என் மலர்
சினிமா

ஸ்ருதிஹாசன்
அதுவும் எனது வீடு போலத்தான் - ஸ்ருதிஹாசன்
தமிழில் லாபம் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஸ்ருதிஹாசன், அதுவும் எனது வீடு போலத்தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
தமிழில் 'ஏழாம் அறிவு' படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே, தெலுங்கில் 2011ல் 'அனகனகா ஓ தீருடு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் அங்கு 'ஓ மை பிரண்ட், கப்பார் சிங், பலுப்பு, எவது, ரேஸ்குர்ரம், ஸ்ரீமந்துடு, பிரேமம், கட்டமராயுடு' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது தமிழில் 'லாபம்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ருதிஹாசன், தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் 'கிராக்' படத்தில் ரீ என்ட்ரி ஆகிறார். அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், "தெலுங்குப் படங்களில் நடிப்பது எப்போதுமே மகிழ்வான ஒன்று. நான் தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். மேலும், இங்கு இருந்துதான் எனது வெற்றி ஆரம்பமானது. எனவே, தெலுங்கும் எனது வீடு போலத்தான்," என்று கூறியிருக்கிறார்.
Next Story






