என் மலர்
சினிமா

அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்யமாட்டேன் - கங்கணா ரணாவத்
மணிகர்னிகா படத்தில் நடித்து முடித்துள்ள கங்கணா ரணாவத் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் அரசியலுக்கு வந்தால், திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார். #KanganaRanaut
தாம் தூம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கங்கணா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகி. இந்திய ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் என பிரதமர் மோடியை புகழ்ந்து வரும் அவர், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்கணா, நான் இப்போது மணிகர்னிகா படத்தில் நடித்து வருகிறேன். இப்போது தான் பங்கா திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. நான் எப்போதும் ஒரு வேலையை செய்தால் அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு செய்வேன்.

அதனால் நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று நினைத்தால், திருமணம் செய்துகொள்ள மாட்டேன், குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன். வேறு எந்த வேலையிலும் ஈடுபட மாட்டேன். மக்களுக்கு சேவையாற்றும் ஊழியராக இருப்பவர் தான் அரசியல்வாதி என்று கூறி இருக்கிறார். #KanganaRanaut
Next Story






