என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    டான் சான்டி இயக்கத்தில் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா, காங் நடிப்பில் உருவாகி இருக்கும் ’கொரில்லா’ படத்தின் விமர்சனம்
    நாயகன் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய 3 பேரும் நல்ல நண்பர்கள். இவர்களுடன் குரங்கும் இருக்கிறது. நாயகன் ஜீவா சிறு சிறு திருட்டு வேலைகளைச் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் வேலையிழந்த சதீஷ், நடிகராக வேண்டும் என்று இருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரும் உள்ளனர். இவர்கள் இருக்கும் வீட்டிற்கு கீழே மதன் குமார் குடியேறுகிறார். 

    ஜீவா, ஷாலினி பாண்டே

    ஊரில் விவசாயம் செய்ய முடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முயலும் மதன் குமாரை நண்பர் ஒருவர் காப்பாற்றி, சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். விவசாயம் அழிந்து கொண்டு வருகிறதே என்று மிகுந்த வருத்தத்தோடு இருக்கும் இவர், பணம் சம்பாதிக்க வழி தேடிக் கொண்டிருக்கிறார். 

    இவர்கள் நால்வருக்கும் பணத்தேவை அதிகரிக்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் 4 பேரும் குரங்குடன் சேர்ந்து வங்கியை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்கள். இதற்கு உண்டான திட்டங்கள் தீட்டி வங்கியில் கொள்ளை அடிக்க செல்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது இவர்களுடன் வந்த குரங்கு அபாய பட்டனை அழுத்தி விடுகிறது. போலீஸ் அவர்களை சுற்றிவளைக்கிறது. இவர்கள் போலீசிடம் இருந்து தப்பித்தார்களா? பணத்தை கொள்ளையடித்தார்களா? என்பதே மீதிக்கதை. 

    ஜீவா, ஷாலினி பாண்டே

    படத்தில் ஜீவா மிகவும் துடிதுடிப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் பழைய ஜீவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது. சதீஷ், விவேக் பிரசன்னா, விவசாயியாக வரும் மதன்குமார் என அனைவரும் அவர்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள் நாயகி ஷாலினி பாண்டேவிற்கு படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    நகைச்சுவை படம் என்றாலும், விவசாயிகளின் பிரச்சனைகளை வைத்து திரைக்கதை அமைத்து நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குநர் டான் சான்டி.  

    யோகிபாபு, சதீஷ்

    ராதாரவி, யோகிபாபு படத்தின் பிற்பாதியில் வந்தாலும், காமெடியால் அனைவரையும் கவர்கின்றனர். படம் ஜாலியாக சென்றாலும் அதில் விவசாய கடன் ரத்து குறித்து பேசிய விதம் நன்றாக இருந்தது. குருதேவின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். பின்னணி இசையும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. இருப்பினும் பாடல்கள் சுமார் ரகம் தான். ரூபனின் எடிட்டிங்கில் நேர்த்தி தெரிகிறது.

    மொத்தத்தில் ’கொரில்லா’ நகைச்சுவை விருந்து.
    ஆர்.மாதேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் "சண்டகாரி - தி பாஸ்” திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.
    ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் "சண்டகாரி - தி பாஸ்”. இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். பிரபு , சத்யன், கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர்,  உமா பத்மநாபன் மற்றும் பலர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். சூப்பர் ஹிட்டான மாவீரன் படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ”மை பாஸ்” என்ற படத்தை தழுவி இப்படம் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. அடுத்த கட்டமாக கொச்சின், கோவா, காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    ஒளிப்பதிவு - குருதேவ், இசை - அம்ரீஷ், பாடல்கள் - கபிலன் விவேக், எடிட்டிங் - தினேஷ், கலை- அய்யப்பன், நடனம் - அபீப், ஸ்டண்ட் - கனல் கண்ணன், திரைக்கதை, இயக்கம்- ஆர்.மாதேஷ். இவர், விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லட், விஜய்காந்த்  நடித்த அரசாங்கம், வினய் நடித்த மிரட்டல், திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர்.

