என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினாலும் சரி, பா.ஜனதாவின் மாநில தலைவராக வந்தாலும் சரி அதை வரவேற்பேன் என்று நடிகை நளினி கூறினார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவலூர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகை நளினி கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் சினிமா அதிக கதை களத்துடன் வளர்ச்சி பெற்று திகழ்கிறது. ஆனால் வன்முறை காட்சிகளை தவிர்த்து சமுதாய சீர்திருத்தம், விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினாலும் சரி, பா.ஜனதாவின் மாநில தலைவராக வந்தாலும் சரி அதை வரவேற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் சினிமா அதிக கதை களத்துடன் வளர்ச்சி பெற்று திகழ்கிறது. ஆனால் வன்முறை காட்சிகளை தவிர்த்து சமுதாய சீர்திருத்தம், விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
திரைப்படங்களை போல டி.வி. தொடர்களுக்கும் தணிக்கை சான்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினாலும் சரி, பா.ஜனதாவின் மாநில தலைவராக வந்தாலும் சரி அதை வரவேற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாக்ஸர், மாஃபியா படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில், அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் அருண் விஜய். அந்த வகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, தடம் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

இவர் அடுத்ததாக பாக்ஸர், மாஃபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் கிரைம் திரில்லர் படத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடன வீடியோ வைரலாகி வருகிறது.
‘இஷ்டம்’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா. ‘எனக்கு 20 உனக்கு 18’ மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள ஸ்ரேயா சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான கடைசிப் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’.
இதையடுத்து அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ‘நரகாசூரன்’, விமலுக்கு ஜோடியாக ’சண்டைகாரி தி பாஸ்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்தாண்டு ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன போதிலும் நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது பார்சிலோனாவில் வீட்டின் முற்றத்தில் இருந்து வளைந்து நெளிந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை 4 லட்சத்திற்கும் மேலானோர் பார்த்துள்ளனர். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை ஸ்ரேயா, கடற்கரையில் நீச்சல் உடையில் நடனமாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சினிமா டிக்கெட் கட்டணங்களை முறைப்படுத்தி அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. மல்டி பிளக்ஸ் மற்றும் குளிர்சாதன திரையரங்குகளுக்கும் குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளுக்கும் தனிதனி கட்டணங்கள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுபோல் ஆன்லைன் மூலம் டிக்கெட் கட்டணங்களை வெளிப்படையாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தி வந்தது.
இதனிடையே தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ஒரு நாளில் எத்தனை காட்சிகளில் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டு உள்ளன என்பதை கண்காணிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்பு குரலும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “ ஆன்-லைன் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழ் சினிமா வரலாற்றில் இந்த திட்டம் ஒரு மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிவின் பாலியை தொடர்ந்து மோகன் லாலுக்கு ஜோடியாக பிரபல தமிழ் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், அவ்வப்போது தெலுங்கு, மலையாள திரைபடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு, ஹே ஜுடு படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான திரிஷா, தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

திரில்லர் படமாக உருவாகும் இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இப்படத்தை இயக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படத்தை எகிப்து, லண்டன், கனடா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான சில வினாடிகளிலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வைரலாகி உள்ளது. இதில் தனுஷ் பேசும் ‘நமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்’ என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கிருஷ்ணா இயக்கத்தில் கிச்சா சுதீப், சுனில் ஷெட்டி, ஆகன்க்ஷா சிங் நடிப்பில் உருவாகி உள்ள ‘பயில்வான்’ படத்தின் முன்னோட்டம்.
கிருஷ்ணா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள படம் “பயில்வான்”. இப்படத்தில் கிச்சா சுதீப் குஸ்தி வீரராக நடித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுனில் ஷெட்டி இப்படத்தில் சுதீப்பின் பயிற்சியாளராக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது. “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”.

ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்வப்ன கிருஷ்ணா இப்படத்தை தயாரித்துள்ளர். ஆகன்க்ஷா சிங், சுஷந்த் சிங், கபீர் துஹன் சிங், சரத் லோஹிதாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணா, மாது மற்றும் கண்ணன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் அக்கா தம்பி பிரபலங்களான தேவயானி, நகுல் ஆகியோரின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்.
அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை தேவயானி. திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர், அவ்வப்போது ஒருசில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவருடைய சகோதரர் நகுல், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகினார். தற்போது தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தேவயானி, நகுல் ஆகியோர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். தாயாரை இழந்து சோகத்தில் இருக்கும் தேவயானி, நகுல் குடும்பதிற்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தான் நகுல், தேவையானியின் தந்தை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற உள்ள பாடல்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.
வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர்கள் பார்த்திபன், ஜெயராம் மற்றும் நடிகைகள் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். பொன்னியின் செல்வனில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பட்டியலை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதவுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ நாவல் நடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் சொற்களை இந்த கால இளைஞர்களுக்கும் புரியும் வகையில் பாடல் வரிகளில் வைரமுத்து புதுமை செய்யவிருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் இந்த படத்திற்காக வைரமுத்து 12 பாடல்கள் எழுதவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்தில் இந்தி நடிகை ஆலியா பட் நடிக்க உள்ளார்.
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்திற்காக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் கைகோர்த்துள்ளனர். சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்த 2 வீரர்கள் பற்றிய கதை இது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப்படத்தை 2020-ம் ஆண்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை தற்போது உறுதிபடுத்தியுள்ளார் ஆலியா பட். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நான் கரன் ஜோஹர் மூலம் சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ராஜமவுலி ஆகியோர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது எனக்கு முக்கியமல்ல. அவருடன் பணியாற்றுவதே எனக்கு போதும். தெலுங்கில் பேச பயிற்சி எடுத்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த மாதம் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பில் ஆலியா பட் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை அனுஷ்காவுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
'பாகுபலி’ படத்தின் மூலம் தனது ரசிகர்கள் வட்டத்தை பெரிதாக்கி கொண்டார், அனுஷ்கா. தற்போது, மாதவனுடன் `நிசப்தம்‘ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். `இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக பல மடங்கு எடையைக் கூட்டி நடித்திருந்தார். படத்தில் நடித்துமுடித்த பின்னர், எடையை குறைக்க அவர் நிறையவே பாடுபட்டார். அந்த சமயத்தில், தான் மேற்கொண்ட பயிற்சிகளையும் முயற்சிகளையும் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம், `பாகமதி’. அதன் பின்னர், சமீபத்தில் எடுத்த போட்டோஷூட்டில்தான் இவரை அவரது ரசிகர்கள் பார்த்தனர். ஐதராபாத் ஏர்போர்டில் நடந்து வந்துகொண்டிருந்த இவரை, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர், அவரது ரசிகர்கள். ஆந்திராவை சேர்ந்த ஒரு தனியார் பத்திரிகை நிறுவனம், அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவரை உருவக் கேலி செய்யும் விதமாக செய்தி வெளியிட்டிருந்தது.

அதைப் பார்த்து கொந்தளித்த அனுஷ்கா ரசிகர்களும் மக்களும், அந்த நிறுவனத்தை விமர்சித்து அவர்களது கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர். அதில், ``ஒருவருடைய உருவத்தைவைத்து அவரைப் பற்றி எப்படி உங்களால் சொல்ல முடிகிறது. அனுஷ்காவின் காலடிக்குக்கூட நீங்கள் சமம் இல்லை. பேசும்போது நாவையும், எழுதும்போது கையையும் அடக்க வேண்டும்.
இதுபோன்ற ஒரு முன்னணி நடிகையை இவ்வாறு பேசுவது முறையல்ல’’ என்று தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளார், ஒருவர். நிறைய பேர், வெளிவந்த அந்தச் செய்தியை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக ஒருவரை தவறாகப் பேசுவது நியாயமானதல்ல என்றும் பலர் கொந்தளிக்கின்றனர்.
சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ் டப்பிங்கில் நாயகன் சிரஞ்சீவிக்கு அரவிந்த் சாமி குரல் கொடுக்க உள்ளார்.
ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தில் சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

பாகுபலிக்குப் பின் தெலுங்கிலிருந்து அதிக பட்ஜெட்டில், அதாவது சுமார் 240 கோடியில் உருவாகிவரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என ஒரே சமயத்தில் நான்கு மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டப்பிங்கில் நாயகன் சிரஞ்சீவிக்கு தமிழில் குரல் கொடுக்க அரவிந்த் சாமி ஒப்பந்தமாகியுள்ளார்.






