என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கடந்த 1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தின் 2-ம் பாகம் 23 ஆண்டுகள் கழித்து உருவாக உள்ளது. லைகா நிறுவனம் இந்தப் படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.

    கடந்த ஜனவரி மாதம் பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு சில பிரச்னைகளால் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பிரச்னைகள் களையப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங்

    இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு, சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்க உள்ளார். அவர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தில் அவருக்கு வில்லனாக முன்னாள் எம்.பி. நடித்து வருகிறார்.
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் ஆகஸ்டு 30-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவர் சுதா கொங்காரா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் பட்டியல் தமிழிலிருந்து பாலிவுட், ஹாலிவுட் என நீள்கிறது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

    இணை தயாரிப்பாளராக குனித் மொங்கா இணைந்துள்ளார். இவர் சர்வதேச அளவில் விருதுகள் வென்ற பல படங்களின் இணைத் தயாரிப்பாளர் ஆவார். ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் கிரேக்பவல் படக்குழுவில் இணைந்துள்ளார்.

    சூர்யா, பரேஷ் ராவல்

    அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், இந்தி நடிகர் பரேஷ் ராவல் வில்லன் நடிகராக இணைந்துள்ளார். 80களில் இந்தித் திரையுலகில் அறிமுகமான பரேஷ் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். பரேஷ் ராவல் தேசிய விருது பெற்ற நடிகர். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த பரேஷ் ராவல், 2014 -2019 எம்பியாக பணியாற்றியவர்.
    ‘ஆடை’ படம் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா? என்று அமலாபாலுக்கு லட்சுமி ராமகிருஷணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    ‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். கடந்த 20-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    ஆடையின்றி நடித்த அமலாபாலின் துணிச்சலான நடிப்பையும் திரைத்துறை பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஆடை படம் குறித்த ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? என்று அமலாபால் மற்றும் படத்தின் இயக்குநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    லட்சுமி ராமகிருஷ்ணனின் டுவிட்டர் பதிவு


    இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- ஆடை படக்குழுவினருக்கு வாழ்த்துகள். படம் பார்க்கும்போது அமலாபாலின் கடின உழைப்பு படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? உங்களிடமும் படத்தின் இயக்குநரிடமும் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. இயக்குநராக நடிகராக அல்ல. ஒரு பெண்ணாகவும், தாயாகவும், சாதாரண பார்வையாளராகவும்” என்று கூறியுள்ளார்.
    பார்த்திபன், சரத் லோஹிதஸ்வா, அருண், அஜய், ஸ்ரவியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா படத்தின் விமர்சனம்.
    கே.ஆர்.மார்க்கெட்டை தன் வசமாக்கிக் கொண்டு தாதாவாக இருக்கிறார் பார்த்திபன். இந்த மார்க்கெட்டுக்கு தாதாவாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் சரத் லோஹிதஸ்வா. ஜெயில் இருக்கும் இவர் மகன் வெளியே வந்தவுடன் பார்த்திபனுடன் சண்டை போட்டு மார்க்கெட்டை கைப்பற்ற நினைக்கிறார்.

    பார்த்திபனை அழிக்க சரத்தின் மகன் ஜெயிலில் பலருடன் நட்பை ஏற்படுத்தி ஆள் சேர்க்கிறார். பார்த்திபனுக்கு வலது, இடது கைபோல் இரண்டு பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒரே பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது.

    கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா

    இந்நிலையில், சரத் லோஹிதஸ்வா பார்த்திபனை சண்டைக்கு அழைக்கிறார். இதை பார்த்திபன் எப்படி எதிர்கொண்டார்? கே.ஆர்.மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கன்னட மொழியில் வெளியான தாதா இஸ் பேக் என்ற படம், தமிழில் கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் தாதாவாக நடித்திருக்கும் பார்த்திபன், தனக்கே உரிய பாணியில் கிண்டல், நக்கல், நையாண்டியுடன் கலக்கியிருக்கிறார்.

    கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா 1

    தாதா சீட்டை அடைய நினைக்கும் சரத் லோஹிதஸ்வாவின் வில்லத்தனம் சிறப்பு. அருண், அஜய், ஸ்ரவியா ஆகியோர் புதுமுக என்பதால், தங்களால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

    தாதா கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் இப்படமும் பல திரைக்கதையின் சாயலுடன் இருக்கிறது. நாகேஷ்.வி.ஆச்சார்யாவின் கேமராவும், அனுப்செலின் - முஜிப் ரகுமான் இருவரும் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா’ சுமாரான தாதா.
    ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கமல்ஹாசன் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இயக்குநர் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து கமல் - சங்கர் கூட்டணியில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்தனர். போட்டோ ஷூட் முடிந்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் அதன் பிறகு அதனை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    கமல் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த வாரம் இது தொடர்பாக ரகுமானை சந்தித்திருக்கிறார் கமல். ‘கமலுடன் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என ரகுமான் பதிவிட்டு இருந்தார். கமலும் தலைவன் இருக்கின்றான் படத்தை உறுதி செய்தார்.

    கமல்ஹாசன்


    தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவ தாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. படத்தின் கதாநாயகன், வில்லன் என 2 வேடங்களுமே கமல்ஹாசன் தான்.

    அமைதிப்படை பாணியில் இந்த வேடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் தலைவன் இருக்கின்றான் படம் ஒரு சீரியசான அரசியல் கதை என்றும் சொல்கிறார்கள். கமலின் அரசியலுக்கு இந்த படத்தின் கதை பெரிதும் உதவும் என்பதால் தான் இந்த படத்தை தூசி தட்டி எடுத்துள்ளார் என்கிறார்கள்.
    இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிஸ்டர் லோக்கல். ராஜேஷ் இயக்கிய இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். கடந்த மே மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்த நிலையில் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் இபடத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம்.

    இயக்குனர் ராஜேஷ்


    ஹிப்ஹாப் ஆதி ஏற்கனவே மீசைய முறுக்கு, நட்பே துணை போன்ற படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடித்தாலும் இசை அமைப்பதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இசை அமைத்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரைக்கு வருகிறது. 
    மேயாத மான் படம் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் முதன்முதலாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
    ‘கடாரம் கொண்டான்’ படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படம் கிரைம் திரில்லர் பாணியில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    பிரியா பவானி சங்கர்

    மேயாத மான் படம் மூலம் அறிமுகமான பிரியா முதன்முதலாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகளுக்கு இடையே, விக்ரமுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.
    நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து புகைபிடிக்கும் புகைப்படம் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.
    நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 18-ந்தேதி மியாமியில் ஒரு சொகுசு கப்பலில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் கணவர் நிக் ஜோன்ஸ், தாய் மதுசோப்ரா ஆகியோரும் இருந்தனர். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது. இதனால் பிரியங்கா கிண்டல்களிலும் கேலிகளிலும் சிக்கியுள்ளார்.

    பிரியங்கா சோப்ராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்


    அந்த படங்களில் பிரியங்கா சோப்ரா சிகரெட் புகைப்பதும், நிக் ஜோன்சும், மது சோப்ராவும் சிகார் புகைப்பதும் தெரிகிறது. இதை தொடர்ந்து பிரியங்கா சோப்ராவை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பிரியங்கா சோப்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    அதில், தீபாவளிக்காக பட்டாசுகளை வெடிக்காமல் இனிப்புகளையும், அன்பையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும், பட்டாசுகளின் புகையால் ஆஸ்துமா நோயாளிகள் துன்புறுவதாகவும் தெரிவித்திருந்தார். அது மட்டும் அல்லாமல் தானே ஓர் ஆஸ்துமா நோயாளி எனவும், அதையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


    அதன்பின் தனது திருமண விழாவுக்காக ஏராளமான பட்டாசுகளை வெடித்து நகரம் முழுவதும் புகை மண்டலமாகும் வகையில் கொண்டாடினார் பிரியங்கா. அப்போது அவரது இரட்டை வேடத்துக்காக சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில், தான் ஓர் ஆஸ்துமா நோயாளி என கூறிவிட்டு சிகரெட் புகைப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதையும் சேர்த்து பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினரோடு புகைபிடிக்கும் படத்தை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.
    அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏ1’ படத்தின் முன்னோட்டம்.
    அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1). இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தாரா அலிசா பெர்ரி நடித்துள்ளார்.

    சந்தானம், தாரா அலிசா பெர்ரி


    இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் படத்தொகுப்பை கவனிக்க, ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
    முதலில் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து கீர்த்தி சுரேசை வைத்து படம் தயாரிக்க பிரபல இயக்குனர் ஒருவர் திட்டம் போட்டிருக்கிறார்.
    பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி, பேட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருக்கிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இவர் மேயாத மான் என்ற படத்தை தயாரித்து இருந்தார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். வேதாளம் சொல்லும் கதை படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இந்த படத்தை இயக்குகிறார். இன்னும் வெளியாகாத வேதாளம் சொல்லும் கதை படத்திலும் ஐஸ்வர்யாவே நாயகியாக நடித்துள்ளார். 

    இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

    இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் மற்றொரு படத்தையும் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    சமீபத்தில் தனுசை வைத்து மாரி 2 படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன், புதிய பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
    ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி, மாரி 2’ ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.



    இந்நிலையில், ஓபன் விண்டோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் பாலாஜி மோகன். இதன் மூலம் தயாரிக்கும் முதல் படத்தின் அறிவிப்பை நாளை வெளியிட இருப்பதாக பாலாஜி மோகன் கூறியிருக்கிறார்.
    சுவாதி கொலை வழக்கு அடிப்படையில் உருவான ‘நுங்கம்பாக்கம்’ படத்தை வெளியிட ஆட்சேபனை இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
    சென்னை:

    விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண் விஜய் நடித்த ‘ஜனனம்’ உள்பட பல படங்களை இயக்கியவர் டி.ரமேஷ் செல்வன், இப்போது ரவி தேவன் தயாரிப்பில் புது முகங்கள் மனோ, ஐரா நடிப்பில் ‘நுங்கம்பாக்கம்’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படம் வருகிற 28-ந்தேதி வெளியாக உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் நுங்கம்பாக்கம் திரைப்படத்தைப் பார்த்தார். பிறகு அங்கு இருந்த நிருபர்களிடம் பேசியதாவது:-

    ‘இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிற ஒரு கலை படைப்பாகும். இது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில், கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

    சுவாதி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த திரைப்படம், ‘சுவாதி கொலை வழக்கு’ என்கிற பெயரில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய சூழலில் நுங்கம்பாக்கம் என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளிவர அனைத்து அனுமதிகளையும், உரிமத்தையும் பெற்றிருக்கிறது.

    ஊர்பெயர்கள், நபர் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தோடு மாறுபடாமல் கதையோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் அண்மையில் காவல் துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அவரது நண்பர்களும் என்னை வந்து சந்தித்தார்கள்.

    இந்த படம் தயாரிக்கத் தொடங்கிய போதே ராம் குமார் அவர்களின் தந்தை மற்றும் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் ஆகியோர் என்னிடத்தில் வந்து இது குறித்து கலந்துரையாடல் செய்தனர்.

    இதுவரை கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு, வெளிவந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டு இந்த படத்தின் கதையை பின்னியிருக்கிறார் என்றாலும் கூட, மாற்றுக் கருத்துக்களும் வலுவாக இதிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    குறிப்பாக ராம்குமார் இந்த கொலையை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்று விடுதலை சிறுத்தைகளின் சார்பில் கருத்துக்களை வைத்தோம். அந்த கொலையை கண்டித்தோம். சுவாதியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினோம். அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறினோம். அப்போது தான் உண்மை வெளிவரும் என்று கூறினோம்.

    இந்த வாதங்கள் அனைத்தும் இந்தத் திரைப்படத்தில் பதிவாகி இருக்கிறது. வெளியிலே பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற கருத்துக்கள், அல்லது ராம்குமாருக்கு ஆதரவாக பேசப்படுகிற கருத்துக்கள் அனைத்தும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    திருமாவளவன்


    ராம்குமாருக்கு எதிரான கருத்து, ராம்குமாருக்கு ஆதரவான கருத்து என இரண்டு தரப்பு கருத்துகளையும் தன்னுடைய திரைப்படத்தில் ஒரு விவாதமாக, நீண்ட உரையாடலாக பதிவு செய்திருக்கிறார். அதனால், எந்த சிக்கலும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு இருக்காது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    படம் நிறைவடைகிற போது ராம்குமார் கொலையாளி என்று நிரூபிக்க கூடிய வகையில் படத்தின் போக்கு அமைகிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த கருத்திலே நான் மாறுபடுகிறேன். சுவாதி கொலையின் பின்னணியில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக நான் கருதுகிறேன்.

    அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அந்த வழக்கை ஒன்று மில்லாமல் செய்து விட்டார்கள். ராம்குமாருடைய சாவும் சந்தேகத்திற்கு உரியது தான் என்பது என்னுடைய நிலைப்பாடு. என்னுடைய கருத்து. விடுதலை சிறுத்தைகளின் கருத்து.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
    ×