    ஸ்ரேயா, ஆர்.மாதேஷ், விமல்

    இது வித்தியாசமான ஆக்‌ஷன் காமெடி படம். முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது என இயக்குனர் மாதேஷ் தெரிவித்துள்ளார்.
    தனராம் சரவணன் இயக்கத்தில் சமுத்திரகனி, சங்கவி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொளஞ்சி’ படத்தின் முன்னோட்டம்.
    சமுத்திரகனி, சங்கவி நடிப்பில் ‘மூடர்கூடம்’ நவீன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொளஞ்சி’. இப்படத்தை அறிமுக இயக்குனர் தனராம் சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நாசத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

    கொளஞ்சி

    ‘கொளஞ்சி’ என்ற 13-வயது சிறுவனை சுற்றி நடந்த உண்மை கதையை தழுவலாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவனை பற்றிய கதை என்றாலும், இப்படம் சிறுவர் படமில்லை என்று படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காற்றின் மொழி படத்தை தொடர்ந்து, ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராட்சசி' படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ளார். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக பாடம் நடத்தாமல் கதை புத்தங்கள் படிப்பது, செல்போனில் முடங்கி கிடப்பது, மாணவர்கள் சிகரெட் பிடிப்பது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. 

    அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது போதிய கவனம் செலுத்தாததால் அவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்விகளில் சேர முடியவில்லை என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. இந்த வசனமும், காட்சிகளும் உண்மையாக உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    ஜோதிகா

    வலைத்தளங்களில் அரசு பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் ஜோதிகாவை கண்டித்து பேசி வருகிறார்கள். ஜோதிகாவுக்கு ஆதரவாகவும் கருத்துகள் பதிவாகின்றன. இது சமூக வலைத்தளத்தில் விவாத பொருளாக மாறி இருக்கிறது. 
    செல்வசேகரன் இயக்கத்தில் விக்ராந்த், பசுபதி, கிஷோர், சூரி, அப்புகுட்டி, ரவிவர்மா நடிப்பில் உருவாகி இருக்கும் வெண்ணிலா கபடி குழு 2 படத்தின் விமர்சனம்.
    1989-ல் நடக்கக்கூடிய கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நாயகன் விக்ராந்த் சொந்தமாக ஆடியோ கடை வைத்திருக்கிறார்.  விக்ராந்த்தின் தந்தை பசுபதி அரசு பஸ் டிரைவராக இருக்கிறார். இவருக்கு கபடி மீது அலாதி பிரியம். இது விக்ராந்த்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இது போன்ற சூழலில் பக்கத்து ஊரைச் சேர்ந்த நாயகியை பார்த்தவுடனே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார் விக்ராந்த். 

    வெண்ணிலா கபடி குழு 2

    நாயகியின் தந்தை ரவி மரியா மிகவும் அன்பாக பார்த்துக் கொள்கிறார். மகள் காதலிப்பது தெரியவர, விக்ராந்த்தை கொள்வதற்கு ஆள் அனுப்புகிறார் ரவி மரியா. விக்ராந்த்தை கொல்ல வந்தவர்களை அடித்து துவம்சம் செய்து தந்தை பசுபதி மகனை மீட்டு செல்கிறார்.  இதையடுத்து தான் விக்ராந்த் தனது தந்தையின் மதிப்பை உணர்கிறார்.

    தந்தை பசுபதி ஒரு முன்னாள் கபடி வீரர் என்பதை தனது அம்மா மூலம் தெரிந்து கொள்ளும் விக்ராந்த். தன்னை கபடியில் சிறந்த வீரனாக ஆக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்கிறார் விக்ராந்த். விக்ராந்தை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் பசுபதி. 

