என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அசுரன் படத்தை தொடர்ந்து தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார்.
    தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அசுரன்' தற்போது வெளியாகி உள்ளது. இதில் தனுஷ், மஞ்சு வாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். 

    'அசுரன்' படத்தை தொடர்ந்து, தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி படத்தை தயாரிக்க உள்ளார் தாணு. இந்த படத்துக்கான கதையை இறுதி செய்து, லண்டனில் பாடல் பதிவுகளை தொடங்கியுள்ளார் மாரி செல்வராஜ். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். 

    ஷான் ரோல்டன்

    தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக தனுஷ் லண்டனில் இருப்பதால், அங்கு அவருடன் இணைந்து இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தாணு தயாரிப்பில் அடுத்ததாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைகிறது. இதற்கு யுவன்தான் இசையமைப்பாளர் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்து வருவதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். 

    இந்த படத்துக்கான பாடல்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, தனுஷ் சென்னை திரும்பியவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இதனால், செல்வராகவன் படத்துக்கு தேதிகள் எப்போது ஒதுக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும். 'அசுரன்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக 'பட்டாஸ்' திரைக்கு வரவுள்ளது.
    தமிழ், மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் மோகன்லால் தற்போது சரித்திர பின்னணி கொண்ட கதையில் நடித்து வருகிறார்.
    மோகன்லால் வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சூர்யாவின் காப்பான் படத்தில் பிரதமர் வேடத்தில் வந்தார். மலையாளத்தில் அரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

    16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் நான்காவது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்தே அரபிக் கடலிண்டே சிம்ஹம் படம் தயாராகிறது.

    இதில் மோகன்லால் கடற்படை தலைவராக நடிக்கிறார். இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் இது மாறுபட்டு இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள். பிரியதர்ஷன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

    மோகன்லால்

    ரூ.100 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான லூசிபர் படம் பெரிய வெற்றி பெற்றது. அரபிக்கலிண்டே சிம்ஹம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தமிழிலும் இதை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த படத்தில் நடிக்கும் தனது தோற்றத்தை மோகன்லால் சமீபத்தில் வெளியிட்டு உள்ளார். அத்துடன் படம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி திரைக்கு வரும் என்றும் அறிவித்து உள்ளார்.
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்க இருக்கிறார்.
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் படமாகிறது. தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக வந்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக அவர் பரதநாட்டியம் மற்றும் தமிழ் கற்று வருகிறார். ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார்.

    இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்தி பதிப்புக்கு ‘ஜெயா’ என்று தலைப்பு வைத்தனர். ஆனால் கங்கனா ரணாவத் பெயரை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் இந்தியிலும் தலைவி பெயரிலேயே தயாராகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்தது.

    அரவிந்த் சாமி

    எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளனர். இவர் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். படத்துக்கான திரைக்கதையை விஜயேந்திரபிரசாத் எழுதுகிறார். பாகுபலி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதி இருந்தார். விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
    ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் சந்திரமௌலி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘100 சதவிகிதம் காதல்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் முதலிடம் பெறுபவராக இருக்கிறார். இதனால் நம்பர் 1 என்பது இவருக்கு ஒரு போதையாகவே மாறிவிடுகிறது. கல்லூரியிலும் இவர்தான் முதலிடமாக இருக்கிறார். இவருக்கு போட்டியாக யாரும் இல்லை என்று நினைக்கும் நேரத்தில், கிராமத்தில் இருக்கும் தன் மாமன் மகள் ஷாலினி பாண்டே ஜி.வி.பிரகாஷ் வீட்டிற்கு வருகிறார். 

    இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். படிப்பில் தடுமாறும் ஷாலினி பாண்டேவுக்கு உதவியாக ஜி.வி.பிரகாஷ் இருக்கிறார். ஒரு தேர்வில் ஜி.வி.பிரகாஷை முந்திக்கொண்டு ஷாலினி முதல் இடத்தை பிடிக்கிறார். இதனால் ஷாலினி மீது வெறுப்பாகும் ஜி.வி.பிரகாஷ், போட்டிப்போட்டுக்கொண்டு மீண்டும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று பல வேலைகளை செய்கிறார். 

