என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா, தான் பயத்திலேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தான் நடிக்கும் படத்தில் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ளமாட்டார். ஆனால், தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், நயன்தாரா பேட்டி என்பது அரிதினும் அரிதானது. சமீபத்தில் இவரை பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

    அதுவே, அவர் வெளியிட்ட கடைசி அறிக்கையாகும். தன்னை பற்றி எந்தவொரு செய்திக்கும் அவர் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமுமே வராது. தற்போது நீண்ட வருடங்கள் கழித்து, பிரபல ஆங்கில இதழான ‘வோக்‘ இதழுக்கு பேட்டி அளித்துள்ளார் நயன்தாரா. அதிலும் ஒரு சாதனை செய்துள்ளார். என்ன என்றால், தென்னிந்திய நாயகிகளில் இவரது புகைப்படம் மற்றும் பேட்டி தான் முதன் முதலில் ‘வோக்‘ இதழில் இடம்பெற்றுள்ளது. 

    நயன்தாரா

    தொடர்ச்சியாக தன்னை முன்னிலைப்படுத்தி வரும் கதைகளிலும், நாயகியாகவும் நடித்து வருவது குறித்து, “ஏன் இன்னும் சில நாயகர்களின் படத்தில் கவர்ச்சியான கதாநாயகியாக நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். சில நேரங்களில் வேறு வழி இல்லை. எவ்வளவு நாட்கள் தான் முடியாது என்று என்னால் சொல்ல முடியும். 

    நான் ரிஸ்க் எடுக்கத் துணிபவள்” என்று தெரிவித்துள்ளார் நயன்தாரா. முன்னணி நாயகியாக இருப்பது குறித்த கேள்விக்கு, “வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அசுரன்’ படத்தின் குழுவினருக்கு தயாரிப்பாளர் தாணு தங்கக்காசு பரிசளித்துள்ளார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து காலை சிறப்புக் காட்சிகளும் மற்றும் பல்வேறு ஊர்களில் திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

    அசுரன் படக்குழு

    இதனால், தயாரிப்பாளர் தாணு பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். இதனை தொடர்ந்து படத்தின் உதவி இயக்குநர்களுக்கும், உதவி ஒளிப்பதிவாளர்களுக்கும் பரிசுகள் வழங்கியுள்ளார். உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு தங்க காசுகள் வழங்கியுள்ளார். மேலும், உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் ‘அசுரன்’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார்.
    எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த ‘மான்ஸ்டர்’ படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். ‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார். இது, ஒரு திகில் படம். இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்கிறார். 

    எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்

    கதாநாயகியை தேர்வு செய்யாமலே படப்பிடிப்பை தொடங்கினார்கள். இந்த நிலையில், கதாநாயகி யார் என்பது தெரியவந்துள்ளது. ‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்த பிரியா பவானி சங்கரே ராதாமோகன் படத்திலும் ஜோடியாக நடிக்கிறார். இருவருக்கும் ஜோடி பொருத்தம் கச்சிதமாக இருப்பதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். 
    2 இயக்குனர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகை எல்லி அவ்ராம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    நடிகைகளுக்கு பாலியல் தொல்லை என்பது திரையுலகில் பல்வேறு சமயங்களில் நடக்கிறது. அதுபற்றி நடிகை தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட பல நடிகைகள் பகிரங்கமாக பேட்டி அளித்ததுடன் போலீசில் புகாரும் அளித்தனர். தற்போது மற்றொரு நடிகை, 2 இயக்குனர்கள் மீது பாலியல் தொல்லை புகார் கூறியிருக்கிறார். போஸ்டர் பாய்ஸ், நாம் சபானா, பாஸார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    மேலும் பல இந்தி படங்களில் நடித்திருப்பதுடன் தமிழில், பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்திருப்பவர் எல்லி அவ்ராம். சுவீடன் நாட்டை சேர்ந்த இவர் மும்பையில் தங்கி படங்களில் நடித்து வருகிறார். அவர் தனக்கு நடந்த பாலியல் தொல்லை பற்றி கூறியதாவது: எனது திரையுலக ஆரம்ப நாட்களில் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு 2 இயக்குனர்களை நான் நேரில் சந்தித்தேன்.

    எல்லி அவ்ராம்

    அவர்கள் என்னுடைய கையை பிடித்து குலுக்கிக்கொண்டே ஒற்றை விரலால் என் உள்ளங்கையில் கீறிக்கொண்டே எதையோ உணர்த்தினார்கள். எனக்கு புரியவில்லை. எனது நண்பரிடம் இயக்குனர்களின் சைகை பற்றி கூறினேன். அவர் அதிர்ச்சி அடைந்து, அந்த இயக்குனர் அப்படியா செய்தார்? அப்படிசெய்ததற்கு என்ன அர்த்தம் என்று உனக்கு தெரியுமா? என்றார்.

