search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manikarnika"

    பொம்மை குதிரையில் வாள்சண்டை போடும் கங்கனா ரணாவத்தை ரசிகர்கள் பலரும் கலாய்த்து பதிவு செய்திருக்கிறார்கள். #KanganaRanaut #Manikarnika
    கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான ‘மணிகர்னிகா’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்து இருந்தனர். படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது. இந்த படத்தில் வாள் சண்டை, குதிரையேற்ற பயிற்சிகள் எடுத்து கஷ்டப்பட்டு நடித்ததாக கங்கனா ரணாவத் தெரிவித்து இருந்தார்.

    யுத்த களத்தில் குதிரையில் சென்று டூப் போடாமல் அவர் சண்டை போட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பு தளத்தில் கங்கனா ரணாவத் சண்டை காட்சிகளின் போது எடுத்த ‘மேக்கிங் வீடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் மரத்தில் செய்யப்பட்ட குதிரை பொம்மையில் கங்கனா ரணாவத் வாளுடன் உட்கார்ந்து இருக்கிறார்.

    அந்த குதிரையை இருந்த இடத்திலேயே ஓடுவது போன்று மோட்டார் மூலம் இயக்குகிறார்கள். இந்த வீடியோவை பார்த்து பொம்மை குதிரையில் உட்கார்ந்து சண்டை போடுவதுதான் உங்கள் வீரமா? இதற்குத்தான் கஷ்டப்பட்டேன் என்றீர்களா? என்றெல்லாம் பலரும் கேலி செய்து கலாய்த்து வருகிறார்கள்.



    இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள கங்கனாவின் சகோதரி ரங்கோலி, “வேறு எப்படி குளோஸ் அப் காட்சியை படமாக்க முடியும்? இதன் பெயர் எந்திர குதிரை. கிளாடியேட்டர், தி லாஸ்ட் சாமுராய், பிரேவ் ஹார்ட் உள்ளிட்ட படங்களில் பயன்படுத்தி உள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை பார்க்கும்போது முட்டாள்கள் ஆச்சரியப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
    இந்தி சினிமாவில் நிலவும் குடும்ப ஆதிக்கத்தை நான் எதிர்த்து பேசுவதால், எல்லோரும் என்னை எதிர்க்கின்றனர் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். #Manikarnika #KanganaRanaut
    கங்கனா ரணாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மணிகர்னிகா’. ஜான்சிராணியின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் முதலில் இயக்குனராக பணிபுரிந்த கிரிஷுக்கும் கங்கனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. தன் பெயரை இருட்டடிப்பு செய்ததாக கங்கனா மீது கிரிஷ் குற்றம் சாட்டினார்.

    மும்பையில் உள்ள பள்ளி ஒன்றில் ‘மணிகர்னிகா’ படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. திரையிடல் முடிவில் பேசிய கங்கனா, ’ஒட்டுமொத்த வகுப்பறையும் ஒருவருக்கு எதிராக திரண்டு பயமுறுத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இந்தி திரையுலகம் எனக்கு எதிராக அணி திரண்டு செயல்படுகிறது. அவர்களுக்கு வெட்கமே இல்லை. இப்படிப்பட்டவர்களிடம் வேலை பார்க்க எனக்கு விருப்பமில்லை. இதை அவர்கள் முகத்துக்கு நேராகவே நான் சொல்கிறேன்.



    சிலர் என் தாத்தா அளவுக்கு வயதானவர்கள். ஆனால் செக்ஸ் சீண்டல், குடும்ப ஆதிக்கம், சம்பள பாகுபாடு என பல்வேறு குறைகள் அவர்களிடம் உள்ளன. இனியும் நான் அமைதியாக இருக்க போவதில்லை. எல்லோரையும் வெளிப்படையாக அடையாளம் காட்டப் போகிறேன். என்னை அடக்கி ஒடுக்குவதன் மூலம் அவர்கள் பிரச்சினையை விலை கொடுத்து வாங்கி இருக்கின்றனர். ஜான்சிராணி போன்ற மாபெரும் வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படத்தை பற்றி பேச இவர்கள் ஏன் தயங்குகின்றனர்? ஜான்சிராணி என் சொந்தக்காரரா? அவர் தேசத்தில் அனைவருக்கும் சொந்தக்காரரே. நான் இந்தி சினிமாவில் நிலவும் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து பேசுகிறேன் என்பதாலேயே என்னை எல்லோரும் எதிர்க்கின்றனர்’. இவ்வாறு அவர் பேசினார். #Manikarnika #KanganaRanaut

    மணிகர்னிகா பட சர்ச்சையில் நடிகை கங்கனா ரணாவத் - இயக்குநர் கிரிஷ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் ட்விட்டரில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். #Manikarnika #KanganaRanaut #Krish
    கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மணிகர்னிகா’. கங்கனா ஜான்சி ராணியாக நடித்துள்ள இந்த படத்தை கிரிஷ் மற்றும் கங்கனா ரணாவத் இருவரும் இயக்கியுள்ளனர். இந்த படம் வெளியான 5 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்துள்ளது.