    வெண்ணிலா கபடி குழு 2

    ஆனால் விக்ராந்த் சென்னைக்கு போகாமல் பசுபதியின் சொந்த ஊரான கணக்கன்பட்டிக்கு செல்கிறார். அங்கு பிரிந்து கிடக்கும் வெண்ணிலா கபடிக் குழுவினரை ஒன்றிணைத்து அவர்களிடம் இருந்து கபடி விளையாட கற்றுக்கொள்கிறார். இறுதியில் தந்தை வெற்றி பெற நினைத்த அணியை நாயகன் மோதி வெற்றி பெற்றாரா? நாயகியுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பது மீதி கதை 

    முதல்பாதியில் குடும்பம், காதல் என சுற்றி வரும் இளைஞனாகவும், பிற்பாதியில் தந்தையின் ஆசையை நிறைவேற்ற தீவிரமாக பயிற்சி எடுத்து கபடி விளையாடுவது என சிறப்பாக நடித்துள்ளார் விக்ராந்த். நாயகிக்கு பெரும் பங்கு இல்லாத போதும், வரும் காட்சிகளில் அழகால் ரசிக்க வைக்கிறார்.

    வெண்ணிலா கபடி குழு 2

    படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சூரி ஒரளவு காமெடி செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் முதல் பாகத்தை போன்று காமெடி இப்படத்தில் இல்லை. நாயகனின் தந்தையாக வரும் பசுபதி எதார்த்தமாக நடித்து மனதில் நிற்கிறார். குறிப்பாக தந்தை மகனுக்கு இடையிலான சென்டிமென்ட் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மற்றபடி படத்தில் ரவிமரியா அப்புகுட்டி என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    வெண்ணிலா கபடிக்குழு படம் கொஞ்சம் நீளமாக இருப்பது போல் தோன்றுகிறது. இயக்குனர் செல்வசேகரன் திரைக்கதையை சற்று மெருகேற்றி இருந்தால், படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். 80களில் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்றார் போல் இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் செல்வகணேஷ். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியின் கேமரா படத்திற்கு பலம் சேர்க்கிறது. 

    மொத்தத்தில் ’வெண்ணிலா கபடி குழு 2’  கலகலப்பில்லாத கபடிக்குழு
    ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1) திரைப்படம் வருகிற 26-ந் தேதி ரிலீசாக உள்ளது.
    சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `தில்லுக்கு துட்டு 2' படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1) என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். ஜான்சன்.கே இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தாரா அலிசா பெர்ரி நடித்துள்ளார்.

    இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் படத்தொகுப்பை கவனிக்க, ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

    ஏ1 பட போஸ்டர்

    இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1) படம் வருகிற 26-ந் தேதி திரைக்கு வருகிறது. இதேபோல், சந்தானம் நடித்துள்ள `சர்வர் சுந்தரம்', `ஓடி ஓடி உழைக்கணும்', `மன்னவன் வந்தானடி' உள்ளிட்ட படங்களும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.
    எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் 'கேப்மாரி' படத்தில் நடித்து வரும் ஜெய் மற்றும் அதுல்யா, அடுத்ததாக மற்றொரு படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
    எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் 'கேப்மாரி' படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக ஜெய் மற்றும் அதுல்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த படமாக உருவாகும் இதில், வைபவ்வின் சகோதரர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். 

    அதுல்யா, ஜெய்

    சாம் சிஎஸ் (இசை), ஜே.பி.தினேஷ் குமார் (ஒளிப்பதிவு), வல்லினம், காஷ்மோரா, ஜூங்கா, மான்ஸ்டர் புகழ் விஜே சாபு ஜோசஃப் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்த படம் மதுரை மற்றும் கேரளாவில் படமாக்கப்பட உள்ளது.
    தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த இயக்குனர் அமீர் மற்றும் ஜனநாதனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
    நடிகர் சங்கத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலும் தமிழ்த் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பாரதிராஜா தனது தலைவர் பதவியை ராஜி னாமா செய்ததை யடுத்து, தற்போது தலைவர் பதவிக்கான போட்டி அதிகரித்துள்ளது. இயக்குநர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில், தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி அணி மற்றும் அமீர் அணி போட்டியிட்ட நிலையில் அமீர் அணியின் இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கான அமீரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

    இயக்குனர்கள் சங்கம்

    அதே போல், அமீர் அணியின் சார்பிலே இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தாக்கல் செய்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சரியான காரணங்கள் சொல்லாததால் இன்று இயக்குனர் சங்கத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன், இன்று காலமானார்.
    அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன், இன்று அதிகாலை காலமானார். 

