என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான ‘லட்சுமி பாம்ப்’ படத்தில் நடித்து வரும் கியாரா அத்வானி, அவரைத் தவிர யார் இயக்கினாலும் சரியாக இருக்காது என்று கூறியுள்ளார்.
    ​​தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை இந்தியில் ‘லட்சுமி பாம்ப்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தை தமிழில் எழுதி இயக்கிய ராகவா லாரன்ஸ் தான் இந்தியிலும் இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன மனக்கசப்பில் இந்த படத்தை தான் இயக்கவில்லை என்று லாரன்ஸ் அறிவித்தார். அவர் அறிவித்த உடனே பட குழுவினரும், படத்தின் கதாநாயகன் அக்‌‌ஷய் குமாரும் ராகவா லாரன்சுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களின் அன்பை ஏற்ற லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க ஆயத்தமானார்.

    படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி இதைப்பற்றி கூறும் போது, ‘அவர் மறுபடியும் இப்படத்தை இயக்க ஒப்புக் கொள்வார் என்று நம்பி காத்திருந்தேன். அவரும் அப்படியே சம்மதித்தார். அவரே இப்படத்தை இயக்க மிக சிறந்த நபர். ஏனென்றால் அவர் இப்படத்தின் ஒரு பகுதியை இயக்கி முடித்து விட்டார். மீதியை யார் இயக்கினாலும் அது சரியாக இருக்காது. மேலும் லாரன்ஸ் மாஸ்டர் ஆச்சர்யம் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர். இப்படத்தை தமிழில் அவரே இயக்கி நடித்தும் இருக்கிறார்.



    மக்களும் படத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆக இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவரது விலை மதிப்பில்லா சொத்து என்று தான் சொல்ல வேண்டும். இப்போது நாங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்“ என்றார். 
    வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர்.

    இப்படம் தொடங்கும் முன்பே ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால் முன்கூட்டியே ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்தாக நடிக்க இருக்கும் சிம்பு 45 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
    'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்குப் பிறகு, சிம்பு தற்போது, ஹன்சிகா நடித்துவரும் 'மஹா' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை 23ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.



    கன்னடத்தில் உருவான 'மப்டி' படத்தின் இயக்குனர் நர்த்தன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டராக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.
    கொலைகாரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் புதிய படத்தை விஜய் மில்டன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படம், நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே வெற்றியை பற்றி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், போப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி பைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து 'இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் நல்ல தரமான படங்களை தயாரிக்க இருக்கிறார்கள். 

    ‘கொலைகாரன்’ படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி இந்த பெயரிடப்படாத படத்திலும் நாயகனாக நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குனர் விஜய் மில்டன் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்குவதோடு, ஒளிப்பதிவும் செய்கிறார்.



    தற்போது, இந்த படத்தில் பணிபுரிய முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அக்டோபர் 2019 முதல் ‘இந்திய கடற்கரைகளின் தலைநகரமான’ கோவா, டையூ மற்றும் டாமன் ஆகியவற்றின் அழகான இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் டைரக்டர் மணிரத்னம் ‘திடீர்’ உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். ‘இதய கோவில்’, ‘இருவர்’, ‘மவுனராகம்’, ‘தளபதி’, ‘அலைபாயுதே’, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அஞ்சலி’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நாயகன்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமானை ‘ரோஜா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் இயக்கத்தில் கடந்த வருடம் ‘செக்க சிவந்த வானம்’ படம் திரைக்கு வந்தது. தற்போது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கான நடிகர்-நடிகை தேர்வில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் மணிரத்னத்துக்கு நேற்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.



    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தகவல் பட உலகிலும், சமூக வலைத்தளத்திலும் பரவி ரசிகர்களும், திரையுலகினரும் நலம் விசாரித்த வண்ணம் இருந்தனர்.

    மணிரத்னம் வயிற்றுக் கோளாறு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், சிகிச்சை முடிந்து விரைவில் வீட்டுக்கு திரும்பி விடுவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
    22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கான ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் தேர்வாகியுள்ளது.
    ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த படம் ‘சர்வம் தாள மயம்’. இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இந்நிலையில் இந்த படம்  2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 



    இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஜூன் 15 முதல் ஜூன் 24ஆம் தேதி நடைபெறுகிறது.

