என் மலர்
சினிமா செய்திகள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் ஹாலிவுட் நடிகர் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ’தர்பார்’ திரைப்படத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் பில் டியூக் வாய்ப்பு கேட்டு டுவிட் செய்துள்ளார். அவர் தனது டுவிட்டில், ’முருகதாஸ், எனக்கு தமிழ் பேச தெரியாது.
ஆனால் ரஜினியின் நீண்ட கால நண்பனாகவோ, அமெரிக்க உறவினராகவோ, நயன்தாராவின் அங்கிளாகவோ நான் நடிக்க முடியும் என நினைக்கிறேன். ஸ்ரீகர் பிரசாத், சந்தோஷ் சிவன் என்னை எடிட் செய்யலாம், அனிருத் எனக்கு ஒரு ஹிட் சாங் கொடுக்க முடியும், நீங்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசிடம் வாய்ப்பு கேட்டுள்ளார்.

பில் டியூக்கின் இந்த டுவிட்டை நம்ப முடியாத முருகதாஸ், ‘சார் இது நிஜமாவே நீங்க தானா?’ என்று கேட்டார். அதற்கு ‘ஆமாம் சார். நானும் எனது அணியும் உங்கள் வேலையின் தீவிர ரசிகர்கள். எனக்கு இப்போது 76 வயதாகிறது. நிக்கோலஸ் கேஜுடன் ‘தி மூவி மேண்டி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் இணைந்து பணியாற்றலாம்’ என பில் டியூக் கூறியுள்ளார்.
இவர் ஏற்கனவே, மகேஷ்பாபுவின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின்போது, ‘ஒரு சர்வதேச ஸ்பை திரில்லர் படத்தில் இணைந்து பணியாற்றலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது சொல்லுங்கள், சேர்ந்து உணவு சாப்பிடலாம்’ எனக் கூறியிருந்தார்.
பிரபல கன்னட நடிகையும், தமிழில் வாட்ச்மேன் படத்தில் நடித்தவருமான சம்யுக்தா ஹெக்டே வெளிநாட்டு வாலிபரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையானவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே. விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வரும் கோமாளி படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து சம்யுக்தா ஹெக்டேவும் நடிக்கிறார். இது தவிர்த்து அவர் தீயல் படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் அதிகம் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான். சம்யுக்தா ஹெக்டே படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஐரோப்பாவுக்கு சென்ற இடத்தில் அவர் வெளிநாட்டவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சாக்லேட்டும், வெனிலாவும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சம்யுக்தா ஹெக்டே கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவார். ஆனால் அவர் இதுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதுவும் தெரிவித்தது இல்லை. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சம்யுக்தா அந்த வெளிநாட்டவரை காதலிப்பதாக நினைக்கிறார்கள்.
நானா படேகருக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கோர்ட் கூறியதற்கு, நடிகை தனுஸ்ரீ தத்தா ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். “2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் நானா படேகருக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தனுஸ்ரீ தத்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தனுஸ்ரீ தத்தா கூறியதாவது:-
“போலீசாரின் செயலை பார்க்கும்போது வெறுப்பாக உள்ளது. நானா படேகர் தவறு செய்யவில்லை என்று நிரூபிக்க முயற்சிக்கிறார். எங்களுடையை சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். போலீசாரிடம் வாக்குமூலம் கொடுக்க விடாமலும் தடுக்கிறார்கள். இதனை ஏற்கனவே நான் தெரிவித்து உள்ளேன்.
எனக்கு நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததை பலர் பார்த்தனர். 10 சாட்சிகள் இருந்தார்கள். மிரட்டலுக்கு பயந்து யாரும் வாக்குமூலம் அளிக்க முன்வரவில்லை. நானா படேகரின் நண்பர்களிடம் மட்டுமே போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர்கள் எப்படி உண்மையை சொல்வார்கள்.
எனது தோழியிடமும் வாக்குமூலம் கேட்டுள்ளனர். அவரையும் மிரட்டியதால் எனக்கு ஞாபகம் இல்லை என்று கூறியுள்ளார். கடவுளின் தீர்ப்பை நான் நம்புகிறேன். நானா படேகருக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்.”
இவ்வாறு தனுஸ்ரீ தத்தா கூறினார்.
வால்டர் கதை மற்றும் டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சிங்கார வேலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் சிங்காரவேலன். இவர் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர்’ என்கிற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விக்ரம் பிரபு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்க உள்ளார்..
இந்த நிலையில் பிரபு திலக் என்கிற தயாரிப்பாளர், இதே இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இதே கதையை வால்டர் என்கிற தலைப்பிலேயே படமாக தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.. இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கான பூஜையும் போடப்பட்டு அந்த புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன.

இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன். 'வால்டர்' படத்தின் கதையும் படத்தின் தலைப்பும் தன் வசமே இருக்கிறது என்றும் அப்படி இதே கதையை வேறு நடிகர்களை வைத்து தனது அனுமதி இல்லாமல் தயாரிக்க முற்பட்டால் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிங்காரவேலன்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ, ஆர்.ஜே.விக்னேஷ், ஷிரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் விமர்சனம்.
படத்தின் நாயகர்களாக இருக்கும் ரியோ மற்றும் ஆர்.ஜே.விக்னேஷும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் யூடியூப்பில் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட பலவற்றை அண்ணனாக இருக்கும் அரவிந்த் செய்து வருகிறார்.
ஒரு நாள் மாலில் பிராங்க் வீடியோ மூலம் மிகவும் செல்வந்தராக இருக்கும் ராதாரவி மற்றும் நாயகி ஷிரின் ஆகியோரை கலாய்க்கிறார்கள். இதில் ஷிரின் ரியோவை அடித்து விடுகிறார். ராதாரவி மன்னித்து இவர்களை அனுப்பி விடுகிறார்.
சில நாட்களில் ராதாரவி, ரியோ மற்றும் ஆர்.ஜே.விக்னேஷை அழைத்து, எதற்காக இதுபோன்று செய்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு அவர்கள் எங்களுக்கு அதிகமாக பணம் வேண்டும். அதற்காகத்தான் இப்படி செய்கிறோம் என்று சொல்கிறார்கள்.

உங்களுக்கு தேவையான பணத்தை நான் தருகிறேன். ஆனால், நான் சொல்லும் மூன்று சவால்களை செய்தால் தான் தருவேன் என்று கூறுகிறார் ராதாரவி.
இறுதியில் ரியோ ராதாரவி சொன்ன சவால்களை ஏற்றாரா? ராதாரவி சொன்ன சவால்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ இப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் அவருக்கு நல்ல ஓப்பனிங்காக அமைந்திருக்கிறது. படம் முழுவதும் இளமை துள்ளலுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவருடன் ஆர்.ஜே.விக்னேஷ் செய்யும் லூட்டிகள் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறது. ஹீரோவுக்கு இணையாக அவரும் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அரசியல் வாதியாக வரும் நாஞ்சில் சம்பத் சமகால அரசியல் அவலங்களை அள்ளி அவிழ்த்து விடுகிறார். தனக்கே உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் ராதாரவி.
கதாநாயகியாக வரும் ஷிரின் பத்திரிகை நிரூபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். அண்ணனாக வரும் அரவிந்த், வீட்டு ஓனராக வரும் மயில்சாமி, பிஜிலி ரமேஷ் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.
அரசியல் சூழ்நிலையை கலாய்த்து காமெடியுடன் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். பொது இடத்தில் நடக்கும் தவறுகளை தைரியமாக தட்டி கேட்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன இயக்குனருக்கு பெரிய கைத்தட்டல். ஆனால், கதைக்களம் சற்று அழுத்தம் இல்லாதது போல் இருக்கிறது.

கனாவை தொடர்ந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் சாதிக்கவேண்டும் என போராடுபவர்களுக்கு இப்படத்தின் மூலம் ஒரு வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார்.
ஷபீரின் இசையும், யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ கலகலப்பான ராஜா.
நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பாக்யராஜ் அணியினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.
நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். இரு அணிகளுமே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.
நடிகர் சங்க கட்டிட திறப்பு விழாவிற்கு தன்னை அழையுங்கள் என கமல் கூறினார் என கமலிடம் ஆதரவு கேட்ட பிறகு பாக்யராஜ் பேட்டி அளித்தார். மேலும் எங்கள் அணியின் தேர்தல் அறிக்கையை கமலிடம் காண்பித்து ஆதரவு கேட்டோம்.

