என் மலர்
சினிமா செய்திகள்
புதியவன் ராசையா இயக்கி இருக்கும் ஒற்றைப் பனைமரம் எனும் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே 17 விருதுகளை வென்றுள்ளது.
திரைப்பட வெளியீட்டில் பிரபலமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். இலங்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘ஒற்றைப் பனைமரம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, 17 விருதுகளை வென்ற படம், இது. இதில், முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள்.

அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
அரசியலுக்கு வரவேண்டாம் என ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறியதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு பேசும்போது, சிரஞ்சீவியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தினேன். அதை அவர் கேட்கவில்லை. இதே அறிவுரையை ரஜினிகாந்துக்கும் சொன்னேன் என்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிக்க உள்ள தளபதி 64 படத்தில் ஆடை பட இயக்குனர் இணைந்துள்ளார்.
‘மாநகரம்’ படம் மூலம் மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் கார்த்தியை வைத்து இயக்கிய ‘கைதி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவர் விஜய்யை வைத்து ‘தளபதி 64’ திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.
கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஆடை பட இயக்குனர் ரத்ன குமார் இணைந்துள்ளார். இவர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை அமைக்க உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”என்னால் நம்ப முடியவில்லை. விஜய் அண்ணாவுடனும் என் நண்பன் லோகேஷ் கனராஜுடனும் இணைந்து பணியாற்ற உள்ளேன். படக்குழுவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் புதிய மலையாள படத்தில் நடிகர் துல்கர் சல்மான் அதிரடி போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
ஒவ்வொரு கதாநாயகனையும் ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமரச் செய்வது, அடிதடியும், அதிரடியும் நிறைந்த கமர்சியல் படங்கள்தான். அதிலும் கதாநாயகன் போலீஸ் அதிகாரியாக நடித்து கமர்சியலாக உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம்.
அப்படி ஒரு அதிரடி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே, ஒவ்வொரு கதாநாயகனின் ஆர்வமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மலையாள சினிமாவைப் பொறுத்தவரை, இளம் நடிகர்களான நிவின்பாலி, பகத்பாசில், டொவினோ தாமஸ் போன்றவர்கள் கூட அதிரடியான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்றுவிட்டார்கள்.

ஆனால் துல்கர் சல்மான் இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில நடிக்கவே இல்லை. ‘விக்கிர மாதித்யன்’ என்ற படத்தில் போலீஸ் வேலை தேடுபவராக மட்டுமே நடித்திருந்தார். துல்கர் சல்மானுக்கு இதுவரை சரிவர அமையாமல் இருந்த போலீஸ் கதாபாத்திர குறையை, இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தீர்த்து வைத்திருக்கிறார்.
மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘மும்பை போலீஸ்’ என்ற படத்தை ஏற்கனவே இயக்கிய அனுபவம் உள்ளவா். ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’, காயம்குளம் கொச்சுண்ணி’ என அதிரிபுதிரியான வெற்றிப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில்தான், துல்கர் சல்மான் முழு நீள போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிரபல வெப் தொடரின் 2-ம் பாகத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார்.
திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் தொடர் காய்ச்சல் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளிடையேயும் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான வெப் தொடரான ‘தி பேமிலி மேன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பயே, பிரியாமணி, ஷரீப் காஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரில் இரண்டாம் பாகத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தை தயாரித்த அமேசான் பிரேம் ஒரிஜினல் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.
முதல் பாகத்தை இயக்கிய ராஜ் நிதிமோரு மற்றும் கிருஷ்ணா ஆகியோரே, இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்களாம். பல படங்களை கையில் வைத்திருக்கும் சமந்தா, இந்த வெப் தொடர் தன்னை இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கும் என்று கூறி வருகிறாராம்.
சுதிர் எம்.எல். இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் முன்னோட்டம்.
தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களை தொடர்ந்து யோகி பாபு, ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் கதைநாயகனாக நடிக்கிறார். சுதிர் எம்.எல். இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு, கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரர் வேடத்தில் நடித்துள்ளார். இதில் ரோபோ ஷங்கர், மயில்சாமி, தாடி பாலாஜி, இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிருத்திகா தயாரித்துள்ள இப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். யோகி பாபு சமையல் வேலைக்கு சென்ற ஒரு மண்டபத்தில், மணப்பெண்ணை யாரோ கடத்தி விடுகிறார்கள். அவரை யோகி பாபு எப்படி மீட்கிறார்? என்பது கதை.
பிரபல பாலிவுட் நடிகை திருமணத்துக்கு பின் வாய்ப்பு கிடைக்காததால் தொழில் தொடங்கி நடத்துவது என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்வரியா’ என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானவர் தீபிகா படுகோனே. அதன்பிறகு ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஷாருக்கான் ஜோடியாக நடித்ததால் இவரது புகழ் வேகமாக பரவத் தொடங்கியது.
தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் புகழின் உச்சியில் இருக்கும்போதே, கடந்த 2018-ம் ஆண்டு சக நடிகரான ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தீபிகா படுகோனேவுக்கு சினிமா வாய்ப்பு குறையத் தொடங்கியது. அவரது நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான ‘பத்மாவத்’ படத்திற்கு பிறகு எந்த படத்தில் அவர் நடிக்கவில்லை.

