என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் நடித்துள்ள சைக்கோ படத்தை பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் என அப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
    மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'சைக்கே'. இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது எப்படிப்பட்ட படம் என்று. டீசர், டிரைலர்களும் அதையே உணர்த்துகிறது.

    உதயநிதி ஸ்டாலின்

    இப்படம் பற்றி மிஷ்கின் கூறுகையில், சைக்கோ படம் பாருங்கள். கண்டிப்பாக குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இப்படத்தை பார்க்காதீர்கள். இது ஒரு கொலைக்களமான படம். அதனால் குழந்தைகள் மனதளவில் பயப்படுவார்கள். அதேப்போன்று நான்கைந்து காட்சிகளில் மிகவும் பயங்கரமாக இருக்கும். மற்றபடி 18 வயது நிரம்பிய ஆண், பெண் பார்க்கலாம் என்றார்.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில், ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலரும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க, மீனா அவரது மனைவியாக ஒரு கலகலப்பான வேடத்தில் நடிக்கிறார். 

    சித்தார்த்

    தான் நடிக்கும் வேடம் குறித்து மீனாவே சொல்லிவிட்டார். குஷ்பு வில்லத்தனம் கலந்த ஒரு வேடத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் படத்தில் சித்தார்த்தும் நடிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. ரஜினிக்கு மாப்பிள்ளையாக அதாவது கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 
    பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், 74 வயது தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை 5-வது திருமணம் செய்துள்ளார்.
    பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து 1998 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006-ம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

    ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இருவரும் பிரிந்தனர். 2014-ம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றனர்.

    பமீலா ஆண்டர்சன், ஜான் பீட்டர்ஸ்

    பமீலா ஆண்டர்சன் அடுத்து ‘பேட்மேன்’ உட்பட பல படங்களை தயாரித்த ஜான் பீட்டர்ஸை (வயது 74) காதலித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் அவரை முறைப்படி திருமணம் செய்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள மாலிபுவில் இவர்கள் திருமணம் கடந்த திங்கட்கிழமை எளிமையாக நடந்துள்ளது. பமீலாவும் ஜான் பீட்டரும் முப்பது வருடத்துக்கு முன் முதன்முறையாக, டேட்டிங் சென்றனர். 

    இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திருமணம் பற்றி பமீலா ஆண்டர்சன் கூறும்போது, நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். எங்கள் காதல் ஒப்பிடமுடியாதது என்று தெரிவித்துள்ளார். புதிதாக திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு ஹாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
    நடிகர் அசோக் செல்வன், தான் அடுத்ததாக நடிக்க உள்ள ரொமாண்டிக் படத்திற்காக தனது உடல் தோற்றத்தை மாற்றியுள்ளார்.
    தமிழில் சூதுகவ்வும், பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரிலீசாக உள்ளது. 

    இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது மலையாளத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் அரபிக்கடலிண்டே சிம்ஹம் எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் முதல் மலையாளப்படம் இதுவாகும். 

    அசோக் செல்வன், நித்யா மேனன்

    இந்நிலையில், அவர் அறிமுகமாகும் தெலுங்கு படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் அனி சசி இயக்கும் ரொமாண்டிக் படத்தில் அசோக் செல்வன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நித்யா மேனன், ரித்து வர்மா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். 

    மேலும் இப்படத்தில் அசோக் செல்வன் 100 கிலோ எடையுடன் கூடிய சமையல் கலைஞர் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், இதற்காக அவர் 20 கிலோ உடல் எடையை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கிற்காக நடிகர் பிரசாந்த் உடல் எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது. 

    இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். மோகன் ராஜா இயக்கவுள்ள இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். 

