என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு, ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம்.

    தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறினார். இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இயக்குனர் ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்கள்.



    தற்போது இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இயக்குனர் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார். 

    மேலும், வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன். எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என்று பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெறாது என்று முன்னாள் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி பேட்டியளித்துள்ளார்.
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

    இந்தநிலையில் கடந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிர் அணியாக போட்டியிட்டு தோல்வியை தழுவிய சரத்குமார் அணியில் இருந்தவரும் நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான ராதாரவி, இந்த முறை தேர்தல் நடைபெறாது என கூறியிருக்கிறார்.

    ராதாரவி இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். நான் மாற்றம் வரலாம் ஏமாற்றம் வரக்கூடாது என்றேன். இப்போது அது தான் நடந்து இருக்கிறது. விஷால் மீது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக நின்ற அனைவரும் இப்போது அவருக்கு எதிராக நிற்கிறார்கள்.



    கடந்த முறை ரஜினி தேர்தலில் ஓட்டு போட்ட போது யார் ஜெயித்தாலும் மூன்று ஆண்டுகளில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்றார். இப்போது அவர்கள் ஒன்றையும் நிறை வேற்றாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த அணி பொய்களை கூறி ஜெயித்த அணி.

    எதற்கெடுத்தாலும் விஷாலை முன்னிலைப்படுத்தி முன்னிலைப்படுத்தி இப்போது அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நடக்கும் என்று முன்பே கூறினேன். இன்னும் நிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது. இது சட்ட விரோதமான தேர்தல்.

    23-ந் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது. அவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யவில்லை. நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது. இந்த தேர்தல் கண்டிப்பாக நடக்காது. வரும் 13-ந்தேதி நீதிமன்றம் மூலம் தேர்தல் நிறுத்தப்படும்’.

    இவ்வாறு ராதாரவி தெரிவித்துள்ளார்.
    ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை பற்றி பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை கருணாஸ் வெளியிட்டுள்ளார்.
    கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு, ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம்.

    தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறினார். இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதற்கு நடிகரும், சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ், அவருடைய கருத்து எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



    அதில், ‘எங்கள் நிலங்களை பறித்தார்! பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்! பெண்களை வேசியாக்கினார்! இப்படி வரலாறு தெரியாத கட்டுக்கதைகளெல்லாம் உங்கள் தேவைகளுக்கு ஓர் மாபெறும் இன வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்!

    உங்களை போல் முன்னோரின் வரலாற்றை கற்காமல் கதைவிடாதீர்கள். இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம்! தமிழர் மரபின் உச்சம்! நீங்களும் இந்த தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள்! அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியை போல் எதிர்வரிசையில் நின்று கொக்கரிக்காதீர்! தமிழர் முன்னோர்களின் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! இது அறிவுரை கலந்த எச்சரிக்கை!

    இவ்வாறு கருணாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
    ராட்சசி என்ற புதிய படத்தை இயக்கி இருக்கும் புதுமுக இயக்குனர் சை.கௌதம்ராஜ், ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
    ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

    விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் படத்தைப் பற்றிக் கூறும்போது, ‘ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் நிர்மலா டீச்சர், ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சரோட பேர் கட்டாயம் மனசில இருக்கும். நம்மளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்துல நடக்குற நடக்க வேண்டிய விசயங்களை எனக்கென்னன்னு இல்லாம எதிர்த்து நின்னு அத்தனை பேருக்கு முன்னாடி கம்பீரமா கேள்வி கேட்கும் போது, மனசுல தோணும்.. “இவங்கதான் என்னோட சூப்பர் ஹீரோயினி”- ன்னு அவங்கதான் இந்த டீச்சர் “ராட்சசி” கீதாராணி.

    கேள்வி கேட்டுட்டு அப்படியே நிக்கிறவங்கள நாட்கள் நகர நகர மக்கள் மறந்துடுவாங்க. ஆனா யாரு செயல்ல அதைக் காட்டுறாங்களோ அவங்கள தான் வரலாறு பேசும். கட்டாயமா இந்த ராட்சசியையும் பேசும்.



    இதுல ராட்சசியா ஜோதிகா மேடமத் தவிர வேற யாரும் இவ்வளவு கச்சிதமா பண்ணிரமுடியாது, அது படம் பாக்கும் போது உங்களுக்கும் தெரியும். ஒரு கதைய தேர்ந்தெடுக்கும் போதும், அதை நடிக்கும் போதும் தனக்கு சமுதாயத்துல பொறுப்புணர்வு இருக்குன்னு முழுமையா நம்புறாங்க, அவங்க எப்பவும் ஜெயிச்சிட்டே தான் இருப்பாங்க. ராட்சசி கதைய கேட்டதுல இருந்து நிறைய ஹோம் ஒர்க் பண்ணாங்க, நிறைய டீச்சர்கிட்ட பேசுனாங்க. அவங்க டிரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பாடிலாங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன், “ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி.”

