என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், இந்தி திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் தமன்னா முத்த காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவிக்கிறாராம்.
தமன்னா சமீபகாலமாக படுகவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதிக்கிறார். அப்படியே உதட்டு முத்த காட்சியிலும் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறோம் என்று பல தயாரிப்பாளர்கள் ஆசை காட்டியும் தமன்னா ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார்.
தேவைப்பட்டால் லிப் டு லிப் கிஸ் காட்சிக்கு மட்டுமல்ல நிர்வாணமாகவும் நடிக்கத் தயார் என்று சிலர் பேட்டி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வேடங்களை துணிந்து நடிக்கவும் செய்கின்றனர். அதில் விதிவிலக்காக இப்போதும் தனது இமேஜை தக்க வைத்து வருகிறார் தமன்னா.

சமீபத்தில் பிரபல ஹீரோ படமொன்றில் தமன்னாவை லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க கேட்டபோது எவ்வளவு சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் அதுக்கு மட்டும் நான் சம்மதிக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார்.
நீண்ட நாட்களாக போட்டோ ஷூட் நடத்தாமலிருந்த தமன்னா தற்போது அசத்தலான கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதைப்பார்த்து ரசிகர்கள் சூப்பர் என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வரும் குஷ்பு, மீண்டும் சினிமாவில் நடிக்குமாறு ரசிகர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுள்ளார்.
தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. சின்னத்தம்பி, அண்ணாமலை, பாண்டியன், சிங்காரவேலன் என வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி ஆனார். இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட இவர், அடுத்து அரசியலிலும் களம் இறங்கினார்.
தற்போது காங்கிரசின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று டுவிட்டரில் பகிர்ந்த ஒரு பதிவில் மீண்டும் படங்களில் நடிக்கலாமா, வேண்டாமா என்று ரசிகர்களிடம் கேட்டார்.
அந்த டுவிட்டில் ‘உங்களின் அறிவுரை தேவை நண்பர்களே... நான் மீண்டும் படங்களில் நடிக்கட்டுமா? கூட்டத்தில் ஒருத்தியாக இல்லாமல் சுவாரசியமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். என் மூத்த மகள் கல்லூரிக்கு சென்று விட்டதால் தற்போது நேரம் உள்ளது...நடிக்கட்டுமா?’ என்று கேட்டு இருந்தார்.

குஷ்புவின் டுவிட்டை பார்த்தவர்கள் குஷ்பு கண்டிப்பாக மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்றனர். தனக்கு இப்படி அமோக ஆதரவு இருப்பதை பார்த்த குஷ்பு மீண்டும் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார். கஸ்தூரி, மனோபாலா போன்றோர் குஷ்பு மீண்டும் நடிக்க ஆதரவு கொடுத்துள்ளனர்.
ரசிகர்கள், ‘மீண்டும் நடிக்க வந்தாலும் முக்கியத்துவமான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும். அம்மா, அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இணைய தொடர்களில் நடிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். சில ரசிகர்கள், ‘சினிமாவில் நடித்தாலும் அரசியலை விட்டு விலக வேண்டாம்’என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரபல பாலிவுட் இயக்குனர், அடுத்ததாக தமிழ் திரையுலகில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முதல் சமஸ்கிருத படமான அஹம் பிரம்மாஸ்மிமை இயக்கியவர் பிரபல இந்தி இயக்குனர் ஆசாத். பாம்பே டாக்கீஸ் நிறுவனம், அடுத்து ஆசாத்துடன் இணைந்து தமிழில் தயாரிக்கும் படம் ராஜ்யவீரன்.
இந்த படத்தில் ஆசாத், ருகி சிங், அனுஷ்கா, ஜேமி லீவர், ஆர்யன் வைத்திய, அச்சிந்த் கொர், ராகேஷ் பேடி, மாஸ்டர் அக்சய் பட்சு, மோசின் கான், அதுல் ஸ்ரீவாஸ்தவ, விவேக் வாசுவாணி, நசிர் ஜானி, வாக்கர் கான், டீப் ராஜ் ரான, அபை பார்கவ், ராசா முரத், மனிஷ் சவுத்தரி மற்றும் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்திய தேசியவாத கொள்கையை ஆயுதமாக பயன்படுத்தி எதிரிகளை கையாளும் இந்த படம், அடிமைத்தனத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும். தேசப்பற்றை போற்றும் வகையில் இப்படம் உருவாகிறது.
தெலுங்கு திரையுலகில் முதன்முறையாக கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். தற்போது மீண்டும் அவர் தமிழில் பொன்னியின் செல்வனைத் தழுவி மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து அவர் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். தமிழில் 5 படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் தெலுங்கில் ஒரு படத்தில் கூட கதாநாயகியாக நடிக்கவில்லை. ராவோயி சண்டமாமா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

