×