    63 வயதான இவர் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

    ரஜினியுடன் பா ரஞ்ஜித் மற்றும் அவரது தந்தை

    இதையடுத்து அவரது உடலுக்கு நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கலரப்பாக்கத்தில், இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.  
    மகாசிவன் இயக்கத்தில் ஹரி சங்கர், மோனிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’தோழர் வெங்கடேசன்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஹரி சங்கர். தாய் தந்தை இல்லாத இவர், சோடா தயாரித்து கடை கடையாக போடும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் நாயகி மோனிகா தனது அம்மாவுடன் தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் இருக்கக்கூடிய கவுன்சிலர் முதற்கொண்டு நாயகியை தவறாக பார்ப்பதை அறியும் நாயகன், நாயகி வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறார். இதற்கு நாயகி மறுப்பு தெரிவிக்கிறார். 

    தோழர் வெங்கடேசன்

    இந்த சூழ்நிலையில் நாயகியின் தாயார் இறந்து விடுகிறார். தாய் இல்லாததால் மற்றவர்கள் தன்னை தவறாக பார்க்கிறார்கள் என்பதை உணரும் நாயகி, விரக்தியில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது அந்த வழியாக வரும் நாயகன் நாயகியை காப்பாற்றி, தன்னுடன் தங்க வைக்கிறார். நாயகனுக்கு உதவியாக சோடா கம்பெனியில் பணிபுரிகிறார் நாயகி. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து வரும் நிலையில், நாயகனுக்கு அரசுப் பேருந்து மோதி இரண்டு கைகளையும் இழக்கிறார். நாயகனுக்கு ஏற்பட்ட விபத்திற்கு நஷ்டஈடு கேட்டு கோர்ட்டுக்கு செல்கிறார். 

    அங்கு பல வாய்தாக்களுக்கு பிறகு நாயகனுக்கு 20 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது. ஆனால் அரசோ நாயகனுக்கு உரிய நஷ்டஈடு தராமல் இழுத்தடிக்கிறது. நாயகன் மீண்டும் கோர்ட்டுக்கு செல்கிறார், அங்கு அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நாயகனிடம் ஒப்படைக்கின்றனர். உரிய தொகையை அரசு வழங்கிய பிறகு பஸ்சை பத்திரமாக திருப்பித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையடுத்து, அந்த பேருந்தை நாயகன் எப்படி பாதுகாத்தார்? அரசு பேருந்தை பத்திரமாக ஒப்படைத்து இழப்பீடு வாங்கினாரா? நாயகனும் நாயகியும் திருமணம் செய்து கொண்டார்களா? என்பதே மீதி கதை.   

    தோழர் வெங்கடேசன்

    நாயகன் இரண்டு கைகளும் இல்லாமல் மிகவும் திறம்பட நடித்திருக்கிறார். நாம் படத்தில் பார்க்கும் பொழுது கதாபாத்திரம் மட்டுமே தெரிகிறது, ஹரி சங்கர்  கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி மோனிகா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் இப்படத்தில் அவருக்கு நீண்ட வசனங்கள் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு அழகு பதுமையாக வரும் இவர் ரசிகர்களை கவர்கிறார்.

    இயக்குனர் மகாசிவன் பற்றி சொல்ல வேண்டும் என்றால் படத்தில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் பல சொல்லி இருப்பது மட்டுமல்லாமல், அரசு பேருந்துக்களால் வாழ்வாதாரத்தை இழந்து தன் கை கால் இல்லாத நிலையிலும் கோர்ட்டுக்கு சென்று இன்று வரையிலும் சரியான நிவாரணம் கிடைக்காமல் வாழ்க்கையை தொலைத்து அவதிப்படுபவர்களின் ஆவணங்களை மிக அழகாக சுட்டிக்காட்டி இருக்கிறார் இயக்குனர். 

