search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வால்டர் கதை, டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை - தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை
    X

    வால்டர் கதை, டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை - தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை

    வால்டர் கதை மற்றும் டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சிங்கார வேலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் சிங்காரவேலன். இவர் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர்’ என்கிற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விக்ரம் பிரபு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்க உள்ளார்..

    இந்த நிலையில் பிரபு திலக் என்கிற தயாரிப்பாளர், இதே இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இதே கதையை வால்டர் என்கிற தலைப்பிலேயே படமாக தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.. இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கான பூஜையும் போடப்பட்டு அந்த புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன.



    இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன். 'வால்டர்' படத்தின் கதையும் படத்தின் தலைப்பும் தன் வசமே இருக்கிறது என்றும் அப்படி இதே கதையை வேறு நடிகர்களை வைத்து தனது அனுமதி இல்லாமல் தயாரிக்க முற்பட்டால் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிங்காரவேலன்.
    Next Story
    ×