search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணி மாதா
    X
    வேளாங்கண்ணி மாதா

    வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது

    உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை:

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடக்கமாக இன்று மாலை 5.45 மணிக்கு திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. கொடி ஊர்வலத்தின் நிறைவில், தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியைப் புனிதம் செய்வித்தார். இதையடுத்து கொடியேற்றம் நடைபெற்றது.

    ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் மற்றும் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும் அலங்காரத் தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இதில், பங்கேற்க பலரும் பாத யாத்திரையாக வேளாங்கண்ணி வருவார்கள். 8ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 

    கொடியேற்றம் துவங்கியது முதல் ஆலயத்தில் தினமும் சிறப்பு திருப்பலி நடைபெறும். கொடியேற்றம், திருப்பலி, தேர் பவனியில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி, தஞ்சையில் இருந்து சிறப்பு டெமு ரெயில் மற்றும் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.
    Next Story
    ×