என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நானி, அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு 'கேங் லீடர்' என பெயரிடப்பட்டுள்ளது.
    ’நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார் நானி. சமீபத்தில் இவர் நடிப்பில் ஜெர்சி படம் வெளியானது. தற்போது இவர் 'கேங் லீடர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஜெர்சி படத்திற்கு இசையமைத்திருந்த அனிருத், நானியின் ’கேங் லீடர்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். 

    விக்ரம் கே குமார் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 15ந் தேதியும், முதல் பாடல் ஜூலை 18ந் தேதியும், டீசர் ஜூலை 24ந் தேதியும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    நானி

    மேலும் இந்த படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் நானி: நாங்கள் சந்தித்தோம், நாங்கள் தயார், நாங்கள் தான் கேங், நான் தான் கேங் லீடர் என பதிவிட்டுள்ளார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் 3 வில்லன்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
    தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு திரைக்கதையில் வலுவான எதிர்ப்பு கொடுக்க பல வில்லன்களை தயார் செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். பல பாலிவுட் நடிகர்கள் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

    பாலிவுட்டில் இஷாக், பாஹி 2 ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர் தர்பார் படத்தில் இணைந்தார். சுனில் ஷெட்டி, பிரதீக் பாபரின் தந்தை வேடத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார். இவர்களைத் தொடர்ந்து நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார்.

    நவாப் ஷா, பிரதீக் பாபர், சுனில் ஷெட்டி

    டைகர் ஸ்ண்டாகை படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் நவாப் ஷா. அனிருத் இசையில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

    இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி ஹிட் அடித்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தர்பார் திரைக்கு வரவுள்ளது.
    கங்கனாவை பற்றி மறைமுகமாக கருத்து தெரிவித்ததால் கோபம் அடைந்த கங்கனாவின் தங்கை ரங்கோலி நேரடியாக டாப்சியை தாக்கி பதிலடி தந்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவுக்கு சென்று இருக்கும் டாப்சி வித்தியாசமான வேடங்களில் நடித்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் டாப்சியை நடிகை கங்கனாவின் தங்கை ரங்கோலி விமர்சித்து இருக்கிறார். 

    ‘நடிகை டாப்சி எனது அக்கா கங்கனா ரணாவத் நடிப்பை அப்படியே காப்பியடித்து அவரைப் போலவே நடிக்கிறார். டாப்சிக்கு பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் கங்கனாவைவிட குறைந்த அளவே சம்பளம் வாங்குகிறார். அத்துடன் கங்கனாவை அச்சு அசலாக மிமிக்ரி செய்கிறார். இதில் டாப்சியின் ஒரிஜினாலிட்டி எதுவும் இல்லை’ என பகிரங்கமாக திட்டி தீர்த்திருக்கிறார் ரங்கோலி.

    ரங்கோலி, கங்கனா 

    சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த டாப்சி, கங்கனாவை பற்றி மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தாராம். அதைப்பார்த்து கோபம் அடைந்த கங்கனாவின் தங்கை ரங்கோலி நேரடியாக டாப்சியை தாக்கி பதிலடி தந்திருக்கிறார்.
    விக்ரம் பிரபு ஜோடியாக அசுரகுரு படத்தில் நடித்துள்ள மகிமா நம்பியார், இப்படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார்.
    விக்ரம் பிரபு ஜோடியாக அசுரகுரு படத்தில் நடித்துள்ள மகிமா நம்பியார் கூறியதாவது: ‘இதில் நான் துப்பறியும் பெண் கேரக்டரில் நடித்துள்ளேன். விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தது சவுகரியமாக இருந்தது. படத்துக்காக பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன். 

    ஓரிரு காட்சியில் ‘தம்’ அடிப்பது போன்று இடம்பெறுகிறது. சிகரெட் பிடிக்கும்போது சிரமமாக இருந்தது. புகையை என் தொண்டைக்கு கீழே இறங்க அனுமதிக்கவில்லை. இதனால் இருமல் வராமல் தடுக்க முடிந்தது. 

    விக்ரம் பிரபு, மகிமா நம்பியார்

    அடுத்து, சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா நடிக்கும் மகாமுனி படத்தில் பத்திரிகை நிருபராக வருகிறேன். கேரளாவில் தபால் மூலம் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். படித்துக்கொண்டே சினிமாவில் நடிப்பது சிரமமாக இல்லை’ என்றார். 
    தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்து வரும் பிரபல நடிகை, நடிகர் ஆரவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க முதலில் மறுத்து பின்னர் ஒத்துக்கொண்டாராம்.
    தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் நிகிஷா பட்டேல். இவர் தற்போது ஆரவிற்கு ஜோடியாக `மார்க்கெட் ராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

    இந்த படத்தில் ஒரு காட்சியில் ஆரவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சி உள்ளது, அதை நிகிஷா பட்டேலிடம் இயக்குனர் கூறுகையில் முதலில் நடிக்க மறுத்த நிகிஷா பட்டேல், இயக்குனர் முழுக்கதையையும் நிகிஷா பட்டேலிடம் கூறிய பிறகு அந்த காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

    ஆரவ், நிகிஷா பட்டேல்

    இதைப்பற்றி நிகிஷா பட்டேலிடம் கேட்டபோது இந்த காட்சி படத்தில் மிகவும் முக்கியமான காட்சி என்பதால் முத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் இந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன். 