    தனியார் பள்ளி - அரசுப்பள்ளிங்கிற ஏற்றத்தாழ்வு உருவாகியிருக்கவேக் கூடாது, அந்த எண்ணத்தை மாத்தணும்னு போராடுறவங்க தான் இந்த "ராட்சசி" கீதாராணி. இந்த நோக்கத்தோட எத்தனையோ ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க தனி ஆட்களா, அரசுப் பள்ளிய உயர்த்த போராடிகிட்டு இருக்காங்க, அதை வலிமையாக பேச இந்த மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும்.
    இயக்குனர் சிம்பு தேவன், இயக்குனர் ‌ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக விமர்சித்துப் பேசிய வடிவேலுக்கு சமுத்திரகனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வடிவேலு தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். பிரெண்ட்ஸ் திரைப்படம் குறித்தும், அதில் நேசமணி கதாபாத்திரம் உருவான விதம் குறித்தும் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

    சமீபகாலங்களில் வடிவேலு நடிப்பில் புதிய படங்கள் வெளிவராததற்கான காரணம் என்ன அன்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வடிவேலு இயக்குனர் சிம்பு தேவன், இயக்குனர் ‌ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

    அவரது பேட்டிக்கு, பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவியாளராகப் பணியாற்றி, பின்னர் மூடர் கூடம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான நவீன், வடிவேலு பேட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது சமுத்திரகனி தனது ட்விட்டர் பக்கத்தில், வடிவேலுவின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ’அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன்.



    இயக்குனர்கள் ‌ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது. சிம்புவின் படைப்பாற்றல் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குனர்களை அவமதிக்காதீர்கள்’ என்று அவர் டுவீட் செய்துள்ளார்.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படக்குழுவின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

    இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


    இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
    திருப்பனந்தாள் அருகே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதி குறித்து ஆய்வு நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம்.

    தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறினார். இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



    எனவே இயக்குனர் ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மகேஸ்வரனிடம் புகார் அளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து திருப்பனந்தாள் போலீசார், இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஹெட் மீடியா ஒர்க்ஸ் விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிஷாந்த் நடிப்பில் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ உருவாகியுள்ளது.
    ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி ‘பன்றிக்கு நன்றி சொல்லி’.

    இத்திரைப்படத்தின் கதைகளம் தமிழ் திரையுலகில் அரிதான புதையல் வேட்டையை மையமாக கொண்டது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை. பலர் இந்த சிலையை தேடிக் கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது. இதை தெரிந்து கொண்ட இருவர், நாயகனை துரத்த, சுவராசியமான பல திருப்பங்களுக்கு பின்னர் அவர்கள் அந்த சிலையை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

    முழுக்க முழுக்க நகைச்சுவையோடு ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கப்பட்டு இருக்கிறார் இயக்குனர் பாலா அரன். ஒரு நல்ல கதைகளத்திற்கு உரிய வரவேற்பையும், ஆதரவையும் தமிழ் திரையுலகம் எப்போதும் தந்து வந்திருக்கிறது என்பதால் இப்படம் முழுவதுமே புதுமுகங்கள் வலம் வருகின்றனர். 



    இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு ராம்-சதீஷ் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எடிட்டிங்கில் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    ஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், பாலா அரனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை, ஓம் பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ பிலிம்ஸ் வெளியிடுகிறது. 
    ஜேம்ஸ் ம்கவாய், ஷோபி டர்னர் நடிப்பில் சைமன் கின்பெர்க் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் எக்ஸ் மென் - டார்க் பீனிக்ஸ் படத்தின் விமர்சனம்.
    நாயகி ஷோபி டர்னருக்கு சிறு வயதில் அதித சக்தி இருக்கிறது. இந்த சக்தி அவரது பெற்றோர் இறக்க காரணமாக அமைகிறது. ஷோபி மியூட்டன்ஸ் இனத்தை சேர்ந்தவர் என்று மியூட்டன்ஸ்களுக்காக பள்ளி நடத்தும் சார்லஸ், அவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வளர்க்கிறார்.

    இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்லும் மனிதர்கள் எதிர்பாராத விதமாக ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இவர்களை காப்பாற்ற நாசா, சார்லஸின் உதவியை நாடுகிறது. விண்வெளியில் உள்ள மனிதர்களை காப்பாற்ற எக்ஸ்-மென் குழுவில் உள்ள சிறந்தவர்களை அனுப்புகிறார்கள். 



