search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நிவின் பாலி, மோகன் லால்
    X
    நிவின் பாலி, மோகன் லால்

    நிவின் பாலியை தொடர்ந்து மோகன் லாலுடன் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகை

    நிவின் பாலியை தொடர்ந்து மோகன் லாலுக்கு ஜோடியாக பிரபல தமிழ் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், அவ்வப்போது தெலுங்கு, மலையாள திரைபடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு, ஹே ஜுடு படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான திரிஷா, தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

    மோகன் லால், திரிஷா

    திரில்லர் படமாக உருவாகும் இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இப்படத்தை இயக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படத்தை எகிப்து, லண்டன், கனடா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×