    பிரசாந்த்

    படத்தின் கதைப்படி நாயகன் பியானோ இசை கலைஞர் என்பதால், இதற்காக நடிகர் பிரசாந்த் 6 மாதம் பியானோ பயிற்சி மேற்கொண்டதாக தியாகராஜன் தெரிவித்துள்ளார். இப்படத்திற்காக பிரசாந்த், இதுவரை 22 கிலோ எடை குறைத்துள்ளதாகவும், மேலும் குறைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
    கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்து வரும் ‘தாராள பிரபு’ படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளனர்.
    8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இப்படம், தாராள பிரபு என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப், விவேக் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் உதவியாளர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். இவர் ஏற்கனவே தெலுங்கில் நாகசைதன்யா நடித்த யுத்தம் சரணம் படத்தை இயக்கியுள்ளார்.

    தாராள பிரபு பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தில் எட்டு இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அனிருத், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா ஆகிய 8 இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர். 
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யிடம் அதை எதிர்பார்க்கவில்லை என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
    வெள்ளித்திரை, சின்னத்திரை என தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் இவர், விரைவில் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளார். இந்நிலையில் ராதிகா, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். 

    அவர் கூறியதாவது: “இது எங்கள் நீதி படத்தில் விஜய்யுடன் தான் நடிக்கும்போது விஜய் மிகவும் சின்ன பையன். வந்து நடி, பாடு என நான் அவரை மிரட்டுவேன். விஜய் இவ்வளவு பெரிய நடிகரா, இவ்வளவு பெரிய மனிதரா வருவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை. இன்று அவரது வளர்ச்சியையும், புகழையும் பார்த்து அவரது பெற்றோர் அளவுக்கு தானும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். 

    ராதிகா, விஜய்

    மேலும், அஜித் பற்றி பேசிய அவர், பவித்ரா என்ற படத்தில் நான் அஜித்துடன் இணைந்து நடித்தேன். அஜித் மிகப்பெரிய நடிகராக வருவார் என்று எனக்கு அப்போதே தெரியும். மேலும், அஜித்தை ஹீரோவாக வைத்து படம் எடுங்கள் என நானே பல தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளேன்” என ராதிகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, உறவும் பிரிவும் தனக்கு நிறைய கற்றுக்கொடுத்ததாக கூறியுள்ளார்.
    உலக பொருளாதார அமைப்பு 2020-ம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது விழாவை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரத்தில் நடத்தியது. விழாவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்துகொண்டு கிரிஸ்டல் விருது பெற்றார். மனஅழுத்தம், பதற்றத்துக்கு எதிரான சிறந்த விழிப்புணர்வு செயல்பாட்டுக்காக தீபிகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    விருதைப் பெறுவதற்காக மேடை ஏறிய தீபிகா பேசியபோது, “மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவோரை ‘நீங்கள் தனி ஆள் இல்லை’ என்று சொல்லித் தேற்றுவேன். உறவும் பிரிவும் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கின்றன. மனிதர்களின் மன அழுத்தத்தால் இந்திய மதிப்பில் 7,11,910 கோடி வரையிலும் உலகப் பொருளாதாரம் பாதிப்பைச் சந்திக்கிறது.

    தீபிகா படுகோனே

    மனப்பதட்டம் என்பது குணமாக்கக்கூடிய சாதாரணமான ஒரு பிரச்சினைதான். இந்த நொடியில்கூட உலகில் ஒருவர் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டு தான் இருக்கிறார். இந்தநிலை மாற வேண்டும். அன்பும் மகிழ்ச்சியும் பரவினாலே மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் விரட்டலாம்“ என்றார்.

    தன்னார்வ அமைப்பொன்றை உருவாக்கியுள்ள தீபிகா, அதன் மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். தான் சந்தித்த மன உளைச்சல்களால் தனது வாழ்வில் நேர்ந்த அனுபவங்களையும் அவற்றிலிருந்து மீண்டு வந்ததையும் பற்றி மாணவர்கள் மத்தியில் எடுத்துச்சொல்லி அவர்களை ஊக்கப்படுத்துவதோடு, பதட்டத்தைப் போக்கும் வழிமுறைகளை கற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறார்.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயாகியாக இருக்கும் மூன்றெழுத்து நடிகை திருமணம் செய்து கொள்ள தயாராகியுள்ளாராம்.
    பிரபல மூன்றெழுத்து நடிகை பதினைந்து வருடங்களாக நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க தாயார் ஆசைப்பட்டாராம். நடிகையோ பட வாய்ப்புகளை காரணம் காட்டி, திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தாராம். இப்போது அவருக்கு திடீர் திருமண ஆசை வந்திருக்கிறதாம்.