    அடுத்த தேர்வில் இன்னொரு மாணவன் முதல் இடம் பிடிக்க இரண்டு பேரும் போட்டிப்போட்டுக்கொண்டு அவனை வீழ்த்த முடிவு செய்கிறார்கள். ஷாலினி பாண்டே அந்த மாணவனை வீழ்த்த காதலிப்பதாக நடிக்கிறார். இதனால் ஜி.வி.பிரகாஷுக்கும் ஷாலினி பாண்டேவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

    100 சதவிகிதம் காதல்

    இறுதியில் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் முதலிடம் பிடித்தாரா? ஷாலினி பாண்டே யாருடன் ஜோடி சேர்ந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    ஜி.வி.பிரகாஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்து முடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் மற்றும் ஷாலினியின் காதல் காட்சிகள் சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கிறது. அதுபோல் முதல் பாதியில் வரும் ஈகோ மோதலும் ரசிக்கும் வகையில் உள்ளது. ஷாலினி பாண்டே அழகிலும் கவர்ச்சியிலும் இளைஞர்களை கவர்ந்திருக்கிறார். மாமா என கொஞ்சி பேசும்போது நமக்கு இப்படியொரு மாமா பெண் இல்லையே என ஏங்க வைக்கிறார்.

    ரேகா, தலைவாசல் விஜய், ஆர்வி.உதயகுமார், ஷிவானி பட்டேல், ஜெயசித்ரா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். மனோபாலா, அப்புக்குட்டி, சாம்ஸ் ஆகியோர் இருந்தும் காமெடி காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை.

    100 சதவிகிதம் காதல்

    இந்த படம் தெலுங்கில் 100% லவ் என்ற பெயரில் 2011ல் வெளியானது. அந்த படத்தை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியிருந்தால் ரசித்திருக்கலாம். தேவையில்லாத காட்சிகள், தேவையில்லாத கதாபாத்திரங்கள் வைத்திருக்கிறார் இயக்குனர் சந்திரமௌலி.

    ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசை ஓகே ரகம். கணேஷின் ஒளிப்பதிவில், காட்சிகளில் இளமை தெரிகிறது.

    மொத்தத்தில் ‘100 சதவிகிதம் காதல்’ 50 சதவிகிதம்.
    நடிகை, பாடகர், இசை அமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட சுருதிஹாசன் தற்போது இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
    சினிமா வாய்ப்புகள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி; எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை, சுருதி ஹாசன். கடந்த சில ஆண்டுகளாக, சினிமாவில் தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்த அவர், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், ஏராளமான இசை நிகழ்ச்சிகளை, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். 

    அவரது கைவசம், இன்னும் ஏராளமான இசை நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லாமே வெளிநாடுகளில் தான் நடக்கவுள்ளன. சற்று இடைவெளிக்கு பின், இந்தியில் ஒரு படத்திலும், தமிழில், விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்திலும் நடிக்க உள்ளார். 

    சுருதி ஹாசன்

    அமெரிக்காவின், 'யு.எஸ்.ஏ., - நெட்ஒர்க்' என்ற, 'டிவி' சானலில், 'டிரெட்ஸ்டோன்' என்ற, சீரியலிலும் நடித்து வருகிறார். 'இசை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. எந்த சூழ்நிலையிலும், இசையை கைவிட மாட்டேன். சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்கும்போது நடிப்பேன்' என்கிறார்.
    தளபதி 64 படத்தில் நடிக்கும் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வில்லன் விஜய் சேதுபதி ஆகியோர் தீபாவளி தினத்தில் மோத இருக்கிறார்கள்.
    தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

    அதுபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கைதி’. இதில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள்.

