என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இடம் பெறும் ‘வெறித்தனம்’ என்ற பாடல் யூடியூப்பில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்து வருகிறது.
    தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், விஜய் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். 

    படத்தில், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான `சிங்கப்பெண்ணே’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. 

    இந்த நிலையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் நேற்று வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தபாடல் வெளியான சில நிமிடங்களிலே டிரண்டானது. இப்பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 50 லட்ச பார்வையாளர்களையும் 7.35 லட்ச லைக்குகளையும் பெற்றுள்ளது. 

    பிகில் பட போஸ்டர்

    இன்னும் 24 மணி நேரங்களே முடியாத நிலையில் ஒரு நாளில் அதிகம் லைக் செய்யப்பட்ட லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. விஸ்வாசம் படத்தில் இருந்து வெளியான அடிச்சு தூக்கு பாடல் லிரிக்கல் வீடியோ இதுவரை 6.97 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. ஆனால் நேற்று வெளியான வெறித்தனம் பாடல் தற்போது வரை 7.35 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. 

    உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கபட்ட வீடியோக்கள் பட்டியலில் வெறித்தனம் பாடல் 45 லட்சம் பார்வையாளர்களை கடந்து 4-வது இடத்தில் இருப்பதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.
     
    பாடலில் இடம்பெற்றுள்ள ‘அவன் வரவரைக்கும் வாய்ஸ கொடுத்து நண்டு சிண்டு தொகுருது; அவன் எழுந்து கிழுந்து வந்தானா இந்த தீபாவளி நம்பள்து’ என்கிற வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கிறதா? என்கிற விவாதத்தையும் எழுப்பியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    கருணாநிதியின் குடும்ப விழாவில் பங்கேற்ற போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு மேற்கொண்டார்.
    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி - முரசொலி செல்வம் தம்பதியின் பேத்தியும் எழிலரசி - ஜோதிமணி ஆகியோரின் மகளுமான ஓவியாவுக்கும் தொழிலதிபர் ஜெயபிரகாஷ் - பவானி தம்பதி மகன் அக்கினீஸ்வரனுக்கும் நேற்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவிர மிகசிலரே இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். 

    மு.க.ஸ்டாலினுடன் விஜய்

    நடிகர் விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். அப்போது தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலினும் விஜய்யும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த படம் சமூகவலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த படத்தை பகிர்வதோடு விஜய் அரசியலுக்கு வர தயாராகி விட்டதாகவும் பதிவிட்டு வருகின்றனர். 
    எம்.பிரேம்குமார் இயக்கத்தில் பிரியங்கா நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் கானல் நீர் படத்தின் முன்னோட்டம்.
    ஒரு பரபரப்பான நகரின் மத்தியில் வாழும், வீடில்லாத பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டமான வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படமாக ’கானல் நீர்’ உருவாகி உள்ளது. திரைப்படத்தின் நாயகியாக பிரியங்கா நாயர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் காலை ஹரீஷ் பெரேடி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

    டி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை எழுதியிருக்கிறார். சோகன் ராய், தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் சி.எஸ்.ஆர் ( நிறுவன சமூக பொறுப்புணர்வு) பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல் நன்கொடை திரைப்படமாகும் . இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த திரைப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு போட்டியிடுகிறது.

    இந்த திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் லாபம் அனைத்தும் நிலமில்லாதவகள் மறுவாழ்வுக்கு மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த இரண்டு கருப்பொருள்களும் திரைப்படத்தில் பிரதானமாக கையாளப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் பாலம் ஒன்றின் கீழ் வசிக்க நேர்ந்த குடும்பம் பற்றி பிரபல நாளிதழில் வெளியான செய்திக்கட்டுரையை அடிப்படையாக கொண்டு கானல்நீர் படம் அமைந்துள்ளது. 
    சாஹோ பட பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட செட் ஓவியத்தில் இருந்து காப்பியடித்ததாக இந்தி நடிகை லிசா ரே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் தற்போது வெளியான படம் சாஹோ. பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதாலும் 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டதாலும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியிட்டார்கள்.