படங்கள் எதுவும் கிடைக்காததை உணர்ந்து கொண்ட தீபிகா படுகோனே, அடுத்த கட்ட நடவடிக்கையாக சுயமாக ஒரு தொழிலை தொடங்கி நடத்துவது என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இதுவரை சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் முதலீடு செய்ய இருக்கிறாராம். அதில் பங்குதாரராக கணவர் ரன்வீர்சிங்கை சேர்க்கவில்லை.
தன்னுடைய தாய்வீட்டு உறவினர்களின் ஒத்துழைப்போடு இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். இதற்காக தன்னுடைய சக நட்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம், என்ன தொழில் தொடங்கலாம்? எந்த தொழில் செய்தால் லாபம் பார்க்க முடியும்? என்பது போன்ற ஆலோசனைகளை கேட்டுவருவதாக கூறுகிறார்கள். விரைவில் தீபிகா படுகோனேவை ஒரு தொழிலதிபராக பார்க்கலாம் என்கிறார்கள்.
அசுரன் திரைப்படம் வெளியாகும் நிலையில், தனுஷ் ரசிகர்கள் கட் அவுட், பேனர்களுக்கு பதிலாக திருநங்கைகளுக்கு தையல் மிஷின் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
`வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் `அசுரன்'. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

இப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில், தனுஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் கட் அவுட், பேனர்களுக்கு பதிலாக திருநங்கைகளுக்கு இலவசமாக தையல் மிஷின் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
96 படத்தில் நடித்த ராமும், பிகில் படத்தில் நடித்த மைக்கேலும் ஒன்று சேர்ந்துட்டாங்க என்று நடிகை வர்ஷா பொல்லம்மா கூறியிருக்கிறார்.
‘மாநகரம்’ படம் மூலம் மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் கார்த்தியை வைத்து இயக்கிய ‘கைதி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவர் விஜய்யை வைத்து ‘தளபதி 64’ திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

தளபதி 64 படத்தின் பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்த நடிகை வர்ஷா பொல்லம்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராம் சார் மற்றும் மைக்கேல் சார். ரெண்டு Favourites-ம் சேந்திருக்காங்க..’ என கூறி ‘தளபதி 64’ படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த ‘96’ திரைப்படத்தில் ராமுவிடம் போட்டோகிராபி பயிலும் மாணவியாக வர்ஷா நடித்திருந்தார். அதேபோல், விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தில், மைக்கேலாக நடித்துள்ள விஜய்யிடம் புட்பால் பயிற்சி எடுக்கும் மாணவியாக நடித்திருக்கிறார்.
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் வெளிநாட்டில் 4 விருதுகளை குவித்துள்ளது.
முண்டாசுப்பட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம்குமார். இவர் விஷ்ணு விஷால், அமலா பால் ஆகியோரை வைத்து ‘ராட்சசன்’ என்ற படத்தை இயக்கினார். சைக்கோ திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது.
மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்துக் கொண்டு பல விருதுகளை பெற்றது. இந்நிலையில் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற திரைப்பட விழாவில் ராட்சசன் படம் கலந்துக் கொண்டது.