    “உங்கள் ஆசைப்படி திருமணத்துக்கு நான் தயார். மாப்பிள்ளை பாருங்கள்” என்று அந்த நடிகை தாயாரிடம் கூறிவிட்டாராம். சந்தோஷப்பட்ட தாயார், மகளுக்கு பொருந்துகிற மாதிரி மாப்பிள்ளையை தேடி வருகிறாராம்.
    4-வது குஞ்சலி மரைக்காரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் சரித்திர படத்தில் நடிகர் அர்ஜுன் போர்வீரனாக நடிக்கிறார்.
    16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர்.

    ரூ.100 கோடி செலவில் தயாராகிறது. பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட இருப்பதாக கூறப்படுகிறது.

    அரபிக்கடலிண்டே சிம்ஹம் பட போஸ்டர்

    இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அர்ஜுனின் தோற்றம் அடங்கிய புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜுன், அனந்தன் எனும் போர்வீரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    சைக்கோ படத்தில் இயக்குனர் மிஷ்கினுக்கு தெரியாமல் தான் அப்படி நடித்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கி இருக்கும் இந்த படத்தை டபுள் மீனிங் புரோடக்‌‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 24-ந் தேதி திரைக்கு வருகிறது.

    சைக்கோ படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:- யுத்தம் செய் படத்திலேயே மிஷ்கினுடன் இணைந்திருக்க வேண்டியது. அது நடக்கவில்லை. மீண்டும் அவருடன் இணைய ஆர்வமாக இருந்தேன். முதலில் ஏலியன் கதை ஒன்று சொன்னார். எனக்கு புரியவில்லை. இந்த கதையை இருவரி மட்டும் தான் சொன்னார். உடனே சம்மதித்துவிட்டேன். இது முழுக்க முழுக்க மிஷ்கின் படம்.

    உதயநிதி ஸ்டாலின்

    மனிதன் படத்துக்கு பிறகு சவாலான வேடங்களில் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறேன். இயக்குனரிடம் என்னை முழுக்க ஒப்படைத்து விடுகிறேன். மிஷ்கின் சொன்னதை அப்படியே செய்தேன். ’சைக்கோ’ கதைக்கு தேவையான டைட்டில். நாயகனுக்கும் சைக்கோ கொலையாளிக்கும் இடையேயான மோதல் தான் கதை. கவுதம் என்னும் கண் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என் படங்களில் வன்முறை, ரத்தம் இருக்காது. ஆனால் இது அப்படி இல்லை.

    பார்வையற்றவராக நடித்த அனுபவம் குறித்து பேசிய உதயநிதி, இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தில் நாயகன் லென்ஸ் அணிந்து நடித்ததாக கேள்விப்பட்டேன். தேடி பிடித்து அந்த லென்சை வாங்கி போட்டு வீடியோ எடுத்து மிஷ்கினுக்கு அனுப்பினேன். ஆனால் அவர் சூப்பர் என்று சொல்லிவிட்டு இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கண்ணாடி அணிந்தால் போதும் என்று சொன்னார். ஆனால் அவருக்கே தெரியாமல் சில காட்சிகளில் அந்த லென்ஸ் அணிந்து நடித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இயக்குனர் ஜான்சன்.கே இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் தாதாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் ‘ஏ1’. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தன. விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. 

    சந்தானம்

    சந்தானம் படங்களின் வசூலில் சாதனையாக அமைந்தது. சந்தானம் - ஜான்சன்.கே - சந்தோஷ் நாராயணன் வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார். தற்போது இந்தக் கூட்டணியில் ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் தாதா வேடத்தில் நடிக்கிறார்.
    ×