என் மலர்
சினிமா செய்திகள்
அஸ்வின் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் ‘கேம் ஓவர்’ படத்தின் விமர்சனம்.
ஒரு பெண்ணை மர்மான மனிதர் ஒருவர் கொலை செய்கிறார். இதிலிருந்து படம் தொடங்குகிறது. நாயகி டாப்சி புது வருட கொண்டாட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கிறார். இவருக்கு இருட்டை கண்டாலே பயம். இதிலிருந்து விடுபட முயற்சி செய்து வரும் நிலையில், கையில் டாட்டூ ஒன்றை குத்துகிறார்.
நாளடைவில் அந்த டாட்டூ அவருக்கு வலிக்க ஆரம்பிக்கிறது. டாட்டூ குத்தியவரிடம் இதைப்பற்றி விசாரிக்க, இறந்த பெண்ணின் அஸ்தியில் இருந்து இந்த டாட்டூவை உருவாக்கியதாகவும் அதை தவறாக உங்களுக்கு குத்திவிட்டதாக கூறுகிறார். யார் அந்த பெண் என்று டாப்சி விசாரிக்க ஆரம்பிக்கிறார். மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார் டாப்சி.

இந்நிலையில், அந்த மர்ம நபர்கள் டாப்சியை துரத்துகிறார்கள். இறந்த பெண்ணும் டாப்சி கனவில் வர ஆரம்பிக்கிறார்? மர்ம நபர்களிடம் இருந்து டாப்சி எப்படி தப்பித்தார்? கனவில் வரும் இறந்த பெண் என்ன செய்கிறாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் டாப்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்திற்கு நினைத்து பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு பாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். துடிதுடிப்பான பெண், மர்மங்களால் பாதிப்புக்குள்ளாகும் பெண் என்று நடிப்பில் பரிமாணங்களையும் காட்டுகிறார்.

