என் மலர்
சினிமா செய்திகள்
ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ஜெயம் ரவிக்கு அந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியிருக்கிறாராம். #JayamRavi
ஜெயம் ரவி ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
குறிப்பிட்டஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் மூன்று படங்களில் ஜெயம்ரவி நடிக்க ஒப்புக்கொள்ள காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி திரையுலகில் அனைவரிடமும் எழுந்தது. சென்னை நகரில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாக போயஸ் கார்டன் பகுதி இருந்து வருகிறது. இப்பகுதியில் வீடு விலைக்கு வாங்க வேண்டும் என்பது ஜெயம் ரவியின் நீண்ட நாள் கனவு என்கின்றனர்.
Excited to announce that I’ve signed a 3-film deal with the young & vibrant media house @Screensceneoffl. Looking forward to a wonderful partnership and some great content. More updates on the projects soon. God bless!
— Jayam Ravi (@actor_jayamravi) February 22, 2019
நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னை போயஸ் கார்டனில் சுமார் 20 கோடி மதிப்பில் ஒரு தனிவீடு இருக்கிறதாம். அந்த வீட்டை ஜெயம்ரவி வாங்க முயற்சித்த போது பணத்திற்கு பதிலாக தங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தால் வீட்டை தருவதாக கூறியதால் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். #JayamRavi #ScreenSceneMediaEntertainment
உதயநிதி ஜோடியாக கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ள தமன்னாவின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், கிசுகிசுக்கள் படிப்பது தனக்கு பிடிக்கும் என்று தமன்னா கூறியுள்ளார். #Tamannaah
கண்ணே கலைமானே படத்தில் தமன்னாவின் வேடத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன. இது தமன்னாவை உற்சகாப்படுத்தி உள்ளது. இடையில் அவருக்கு படங்களே இல்லை என்ற ரீதியில் செய்திகள் வந்தன.
இதுபற்றிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் ‘நடிப்பு வாழ்க்கை முடியப் போகிறது என்று சொல்லும் ட்வீட்களையும், கிசுகிசுக்களையும் படிப்பது பிடிக்கும். என் கதை முடிந்துவிட்டது என்று சொல்லும்போது எனக்கு அதில் இருந்து அதிக உற்சாகம் கிடைக்கும்.

ஏனென்றால் அப்போது நான் ஒரு புதுமுகம் போல உணர்வேன். அது என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும். நானும் உழைப்பேன். அப்படி இதற்குமுன் அப்படியான தோல்வி முகத்தில் நான் இருந்தபோது தான் ‘பாகுபலி’ வாய்ப்பு வந்தது. ஒரு நடிகையாக நடிப்பு வாழ்க்கை போதும் என்று நான் நினைக்கும்போது தான் எனது தொழில் வாழ்க்கை முடியும். எனக்குள் இருக்கும் நடிகைக்கு எப்போதும் ஓய்வு இல்லை என்று கூறி இருக்கிறார். #Tamannaah #KanneKalaimaane
பிரேமம், கொடி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனுபமா, தற்போது புதிய கெட்டப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Anupama #AnupamaParameshwaran
பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரேமஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார். அனுபமா தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது புதிய படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுபமாவுக்கு அழகே அவரது நீளமான சுருள் சுருளான கூந்தல் தான். அனுபமா தனது நீண்ட கூந்தலை நறுக்கிவிட்டார். அனுபமா பரமேஸ்வரன் பெயரை சொன்னதுமே அவரின் நீண்ட அழகான கூந்தல் தான் அனைவரின் நினைவுக்கும் வரும்.

இந்நிலையில் அப்படி அழகாக இருந்த கூந்தலை இப்படியாக்கிவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தலைமுடியை நறுக்குவதற்கு முன்பாக அனுபமா அதை ஸ்ட்ரெய்டனிங் செய்திருந்தார். உங்களுக்கு சுருட்டை முடி தான் அழகு என்று ரசிகர்கள் கூறிய நிலையில் இப்படி செய்துவிட்டார். சில ரசிகர்கள் இந்த தோற்றமும் அழகாக இருப்பதாக கூறி அனுபமாவை உற்சாகப்படுத்தி உள்ளனர்.
விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். #VijaySethupathi
சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். இவர் தற்போது தனது மூன்றாவது படத்தை விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிப்பது ஏற்கெனவே படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிவேதா பெத்துராஜ் மற்றொரு கதாநாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தற்காலிகமாக ‘விவிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விவேக், மெர்வின் இணைந்து இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
மாணவர்கள் தற்கொலையை தடுக்க விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். #Vishal #AwarenessVideo
குழந்தைகள், மாணவர்கள் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்வதை தடுக்க நடிகர் விஷால் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் பேசி இருப்பதாவது:-
உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது, விளையாட முடியவில்லை, நடக்க முடியவில்லை, ஏன்? நிற்கக்கூட முடியவில்லை. என்ன முடிவெடுப்பீர்கள்? முதலில் நாம் செய்யும் விஷயம் மருத்துவரை அணுக வேண்டும் என்று தானே? ஆனால் உளவியல் பிரச்சினைக்கு நாம் மருத்துவரை பற்றி சிந்திப்பதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார். நம் வீட்டு குழந்தைகள், அண்டை வீட்டு குழந்தைகள், நாம் நேசிக்கும் குழந்தைகள் மற்றும் உதவி தேவைப்படும் குழந்தைகள் ஆகியோர்களுக்கு நம்மால் உதவ முடியும். மனநல குறைகளுக்கு சிகிச்சை உண்டு. அவற்றை முற்றிலும் தடுக்கவும் முடியும்.

