search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியன்னை"

    திருச்சி மேலப்புதூரில் உள்ள புனித மரியன்னை பேராலயத்தில் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி மேலப்புதூரில் உள்ள புனித மரியன்னை பேராலய பங்கு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி கொடியேற்றி வைத்தார். இதையொட்டி நவநாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடந்தது. 10-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு, கீரனூர் அம்மாசத்திரம் மலைமாதா திருத்தல பங்கு தந்தை ஜேம்ஸ் செல்வநாதன் மணித்திருப்பலியை நடத்தினார்.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். மாலை 6.30 மணிக்கு பேராலயத்தில் அன்னையின் தேர்பவனியை புனிதப்படுத்தி, நற்கருணை ஆசீர் நடந்தது. இதை திருச்சி ஜான்பால் பல்சமய உரையாடல் மன்ற அருட்தந்தை மரியானுஸ் ஐசக் நடத்தினார். அதைத்தொடர்ந்து அருங்கொடை இல்ல இயக்குனர் ஆல்பர்ட் மறையுரை நடத்தினார். பின்னர் பேராலய வளாகத்தில் இருந்து 3 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.

    புனித மரியன்னை பேராலய பங்கு தந்தை த.சகாயராஜ் தலைமையில் நடந்த தேர்பவனியில் அருட்தந்தைகள் ஆ.சகாயராஜ், மரியலூயிஸ் மற்றும் அருட்சகோதரிகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேர்பவனிக்கு முன்பாக கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி கிறிஸ்தவர்கள் சென்றனர்.

    பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனியானது மேலப்புதூர் கான்வென்ட் ரோடு, பீமநகர் மார்சிங்பேட்டை ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேராலய வளாகத்தை அடைந்தது. அதன் பின்னர் நர்கருணை ஆசீர் வழங்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. 
    முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. வேங்கோடு அருட்பணியாளர் பெர்க்மான்ஸ் மைக்கேல் கெனட் மறையுரை வழங்குகிறார். 9-ந் தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமை தாங்கி திருப்பலியும், அருட்பணியாளர் ஜோஸ் ராபின்சன் மறையுரையும் வழங்குகிறார்கள். இரவு 7 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது. 12-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு சகாய அன்னையின் தேர்பவனி நடக்கிறது.

    15-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியை அருட்பணி ஜெயக்குமார் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். மாடத்தட்டுவிளை அருட்பணியாளர் ஜெயக்குமார் மறையுரை வழங்குகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். பொருளாளர் அகஸ்டின் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.

    16-ந் தேதி காலை 9 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி சிறப்பு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்குகிறார். 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர், இரவு 8 மணிக்கு தூய மரியன்னை இளையோர் இயக்கம் வழங்கும் நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இல்ல அருட்பணியாளர்கள் டோமினிக் எம்.கடாட்ச தாஸ், விக்டர் ஆன்றனி ராஜ், ஆன்றனி, ஆரோக்கிய தாஸ், ஜெரால்டு ஜெஸ்டின், ஜோஸ் ராபின்சன், பங்குபேரவை துணை தலைவர் வின்சென்ட்ராஜ், செயலர் விஜின் மோன் மணி, துணை செயலர் ஹலன்மேரி, பொருளர் விஜிகலா மற்றும் பங்குபேரவை நிர்வாகிகள், பங்குமக்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள். 
    ×