    மற்றபடி வல்கராவோ, முகம் சுளிக்க வைக்கும் காட்சியாக இருக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். நான் சினிமா துறையை மிகவும் விரும்பி வந்தேன் அதோடு என்னோடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவைப்படுகிறதோ அதை நிச்சயம் செய்வேன் என்று கூறினார்.
    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் சமந்தா, தற்போது புதிய அவதாரம் எடுக்கும் முடிவில் இருக்கிறார்.
    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. திருமணம் ஆன பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஓ பேபி’ திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், இவர் அடுத்ததாக இணையதள தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இணையதள தொடர்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

    சமந்தா

    அந்த வகையில் பிரசன்னா, பாபிசிம்ஹா, பரத், ரம்யாகிருஷ்ணன், ராணா உள்பட சில முன்னணி நடிகர்களே தற்போது இணையதள தொடர்களில் நடித்து வருகின்றனர். 
    ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஆடை’ படத்தின் முன்னோட்டம்.
    ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

    பெண் ஒருவர் ஆடையின்றி ஓர் இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. 

    அமலாபால்

    ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார். ஆதலால் இப்படத்திற்கு  தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. 
    புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும் என கூறினார்.
    அகரம் பவுண்டேசன் சார்பில், பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கும் விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:- தகுதித்தேர்வு, நுழைவுத்தேர்வில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது. ஓரே ஒரு ஆசிரியர் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரி அல்ல. ஒரு ஆசிரியர் உள்ள பள்ளியை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள்.

    சமமான கல்வியை கொடுக்காமல் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும். புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். 30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக்கொள்கை. ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும். 5ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தினால் இடை நிற்றல் அதிகரிக்கும். 6.5 கோடி மாணவர்கள்  பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லை. 

    பரிசளிப்பு விழா

    ஆசிரியர் இல்லாமல் படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள். கலை அறிவியல் கல்லூரியில் சேர புதிய கல்விக்கொள்கையில் நுழைவுத்தேர்வு உள்ளது. கிராமப்பகுதிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகள் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது. 50 ஆயிரம் கல்லூரிகளை 12 ஆயிரம் கல்லூரிகளாக குறைக்க முயற்சி நடக்கிறது.  கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைத்தால் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும்.

    60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம்.  10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகளை மூடுவது சரியல்ல என கூறினார். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி மற்றும் கல்வியாளர் வசந்திதேவி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
    சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, எலிசா, சார்லி, ஆனந்த் ராஜ், நடிப்பில் வெளியாகி இருக்கும் கூர்கா படத்தின் விமர்சனம்.
    சென்னையில் வாழக்கூடிய கூர்கா பரம்பரையில் பிறந்தவர் யோகி பாபு. போலீசாக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் இவர் போலீஸ் தேர்வுக்காக செல்கிறார். உடற்தகுதி இல்லாததால் வெளியேற்றப்படுகிறார். இவரைப் போலவே அங்கு தேர்வுக்காக வந்த அண்டர்டேக்கர் என்னும் நாயும் எதிலும் தேர்ச்சி பெறாததால் வெளியேற்றப்படுகிறது. இதிலிருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாகி விடுகிறார்கள். இந்த சூழலில் மனோபாலா நடத்தக்கூடிய செக்யூரிட்டி சர்வீசில் வேலைக்கு சேர்கிறார் யோகிபாபு.

    கூர்கா

    அவரை அமெரிக்க தூதரான நாயகி எலிசா வீட்டில் செக்யூரிட்டியாக போடுகிறார் மனோபாலா. நாயகியை கண்டவுடன் காதல் வயப்படுகிறார் யோகிபாபு. இதனை அறிந்த மனோபாலா, யோகி பாபுவை வணிக வளாகத்திற்கு இடமாற்றம் செய்கிறார். இதையடுத்து, நாயகியும் யோகி பாபு பார்ப்பதற்காக அடிக்கடி வணிக வளாகத்திற்கு வந்து செல்வதுமாக இருக்கிறார். இந்த சூழலில் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு உடைய ராஜ் பரத் தலைமையிலான கும்பல் வணிக வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். நாயகி மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை ராஜ் பரத் தலைமையிலான கும்பல் பணயக்கைதிகளாக பிடித்து வைத்து கொள்கிறது.

    எலிசா

    தகவலறிந்து போலீஸ் வணிக வளாகத்தை சுற்றி வளைத்தாலும் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இத்தகைய சூழலில் செக்யூரிட்டிகளான யோகிபாபு, சார்லி மற்றும் நாய் ஆகிய மூன்று பேரும் ராஜ் பரத் கும்பலிடம் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இவர்கள் அந்த கும்பலிடம் சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனரா? என்பது மீதிக்கதை. 