    அப்போது ஷோபி டர்னரும் எக்ஸ் மென் குழுவில் செல்கிறார். அங்கு சூரிய புயல் ஷோபி தாக்குகிறது. இதிலிருந்து ஷோபிக்கு அளவுகடந்த சக்தி கிடைக்கிறது. இந்த சக்தியை கட்டுப்படுத்த முயலும் போது, மற்றவர்களை காயப்படுத்துகிறாள். மேலும் ஷோபிக்கு இருக்கும் சக்தியை அடைய வேற்று கிரகத்தினர் முயற்சி செய்கிறார்கள். 

    இறுதியில் எக்ஸ் மென் குழு, ஷோபியை வேற்று கிரகத்தினரிடம் இருந்து காப்பாற்றினார்களா? ஷோபி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.



    கதையின் மையப்புள்ளியான ஜீன் க்ரேவாக வரும் ஷோபி டர்னர் அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர் கேம் ஆப் த்ரோன்ஸ் சீரியஸில் சன்சாவாக வந்து ரசிகர்களை ஈர்த்தவர். ஷோபியின் ரசிகர்களும் இப்படம் விருந்தாக அமைந்திருக்கிறது.

    படம் ஆரம்பம் முதல் இறுதிவரை திரைக்கதை மிக வேகமாக செல்கிறது, சண்டை காட்சிகளில் சுவாரசியங்கள் குறையவில்லை. தெளிவான திரைக்கதை என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் படக்கதை அமைந்திருக்கிறது.



    எக்ஸ்-மென் படத்தின் முந்தய பாகங்களை பார்க்காமல் இருக்கும் மக்களுக்கும் இந்த பாகம் தெளிவாக புரியும். இந்த பாகம் முந்தய பாகத்தின் தொடர்ச்சி இல்லை என்பதால், முதல் முறை எக்ஸ்-மென் படத்தை பார்ப்பவர்களுக்கு இந்த பாகம் பிடிக்கும். 

    மொத்தத்தில் ‘எக்ஸ்-மென் - டார்க் பீனிக்ஸ்’ எக்ஸலண்ட்.
    பிரபல பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார், அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக்கில் இருந்து விலகி இருக்கிறார்.
    அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான படம் வீரம். சிவா இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை இந்தியில் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ’லொல்’ என்ற பெயரில் பர்கத் சாம்ஜி இயக்குகிறார். அஜித் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அக்‌‌ஷய் குமார் ஒப்பந்தமான நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் படக்குழுவில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது ராஸி படத்தின் மூலம் பிரபலமான விக்கி கவு‌ஷல் இணைந்துள்ளார்.



    அக்‌‌ஷய் குமார் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லக்‌ஷ்மி பாம் படத்தில் நடித்துவருகிறார். காஞ்சனா படத்தின் ரீமேக்காக அப்படம் உருவாகிறது. இதுதவிர சூர்யாவன்ஷி, தி எண்ட் ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
    நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், விமல், ரமேஷ் கண்ணா, ஆர்த்தி ஆகியோரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந்தேதி (ஞாயிறு) தேர்தல் நடைபெறுகிறது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. செயலாளராக வி‌ஷல், பொருளாளராக கார்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இவர்களை எதிர்த்து பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி களம் இறங்கியுள்ளது. செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்தும் போட்டியிடுகின்றனர். 2 அணிகளுக்கு இடையே கடும் போட்டி உருவாகி இருப்பதால் இந்த தேர்தலில் பரபரப்பு நிலவுகிறது.

    தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 90 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது நடிகர் விமல், ரமேஷ்கண்ணா, நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகிய 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    சந்தா தொகையை சரியாக கட்டாத காரணத்தால் இவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரும் பாக்கியராஜ் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தனர்.
    நடிகர் சங்க நிலம் விற்பனை தொடர்பான வழக்கில் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நடிகர் விஷால் ஆஜராகி ஆவணங்களை சமர்பித்தார்.
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு காஞ்சீபுரம் மாவட்டம், வேங்கட மங்கலம் கிராமத்தில் 26 சென்ட் இடம் வாங்கப்பட்டது. இந்த இடத்தை முன்பு தலைவராக இருந்த சரத்குமாரும், பொதுச் செயலாளராக இருந்த ராதாரவியும் சங்கத்துக்கு தெரியாமல் விற்றதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தபிறகு சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் இதுகுறித்து காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரத்குமார், ராதாரவி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நடிகர் சங்கத் தலைவர் நாசர் காஞ்சீபுரம் போலீசில் தாக்கல் செய்தார்.



    இதைத்தொடர்ந்து நடிகர் விஷாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசார் அவருக்கு கடந்த மாதம் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் விஷால் படப்பிடிப்பு இருப்பதால் வேறொரு நாளில் ஆஜராவதாக கடிதம் மூலம் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் நடிகர் விஷால் இன்று மதியம் இந்த வழக்கு தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அப்போது குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தென்னரசு அங்கு இல்லை. இதைத்தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் விஷால் நிலம் தொடர்பான ஆவணங்களை கொடுத்தார்.
    ×