search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மரியன்னை
    X
    மரியன்னை

    முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா 6-ந்தேதி தொடங்குகிறது

    முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை தாங்குகிறார்.

    8-ந் தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் மரிய வில்லியம் தலைமையில் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து 11 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், வசந்தகுமார் எம்.பி. தலைமை தாங்குகிறார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மனோதங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் திருப்பலி, மறையுரை, ஜெபமாலை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    14-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவையும் நடக்கிறது. இதில், அருட்பணியாளர் யேசு ரெத்தினம் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 15-ந் தேதி காலை 9.30 மணிக்கு அருட்பணியாளர்கள் அகஸ்டின், மரிய ராஜேந்திரன் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள். தொடர்ந்து 11 மணிக்கு தேர்பவனியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நன்றி திருப்பலி, இரவு 8 மணிக்கு சிறப்பு தேர் பவனி ஆகியவை நடக்கிறது.

    விழாவையொட்டி கடந்த 2-ந் தேதி முதல் நற்செய்தி கூட்டம் நடந்து வருகிறது. நாளை (வியாழக்கிழமை) ஒப்புரவு கொண்டாட்டம் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள் டோமினிக் கடாட்சதாஸ், தாமஸ், ஆன்டனி, ஜெரால்டு ஜஸ்டின், ஜோஸ் ராபின்சன், பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜிமோன் மணி, பொருளாளர் விஜி கலா, துணை செயலாளர் ஹெலன் மேரி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×