என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மூத்த மலையாள நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    மலையாள சினிமா உலகில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிப்பில் புகழ் பெற்றவர் ஸ்ரீனிவாசன். தேசிய விருது, மாநில விருதுகள் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது மகன் வினீத் ஸ்ரீனிவாசன், மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.

    ஸ்ரீனிவாசனுக்கு கடந்த ஜனவரி மாதமே மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சென்னைக்கு செல்ல கொச்சின் விமான நிலையம் வந்துள்ளார். அப்போது மீண்டும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    ஸ்ரீனிவாசன்

    அங்கு அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்ரீனிவாசனின் உடல் நிலை சற்று தேறிய பிறகு, ஆஸ்டெர் மெட்சிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி மொழியில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். தற்போது மைதான் படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாகி உள்ளார். இதில் அஜய் தேவ்கான் நாயகனாக நடிக்கிறார். அமித் ஷர்மா இயக்குகிறார்.

    அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை எடுத்த போனிகபூர் மைதான் படத்தை தயாரிக்கிறார். 1950-ல் இருந்து 62 வரை இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இந்தி மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    அஜய் தேவ்கன் - கீர்த்தி சுரேஷ்

    ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற இந்திய அணியை வழி நடத்தி சென்றவரை பற்றி அனைத்து மக்களும் அறிய வேண்டும் என்பதற்காகவே 5 மொழிகளில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். மைதான் படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கீர்த்தி சுரேஷ் கூறி உள்ளார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இலியானா, சமீபத்தில் அளித்த பேட்டியில் இன்ப அதிர்ச்சி கொடுப்பதே ஆசை என்று கூறியிருக்கிறார்.
    தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ள இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    “ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வது சவாலான விஷயம். ஒரு நடிகரின் நடிப்பு பிடித்து இருந்தால் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை வியக்க வைக்கும்படி நடிக்க வேண்டும். இன்ப அதிர்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியமாகவும் ஆசையாகவும் உள்ளது.

    இலியானா

    ஜான் ஆபிரகாமுடன் நடித்துள்ள இந்தி படம் திரைக்கு வர உள்ளது. இதில் முழுமையான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். ஏற்கனவே முபாரகான் என்ற படத்தில் முதல் தடவையாக நகைச்சுவை வேடத்தில் நடித்தேன். என்னை பற்றி சிந்திக்கும்போது ரசிகர்களுக்கு நகைச்சுவை மனதில் வராது.

    இலியானா கவர்ச்சியான நடிகை என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முதல் தடவையாக முபாரகான் படத்தில் காமெடியில் நடித்ததும் உங்களை இப்படி பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் என்று சொன்னார்கள். அந்த மாதிரி ஒரு இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக சவாலான வேடங்களில் நடித்து வருகிறேன்” என்றார்.
    தனுசு ராசி நேயர்களே படத்தை இயக்கி இருக்கும் சஞ்சய் பாரதி, அந்தகால கார்த்திகை ஞாபகப்படுத்தும் ஹரீஷ் கல்யாண் என்று கூறியிருக்கிறார்.
    ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் ‘தனுசு ராசி நேயர்களே’.  இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

    ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா, சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    இப்படம் குறித்து இயக்குநர் சஞ்சய் பாரதி கூறும்போது, ‘ராசியை நம்பும் ஒரு ஹீரோ அதற்கேற்ற ஹீரோயினை கல்யாணம் செய்ய தேடுவதுதான் கதை. காமெடியாக குடும்பத்தோடு எல்லோரும் பார்க்ககூடிய படமாக இருக்கும். இது நடிகர் தனுஷை மையமாக வைத்து எழுதவில்லை. முதலிலேயே ஹரீஷைத்தான் அணுகினோம். எதிர்வீட்டுப் பையன் மாதிரி ஒரு ஆள் தான் ஹரீஷ். அவர் அந்தக்கால கார்த்திக்கை ஞாபகப்படுத்துவார்.

    ஹரீஷ் கல்யாண்

    படத்தின் டிரெய்லரை பார்த்து அடல்ட் காமெடி என்கிறார்கள். ஆனால் இது கண்டிப்பாக அடல்ட் காமெடி படம் கிடையாது. நாயகியின் பெயர் கே.ஆர்.விஜயா ஒரு மாற்றத்திற்க்காக தான் அந்தப்பெயரை வைத்தோம். படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும்.