சரியான நேரத்தில் உதவுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். எப்போதுமே குழந்தைகள் சில காரணங்களால் அவர்களின் பிரச்சினைகளை பெற்றோரிடம் சொல்வதில்லை. அதற்காகதான் ‘தி திஷா ஹெல்ப்லைன்’ இருக்கிறது. குழந்தைகளின் கவலைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறது.
ஆகையால் நீங்கள் துன்பத்தில் இருந்தாலோ, அல்லது வேறு ஒருவர் துன்பத்தில் இருப்பதை அறிந்தாலோ திஷாவின் இலவச எண்ணை அழைக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்க உறுதி செய்வார்கள்.
இவ்வாறு விஷால் பேசி உள்ளார்.
எம்.எஸ்.செல்வா இயக்கத்தில் சரவணன், அனு கிருஷ்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் படத்தின் விமர்சனம். #ArandavanukkuIrundathellamPei
நாயகன் சரவணனும் நாயகி அனு கிருஷ்ணாவும் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு ஒரு பங்களாவிற்கு வசித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் மீது விருப்பம் இல்லாததால், பிரிய நினைக்கிறார்கள்.
இந்நிலையில், இவர்கள் வசிக்கும் வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. உண்மையில் பேய் இருந்ததா? பேய் இருப்பது போல் பிம்பத்தை உருவாக்கியது யார்? இருவரும் பிரிய நினைத்தது நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சரவணன், இதற்கு முன் அகிலன், சரித்திரம் பேசு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் அறிமுக நடிகர் போல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அனுகிருஷ்ணா, கணவன் மீது வெறுப்பு காட்டும் காட்சிகளிலும், பேய்க்கு பயப்படும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சிங்கம்புலி வரும் காட்சிகள் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. குமரேசன், கிரேன் மனோகர், நெல்லை சிவா, சுப்புராஜ், போண்டா மணி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

வழக்கமான பேய் கதையை மையமாக வைத்து 10 மணி நேரத்திற்குள் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.செல்வா. இயக்குவதோடு மட்டுமில்லாமல், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். சாதனைக்காக எடுக்கப்பட்ட படம் என்பதால் லாஜிக் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.
ஜெயக்குமார் தங்கவேலு ஒளிப்பதிவு சுமார் ரகம். ராஜாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.
மொத்தத்தில் ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ பயம் இல்லை.
அபி சரவணன், வெண்பா நடிப்பில் உருவாகி வரும் மாயநதி திரைப்படம் லட்சியத்தை அடைய போராடும் பெண்ணின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். #Maayanadhi
ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’. பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியை கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதை யதார்த்தமாக கூறியுள்ளார் இயக்குனர்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்து ஒரு பாடலையும் பாடியுள்ளார். பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுத, ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய, மயில் கிருஷ்ணன் கலை இயக்கத்தை கவனிக்க, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். தினேஷ் மாஸ்டர் இப்படத்தின் இரண்டு பாடலுக்கு நடன இயக்கம் செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மயிலாடுதுறை, பொறையாறு, தரங்கம்பாடி, திருக்கடையூர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொம்மை குதிரையில் வாள்சண்டை போடும் கங்கனா ரணாவத்தை ரசிகர்கள் பலரும் கலாய்த்து பதிவு செய்திருக்கிறார்கள். #KanganaRanaut #Manikarnika
கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான ‘மணிகர்னிகா’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்து இருந்தனர். படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது. இந்த படத்தில் வாள் சண்டை, குதிரையேற்ற பயிற்சிகள் எடுத்து கஷ்டப்பட்டு நடித்ததாக கங்கனா ரணாவத் தெரிவித்து இருந்தார்.
யுத்த களத்தில் குதிரையில் சென்று டூப் போடாமல் அவர் சண்டை போட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பு தளத்தில் கங்கனா ரணாவத் சண்டை காட்சிகளின் போது எடுத்த ‘மேக்கிங் வீடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் மரத்தில் செய்யப்பட்ட குதிரை பொம்மையில் கங்கனா ரணாவத் வாளுடன் உட்கார்ந்து இருக்கிறார்.
அந்த குதிரையை இருந்த இடத்திலேயே ஓடுவது போன்று மோட்டார் மூலம் இயக்குகிறார்கள். இந்த வீடியோவை பார்த்து பொம்மை குதிரையில் உட்கார்ந்து சண்டை போடுவதுதான் உங்கள் வீரமா? இதற்குத்தான் கஷ்டப்பட்டேன் என்றீர்களா? என்றெல்லாம் பலரும் கேலி செய்து கலாய்த்து வருகிறார்கள்.

இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள கங்கனாவின் சகோதரி ரங்கோலி, “வேறு எப்படி குளோஸ் அப் காட்சியை படமாக்க முடியும்? இதன் பெயர் எந்திர குதிரை. கிளாடியேட்டர், தி லாஸ்ட் சாமுராய், பிரேவ் ஹார்ட் உள்ளிட்ட படங்களில் பயன்படுத்தி உள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை பார்க்கும்போது முட்டாள்கள் ஆச்சரியப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் எஸ்.கே.15 படத்திற்கு இசையமைக்கும் பணியை யுவன் சங்கர் ராஜா தொடங்கியிருக்கிறார். #SK15 #Sivakarthikeyan #Yuvan
`மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இது அவரின் 15-வது படம் என்பதால், எஸ்.கே.15 என்று தற்போது அழைத்து வருகிறார்கள். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தற்போது இப்படத்தின் இசையமைக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இதை தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan #Ivana #Yuvan
சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
கேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, "தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.
"இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.
அவர் கூறுகிறார்:-
"கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்ïனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்ïனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.
அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜ×ரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜ×ரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.
இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜ×ரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். "உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.
ஜ×ரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, "சரி நீயும் வா'' என்றார்.
அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.
அதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறைïரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.
மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.
அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.
அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.
இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.
இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.
டூயட் பாடலில் அண்ணன், "காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், "வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.
சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு "யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.
1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்
பாடுவோம்:"ஒத்த ரூபா தாரேன் நான்
ஒனப்பத் தட்டும் தாரேன்
ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்
மாட்டப் பாத்து குத்து''
- இது அண்ணன்.
"ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க
ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க
ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள
ஒழிச்சிக் கட்டப் போறோம்''
- இது நான்.
இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?
இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், "இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி
இருக்கும்?படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?

‘தாதா 87’ படத்தில் கமல் பாடலுக்கு அவரது அண்ணன் சாருஹாசன் ரொமன்ஸ் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. #DhaDha87 #CharuHaasan #Kamal
கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தாதா 87’. இதில் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் கீர்த்திசுரேசின் பாட்டி சரோஜா, ஜனகராஜ், மனோஜ்குமார், ஆனந்த்பாண்டி, ஜெனி பல்லவி, அனுலாவண்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் ஸ்ரீஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மார்ச் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் 2 நிமிட காட்சி வெளியாகியுள்ளது.

அதில் கமல் நடித்த ‘தேவர் மகன்’ படத்தில் இடம் பெறும் ‘இஞ்சி இடுப்பழகி...’ என்ற பாடலுக்கு சாருஹாசனும், சரோஜாவும் ரொமன்ஸ் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இளம் பெண் இயக்குனர் நயனா சூரியன், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். #NayanaSuryan
மலையாள திரையுலகில் இளம்பெண் டைரக்டராக திகழ்ந்தவர் நயனாசூரியன், (வயது 28). திருவனந்தபுரம் வெள்ளையம்பலத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து நயனாசூரியன் வசித்து வந்தார்.
இந்த குடியிருப்பில் நயனாசூரியன் மட்டும் தனியாக குடியிருந்து வந்தார். அங்கிருந்து காரில் தினமும் படப்பிடிப்பிற்கு சென்று விட்டு இரவு தனது குடியிருப்புக்கு திரும்பி விடுவார்.
இந்த நிலையில் நேற்று காலை நயனாசூரியனின் செல்போனுக்கு அவரது தோழிகள் போன் செய்தனர். பலமுறை முயற்சி செய்தபோதும், அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது தோழிகள் இதுபற்றி திருவனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், நயனாசூரியன் வசித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.
கதவை தட்டியபோது, திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு படுக்கை அறையில் டைரக்டர் நயனாசூரியன் பிணமாக கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அவரது உடல் திருவனந்தபுரம் மானவீயம் பகுதியில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஏராளமான திரையுலகினர் அங்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. நயனாசூரியன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தோழிகள் கூறி உள்ளனர். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நயனாசூரியன், பிரபல மலையாள டைரக்டர்கள் லெனின் ராஜேந்திரன், ஜித்து ஜோசப், பிஜு ஜோசப் ஆகியோரிடம் பல படங்களில் உதவி டைரக்டராக பணியாற்றி உள்ளார். பிரபல நடிகர் மம்முட்டி நடித்த படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 2017-ம் ஆண்டு மைதிலி-விஜய்பாபு நடித்த படத்தையும் இயக்கி உள்ளார். சமீபத்தில் பக்ஷி களுடே மணம் என்ற சினிமாவுக்கு திரைக்கதை எழுதி இயக்கினார்.
இவரது சொந்த ஊர் கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளி ஆகும்.