    பிகில், கைதி, சங்கத்தமிழன்

    இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சங்கத் தமிழன்’ திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

    விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 64 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வில்லன் விஜய் சேதுபதி, இவர்கள் மூன்று பேரும் தற்போது இணைந்து பணியாற்றி வரும் நிலையில், தீபாவளிக்கு மோதுவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படத்தை கேலி செய்யும் வகையில் பேசியதால், அவருக்கு பிரபாஸ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவான படம் 'சாஹோ'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. இருப்பினும் படத்தின் வசூல் நன்றாகவே இருந்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

    'சாஹோ' படத்தில் நாயகியாக நடித்தவர் ஷ்ரத்தா கபூர். தென்னிந்திய சினிமாவில் இவருக்கு முதல் படம் இது. படம் சரியான வரவேற்பைப் பெறாத காரணத்தால் ஷ்ரத்தா கபூர் நினைத்த வெற்றியை முதல் படத்தில் பெற முடியவில்லை. இருந்த போதும், 'சாஹோ' வெளியான ஒரே வாரத்தில் 'சிச்சோரி' என்ற படம் இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஷ்ரத்தாவுக்கு ஆறுதல் தந்தது. 

    பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர்

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷ்ரத்தா கபூர் பங்கேற்றார். பல நூறு பார்வையாளர்கள் மத்தியில் மேடையில் அவரிடம் சில கேள்விகளை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்டார். ஆனால் 'சாஹோ' பற்றிய கேள்விகளுக்கு மட்டும் ஷ்ரத்தா பதில் அளிக்காமல் பேச்சை மாற்றிக்கொண்டே இருந்தார். அடுத்தடுத்து மூன்று நான்கு கேள்விகள் 'சாஹோ' பற்றி கேட்டும் ஷ்ரத்தா சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். 

    ஒரு கட்டத்தில் ஷ்ரத்தாவே, "சாஹோவா? நான் பார்வையாளர்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? நீங்கள் அனைவரும் சிச்சோரி பார்த்தீர்களா?" என்று அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். ஷ்ரத்தாவின் இந்த செயல் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரபாஸ் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. அதில் சிலர் ஷ்ரத்தாவை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
    தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களை தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உருவாகும் படத்தில், நான் ஹீரோ இல்லை என்று கூறியிருக்கிறார்.
    நடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. 

    மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும் யோகிபாபு மறுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது,

    பட்லர் பாலு படத்தில் யோகி பாபு

    "தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன். 

    ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை’ என்றார்.
    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அசுரன்’ படத்தின் விமர்சனம்.
    விவசாயியாக இருக்கும் தனுஷ், தனது மனைவி மஞ்சு வாரியர், 2 ஆண் குழந்தை மற்றும் 1 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதே ஊரில் இருக்கும் ஆடுகளம் நரேன், தொழிற்சாலை கட்ட தனுஷுக்கு சொந்தமான நிலம் தேவைப்படுகிறது. இதனால் எதாவது பிரச்சனை செய்து தனுஷ் நிலத்தை அபகரிக்க நினைக்கிறார். 

    இந்த பிரச்சனையில் தனுஷின் மூத்த மகன், நரேனை அசிங்கப்படுத்தி விடுகிறான். இதனால், கோபமடைந்த நரேன் மூத்த மகனை கொன்று விடுகிறார். தந்தை தனுஷால் ஒன்று செய்ய முடியாது என்று நினைக்கும் இரண்டாவது மகன் கென் கருணாஸ் நரேனை கொலை செய்கிறான்.

    அசுரன் விமர்சனம்

    இந்த பிரச்சனை பெருசாக, மூத்த மகனை போல் இரண்டாவது மகனை பலி கொடுக்கக் கூடாது என்று நினைத்து, அசுர ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் தனுஷ். இறுதியில் தன் குடும்பத்தை தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர் தனுஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சிவசாமி கதாபாத்திரத்திற்கு நடிப்பால் மெருகேற்றி இருக்கிறார். பல காட்சிகளில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். குறிப்பாக, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மஞ்சு வாரியர் கேட்கும்போது, தனுஷின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பு, அட்டகாசம். தனுஷின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி கிராமத்து பெண்ணாக மனதில் நிற்கிறார். 