    படம் முழுக்க வரும் யோகிபாபு, காதல், காமெடி என கலக்கியிருக்கிறார். அமெரிக்க தூதராக வரும் நாயகி எலிசா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றியுள்ள சார்லி, நேர்த்தியான நடிப்பால் கவர்கிறார். 15 நிமிடமே படத்தில் வந்தாலும் காமெடியில் தெறிக்க விடுகிறார் ஆனந்த் ராஜ். யோகிபாபுவுடன் வரும் நாயும் சிறப்பாக நடித்துள்ளது.

    கூர்கா

    இயக்குனர் சாம் ஆண்டன், கூர்காக்கள் சந்திக்கும் இன்னல்களை கையாண்டுள்ள விதம் சிறப்பு. மற்றபடி காமெடியை நம்பி மட்டுமே படம் எடுத்துள்ளார். ஒருசில இடங்களில் காமெடி எடுபடவில்லை. குழந்தைகளை கவரும் வகையில் படம் எடுத்துள்ளார். ராஜ்பரத் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். ராஜ் ஆர்யனின் இசை சொல்லும்படி இல்லை. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ’கூர்கா’ காமெடி தர்பார்.
    வாரணம் ஆயிரம், வேட்டை, அசல், வெடி உள்ளிட்ட படங்களில் நடித்த சமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
    வாரணம் ஆயிரம், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. திருமணமான இவர் கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பமாக இருக்கும்போதும் கவர்ச்சி படங்களை எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த சமீரா ரெட்டி மும்பையில் உள்ள பீம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


    இதையடுத்து அவர் நேற்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்நிலையில் சமீரா தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, மகள் பிறந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’  படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. 

    விக்ரம்

    தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் நடித்துள்ள “கடாரம் கொண்டான்” திரைப்படம் வருகிற 19-ந் தேதி ரிலீசாக உள்ளது.
    டான் சான்டி இயக்கத்தில் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா, காங் நடிப்பில் உருவாகி இருக்கும் ’கொரில்லா’ படத்தின் விமர்சனம்
    நாயகன் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய 3 பேரும் நல்ல நண்பர்கள். இவர்களுடன் குரங்கும் இருக்கிறது. நாயகன் ஜீவா சிறு சிறு திருட்டு வேலைகளைச் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் வேலையிழந்த சதீஷ், நடிகராக வேண்டும் என்று இருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரும் உள்ளனர். இவர்கள் இருக்கும் வீட்டிற்கு கீழே மதன் குமார் குடியேறுகிறார். 

    ஜீவா, ஷாலினி பாண்டே

    ஊரில் விவசாயம் செய்ய முடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முயலும் மதன் குமாரை நண்பர் ஒருவர் காப்பாற்றி, சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். விவசாயம் அழிந்து கொண்டு வருகிறதே என்று மிகுந்த வருத்தத்தோடு இருக்கும் இவர், பணம் சம்பாதிக்க வழி தேடிக் கொண்டிருக்கிறார். 

    இவர்கள் நால்வருக்கும் பணத்தேவை அதிகரிக்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் 4 பேரும் குரங்குடன் சேர்ந்து வங்கியை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்கள். இதற்கு உண்டான திட்டங்கள் தீட்டி வங்கியில் கொள்ளை அடிக்க செல்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது இவர்களுடன் வந்த குரங்கு அபாய பட்டனை அழுத்தி விடுகிறது. போலீஸ் அவர்களை சுற்றிவளைக்கிறது. இவர்கள் போலீசிடம் இருந்து தப்பித்தார்களா? பணத்தை கொள்ளையடித்தார்களா? என்பதே மீதிக்கதை. 

    ஜீவா, ஷாலினி பாண்டே

    படத்தில் ஜீவா மிகவும் துடிதுடிப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் பழைய ஜீவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது. சதீஷ், விவேக் பிரசன்னா, விவசாயியாக வரும் மதன்குமார் என அனைவரும் அவர்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள் நாயகி ஷாலினி பாண்டேவிற்கு படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    நகைச்சுவை படம் என்றாலும், விவசாயிகளின் பிரச்சனைகளை வைத்து திரைக்கதை அமைத்து நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குநர் டான் சான்டி.  

    யோகிபாபு, சதீஷ்

    ராதாரவி, யோகிபாபு படத்தின் பிற்பாதியில் வந்தாலும், காமெடியால் அனைவரையும் கவர்கின்றனர். படம் ஜாலியாக சென்றாலும் அதில் விவசாய கடன் ரத்து குறித்து பேசிய விதம் நன்றாக இருந்தது. குருதேவின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். பின்னணி இசையும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. இருப்பினும் பாடல்கள் சுமார் ரகம் தான். ரூபனின் எடிட்டிங்கில் நேர்த்தி தெரிகிறது.

    மொத்தத்தில் ’கொரில்லா’ நகைச்சுவை விருந்து.
    ×