    இயக்குனர் கிரிஷ் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்து கொடுத்துவிட்டு தான் பாலகிருஷ்ணா நடித்த ‘என்.டி.ஆர்’ படத்தை இயக்கினார். கங்கனா சில காட்சிகளை மட்டும் திரும்ப படப்பிடிப்பு செய்து சேர்த்தார். அதனால் தன் பெயரையும் இயக்குனர் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.



    ‘மணிகர்னிகா’ படம் வெளியான உடன், பலரும் கங்கனா இயக்கம் மற்றும் நடிப்பு பிரமாதம் எனக் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக கிரிஷ் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையாக மாறியது. தற்போது கங்கனா தரப்பும், கிரிஷ் தரப்பும் டுவிட்டர் பக்கத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். #Manikarnika #KanganaRanaut #Krish

    கங்கணா ரனாவத் நடித்துள்ள மணிகர்னிகா படம் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் கிரிஷ், கங்கணா தனது பெயரை இருட்டடிப்பு செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். #Manikarnika #KanganaRanaut #RadhaKrishnaJagarlamudi
    சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கியவர் கிரிஷ். மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தையும் சமீபத்தில் இயக்கினார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    என்.டி.ஆர் படத்துக்கு முன்பு ஜான்சி ராணி வாழ்க்கை வரலாற்றை மணிகர்னிகா என்ற பெயரில் இந்தியில் இயக்கி வந்தார் கிரிஷ். இதில் பிரபல இந்தி நடிகையும், தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவருமான கங்கணா ரனாவத், ஜான்சி ராணியாக நடித்திருக்கிறார். மணிகர்னிகா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கிரிஷ் என்.டி.ஆர் படத்தை இயக்க ஒப்புக்கொண்டு அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.

    அப்போது மணிகர்னிகா படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுத்து தர கேட்டதற்கு கிரிஷ் மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தை இயக்கும் பொறுப்பை கங்கணா ரனாவத் ஏற்க முன்வந்ததுடன் இயக்குனர் பொறுப்பில் தனது பெயரை இடம்பெற செய்தார்.



    படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. கங்கணா ரனாவத் பெயர் போட்டுக்கொண்டது பற்றி கிரிஷ் கூறும்போது,

    ஜான்சிராணி படத்தை கடந்த ஜூன் மாதமே முழுமையாக முடித்து கொடுத்து விட்டேன். எல்லோரும் டப்பிங் பேசினார்கள். கங்கணா ரனாவத் மட்டும் டப்பிங் பேசாமல் இருந்தார். பிறகு என்னிடம் தொடர்பு கொண்ட அவர், படத்தில் சில காட்சிகளை மாற்றி அமைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்த கேட்டதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சோனுவின் கதாபாத்திரத்தை இடைவேளைக்கு முன்பே கொல்வதுபோல் அமைக்க வேண்டும் என்றார்.

    வரலாற்றில் அதுபோல் கிடையாது என்று கூறியும் ஏற்க மறுத்துவிட்டார். சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று என்னை கேட்ட போது நான் வேறு படத்தை இயக்குவதாக கூறிவிட்டேன். உடனே கங்கணாவே டைரக்டர் பொறுப்பை ஏற்பார் என்றார்கள்.



    மணிகர்னிகா படத்துக்காக என்னுடைய வாழ்நாளில் 400 நாட்களை செலவழித்துள்ளேன். 109 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். அந்த படத்தை இயக்கியதற்கான சம்பளத்தில் எனக்கு 30 சதவீதம் சம்பளம்தான் தரப்பட்டது.

    முழுபடத்தையும் நான் முடித்த நிலையில், சில காட்சிகளை மட்டும் மீண்டும் படப்பிடிப்பு செய்த கங்கணா, இயக்குனர் என்று தனது பெயரை போட்டுக் கொண்டிருக்கிறார். இயக்குனர் பணி எதுவும் செய்யாத நிலையில் அவர் எப்படி அப்படத்தின் இயக்குனருக்கான தகுதியை பெறுவார்?’.

    இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கங்கணாவின் சகோதரி ரங்கோலி சந்தேல் ‘கிரிஷ் சற்று அமைதியாக இருங்கள். நீங்கள் தான் முழு படத்தையும் டைரக்ட் செய்தீர்கள். ஆனால் கங்கணா தான் அந்த படத்துக்கான அடையாளம். எல்லோருக்கும் தெரிந்த முகம். அவளை இந்த வெற்றியை கொண்டாடவிடுங்கள்’ என்று பதில் அளித்துள்ளார். #Manikarnika #KanganaRanaut #RadhaKrishnaJagarlamudi

    ராதா கிருஷ்ணா ஜாகர்லமூடி, கங்கனா ரணாவத் இயக்கத்தில் ஜான்சி ராணி லட்சுமி பாயாக கங்கனா நடித்துள்ள `மணிகர்னிகா' படத்தின் விமர்சனம். #Manikarnika #ManikarnikaReview
    கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வந்த காலம், அவர்களது பார்வை இந்தியாவின் செல்வத்தின் மீதிருந்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், ஜான்சியையும் கைப்பற்ற நினைத்தார்கள்.

    மணிகர்னிகாவின் வீரத்தை பார்த்த ஜான்சியின் முக்கிய நிர்வாகிகள் ஜான்சியின் ராஜாவான கங்கதர் ராவ்வுக்கு மணிகர்னிகாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்த நிலையில், ஜான்சிக்கு வருகை தரும் கிழக்கு இந்திய கம்பெனியை சேர்ந்தவர்களுக்கு அரசர் உட்பட அரசவையில் இருக்கும் அனைவரும் தலைவணங்க, ஜான்சியின் ராணியான மணிகர்னிகா, தான் யாருக்கும் தலைவணங்க மாட்டேன் என்று வீராப்புடன் நிற்கிறார். தனக்கு தலைவணங்காத மணிகர்னிகாவை பழிவாங்குவதாக ஆங்கிலேயர்கள் சபதமிட்டு செல்கிறார்கள்.



    ஜான்சியின் ராணியாகும் மணிகர்னிகாவுக்கு ஒரு குழந்தை பிறந்து சில காலங்கில் இறந்து விடுகிறது. இந்த நிலையில், ஜான்சியின் மன்னரும் நோய்வாய்ப்பட, சிறுவன் ஒருவனை அடுத்த ராஜாவாக தத்து எடுக்கிறார்கள்.

    பின்னர், ஜான்சியின் அரசர் கங்கதர் ராவ் மறைவால், அரியணைக்கு சொந்தமான சிறுவன், வளரும் வரை ஜான்சியை ராணி மணிகர்ணிகா ஆட்சி செய்கிறார். இந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் ஜான்சி மீது போர் தொடுக்கிறார்கள். போரை கண்டு அஞ்சாத ராணி மணிகர்னிகா ஆங்கிலேயர்களை தனது பராக்கிரமங்கள் மூலம் எப்படி எதிர்கொண்டார்? ஜான்சியை காப்பாற்றினாரா? என்ற வீரமங்கையின் வரலாறு தான் இந்த கதை.



    கங்கனா மணிகர்னிகா ராணியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். துறுதுறுவென இருக்கும் இளம் பருவம், யாருக்கும் அஞ்சாத குணம், போர் புரியும் வீரம் என அனைத்திலும் ஜான்சியின் ராணியை கண்முன் நிறுத்துகிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்குநராகவும் இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கும் கங்கனா, தனது வேலையை செவ்வென செய்துவிட்டு சென்றிருக்கிறார். இயக்குநர் கங்கனாவுக்கு வாழ்த்துக்கள். 

    அதுல் குல்கர்னி, ஜிசு செங்குப்தா, சுரேஷ் ஓபராய், டேனி டென்சோங்பா, வைபவ் டட்லவாடி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    ஜான்சி ராணியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் கதை என்பதால், படம் முழுக்க கங்கனாவே ஆக்கிரமித்துள்ளார். ராஜாவின் மறைவுக்கு பின்னர், ஆங்கிலேயர்களை எதிர்க்க மக்களை தயார்படுத்துவது, மக்களின் தேசப்பற்றை ஊக்குவிப்பது என கங்கனாவின் கதாபாத்திரம் விரிகிறது. படத்தின் முதல் பாதியில் மணிகர்னிகாவின் இளம்வயது, திருமண வாழ்க்கையை விவரித்திருக்கும் நிலையில், இரண்டாவது பாதியில் போர் பயிற்சி, தேசப்பற்று என கதை நகர்ந்து படத்தின் இறுதியில் போருடன் முடிவடையும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார்கள் ராதா கிருஷ்ணா ஜாகர்லமூடி, கங்கனா ரணாவத். வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். 