டாப்சியின் உதவியாளராக வினோதினி, ஆர்பாட்டம் இல்லாமல் அசத்தலான நடிப்பு. உளவியல் நிபுணராக அனிஷ் குருவில்லா, அமுதாவாக சஞ்சனா நடராஜன், அவர் அம்மாவாக பார்வதி டாட்டூ நிபுணராக ரம்யா ஆகியோர் கதைக்கு சரியான தேர்வுகள். இவர்கள் அனைவரும் தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
வீடியோ கேம் பின்னணியில் அதைப்போலவே ஒரு கதையை உருவாக்கி பரபரப்பான திரைக்கதையால் விறுவிறுப்பான படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின். படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை ஒரு படபடப்பு தொடர்வது படத்தின் பலம். தனியாக இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பலாத்கார வீடியோக்களால் பாதிக்கப்படும் பெண்கள் என நடப்பு சம்பவங்களை வைத்து கதையை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு பாராட்டுகள். பேய், கிரைம் கலந்த உளவியல் திரில் படமாக இருந்தாலும் படம் முடியும்போது சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் கதாநாயகனே ரான் ஈதன் யோகனின் இசைதான். டாப்சியின் உணர்வுகளை அப்படியே பின்னணி இசையாக்கி நமக்கு கடத்துகிறது. வசந்தின் ஒளிப்பதிவும் ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பும் திகில் கூட்டுகின்றன.
மொத்தத்தில் ‘கேம் ஓவர்’ சிறந்த கேம்.
நடிகை தனுஸ்ரீ தத்தா மீதான பாலியல் புகார் தொடர்பாக நானா படேகர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை மும்பை கோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்.
மும்பை:
பிரபலங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்திய ‘மீ டூ’ இயக்கத்தை தொடர்ந்து, பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018-ம் ஆண்டு பரபரப்பு பாலியல் புகார் அளித்தார். ‘ஹார்ன் ஓகே பிளஸ்’ என்ற சினிமா படப்பிடிப்பின் பாடல் காட்சியின் போது, நானா படேகர் தன்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று அவர் மும்பை ஒசிவாரா போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ‘பி ரிப்போர்ட்’ என்னும் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் நானா படேகருக்கு எதிரான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் மீது வழக்கை தொடர்ந்து நடந்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் இந்த அறிக்கையை நானா படேகரின் வக்கீல் வரவேற்று உள்ளார். அதேநேரத்தில், இது போலீசாரின் அலட்சியத்தை காட்டுவதாகவும் இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்வோம் என்று தனுஸ்ரீ தத்தாவின் வக்கீல் நிதின் சாத்புதே கூறினார்.
பிரபலங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்திய ‘மீ டூ’ இயக்கத்தை தொடர்ந்து, பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018-ம் ஆண்டு பரபரப்பு பாலியல் புகார் அளித்தார். ‘ஹார்ன் ஓகே பிளஸ்’ என்ற சினிமா படப்பிடிப்பின் பாடல் காட்சியின் போது, நானா படேகர் தன்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று அவர் மும்பை ஒசிவாரா போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ‘பி ரிப்போர்ட்’ என்னும் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் நானா படேகருக்கு எதிரான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் மீது வழக்கை தொடர்ந்து நடந்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் இந்த அறிக்கையை நானா படேகரின் வக்கீல் வரவேற்று உள்ளார். அதேநேரத்தில், இது போலீசாரின் அலட்சியத்தை காட்டுவதாகவும் இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்வோம் என்று தனுஸ்ரீ தத்தாவின் வக்கீல் நிதின் சாத்புதே கூறினார்.
நான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை என்று நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த விழாவில் கூறியிருக்கிறார்.
விஜய் சேதுபதி பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து 3வது முறையாக அருண் குமாருடன் சிந்துபாத் படத்தில் இணைந்து இருக்கிறார். இதில் அவருடன் அஞ்சலி மற்றும் அவர் மகன் சூர்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பாக விஜய் சேதுபதி அளித்த பேட்டி:
மகனுடன் நடிக்க காரணம்?
அருணின் தனி சிறப்பு என்னவென்றால் நாயகனை மிக மிக நல்லவனாகவும், நாயகியை கண்ணியமானவளாகவும், அழகுணர்ச்சி மிக்கவளாகவும், இயல்பான வளாகவும் வடிவமைப்பார். சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்பு, பிறகு என்னுடைய குடும்ப நண்பரானார். அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடிக்கிறோனோ இல்லையோ சூர்யா நடிப்பது உறுதி என்று இந்த படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் என்னிடம் கூறியிருந்தார்.
மகனுக்கு அறிவுரை வழங்குவீர்களா?
நான் அவருக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்து இருக்கிறேன். அது பாடங்களை விட மிகவும் முக்கியம். படிப்புக்கும் முக்கியத்துவம் தர சொல்லி இருக்கிறேன்.

மகளும் நடிக்க வருவாரா?
ஆமாம். சங்கத்தமிழன் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கிறார். மகன் நடிக்கும்போது மகளை நடிக்க வைக்கவில்லை என்றால் பாலின பாகுபாடு வருமே...
படங்களின் வெற்றி தோல்வி உங்களை பாதிக்குமா?
இல்லை. நான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை. என்னுடைய சில படங்கள் சுமாராக போய் இருக்கலாம். ஆனால் பெரிய அளவில் தோல்வி அடைந்தது இல்லை. எனக்கு வெற்றி, தோல்வி இரண்டுமே ஒன்றுதான். இரண்டையுமே பெரிதாக நினைப்பதோ இதயத்துக்கு எடுத்து செல்வதோ இல்லை.
நான் பண்ணின தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் என்று அஜித் சொன்னதாக நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் எச்.வினோத் கூறியிருக்கிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டிரெய்லர் நேற்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அஜித் இந்த படத்துக்குள் வந்தது பற்றி எச்.வினோத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘சதுரங்க வேட்டை’ ரிலீசுக்கு பிறகு எதிர்மறை வேடத்தில் அஜித்துக்காக ஒரு கதை தயார் பண்ணி இருந்தேன். அஜித்தோ ‘நெகட்டிவ் கேரக்டர் பண்ணின வரை போதும்.
இனி நான் பண்ற படங்கள் மூலமா மக்களுக்கு நம்பிக்கையையும் கனவையும்தான் விதைக்கணும் என்று நினைக்கிறேன்’னு சொன்னவர், ‘எனக்கு ஒரு படம் பிடிச்சிருக்கு. அதை நீங்க ரீமேக் பண்ணினா நல்லா இருக்கும்’னு சொன்னார்.