    அசுரன் விமர்சனம்

    மூத்த மகனாக வருபவர் சிறப்பாக நடித்திருக்கிறார். இரண்டாவது மகனாக வரும் கென் கருணாஸ் நடிப்பில் மிரள வைத்திருக்கிறார். இவரை பார்க்கும் போது சிறு வயது தனுஷை பார்ப்பது போல் இருக்கிறது. 16 வயது சிறுவனுக்கே உரிய படபடப்பு, கோபம், பயம் எல்லாவற்றையும் தொடர்ந்து முகத்தில் தக்கவைக்கிறார். இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

    ஊர் தலைவராக வரும் ஆடுகளம் நரேன், இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி சக்திவேல், தனுஷின் மச்சானாக வரும் பசுபதி, வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    அசுரன் விமர்சனம்

    பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி படத்தை இயக்கி இருக்கிறார் வெற்றிமாறன். முழுக்க முழுக்க, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி மக்களுக்கு இடையேயான பிரச்சனையை சொல்லியிருக்கிறார். தாழ்ந்த சாதி குடும்பத்தை சேர்ந்த விவசாயி, பல போராட்டங்களில் தன் குடும்பத்தை எப்படி வழி நடத்தி செல்கிறார் என்பதை திரைக்கதையாக கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பேச வைத்திருக்கிறார் வெற்றிமாறன். தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. 

    ஜிவி.பிரகாஷின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. திரைக்கதை ஓட்டத்திற்கு இவரது பின்னணி இசை பெரிதும் உதவி இருக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் அபாரம். 

    மொத்தத்தில் ‘அசுரன்’ அட்டகாசம்.
    விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பில் நடிகை அக்‌ஷரா ஹாசன் இணைந்திருக்கிறார்.
    விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அக்னி சிறகுகள்’.  நவீன் இயக்கி வரும் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றுள்ளார்கள். இந்த படப்பிடிப்பில் நாயகி அக்‌ஷரா ஹாசன் இணைந்துள்ளார்.

    ரஷியாவின் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகளையும், ஆக்‌ஷன் காட்சிகளையும் படமாக்க இருக்கிறார்கள். 

    அக்னி சிறகுகள் படக்குழு

    ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். கே.எஸ்.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.


    நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. முன்னதாக இந்த தேர்தலை ரத்து செய்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ந் தேதி நடத்தி கொள்ள அனுமதி வழங்கியது. மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் பெஞ்சமின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நடந்து முடிந்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலில் என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். ஒருவேளை நேரடியாக வாக்களிக்க விரும்பினால், வாக்குப்பதிவுக்கு 7 நாள்களுக்கு முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி கூறினார்.

    தேர்தல் அதிகாரியின் இந்த நிபந்தனை, சங்க விதிகளுக்கு எதிராக உள்ளது. மேலும், தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எனக்கு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்‘ என கோரியிருந்தார். இதே கோரிக்கையுடன் ஏழுமலை என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, நடிகர் சங்கம் தொடர்பாக இருவேறு நீதிபதிகளிடம் இருந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு பட்டியலிட தலைமை நீதிபதி (பொறுப்பு) வினீத் கோத்தாரி உத்தரவிட்டார்.

    சென்னை ஐகோர்ட்டு

    இந்த வழக்கு, நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தலுக்கு தடை விதிக்க கோரி மனுதாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராக இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது நடிகர் சங்கம் தரப்பில், ‘கடந்த ஜூன் 23-ந் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விடாமல் தொடர்ந்து வழக்கில் கால அவகாசம் கோரப்பட்டு வருகிறது. 

    எனவே, வாக்கு எண்ணிக்கை நடத்த உடனே உத்தரவிட வேண்டும்‘ என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற15-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ‘நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தரப்பில் வாதங்களை முன்வைத்தாலும், இல்லாவிட்டாலும், அன்றைய தினம் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்‘ என தெரிவித்துள்ளார்.
    புதியவன் ராசையா இயக்கி இருக்கும் ஒற்றைப் பனைமரம் எனும் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே 17 விருதுகளை வென்றுள்ளது.
    திரைப்பட வெளியீட்டில் பிரபலமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். இலங்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘ஒற்றைப் பனைமரம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, 17 விருதுகளை வென்ற படம், இது. இதில், முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள்.

    ஒற்றைப் பனைமரம் படக்குழு

    அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
    ×