    படத்திற்கு ஷங்கர் எக்சான் லாய் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. கிரண் டோகன்ஸ், ஞானசேகரின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தை அப்பட்டமாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `மணிகர்னிகா' வீரம். #Manikarnika #ManikarnikaReview #KanganaRanaut #JhansiKiRani 

    படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் மூலமாக பாலியல் அல்லாத வேறுவிதமான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார். #KanganaRanaut #Manikarnika
    `மீடூ' புகார்கள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரை பிரபலங்கள் பலரும் பாலியல் பிரச்சனையில் சிக்கினர்.

    கங்கனா ரணாவத் நடித்த குயின் என்ற இந்தி திரைப்படத்தின் இயக்குநர் விகாஷ் பஹால் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டினை கூறினார். இதில் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத் அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசினார்.

    சமீப காலங்களில் ரணாவத்தின் படங்கள் வெளியாகும் பொழுது, சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜான்சி ராணி கதையை அடிப்படையாக கொண்ட `மணிகர்னிகா' படத்தில் கங்கனா நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 25ந் தேதி திரைக்கு வருகிறது.

    இந்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த பாலியல் சாராத துன்புறுத்தல்களை பற்றி தெரிவித்து உள்ளார். அவர் கூறும்பொழுது, துன்புறுத்தல்கள் பல மட்டங்களில் நடைபெறுகிறது. என்னுடைய பணியில் பல நடிகர்களிடம் இருந்து இதுபோன்ற துன்புறுத்தல்களை நான் சந்தித்துள்ளேன்.



    நான் படப்பிடிப்பு தளங்களில் பலமுறை, பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கவில்லை. ஆனால் வேறு விதங்களில் துன்புறுத்தப்பட்டேன். சில நடிகர்கள் ஈகோவுடன் செயல்பட்டனர். அவை மீடூவின் கீழ் வராது. ஆனால் அவை துன்புறுத்தல்களே.

    இவற்றில் படப்பிடிப்பு தளத்தில் 6 மணிநேரத்திற்கு மேல் காக்க வைப்பது, தவறான நேரத்தில் படப்பிடிப்புக்கு அழைத்து விட்டு நிற்க வைப்பது, தேதிகளை எப்பொழுதும் தவறாக கொடுத்து அதனால் சந்தர்ப்பங்களை தவற செய்ய விடுவது, இதுபோன்ற நடிகர்கள் கடைசி நிமிடத்தில் படப்பிடிப்பினை ரத்து செய்வது ஆகியவை சில.

    இதேபோன்று பட விழாக்களுக்கு அழைக்காமல் விட்டு விடுவது, என்னை அழைக்காமல் பட டிரெய்லரை வெளியிடுவது, என்னிடம் சொல்ல கூட இல்லாமல் வேறு சிலரை டிப்பிங் பேச வைப்பது என துன்புறுத்தல்கள் தொடர்ந்துள்ளன என்று தெரிவித்து உள்ளார். #KanganaRanaut #Manikarnika

    மணிகர்ணிகா படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒரு நாளில் 10-12 மணி நேரங்களை செலழித்ததாக கங்கனா ரனாவத் கூறினார். #Manikarnika #KanganaRanaut
    ஜி ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் `மணிகர்ணிகா - ஜான்சியின் ராணி'. ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரணாவத் இணைந்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். 

    அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

    படம் பற்றி கங்கனா பேசும் போது,

    12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது. இந்த படம் தொடங்கிய போது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப்பயிற்சியாளர் கூட சொன்னார். தினமும் 10-12 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது.



    ஆக்‌ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன. அதன்பிறகு தான் நான் படத்தை இயக்கினேன். நான் டிராமா காட்சிகளை தான் இயக்கினேன். ராணி லக்‌ஷ்மி பாய் கதாப்பாத்திரம் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் அல்ல. அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பு தேவைப்பட்டது, அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன் என்றார். #Manikarnika #KanganaRanaut

    இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் நடிகை கங்கனா ரணாவத் முதலிடம் பெற்றுள்ளார். #KanganaRanaut #Bollywood
    இந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் உள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமன்றி மற்ற பகுதிகளிலும் வசூல் குவிக்கின்றன. இதனால் அந்த படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பெரிய அளவில் சம்பளம் வாங்குகிறார்கள்.