தற்போது அவர் தெலுங்கில் முதன்முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை கொரட்டல சிவா இயக்க உள்ளார். சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தியத் திரையுலக நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
இந்தப் படம் நிறைவடைந்ததும் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
‘ராட்சசி’ படத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ‘36 வயதினிலே’படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்து ‘மகளிர் மட்டும்’, ’நாச்சியார்’, ’செக்கச்சிவந்த வானம்’ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ‘ராட்சசி’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக `குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ’ஜாக்பாட்’ படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தையும் சூர்யா தயாரிக்கிறார். இப்படத்தை ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்குகிறார்.
Jo’s next!! Proud to launch... #PonMagalVandhal#KBhagyaraj sir @rparthiepan sir#Pandiarajan sir #PratapPothen sir
— Suriya Sivakumar (@Suriya_offl) July 15, 2019
@fredrickjj@rajsekarpandian@ramji_ragebe1@govind_vasantha@AntonyLRuben@Amaranart@poornimaRamasw1@thanga18@proyuvraaj@2D_ENTPVTLTDpic.twitter.com/cJZ2Hq86ts
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
தெலுங்கு "அர்ஜூன் ரெட்டி" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "கபீர் சிங்" படம், வெளியான 4 வாரத்தில் 250 கோடி குவித்து வசூல் சாதனை படைத்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி இந்தப் படம் இந்தியில் ’கபீர் சிங்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வந்துள்ளது. இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது.

கடந்த மாதம் 21ம் தேதி வெளியான இந்தப் படம் 3 வது நாளில் 50 கோடி, 5வது நாளில் 100 கோடி, 9வது நாளில் 150 கோடி, 13வது நாளில் 200 கோடி, 23வது நாளில் 250 கோடி என வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்திய அளவில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் கபீர் சிங் படம் 10வது இடத்திற்குள் நுழைந்துள்ளதால், படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த ’ஸ்பைடர்’ இயக்கிய முருகதாஸ், மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியை வைத்து "தர்பார்" படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார் ரஜினி. மும்பையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார்.
பிரதீக் பாபர், சுனில் ஷெட்டி, நவாப் ஷா ஆகிய மூவரும் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தர்பார் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த ’ஸ்பைடர்’ இயக்கிய முருகதாஸ், அடுத்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் முன்னோட்டம்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் ’கடாரம் கொண்டான்’.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். அக்ஷரா ஹாசன், அபி நாசர், மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யூ/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
சினிமா தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று நடந்தது, இதில் கமல் வாக்களித்தார்.
சினிமா தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று நடந்தது. சென்னை தியாகராயநகரில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியும், தேர்தல் அதிகாரியுமான பாலசுப்பிரமணியம் முன்னிலையில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தலைவர், செயலாளர், பொருளாளர், இரண்டு துணை தலைவர்கள், இரண்டு இணை செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் ஷோபி பவுல்ராஜ் மற்றும் தினேஷ் போட்டியிட்டனர்.
துணை தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் லலிதா ஷோபி மற்றும் சுஜாதா போட்டியிட்டனர். நடிகர்கள் கமல்ஹாசன், சீமான் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் வாக்களித்தனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நானி, அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு 'கேங் லீடர்' என பெயரிடப்பட்டுள்ளது.
’நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார் நானி. சமீபத்தில் இவர் நடிப்பில் ஜெர்சி படம் வெளியானது. தற்போது இவர் 'கேங் லீடர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஜெர்சி படத்திற்கு இசையமைத்திருந்த அனிருத், நானியின் ’கேங் லீடர்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
விக்ரம் கே குமார் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 15ந் தேதியும், முதல் பாடல் ஜூலை 18ந் தேதியும், டீசர் ஜூலை 24ந் தேதியும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இந்த படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் நானி: நாங்கள் சந்தித்தோம், நாங்கள் தயார், நாங்கள் தான் கேங், நான் தான் கேங் லீடர் என பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் 3 வில்லன்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு திரைக்கதையில் வலுவான எதிர்ப்பு கொடுக்க பல வில்லன்களை தயார் செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். பல பாலிவுட் நடிகர்கள் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
பாலிவுட்டில் இஷாக், பாஹி 2 ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர் தர்பார் படத்தில் இணைந்தார். சுனில் ஷெட்டி, பிரதீக் பாபரின் தந்தை வேடத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார். இவர்களைத் தொடர்ந்து நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார்.

டைகர் ஸ்ண்டாகை படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் நவாப் ஷா. அனிருத் இசையில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி ஹிட் அடித்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தர்பார் திரைக்கு வரவுள்ளது.
கங்கனாவை பற்றி மறைமுகமாக கருத்து தெரிவித்ததால் கோபம் அடைந்த கங்கனாவின் தங்கை ரங்கோலி நேரடியாக டாப்சியை தாக்கி பதிலடி தந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவுக்கு சென்று இருக்கும் டாப்சி வித்தியாசமான வேடங்களில் நடித்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் டாப்சியை நடிகை கங்கனாவின் தங்கை ரங்கோலி விமர்சித்து இருக்கிறார்.
‘நடிகை டாப்சி எனது அக்கா கங்கனா ரணாவத் நடிப்பை அப்படியே காப்பியடித்து அவரைப் போலவே நடிக்கிறார். டாப்சிக்கு பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் கங்கனாவைவிட குறைந்த அளவே சம்பளம் வாங்குகிறார். அத்துடன் கங்கனாவை அச்சு அசலாக மிமிக்ரி செய்கிறார். இதில் டாப்சியின் ஒரிஜினாலிட்டி எதுவும் இல்லை’ என பகிரங்கமாக திட்டி தீர்த்திருக்கிறார் ரங்கோலி.
சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த டாப்சி, கங்கனாவை பற்றி மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தாராம். அதைப்பார்த்து கோபம் அடைந்த கங்கனாவின் தங்கை ரங்கோலி நேரடியாக டாப்சியை தாக்கி பதிலடி தந்திருக்கிறார்.