    சாஹோ படத்தின் கதையில் எந்த புதுமையும் இல்லாததால் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இருந்தாலும் படத்துக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக வசூலில் குறைவில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா வரும் பேபி வோன்ட் யூ டெல் மி’ பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட செட் பெங்களூரை சேர்ந்த ஷிலோ ஷிவ் சுலேமானின் ஓவியத்தில் இருந்து காப்பியடித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    இதுகுறித்து இந்தி நடிகை லிசா ரே சாஹோ படக்குழுவை விமர்சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அடுத்தவர்களின் படைப்பை இப்படித்தான் அப்பட்டமாக காப்பியடிப்பதா?’ என்று கேட்டு உள்ளதோடு ’இது அப்பட்டமான திருட்டு, இன்ஸ்பிரேஷன் என்று கூற முடியாது’ என்றும் கூறி இருக்கிறார்.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஓவியர் ஷிலோவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சாஹோ படக்குழு செய்த திருட்டை அம்பலப்படுத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ரூ.350 கோடி செலவு செய்த தயாரிப்பாளர் ஷிலோவின் அனுமதி பெற்று அவரின் படைப்பை பயன்படுத்தியிருக்கலாமே? என்று விமர்சித்துள்ளனர். 

    லிசா ரேவின் இன்ஸ்டாகிராம் பதிவு

    முன்னதாக பிரபாஸ் வெளியிட்ட சாஹோ போஸ்டரில் அவரும், ஷ்ரத்தாவும் கொடுத்த போஸ் நடிகர் ரன்பிர் கபூரும், ஐஸ்வர்யா ராய் பச்சனும் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த போசில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

    அதற்கு முன்பு வெளியான சாஹோ போஸ்டர்களை பார்த்தவர்கள் ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக தெரிவித்ததோடு ஆதாரத்தையும் வெளியிட்டனர். சாஹோ படம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் இப்படி காப்பியடிப்பதா என்று சில பிரபலங்களும், சமூக வலைதளவாசிகளும் விளாசியுள்ளனர்.
    அஜித் பட நடிகை ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் குழந்தை பெற்றுக்கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.
    விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படஙக்ளில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு பற்றி யாருக்கும் தெளிவான பார்வை இல்லை. இப்போதும் நிறைய பேர் பலாத்காரம் மட்டும்தான் பாலியல் வன்முறைன்னு நினைக்கிறார்கள். ஆனால், ஒரு பொண்ணுகிட்ட தப்பான நோக்கத்துல பேசுறதும், அணுகுறதும்கூட வன்முறைதான். 

    பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்குறப்போ போலீஸ்கிட்ட போறதுக்கே பலபேர் தயங்குறாங்க. வீட்டுல பெற்றோர்கள் என்ன நினைப்பாங்க, இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்னு யோசிக்கிறாங்க. இந்த விஷயம் நீதிமன்றத்துக்கு வந்தா வழக்கு முடியவே நிறைய வருஷம் ஆகிரும்னு நினைக்குறாங்க. அதுமட்டுமில்லாம ஒரு பாலியல் வன்முறை நடந்திருச்சுன்னா பொண்ணுங்ககிட்ட, ‘எப்படி இது நடந்தது, எங்கு எல்லாம் தொட்டான்’ இதெல்லாம் கேட்பதை நிறுத்தணும். 

    ஷ்ரத்தா ஸ்ரீநாத்

    இதெல்லாம் சீக்கிரம் மாறிடும்னு நம்புறேன். காலந்தோறும் பெண்கள் மாறியிருக்காங்க. ஆனால் பெண்கள் பற்றிய பார்வை மட்டும் மாறவேயில்லை. என் தாத்தா பாட்டி 15 குழந்தைகள் பெத்துக்கிட்டாங்க. எங்க அம்மா அப்பாவுக்கு ரெண்டு குழந்தைகள். நான் குழந்தையே பெத்துக்க மாட்டேன். என்னோட முடிவுகள வெச்சுக்கிட்டு என்னை யாரும் ஜட்ஜ் பண்ணக்கூடாது. என்னோட அறிவு, படிப்பு வெச்சுதான் என்னைத் தீர்மானிக்கணும்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. மும்பையில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா இருவரும் தீவிரமாக இருக்கின்றனர். முழு படப்பிடிப்பும் அடுத்த வாரத்தில் முடிய உள்ளது. இதை தொடர்ந்து, இயக்குனர் சிவாவின் படத்தில் ரஜினி கவனம் செலுத்த உள்ளார். 