    கடந்த வருடம் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோனே ரூ.13 கோடி பெற்று முதல் இடத்தில் இருந்தார். இவர் நடித்து வெளிவந்த பத்மாவத் படம் ரூ.215 கோடி செலவில் தயாராகி ரூ.580 கோடி வசூல் பார்த்தது. கங்கனா ரணாவத் ரூ.12 கோடி பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார்.

    இந்த வருடம் கங்கனா ரணாவத் முதல் இடத்தை பிடித்துள்ளார். ராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா படத்தில் லட்சுமிபாயாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் ரூ.14 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நடிகைகள் எவரும் இதுவரை இவ்வளவு சம்பளம் பெற்றது இல்லை.



    கங்கனா ரணாவத் நடித்த குயீன் படம் வசூல் சாதனைகள் நிகழ்த்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு படத்துக்கு படம் சம்பளத்தை கூட்டி வந்த அவர் இப்போது ரூ.14 கோடி பெற்று இருக்கிறார். கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ளார்.
    ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா திரைப்படம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் என்று கூறியிருக்கிறார். #KanganaRanaut
    தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத், ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

    ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய முதல் சுதந்திர போராட்ட வீராங்கனையாக ராணி லட்சுமிபாய் கருதப்படுகிறார். அவரது வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் நோக்கோடு இந்த படத்தை தயாரிப்பதாக பட நிறுவனம் அறிவித்து உள்ளது. மணிகர்னிகா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த படத்தில் நடிப்பது குறித்து கங்கனா ரணாவத் ஏற்கனவே கூறும்போது, “எனக்கு இது ஒரு மைல்கல் படம். வாள் சண்டை குதிரை ஏற்ற பயிற்சிகள் பெற்று நடிக்கிறேன். முழு உழைப்பையும் இந்த படத்துக்கு கொடுத்து இருக்கிறேன்” என்றார். இந்த நிலையில் மணிகர்னிகா படத்தின் டிரெய்லரை நாளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.



    இதுகுறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, “மணிகர்னிகா டிரெய்லர் நாளை வெளியாவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் பெண்களின் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் போற்றும் படமாக இருக்கும். இதில் ராணி லட்சுமிபாயாக நடித்தது பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் படமாகவும் மணிகர்னிகா இருக்கும்” என்றார்.
    மணிகர்னிகா படத்தில் நடித்து முடித்துள்ள கங்கணா ரணாவத் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் அரசியலுக்கு வந்தால், திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார். #KanganaRanaut
    தாம் தூம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கங்கணா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகி. இந்திய ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் என பிரதமர் மோடியை புகழ்ந்து வரும் அவர், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்கணா, நான் இப்போது மணிகர்னிகா படத்தில் நடித்து வருகிறேன். இப்போது தான் பங்கா திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. நான் எப்போதும் ஒரு வேலையை செய்தால் அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு செய்வேன்.



    அதனால் நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று நினைத்தால், திருமணம் செய்துகொள்ள மாட்டேன், குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன். வேறு எந்த வேலையிலும் ஈடுபட மாட்டேன். மக்களுக்கு சேவையாற்றும் ஊழியராக இருப்பவர் தான் அரசியல்வாதி என்று கூறி இருக்கிறார். #KanganaRanaut

    ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கைப் படத்தை தொடர்ந்து கங்கனா ரணாவத் அடுத்ததாக தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் கபடி வீராங்கனையை பற்றிய படத்தில் நடிக்க இருக்கிறார். #Panga #KanganaRanaut
    கங்கனா ரணாவத், ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் ‘மணிகர்னிகா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜான்சி ராணியின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாக இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதையும் மீறி பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி முடிந்துள்ளனர்.

    தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் கபடி வீராங்கனையை பற்றிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘பங்கா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஸ்வினி அய்யர் திவாரி இயக்குகிறார். இவர் தமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலாபால் நடித்த அம்மா கணக்கு படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



    இந்த படத்தில் நடிப்பது பற்றி கங்கனா ரணாவத் கூறும்போது, 

    ‘‘அஸ்வினி படங்களை பார்த்து இருக்கிறேன். வாழ்க்கையின் யதார்த்தங்கள் அதில் இருக்கும். பங்கா கதையை அவர் சொன்னதும் மிகவும் பிடித்துப் போனது. இந்த படத்தில் தேசிய அளவிலான கபடி வீராங்கனையாக நடிப்பதற்காக பயிற்சிகள் எடுத்துள்ளேன். கபடி வீராங்கனை கதாபாத்திரம் எனக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது’’ என்றார். #Panga #KanganaRanaut

    ×