தேர்தல் அறிக்கை விவரம் வருமாறு:-
* எந்தவித நிதி திரட்டலும் இல்லாமல் 6 மாத காலத்தில், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும்.
* டோக்கன் முறை முழுமையாக ரத்து செய்யப்படும், மூத்த கலைஞர்கள் நலம்பெற முதியோர் இல்லம் திட்டம்.
* உறுப்பினர்களுக்கான சேமநல நிதியை நடிகர் சங்கமே செலுத்தும்.
உள்ளிட்ட பல திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அர்ஜூன் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘கொலைகாரன்’ படத்தின் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்ததாக அவர் கூறியிருக்கிறார்.
விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நடிப்பில் வெளியான கொலைகாரன் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதற்கான நன்றி அறிவிப்பு சந்திப்பு நேற்று நடந்தது. பட நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாத அர்ஜூன் இதில் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-
‘இன்றைய சூழலில் படங்கள் வெற்றி பெறுவதே அரிதாகி வருகிறது. படத்தின் வெற்றிக்கு கதை தான் மிகவும் முக்கியம். என்னதான் பெரிய நடிகர்கள், கலைஞர்கள் பணியாற்றினாலும் கதை தான் இங்கே ஜெயிக்கும். விஜய் ஆண்டனி சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து வித்தியாசமான வெற்றி படங்களை தருகிறார்.

ஆஷிமா மிகவும் அர்ப்பணிப்பு உள்ள நடிகை. எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவரிடம் இருக்கிறது. யார் தயாரிப்பாளர் என்றே தெரியாமல் தான் இந்த படத்தில் நடித்தேன். இந்த படம் தெலுங்கிலும் கன்னடத்திலும் கூட மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நல்ல படம் என்றால் எந்த மக்களும் வரவேற்பு தருவார்கள்’. இவ்வாறு அவர் பேசினார்.
தளபதி 63 படத்தை அடுத்து, விஜய் நடிக்க இருக்கும் படமும், ரஜினியின் தர்பார் படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கிறது.
விஜய்யின் 63-வது திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. படத்துக்குத் தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்துஜா, விவேக், ரெபா மோனிகா, யோகி பாபு, கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

விஜய்யின் 64-வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதே பொங்கல் தினத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே வரும் பொங்கலுக்கு ரஜினி- விஜய் படங்கள் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை முதல் முறையாக இணைந்து நடிக்க இருக்கிறார்.
விஜய் சேதுபதி அடுத்ததாக எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று பழனியில் துவங்கி இருக்கிறது.
சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேச அளவிலான பிரச்சனையும் மையமாக பேசப்பட இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். இப்படத்தின் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழுவினர் தற்காலிகமாக VSP 33 என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
VSP 33-யில் முன்னணி கதாநாயகி மற்றும் ஒரு வெளிநாட்டு பெண்ணும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். இதில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைளை புதுவித பாணியில் அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பாண்டவர் அணி சார்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டதற்கு நடிகை வரலட்சுமி அதிர்ச்சியடைந்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள். இரு அணிகளுமே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாண்டவர் அணியை இணையத்தில் விளம்பரப்படுத்த வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அதில், சரத்குமார், ராதாரவி இருவரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இருவரது சுயநலத்தால், நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறியிருந்தார்கள்.
இந்த வீடியோவை விஷால் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சரத்குமாரின் மகளான வரலட்சுமி அதிர்ச்சியடைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
@VishalKOfficial#NadigarSangam2019Elections you just lost my vote..! pic.twitter.com/sqUfj2RQKk
— varalaxmi sarathkumar (@varusarath) June 14, 2019
அதில், பிரச்சார வீடியோவில் நீங்கள் எவ்வளவு தாழ்ந்து போய் விட்டீர்கள் என்பதை எண்ணி அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தேன். உங்கள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் தற்போது போய்விட்டது.
அவர் குற்றவாளியாக இருந்திருந்தால் ஜெயிலுக்கு சென்றிருப்பார். எனவே உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். இது போன்ற கீழ்த்தரமான வீடியோக்கள் உங்கள் தரத்தை காட்டுகிறது. இனிமேல் ஒரு சாது போல காட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பொய்களையும், இரட்டை வேடத்தையும் அனைவருமே அறிவார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எனது ஓட்டை இழந்து விட்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.
அஸ்வின் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் ‘கேம் ஓவர்’ படத்தின் விமர்சனம்.
ஒரு பெண்ணை மர்மான மனிதர் ஒருவர் கொலை செய்கிறார். இதிலிருந்து படம் தொடங்குகிறது. நாயகி டாப்சி புது வருட கொண்டாட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கிறார். இவருக்கு இருட்டை கண்டாலே பயம். இதிலிருந்து விடுபட முயற்சி செய்து வரும் நிலையில், கையில் டாட்டூ ஒன்றை குத்துகிறார்.
நாளடைவில் அந்த டாட்டூ அவருக்கு வலிக்க ஆரம்பிக்கிறது. டாட்டூ குத்தியவரிடம் இதைப்பற்றி விசாரிக்க, இறந்த பெண்ணின் அஸ்தியில் இருந்து இந்த டாட்டூவை உருவாக்கியதாகவும் அதை தவறாக உங்களுக்கு குத்திவிட்டதாக கூறுகிறார். யார் அந்த பெண் என்று டாப்சி விசாரிக்க ஆரம்பிக்கிறார். மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார் டாப்சி.