    அந்த படத்தின் இறுதிகட்ட எழுத்து பணிகளில் சிவா தீவிரம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படம் முடிந்த பின்னர் ரஜினி - சிவா படம் தொடங்க இருக்கிறது. 

    டி இமான்,

    ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தனது அடுத்த படத்தின் இசையமைப்பையும் டி.இமானிடம் கொடுக்கலாம் என்பது சிவாவின் திட்டம். இதற்கு ரஜினி தரப்பும் சம்மதம் கூறியுள்ளது. இதையடுத்து, முதல்முறையாக ரஜினி படத்துக்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.
    அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கோமாளி படத்திற்கு பிறகு தனது 25ஆவது படத்தில் ஜெயம் ரவி லக்‌ஷ்மன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் தனது 26ஆவது படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். டாப்சி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    யுவன் சங்கர் ராஜா, ஜெயம் ரவி

    இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த தாஸ், தீபாவளி, ஆதிபகவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. 
    பிகில் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக பாடியுள்ள வெறித்தனம் பாடல் யூடியூபில் வெளியானது.
    இளையராஜாவிலிருந்து பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ள விஜய், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல்கூட பாடவில்லையே என்ற வருத்தம் அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் பிகில் படத்தில் விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளதாக படக்குழு அறிவித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

    ஏற்கனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் வெறித்தனம் பாடலின் புரோமோ வீடியோவைப் படக்குழு நேற்று வெளியிட்டது. ஏ.ஆர்.ரகுமான், விஜய், அட்லி, பாடலாசிரியர் விவேக் ஆகியோர் இந்தப் பாடலின் இசையமைப்பில் ஈடுபட்ட காட்சிகள், ரசிகர்களிடயே இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்தது. 

    பிகில் படக்குழு

    இந்நிலையில், இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியிடப்பட்டது. ”நம்ம நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம், வெறித்தனம் இன்னா இப்ப லோக்கலுன்னா” என தொடங்கும் இப்பாடல் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  
    தனுஷின் அசுரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ள மஞ்சு வாரியர், தான் சாதிக்கு எதிரானவள் என தெரிவித்துள்ளார்.
    மலையாளத்தின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், தனுஷ் நடிக்கும் அசுரன் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதையொட்டி மஞ்சு வாரியர் அளித்த பேட்டி:- தமிழில் 1998ம் ஆண்டிலேயே சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நடிக்கவில்லை. 

    மலையாளத்தில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் அசுரன் தான் தமிழில் முதல் படம். தனுஷ் பல ஆண்டுகளாக எனக்கு நண்பர். வெற்றிமாறன் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் இந்த கதையை கேட்டவுடன் நடிக்க சம்மதித்து விட்டேன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகர்கோவில் தான். எனவே தமிழ் நன்றாக பேசுவேன்.

    அசுரன் பட போஸ்டர்

    அசுரன் படத்தில் நெல்லை மாவட்ட பின்னணியில் அந்த பகுதி கிராமத்து பெண்ணாக நடித்து இருக்கிறேன். வெற்றிமாறன் குழு அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் உதவியது. தனுசுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். எங்களுக்கு மகன்களாக கென், டிஜே இருவரும் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம் இரண்டு சினிமாக்களுக்கும் இப்போது வித்தியாசம் இல்லை. இரண்டிலுமே கடுமையாக உழைக்கிறார்கள். 

    நான் சாதிக்கு எதிரானவள். நடிக்க வந்த புதிதில் மலையாள சினிமாவில் நிறைய மஞ்சுகள் இருந்ததால் வாரியர் என்ற பெயர் சேர்ந்துகொண்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் தான் அது சாதி பெயர் என்பது தெரியும். தவிர்க்க முடியாமல் இன்னும் தொடர்கிறது. 