‘என்ன படம் சார்’னு கேட்டேன். ‘பிங்க்’னு சொன்னார்.‘ உடனடியா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் தயங்கினேன்.
அஜித்தே தொடர்ந்து பேசினார். ‘பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை தருது. பெண்களைப் பற்றிய புரிதல்ல நம்ம சமூகம் ரொம்ப பலவீனமா இருக்கு. எனக்கேகூட என்மேல வருத்தம் இருக்கு. ஆரம்பகாலத்தில நானும் பெண்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிற படங்களில் நடிச்சிருக்கேன். நான் பண்ணின தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன். இதுதான் என் அடுத்த படம். நீங்க இருந்தீங்கனா சந்தோஷம்’னு சொன்னார்.
மறுபடியும் அஜித் சாரைச் சந்திச்சப்போ, ‘இந்தப் படத்தை ஒரு பெண் இயக்குநர் பண்ணினா நல்லா இருக்கும் சார்’னு சொன்னேன். ‘தப்பு சார். ஒரு பெண், அவங்களுக்கு சாதகமா பேசுறாங்கன்னு மக்கள் ஈசியா எடுத்துக்குவாங்க. இது பெண்களுக்கான படம் கிடையாது. பசங்களுக்கான படம்’. இவ்வாறு அவர் கூறினார்.
தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது. இருப்பினும், பல திரைப்பட விழாக்களில் இப்படம் இடம் பெற்று வருகிறது.
வரும் ஜூன் 27 முதல் ஜூலை 07ம் தேதி வரை கொரியாவின் போய்ஷன் நகரில் நடைபெறவிருக்கும், பிரசித்தி பெற்ற 23வது
‘போய்ஷன் சர்வதேச பெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில்’ (BIFAN), ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்பட இருக்கிறது.

‘சூப்பர் டீலக்ஸ்’ போய்ஷன் பெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில், ‘வர்ல்ட் பெண்டாஸ்டிக் ப்ளூ’ பிரிவில் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘அந்தாதுன், கல்லி பாய் மற்றும் மணிகாமிகா’ ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்பட இருக்கிறது.
சிறுமிகளை வேலைக்கு அமர்த்தி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நடிகை பானுப்ரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடிகை பானுப்ரியாவின் வீட்டில் 4 சிறுமிகளை பணியில் அமர்த்தி இருந்ததாக கடந்த ஜனவரி மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த பெண் ஒருவர் அம்மாநிலத்தில் உள்ள சமல்கோட் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பானுப்ரியாவின் சென்னை வீட்டில் தனது 14 வயது மகள் வேலை செய்து வருவதாகவும் அவளை பானுப்ரியா சித்ரவதை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக பானுப்ரியா மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குழந்தைகள் நல செயற்பாட்டாளர் சேசா ரத்னம் கூறும்போது, நடிகை பானுப்ரியா மீது குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய குற்றத்துக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்- சிறுமிகளை பணியில் அமர்த்துவது குற்றமாக கருதப்படுகிறது. இது தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த விவகாரத்தை பானுப்ரியா ஏற்கனவே மறுத்துள்ளார். தனது வீட்டில் வேலை செய்த பெண் மீது அவர் திருட்டு குற்றம் சுமத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் பும்ராவுடன் காதல் கிசுகிசு செய்திகள் வெளியானதற்கு அனுபமா பரமேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார். தமிழ், மலையாளத்தில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரனும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய வீரர் பும்ராவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. டுவிட்டரில் பும்ரா பின்தொடரும் ஒரே நடிகை அனுபமாதான். பும்ராவின் டுவிட்டுகளை ஒன்று விடாமல் அனுபமா ரீட்வீட் செய்கிறார். பதிலுக்கு பும்ராவும் அனுபமா பரமேஸ்வரனின் டுவிட்டுகளை லைக் செய்கிறார்.