    மேலும் இதே திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா, துல்கார் சல்மான் உள்பட பலர் நடித்த 'நடிகையர் திலகம்' திரைப்படமும் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் "ஆதித்ய வர்மா" படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
    தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.

    வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ‘வர்மா’ படத்தின் புதிய பதிப்பை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். 



    "ஆதித்யா வர்மா" என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்தில் துருவ் ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் பின்னணி வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

    இந்நிலையில் தற்போது ஆதித்ய வர்மா படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இரண்டாவது முறையாக ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் இப்படத்தின் டீசரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
    விக்ராந்த், மிஷ்கின், சுசீந்தரன், அதுல்யா ரவி நடிப்பில் ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் விமர்சனம்.
    விக்ராந்த், சுசீந்திரன் இருவரும் மேலும் இருவருடனும் சேர்ந்து ஒரு வங்கியை துப்பாக்கி முனையில் கொள்ளை அடிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. பொதுமக்களையும் காவல்துறை அதிகாரிகளையும் சுட்டுவிட்டு அவர்கள் தப்பிக்கிறார்கள். அவர்களை பிடிக்கும் பொறுப்பை காவல் அதிகாரி மிஷ்கின் எடுத்துக்கொள்கிறார்.

    மிஷ்கினின் துப்பாக்கிக்கு ஒரு கொள்ளையன் பலியாக மீதி 3 பேரும் தப்பிக்கிறார்கள். தப்பித்து செல்லும்போது ஒரு குடியிருப்பு பகுதியில் நடக்கும் விபத்தால் அந்த குடியிருப்பு பகுதிக்குள் சிக்கி கொள்கிறார்கள்.

    அந்த ஒட்டுமொத்த குடியிருப்பையுமே அலர்ட்டாக்கி அந்த கொள்ளையர்களை பிடிக்க மிஷ்கின் உத்தரவிடுகிறார். அந்த குடியிருப்பு பகுதியில் தீவிரவாதிகளும் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் அன்றைக்கு ஒரு மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிடுகிறார்கள். 



    இறுதியில் மிஷ்கின் தலைமையிலான காவல் குழு கொள்ளையர்களான விக்ராந்த், சுசீந்திரன் இருவரையும் பிடித்தார்களா? குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    பாடல்களோ, காதல் காட்சிகளோ, தனியாக நகைச்சுவை காட்சிகளோ இல்லாமல் பரபரப்பான திரைக்கதையை மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ். முதல் காட்சியிலேயே படம் வேகம் எடுக்கிறது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த வேகம் குறைந்து விடுகிறது.



    விக்ராந்த் வழக்கம்போல் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். மகளிடம் உணர்வுபூர்வமாக சைகை மொழியில் பேசும்போதும் சண்டைக்காட்சிகளிலும் தனது உடல்மொழியால் கவர்கிறார். சுசீந்திரன் முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். ஆனால் அவர் காட்சிகளில் நம்பகத்தன்மையே இல்லை.

    மிஷ்கின் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு சரியான தேர்வு. தனது முத்திரை நடிப்பால் கவர்கிறார். அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. அதுல்யா, ரித்தீஷ் இருவரும் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்து கடுப்பாக்குகிறார்கள். பேபி மானஸ்வி சிறப்பான நடிப்பு.



    சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜாயின் படத்தை விறுவிறுப்பாக்க முயற்சித்துள்ளது. ராமாராவின் படத்தொகுப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    கடைசி 10 நிமிடங்களில் வரும் டுவிஸ்டை நம்பி ராம்பிரகாஷ் கதையை எழுதி இருக்கிறார். பரபரப்பான திரைக்கதை இருந்தாலும் நம்பகத்தன்மை இல்லாத கதையால் படம் ஒரு கட்டத்தில் சலிப்படைய செய்து விடுகிறது. அந்த டுவிஸ்டையும் ஏற்கனவே யூகிக்க முடிவது பலவீனம். எனவே வித்தியாசமான முயற்சியாக மட்டுமே பார்க்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ சரியாக சுடவில்லை.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது சிக்சர் படத்திற்காக ஜிப்ரான் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார். தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் 'சிக்சர்' என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

    இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், 'சிக்சர்' படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்துள்ளோம். 'நீ எங்கவேனா கோச்சிக்கினு...' என தொடங்கும் இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் தெரிவித்துள்ளார். இந்த பாடல் மீது தற்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    சிக்சர் படத்தில் வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். சாச்சி என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
    ரேனிகுண்டா படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை சஞ்சனா சிங், தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் ரேனிகுண்டா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் இவர் பங்கேற்ற கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்துவரும் சஞ்சனாசிங் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற முயற்சியில் தற்பொழுது முதற்கட்டமாக ஆல்பம் ஒன்றை தயாரித்திருக்கிறார்.

    சிங்கப்பூர், மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட இந்த ஆல்பம் புதுமையான வகையில் படமாக்கப்பட்டிருக்கிறதாம். மும்பையில் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரங்கள் சிருஷ்டி மற்றும் ரோகித் சுஷாந்தி இதில் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரபல டிஜே பஞ்சோ குவாபோவும் நடித்திருக்கிறார்.



    பஞ்சாபி பாடகர் நவீந்தர் சிங் பாடல் பாடியதோடு நடிக்கவும் செய்திருக்கிறார். நடன இயக்குனர் சஞ்சய்குமார் இந்த ஆல்பத்தை இயக்கியிருக்கிறார்.

    வெகு சிறப்பாக இந்த ஆல்பம் வெளியீட்டை நடத்த திட்டமிட்டிருக்கும் சஞ்சனா சிங், விரைவில் திரைப்படங்கள் தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
    ஆதித்யா நடிப்பில் ஜோதிமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கண்டதை படிக்காதே’ படத்தின் போஸ்டரை கொலைகாரன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    புல்லி மூவிஸ் வழங்க சத்யராம் தயாரிக்கும் படம் ‘கண்டதை படிக்காதே’. இப்படத்தின் போஸ்ட்டரை கொலைகாரன் படத்தின் வெற்றிவிழாவில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, அர்ஜூன் மற்றும் கொலைகாரன் படத்தின் இசையமைப்பாளர் சைமன் கிங் ஆகியோர் வெளியிட்டனர்.

    கண்டதை படிக்காதே படத்தின் இயக்குனர் ஜோதிமுருகன் கூறுகையில், ‘இது ஒரு ஹை கான்செப்ட் ஸ்டோரி லைனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களை ஹாலிவுட்டில் ஹை கான்செப்ட் திரைப்படம் என்று அழைப்பார்கள். இந்த மாதிரியான படங்களில் எந்த நடிகர் நடித்தாலும் படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும். அதே மாதிரி இந்த படமும் ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்‌ஷன் கலந்த ஜனரஞ்சமான திரைப்படமாக இருக்கும். படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை படம் கவர்ந்துவிடும். படத்தின் இறுதிக் காட்சி வரையிலும் கொலைகாரன் படத்தை போலவே சஸ்பென்ஸ் இருந்துக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டுகின்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறினார்.



    இப்படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். திருப்பாச்சி புகழ் பான்பராக் ரவி ஆர்யான் வில்லனாக நடித்திருக்கிறார், சபிதா ஆனந்த், படத்தின் தயாரிப்பாளர் சத்யராமும் நடித்துள்ளார் மற்றும் பிரீத்தி, சுஜி, வைஷாலி, ஜென்னி, என நான்கு ஹீரோயின்கள் இதில் நடித்திருக்கிறார்கள். 
    கேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், செல்போனில் இளம் பெண்ணிடம் தகாத முறையில் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    திமிரு, சிலம்பாட்டம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் வினாயகன். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இவர், தமிழ், மலையாளம் உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

    கேரளாவை சேர்ந்த இவர், மிருதுளாதேவி சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத முறையில் பேசியதாக முகநூலில் அந்த பெண் பதிவு செய்துள்ளார். 



    இதனையடுத்து அவரை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கல்பேட்டா போலீசார், வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    ×