    எனக்கு தெரியவில்லை என்றதும் அவர்கள் இருவரும் உன்னை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள். அதற்காகத் தான் உள்ளங்கையில் விரலால் சீண்டி சிக்னல் கொடுத்திருக்கிறார்கள் என்றார். அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்களின் பெயர்களை கூற நடிகை எல்லி அவ்ராம் மறுத்துவிட்டார்.  
    சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற சொகுசு கார் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர் பலத்த காயமடைந்தார்.
    உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவர் நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையோரம் நள்ளிரவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அவர் மீது திடீரென்று மோதியது. இந்த விபத்தில் அங்கிருந்த கடை ஒன்றும் சேதமடைந்தது. கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விபத்துக்குள்ளான கார்

    படுகாயமடைந்த பரத், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் காரில் இருந்ததாகவும், விபத்து நிகழ்ந்தவுடன் அங்கிருந்து அவர் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் டீசர் பற்றிய அப்டேட்டை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.
    அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படம் பிகில். விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

    அதன்பின் லிரிக் வீடியோக்கள், பாடல்கள் அடுத்தடுத்து வெளியானது. இவை அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வைரலானது. தீபாவளிக்கு திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் தயாரிப்பாளர் அர்ச்சனாவிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    அர்ச்சனா கல்பாத்தி

    இந்நிலையில், மாலைமலருக்கு அர்ச்சனா கல்பாத்தி அளித்த சிறப்பு பேட்டியில், அக்டோபர் 7ம் தேதி டீசர் எப்போது வெளியிடப்படும் என்பதை கூறுகிறேன்’ என்றார்.
    நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்த படத்திற்கு தயாராகி வரும் நிலையில், அவரின் நியூ லுக் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், அஜித்தின் நியூ லுக் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. 

    விமான நிலையம் வந்த அஜித்தை, இளமையான தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அஜித்தும் ரசிகர்கள் அனைவருடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டார். 

    ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் அஜித்

    இந்த புகைப்படமும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
    பல வெற்றி படங்களை இயக்கிய தங்கர் பச்சான், தற்போது தன் மகனை கதாநாயகனாக வைத்து டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தை உருவாக்கி உள்ளார்.
    கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். அப்படத்திற்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட பாத்திரத்தில் காண்பித்த தங்கர் பச்சான் இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தன் மகனை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

    விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தங்கர் பச்சான். இசை - தரண்குமார். ஒளிப்பதிவு - பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் படத்தொகுப்பு - சாபு ஜோசப், கலை - சக்தி செல்வராஜ், நடனம் - தினேஷ், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா தயாரிப்பு நிறுவனம் - பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்.
    பல வெற்றி படங்களை இயக்கிய தங்கர் பச்சான், தற்போது தன் மகனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். அப்படத்திற்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட பாத்திரத்தில் காண்பித்த தங்கர் பச்சான் இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தன் மகனை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

    இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்னை நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படமென்பதால் சென்னை சுற்றிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. 70 நாட்கள் ஆன நிலையில் இன்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.

    தங்கர் பச்சான்

    இப்படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள். விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். இப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதுரி தீட்ஷித் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காண்பித்து வருகிறார்.
    ஸ்ரீதேவிக்கு பின், பாலிவுட் ரசிகர்களின் கனவு ராணியாக திகழ்ந்தவர், மாதுரி தீட்ஷித். இவர், நடனமாடும் அழகை பார்ப்பதற்கென்றே, பாலிவுட்டில் பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், சமீபகாலமாக, ஒரு சில படங்களில் நடித்தார். 

    அந்த படங்கள், பெரிய அளவில் பேசப்படவில்லை. மும்பையில் நடக்கும் திரைப்பட விழாக்கள், டிவி நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் அவர், திடீரென, சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளார். 

    மாதுரி தீட்ஷித்

    விதம் விதமான புடவைகளை அணிந்து, பல கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அவற்றில் பல படங்கள், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. 'மாதுரி, ஏதோ ஒரு பெரிய திட்டத்துடன் தான், இதைச் செய்கிறார்' என்று கூறுகிறார்கள்.
    நாகசைதன்யாவை திருமணம் செய்த பின்பும் நடிப்பில் தீவிரம் கவனம் செலுத்தி வரும் சமந்தா, குழந்தை எப்போது என்ற கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார்.
    நடிகை சமந்தா முதன்முறையாக இணைய தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- "இணைய தொடர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சினிமாவில் மட்டுமன்றி எல்லா துறைகளிலும் ஆண், பெண் வித்தியாசம் ஒழிய வேண்டும். 

    திருமணம் ஆனதில் இருந்து குழந்தை எப்போது என்று என்னை சந்திக்கிறவர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். இதில் தவறு இல்லை. குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது. 

    கணவருடன் சமந்தா

    இன்றைய தலைமுறையினர் பிடித்ததை செய்கிறார்கள். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது பெற்றுக்கொள்வேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
    அசுரன் படத்தை தொடர்ந்து தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார்.
    தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அசுரன்' தற்போது வெளியாகி உள்ளது. இதில் தனுஷ், மஞ்சு வாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். 

    'அசுரன்' படத்தை தொடர்ந்து, தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி படத்தை தயாரிக்க உள்ளார் தாணு. இந்த படத்துக்கான கதையை இறுதி செய்து, லண்டனில் பாடல் பதிவுகளை தொடங்கியுள்ளார் மாரி செல்வராஜ். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். 

    ஷான் ரோல்டன்

    தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக தனுஷ் லண்டனில் இருப்பதால், அங்கு அவருடன் இணைந்து இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தாணு தயாரிப்பில் அடுத்ததாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைகிறது. இதற்கு யுவன்தான் இசையமைப்பாளர் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்து வருவதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். 

    இந்த படத்துக்கான பாடல்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, தனுஷ் சென்னை திரும்பியவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இதனால், செல்வராகவன் படத்துக்கு தேதிகள் எப்போது ஒதுக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும். 'அசுரன்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக 'பட்டாஸ்' திரைக்கு வரவுள்ளது.
    ×