    தமிழில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். எங்கள் மாநிலத்தில் இருந்து வந்த நயன்தாரா இங்கு நம்பர் ஒன் நடிகையாக இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி. அவர் கடின உழைப்பாளி. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு தகுதியானவர். எனக்கு போட்டி என்று யாரும் இல்லை. யார் இடத்தையும் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் வரவில்லை.
    சாந்தகுமார் இயக்கியுள்ள ‘மகாமுனி படத்தில் கதை கேட்காமல் நடித்ததாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
    ஞானவேல்ராஜா தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மகாமுனி. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மகிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன், மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

    ஆர்யா பேசியதாவது:- ’சாந்தகுமாரிடம் ‘இந்த படத்தின் கதையை தயார் செய்ய எதுக்கு எட்டு வருஷம் எடுத்துக்கிட்டீங்க?’ என்று கேட்டேன். அதுக்கு அவர் படத்துக்கு அட்வான்ஸ் வாங்கி அதுல ஒரு பைக் வாங்கினேன். அந்த பைக்லயே இந்தியாவை சுத்தி பார்க்க போயிட்டேன். இப்போ அடுத்து சைக்கிளும் வாங்கப்போறேன்’னாரு.. ‘ஒரு பைக் வாங்கியே அடுத்தப் படத்தைத் தயார் செய்ய எட்டு வருஷமாச்சுன்னா.. அடுத்து சைக்கிள் வாங்கினா என்னா ஆகும்.

    மகாமுனி பட போஸ்டர்

    நீங்க அடுத்து பிளைட்டுதான் சார் வாங்கணும்’னு சொன்னேன். இந்தப் படத்தின் முழுக் கதையையும் சாந்தகுமார் என்னிடம் சொல்லவில்லை. முதலில் ‘மகா’ கதாபாத்திரத்தின் பகுதியை மட்டுமே சொன்னார். பிறகு ‘முனி’ கதாபாத்திரத்தை கடைசியாக உங்களிடமிருந்து வெளிக்கொண்டு வருகிறேன் என்று சொன்னார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது’ என்றார்.
    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
    “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் மூன்றாவது முறையாக இணையும் படம் “ஆக்‌ஷன்”. 

    இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி கூறியதாவது:- விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். விஷால்- நான் இருவரும் “ஆக்‌ஷன்” படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. 

    விஷால்

    70 சதவிகிதம் வெளிநாடுகளிலும், ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னை என பல்வேறு  பகுதிகளில் ஆக்‌ஷன் படம் படமாக்கப்பட்டது. அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே “ஆக்‌ஷன்” காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன. 

    தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யதான் ஆசை. இப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு “ஆக்‌ஷன்” என்றே  பெயர் வைத்துவிட்டோம். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் ரஜினியின் 2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
    பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் தற்போது வெளியான படம் சாஹோ. பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதாலும் 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டதாலும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியிட்டார்கள்.

    சாஹோ படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும், ரசிகர்களிடம் ஏற்பட்டு இருந்த எதிர்பார்ப்பால் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்தியா முழுவதும் இந்த படம் ரூ.24 கோடி வசூலித்துள்ளது. இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட தென்னிந்திய படங்களை பொறுத்தவரை, பாகுபலி 2வது பாகம் தான் அதிக வசூல் செய்த முதல் படம்.

    பிரபாஸ், ரஜினி

    அதற்கு அடுத்து ரஜினியின் 2.0 படம் தான் இருந்தது. தற்போது சாஹோ திரைப்படம் ரஜினியின் 2.0 படத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் முதல் இரண்டு இடங்களில் பிரபாஸ் படங்கள் தான் இருக்கின்றன.படத்துக்கு எதிர்மறையான விமர்சனங் கள் வருவதால் அடுத்தடுத்த நாட்களில் இந்த வசூல் குறையலாம் என்கிறார்கள்.

    ×