இந்நிலையில், அந்த மர்ம நபர்கள் டாப்சியை துரத்துகிறார்கள். இறந்த பெண்ணும் டாப்சி கனவில் வர ஆரம்பிக்கிறார்? மர்ம நபர்களிடம் இருந்து டாப்சி எப்படி தப்பித்தார்? கனவில் வரும் இறந்த பெண் என்ன செய்கிறாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் டாப்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்திற்கு நினைத்து பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு பாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். துடிதுடிப்பான பெண், மர்மங்களால் பாதிப்புக்குள்ளாகும் பெண் என்று நடிப்பில் பரிமாணங்களையும் காட்டுகிறார்.

டாப்சியின் உதவியாளராக வினோதினி, ஆர்பாட்டம் இல்லாமல் அசத்தலான நடிப்பு. உளவியல் நிபுணராக அனிஷ் குருவில்லா, அமுதாவாக சஞ்சனா நடராஜன், அவர் அம்மாவாக பார்வதி டாட்டூ நிபுணராக ரம்யா ஆகியோர் கதைக்கு சரியான தேர்வுகள். இவர்கள் அனைவரும் தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
வீடியோ கேம் பின்னணியில் அதைப்போலவே ஒரு கதையை உருவாக்கி பரபரப்பான திரைக்கதையால் விறுவிறுப்பான படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின். படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை ஒரு படபடப்பு தொடர்வது படத்தின் பலம். தனியாக இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பலாத்கார வீடியோக்களால் பாதிக்கப்படும் பெண்கள் என நடப்பு சம்பவங்களை வைத்து கதையை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு பாராட்டுகள். பேய், கிரைம் கலந்த உளவியல் திரில் படமாக இருந்தாலும் படம் முடியும்போது சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் கதாநாயகனே ரான் ஈதன் யோகனின் இசைதான். டாப்சியின் உணர்வுகளை அப்படியே பின்னணி இசையாக்கி நமக்கு கடத்துகிறது. வசந்தின் ஒளிப்பதிவும் ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பும் திகில் கூட்டுகின்றன.
மொத்தத்தில் ‘கேம் ஓவர்’ சிறந்த கேம்.
நடிகை தனுஸ்ரீ தத்தா மீதான பாலியல் புகார் தொடர்பாக நானா படேகர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை மும்பை கோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்.
மும்பை:
பிரபலங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்திய ‘மீ டூ’ இயக்கத்தை தொடர்ந்து, பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018-ம் ஆண்டு பரபரப்பு பாலியல் புகார் அளித்தார். ‘ஹார்ன் ஓகே பிளஸ்’ என்ற சினிமா படப்பிடிப்பின் பாடல் காட்சியின் போது, நானா படேகர் தன்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று அவர் மும்பை ஒசிவாரா போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ‘பி ரிப்போர்ட்’ என்னும் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் நானா படேகருக்கு எதிரான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் மீது வழக்கை தொடர்ந்து நடந்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் இந்த அறிக்கையை நானா படேகரின் வக்கீல் வரவேற்று உள்ளார். அதேநேரத்தில், இது போலீசாரின் அலட்சியத்தை காட்டுவதாகவும் இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்வோம் என்று தனுஸ்ரீ தத்தாவின் வக்கீல் நிதின் சாத்புதே கூறினார்.
பிரபலங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்திய ‘மீ டூ’ இயக்கத்தை தொடர்ந்து, பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018-ம் ஆண்டு பரபரப்பு பாலியல் புகார் அளித்தார். ‘ஹார்ன் ஓகே பிளஸ்’ என்ற சினிமா படப்பிடிப்பின் பாடல் காட்சியின் போது, நானா படேகர் தன்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று அவர் மும்பை ஒசிவாரா போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ‘பி ரிப்போர்ட்’ என்னும் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் நானா படேகருக்கு எதிரான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் மீது வழக்கை தொடர்ந்து நடந்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் இந்த அறிக்கையை நானா படேகரின் வக்கீல் வரவேற்று உள்ளார். அதேநேரத்தில், இது போலீசாரின் அலட்சியத்தை காட்டுவதாகவும் இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்வோம் என்று தனுஸ்ரீ தத்தாவின் வக்கீல் நிதின் சாத்புதே கூறினார்.






