search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பா.ரஞ்சித்துக்கு எச்சரிக்கை விடுத்த கருணாஸ்
    X

    பா.ரஞ்சித்துக்கு எச்சரிக்கை விடுத்த கருணாஸ்

    ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை பற்றி பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை கருணாஸ் வெளியிட்டுள்ளார்.
    கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு, ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம்.

    தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறினார். இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதற்கு நடிகரும், சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ், அவருடைய கருத்து எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



    அதில், ‘எங்கள் நிலங்களை பறித்தார்! பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்! பெண்களை வேசியாக்கினார்! இப்படி வரலாறு தெரியாத கட்டுக்கதைகளெல்லாம் உங்கள் தேவைகளுக்கு ஓர் மாபெறும் இன வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்!

    உங்களை போல் முன்னோரின் வரலாற்றை கற்காமல் கதைவிடாதீர்கள். இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம்! தமிழர் மரபின் உச்சம்! நீங்களும் இந்த தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள்! அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியை போல் எதிர்வரிசையில் நின்று கொக்கரிக்காதீர்! தமிழர் முன்னோர்களின் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! இது அறிவுரை கலந்த எச்சரிக்கை!

    இவ்வாறு கருணாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×