    தோழர் வெங்கடேசன்

    மற்றபடி கவுன்சிலர், போலீஸ் ஏட்டு மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் நண்பர்கள் என அனைவரும் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். திரையில் பார்க்கும் பொழுது சில இடங்களில் சோர்வு ஏற்பட்டாலும் இந்த கதையானது இவ்வாறு வாழ்க்கையை தொலைத்து கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டும் என நம்பினால் இந்த படம் சிறப்பானதாகவே தோன்றும். இப்படத்தை தயாரிப்பாளர் தயாரிப்பதற்கு உதவியாக இருந்த சுசீந்திரனுக்கும் பாராட்டுக்கள். சகிஷ்னா இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. 

    மொத்தத்தில் ’தோழர் வெங்கடேசன்’ பார்க்க வேண்டிய படம்
    சந்துரு இயக்கத்தில் தீரஜ், துஷாரா, பிரதாயினி சுர்வா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் விமர்சனம்.
    ஹீரோ தீரஜிற்கும் ஹீரோயின் துஷாராவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் பேச்சிலர் பார்ட்டி கொடுக்க நண்பனின் வீட்டிற்கு செல்கிறார் தீரஜ். குடிப்பழக்கம் இல்லாத தீரஜிடம், போதை மருந்து குறித்து நண்பன் ஒருவன் விளக்குகிறான். அப்போது துஷாராவை வெறுப்பேற்றும் நோக்கில் நண்பனிடம் போதை மருந்தை வாங்கி போட்டோ எடுக்க முயல்கிறார் தீரஜ். எதிர்பாராத விதமாக போதை மருந்தை எடுத்து கொள்கிறான். 

    போதை ஏறி புத்தி மாறி

    இன்னொரு புறம், போதை மருந்து கடத்தல் தொடர்பாக பத்திரிக்கை நிருபர் பிரதாயினி சுர்வா செய்திகளை சேகரித்து வருகிறார். இதனை அறிந்த கடத்தல் கும்பலும் போலீசின் உதவியுடன் போதை மருந்து பற்றி எழுதும் பத்திரிக்கை நிருபரை மிரட்டி வழிக்கு கொண்டுவர பார்க்கிறார்கள். இந்த இரண்டு கதையும் கடைசியில் ஓரிடத்தில் இணைகிறது. போதை ஒருவரது வாழ்க்கையை எந்த அளவு பாதிக்கிறது? என்பதே மீதிக்கதை.

    போதை ஏறி புத்தி மாறி

    தீரஜ் அறிமுக நாயகன். அப்பாவி முகத்தோற்றம் கொண்ட கதாபாத்திரத்திற்கு அலட்டல் இல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பெரும்பகுதியில் வந்துள்ள இவர், அறிமுக நாயகன் என்ற பதற்றமின்றி நடித்துள்ளார். துஷாரா, பிராதாயினி இருவரும் படத்தில் 10 முதல் 15 நிமிடங்களே வந்தாளும் அழகால் ஈர்க்கின்றனர்.

    சந்துரு இயக்கத்தில் முதல் படம். தனித்துவமான திரைக்கதையை தேர்ந்தேடுத்து, அதை சரியாக செய்தும் முடித்திருக்கிறார். முதல் படத்திலேயே பல்வேறு திருப்பங்களுடன் திரைக்கதையை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார். 

    போதை ஏறி புத்தி மாறி

    படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டிற்குள் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு பிரேமிலும் வித்தியாசம் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். சில ஸ்பெஷல் எபெக்ட்களை கேமராவிலேயே செய்து காட்டி கண்களுக்கு விருந்தளிக்கிறார். கே.பி.யின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. 

    மொத்தத்தில் ’போதை ஏறி புத்தி மாறி’ நல்ல முயற்சி.
    சிந்துபாத் படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலி அடுத்ததாக முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
    கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் 'தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி' சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் அஞ்சலி நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர்கள் யோகிபாபு, ராமர் ஆகியோரும் நடிக்கின்றனர். முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக அவர்கள் நடிக்கிறார்கள்.

    இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ்

    அர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா - பிளையர்ஸ் மற்றும் ஷெரிப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.
    ×