    ஜிப்ரான் இசையில் 5 பாடல்கள் படத்தில் இருக்கிறது. ஒவ்வொன்றும் வேறு மாதிரி இருக்கும். படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது. கூடிய விரைவில் திரையில் சந்திக்கிறோம்’ என்றார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அவரைப் போல மிமிக்ரி செய்து ஒருவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஆடை பட இயக்குனர் ரத்னகுமார், லோகேஷ் கனகராஜுடன் இணைந்து திரைக்கதை எழுதுகிறார். 

    ரத்னகுமார் ட்விட்

    இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரத்ன குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, நடிகர் விஜய் அவருக்கு லோகேஷ் கனகராஜ் மொபைலில் இருந்து போன் செய்து ‘மச்சி Happy birthday டா என லோகேஷ் கனகராஜ் வாய்ஸில் மிமிக்ரி செய்துள்ளார். இது ரத்னகுமாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவலை ரத்னகுமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தளபதி 64 படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
    தமிழில் லாபம் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஸ்ருதிஹாசன், அதுவும் எனது வீடு போலத்தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    தமிழில் 'ஏழாம் அறிவு' படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே, தெலுங்கில் 2011ல் 'அனகனகா ஓ தீருடு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் அங்கு 'ஓ மை பிரண்ட், கப்பார் சிங், பலுப்பு, எவது, ரேஸ்குர்ரம், ஸ்ரீமந்துடு, பிரேமம், கட்டமராயுடு' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

    ஸ்ருதிஹாசன்

    தற்போது தமிழில் 'லாபம்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ருதிஹாசன், தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் 'கிராக்' படத்தில் ரீ என்ட்ரி ஆகிறார். அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், "தெலுங்குப் படங்களில் நடிப்பது எப்போதுமே மகிழ்வான ஒன்று. நான் தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். மேலும், இங்கு இருந்துதான் எனது வெற்றி ஆரம்பமானது. எனவே, தெலுங்கும் எனது வீடு போலத்தான்," என்று கூறியிருக்கிறார்.
    இமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ராசி கன்னா, தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார்.
    தமிழில் அதர்வாவிற்கு ஜோடியாக இமைக்கா நொடிகள் படத்தில் மூலம் அறிமுகமானார் ராசிகன்னா. தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். 

    ராசி கன்னா தீவிரமாக தமிழ் கற்று வருவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- ’தெலுங்கு திரையுலகில் நான்கு ஆண்டுகளாக பயணித்துள்ளேன். எனவே தற்போது தெலுங்கு சரளமாக பேசுகிறேன். அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் நான் தமிழில் பேச முயற்சித்து வருகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். 

    ராஷி கன்னா

    மொழி தெரிந்தால் மட்டுமே என் வசனங்களை நான் முழுமையாக புரிந்து பேசமுடியும். இதில் நான் மிகுந்த தீவிரம் காட்டிவருகிறேன். ஏனென்றால் என் பணியை நான் மிகவும் மதிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் படத்திற்காக விரதம் இருக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகை நயன்தாராவுக்கு நேற்று 35வது பிறந்தநாள். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தற்போது அமெரிக்காவில் உள்ள நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் உடன் தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

    நயன்தாரா அடுத்து ஆர்ஜே.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி கூறியதாவது:- “நானும் ரவுடிதான் படத்தில் இருந்தே நயன்தாரா எனக்கு நல்ல நண்பர். இந்த படம் தொடர்பாக ஒரு நாள் மாலை வேலையில் அவரை சந்தித்து அரை மணிநேரம் இந்த கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்துபோக உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார். 

    ஆர்.ஜே.பாலாஜி - நயன்தாரா

    இது முழுக்க முழுக்க பக்தி படம். சமீப காலமாக தொடர்ந்து பேய் படங்களாக வருகிறது. சாமி படங்கள் வந்து நீண்ட நாட்கள் ஆகிறது. நான் சாமி நம்மிக்கை உடையவன் அதனால் இந்த படம் எடுக்க முடிவு செய்தேன். இந்த படத்தில் ஒரு செய்தியையும் நான் சொல்லவிருக்கிறேன். 