இதை பார்த்து தான் அவர்களுக்கு இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. இது குறித்து அனுபமாவிடம் கேட்டபோது அவர், ‘எனக்கும், பும்ராவுக்கும் காதல் எல்லாம் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே...’ என்று தெரிவித்துள்ளார்.
இணைய தளத்தில் ரசிகர் ஒருவரின் கருத்துக்கு இயக்குனர் வெங்கட் பிரபு, என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு என்று பதில் அளித்து இருக்கிறார்.
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. மேலும் இப்படத்தின் டிரைலரை பார்த்து பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் அஜித், யுவன், வெங்கட் பிரபு இணைந்த மங்காத்தா கூட்டணி எப்போது என்று கேட்டார். அதற்கு மற்றொரு ரசிகர், திரும்ப வெங்கட் பிரபு எடுத்தா அது நிச்சயமாக பிளாப் ஆகும்னு வெங்கட் பிரபுவுக்கே தெரியும். ஏனென்றால் வெங்கட் பிரபு கிட்ட ஒழுங்கான கதை இல்ல என்று கூறினார்.
Vechikita vanjana pandrey bro!! Enniki enkita kadhai irrundhurukku ;))) https://t.co/S8SRc0zO0b
— venkat prabhu (@vp_offl) June 12, 2019
இதற்கு வெங்கட் பிரபு, ‘வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன். என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, அஜித் அடுத்த படத்தில் கார் பந்தய வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ என்ற இந்தி படம் தமிழில், ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில், அஜித்குமார் நடித்து இருக்கிறார். இது, அவருக்கு 59-வது படம். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். வினோத் டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.
போனிகபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது முதல் தமிழ் படம். இந்த படம் வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் தனது 60-வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தையும் வினோத் இயக்க இருக்கிறார்.

இது, முழுக்க முழுக்க அதிரடி சண்டை படமாகவும், கார் பந்தய வீரராக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இயக்குனர் வினோத், அஜித்தின் 60வது படத்தின் வேலைகள் இன்னும் தொடங்கவில்லை என்றும் நேர்கொண்ட பார்வை படம் வெளியான பிறகுதான் கதைக்கான வேலைகளில் ஈடுபடுவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. வெளியான சில வினாடிகளிலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வைரலாகி உள்ளது.
இதில் அஜித் பேசும் ‘ஒருத்தர் மேல விஸ்வாசத்தை காட்ட இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்திறீங்க’ என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ரியோ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் முன்னோட்டம்.
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே "நம்ம வீட்டு பசங்க" என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் யூடியூப் என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும்போது, "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து உருவாக்கியிருந்தோம், மொத்த குழுவுக்கும் அதே அனுபவம் தான் இருந்தது. இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா? படத்தை தயாரிப்பாரா? என நான் சற்று சந்தேகத்திற்குள்ளானேன். ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச்சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்திருக்கிறது" என்றார்.

மேலும் நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, ரியோ மிகுந்த அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகர். தொடர்ந்து அவரது நடிப்பை மெறுகேற்றி வருகிறார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து படத்துக்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கிறார். படம் முழுக்க தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மொழி தடைகளையும் தாண்டி ஷிரின் காஞ்ச்வாலா நடிப்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். நாஞ்சில் சம்பத் சார் அவரின் ஆளுமையால் நிச்சயமாக அனைத்து படங்களிலும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். இந்த படம் ஒரு ஜாலியான பயணம் என்பதையும் தாண்டி உணர்ச்சி பூர்வமானது. ஏனெனில் இயக்குனர் ஆகும் எனது நீண்டகால கனவு இந்த படத்தில் தான் நனவாகி இருக்கிறது" என்றார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு, ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம்.
தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறினார். இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்கள்.

தற்போது இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இயக்குனர் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன். எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என்று பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.