இதில் 4 விருதுகளை ராட்சசன் திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரில்லர், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ராட்சசன் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.
பிரபல இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர், என் பெயரை கெடுக்கவே புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று கமிஷனர் அலுவலகத்தில் பேட்டியளித்துள்ளார்.
மணிமாறன் என்பவர் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மோசடி புகார் ஒன்றை நேற்று முன் தினம் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். எஸ்.ஏ.சந்திரசேகரின் கிரீன் சிக்னல் நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
2018-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரின் தயாரிப்பில் டிராபிக் ராமசாமி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை கனடா நாட்டைச் சேர்ந்த பிரமானந்த் சுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார்.
இதற்காக ரூ.20 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தமும் போட்டிருந்தார். ஆனால் ஒப்பந்தப்படி அடுத்த கட்ட பணத்தை பிரமானந்த் சுப்பிரமணியத்தால் தர முடியவில்லை.
பட வெளியீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு படம் வேண்டாம் என்று சொன்னார். அதனால் வியாபாரம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முடியாமல் தவறினோம். அப்போதெல்லாம் படம் வெளியிடும் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கமே முடிவு செய்ததால் பட வெளியீட்டை தள்ளி வைக்கவும் முடியாத நிலை.
இந்தநிலையில் படம் வேறு விநியோகஸ்தர்களுக்கு விற்கப்பட்டால் பணத்தை தந்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரமாக இருந்ததால் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் எஸ்.ஏ.சந்திரசேகர தமிழகமெங்கும் வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதனால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார். ஆனால் இந்த படத்தை வாங்குவதற்கோ வெளியிடுவதற்கோ எந்த தொடர்புமே இல்லாத மணிமாறன் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தை ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் புகழை கெடுக்கவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவும் திட்டமிட்டு செயலாற்றி இருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் புகார் அளித்துள்ளார். மேலும் என் பெயரை கெடுக்கவே இதுபோல் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
காந்தியம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட சினேகன், பெரிய படங்கள் ஓடுவதில்லை என்று கூறியிருக்கிறார்.
ஜெய் ஸ்ரீ ராம் கிரியேஷன்ஸ் சார்பில் லிங்கா தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் ‘காந்தியம்’. இப்படத்தில் ஹீரோயினாக அக்ஷதா நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தனசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீசாய் தேவ் இசையமைத்திருக்கிறார். கவிஞர் செ.காளிமுத்து, சரண்யா, ஜோகி பி.சரண், மறைந்த அண்ணாமலை ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சினேகன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு நான் வர முக்கிய காரணம் பாடலாசிரியர் காளிமுத்து. நான் பல காவல்துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறேன், அவர்கள் தமிழ் பற்று அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள், எப்படி தான் அவர்களால் அப்படி இருக்க முடிகிறது என்று கூட நான் யோசித்திருக்கிறேன். ஒரு பக்கம் காவல் பணி, மறுபக்கம் தமிழை காக்கும் பணி என்று பேலன்ஸ் செய்வார்கள். அவர்களைப்போன்ற ஒரு காவல்துறை அதிகாரி தான் காளிமுத்து. அவர் எழுதிய கவிதை புத்தகங்களை நான் வெளியிட்டிருக்கிறேன். தற்போது அவர் பாடலாசிரியாக அறிமுகமாகியிருக்கும் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘காந்தியம்’ என்ற தலைப்பே ஈர்க்கிறது. அகிம்சை என்ற ஒன்றை உலகிற்கு கற்றுக்கொடுத்த காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ல் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது சிறப்பானதாகும். இந்த படம் ஆக்ஷன் படம் என்று சொன்னார்கள். காந்தியம் என்ற தலைப்பு வைத்துவிட்டு ஆக்ஷன் இருக்கிறது என்றால், அதற்கு நிச்சயம் பெரிய காரணம் இருக்கும், அது சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
இப்போதெல்லாம் சிறிய படங்கள் தான் வெற்றி பெறுகிறது. பெரிய படங்கள் ஓடுவதில்லை. அதனால் சிறிய படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ‘காந்தியம்’ நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.