    இந்த படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்துக்கொடுப்பதாக தெரிவித்தார். படம் தொடங்கவிருக்கிறது இப்போதே படக்குழுவினர் பயபக்தியோடு அசைவ உணவகங்களை தவிர்த்து சைவ உணவிற்கு மாறிவிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பவானி அம்மனின் இன்னொரு பெயர் ‘மூக்குத்தி அம்மன்' அதனால் இந்த பெயரை வைத்தேன்” என்றார்.
    பல வெற்றி படங்களை கொடுத்து வரும் அருண் விஜய் பிறந்தநாளில் இயக்குனர் மணிரத்னம் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.
    அருண் விஜய் நடிப்பில் தற்போது ‘சினம்’ என்ற படம் உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

    மணிரத்னம் வெளியிட்ட போஸ்டர்

    அதன்படி அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, சினம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட், அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.
    ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நாயகியாக ஆலியா பட் நடித்து வருகிறார். 'என் திரையுலக வாழ்க்கையில், இது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கப் போகிறது. இந்த படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்' என, பெருமிதத்துடன் கூறுகிறார். 

    இவர், இதுவரை நடித்த வேடங்கள் எதுவும், ரசிகர்களிடம் பெரிய பாராட்டு எதையும் பெறவில்லை. இதனால், சவாலான வேடத்தை எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு, அதற்கு ஏற்ற மாதிரி, ஒரு தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கும் இந்த படத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கியுள்ளார், ஆலியா. 

    ஆலியா பட்

    பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், ஆந்திராவில் நடந்த சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து, இந்த படத்துக்கு ராஜமவுலி கதைக்களம் அமைத்துள்ளார்.
    தமிழில் பூ, மரியான், படங்களில் நடித்து மிகவும் பிரபலமான பார்வதி, பட வாய்ப்பு இல்லாததால் தன்னுடைய முடிவை மாற்றி இருக்கிறார்.
    தமிழில் பூ, மரியான், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. ஆனால் சமீபகாலமாக அவருக்கு மலையாளத்திலும் தமிழிலும் பட வாய்ப்புகள் இல்லை. அவர் சில காலத்திற்கு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என அவரே முடிவு எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. 

    இந்நிலையில் மலையாளத்தில் பிரபல இயக்குனர்களான வேணு மற்றும் ஆஷிக் அபு உள்ளிட்ட 4 இயக்குனர்கள் இணைந்து உருவாக்கும் ஆந்தாலஜி படத்தில் இடம்பெறும் நான்கு குறும்படங்களில் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறார் பார்வதி. இந்த நான்கு கதைகளுமே பெண்களை மையப்படுத்தி அவர்களை கதாநாயகர்களாக முன்னிலைப்படுத்தி உருவாக இருக்கிறதாம். 

    பார்வதி

    வேணுவின் டைரக்‌ஷனில் உருவாகும் குறும்படத்தில் தான் பார்வதி நடிக்க இருக்கிறாராம். இதுதவிர பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள வர்த்தமானம் என்கிற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
    ராகுல் பரமகம்சா இயக்கத்தில் ஆரியன், உபாசனா நடிப்பில் உருவாகி வரும் கருத்துக்களை பதிவு செய் படத்தின் முன்னோட்டம்.
    சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் "கருத்துக்களை பதிவு செய்". இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகம் ஆகிறார். ஆர்.பி.எம் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜித்தன் 2 என்ற திகில் படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இப்படத்தை இயக்குகிறார்.

    கருத்துக்களை பதிவு செய் படக்குழு

    இன்றைய இணையதளம், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளம் மூலம் ஏற்படும் காதல்கள் அனைத்தும் ஒரு அபாய வலை. அதில் பெண்கள் கண்மூடி தனமாக சிக்கிக் கொள்கிறார்கள். இந்த மாய வலையை பற்றி பேசும் திரைப்படம் தான் கருத்துகளை பதிவு செய். அந்த மாயவலையில் சிக்கிக் கொண்ட ஒரு பெண், எப்படி அந்த நயவஞ்சகம் செய்த அயோக்கியர்களிடம் இருந்து தப்பித்து வெளியில் வருகிறாள் என்பது தான் இந்த படத்தின் கதை.
    ×